Sunday, January 27, 2019

உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே! - பாட்டு புத்தகம்

தர்மாத்முடு" ன்ற தெலுங்கு படத்தை ஏவிஎம் நிறுவனம் தமிழ்ல ரீமேக் பண்ணலாம்ன்னு நினைச்சப்ப,  அந்த கதை தமிழுக்கு சரிப்படாதுன்னு  பலர் சொல்ல, . கதையில் பட்டி டிங்கரிங்க் பண்ணி ரஜினிகாந்த் ஹீரோ, ராதிகா ஹீரோயின், கார்த்திக்கை நெகடிவ் கதாபாத்திரத்துலயும் நடிக்க வச்சாங்க. படம் செம ஹிட். இன்னிக்கும் இந்த படம் எல்லார்க்குமே பிடிக்கும். 

இன்னிக்கு பதிவுல வரும் "உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே..."ன்ற பாட்டை, முதல்ல இயக்குனர் வி.சி.குகநாதன் படத்துக்காக வைரமுத்து பாட்டை எழுத இளையராஜா இசையில் ரெடியாகி இருந்துச்சு. ஆனா, அந்த படத்தில் அந்த பாட்டை சேர்க்க முடில. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்திக்க நினைச்சு,  நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் வாங்கி இந்த பாட்டை பயன்படுத்தினாராம் கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப்பாட்டு இந்த படத்துக்காக உருவாக்குனாங்க.  நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இதுன்னு   "ஏ.வி.எம் 60 - சினிமா"ன்ற தனது நூலில்  தயாரிப்பாளர் சரவணன் சொல்லி இருக்கார்.

இந்த படத்துல ரஜினி ரொம்ப அழகா இருப்பார். ராதிகாவும் செம அழகா இருப்பாங்க.  80,90..களின் ஆட்களுக்கு மட்டுமில்ல இந்தகாலத்து பிள்ளைகளுக்கும் இந்த பாட்டு பிடிக்குது!!


உன்னைத்தானே
 தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே!!
உயிர் பூவெடுத்து 
ஒரு மாலையிட்டேன்!!
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்!!

உன்னைத்தானே......

மலரின் கதவொன்று திறக்கின்றதா?!
மௌனம் வெளியேற தவிக்கின்றதா?!
பெண்மை புதிதாக துடிக்கின்றதா?!
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா?!
முத்தம் கொடுத்தானே 
இதழ் முத்துக்குளித்தானே?!
இரவுகள் இதமானதா?!
கட்டிப்பிடித்தால்
 தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?!


என்னத்தானே 
தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே!!
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு!!
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு!!

என்னத்தானே...

உலகம் எனக்கென்றும் விளங்காதது!!
உறவே எனக்கின்று விலங்கானது!!
அடடா முந்தானை சிறையானது!!
இதுவே என் வாழ்வில் முறையானது.
பாறை ஒன்றின்மேலே
 ஒரு பூவாய் முளைத்தாயே!!
உறவுக்கு உயிர் தந்தாயே!
நானே எனக்கு நண்பன் இல்லையே!
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே!

என்னத்தானே...



அதேப்பாட்டு சோகமாய்...
என்னைத்தானே தஞ்சமென்று 
நம்பி வந்த மானே!
உயிர்பூவெடுத்து 
மாலையிட்டேன்...
விழிநீர் தெளித்து 
ஒரு கோலமிட்டேன்.. 
என்னைத்தானே?!
படம்: நல்லவனுக்கு நல்லவன்
நடிகர்கள்: ரஜினிகாந்த்,  ராதிகா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து

நன்றியுடன்,
ராஜி

16 comments:

  1. நல்லபாட்டுதான் சகோ.
    இருந்தாலும் கார்த்திக் கிட்டத்தட்ட வில்லனாகவே அந்தக்காலத்தில் மாமனாருக்கும், இந்தக்காலத்தில் மருமகனுக்கும் நடிச்சதை நினைத்தாலே எனக்கு பச்சைத்தண்ணி இறங்க மாட்டுது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் சோறு தண்ணி இறங்கலைண்ணே.

      Delete
  2. மிகவும் ரசித்த, ரசிக்கும் பாட்டு... சென்னையில் இருந்த போது, எனது அம்மா சென்னை வந்த போது, மூன்றாவது தடவையாக இந்த படத்திற்கு சென்று ரசித்தேன்...!

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை பார்த்தேன்னு நினைவில் இல்லை. ரொம்ப பிடிச்ச படம்.

      Delete
  3. //80,90..களின் ஆட்களுக்கு மட்டுமில்ல இந்தகாலத்து பிள்ளைகளுக்கும் இந்த பாட்டு பிடிக்குது!!//
    ராஜா டா

    ReplyDelete
  4. எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்பாடல். சரணங்களில் வரும் டியூன் மிக இனிமை.

    குகநாதனின் எந்தப்படத்துக்கு இந்தப்பாடல் எடுக்கப்பட்டிருந்ததாம்?

    ReplyDelete
    Replies
    1. அந்த விவரம் தெரில சகோ. இதையே இன்னொரு பிளாக்ல படிச்சேன்.

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. //நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் வாங்கி இந்த பாட்டை பயன்படுத்தினாராம்// எங்கேயோ இடுக்குதே.....

    ReplyDelete
    Replies
    1. இடிச்சா தள்ளி நில்லுங்க சகோ.

      படிச்சதை பகிர்ந்தேன்
      அவ்வளவ்தான்

      Delete
  7. எனக்கும் ரொம்ப பிடித்த பாடல் க்கா ...

    அடிக்கடி முணுமுணு க்கும் பாடலும் ...

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்குமே இந்த பாட்டு பிடிக்கும்.

      Delete
  8. பழங்காலப் பாடல்கள் இன்றைய தலை முறையினர்க்கு நிறையவே பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. இது பழங்கால பாடலாகிடுச்சா?!

      Delete