பிளாஸ்டிக் ஒழிப்புன்னு வந்தாலும் வந்தது வாழைஇலை கிடைக்குறது குதிரைக்கொம்பா இருக்கு மாமா. ஒரெயொரு வாழை இலை மூணு ரூபான்னு சொல்றாங்க.
உனக்குதான் இலை தைக்க தெரியுமே புள்ள! நீயே தைக்க வேண்டியதுதானே?! வீட்டுக்கும் யூஸ் ஆகும். அக்கம்பக்கம் கேட்டா கொடுத்தால் பைசாவும் வருமில்ல!
ம்ம்ம் இலை தைக்க தெரியும் மாமா. ஆனா, இப்பலாம் யாரு இந்த தையல் இலையை யூஸ் பண்ணுறாங்க?! அதிலிருக்கும் குச்சி தொண்டையில் சிக்கிக்கும்ன்னு இதை வாங்கமாட்டேங்குறாங்க தெரியுமா?!
உனக்குதான் இலை தைக்க தெரியுமே புள்ள! நீயே தைக்க வேண்டியதுதானே?! வீட்டுக்கும் யூஸ் ஆகும். அக்கம்பக்கம் கேட்டா கொடுத்தால் பைசாவும் வருமில்ல!
ம்ம்ம் இலை தைக்க தெரியும் மாமா. ஆனா, இப்பலாம் யாரு இந்த தையல் இலையை யூஸ் பண்ணுறாங்க?! அதிலிருக்கும் குச்சி தொண்டையில் சிக்கிக்கும்ன்னு இதை வாங்கமாட்டேங்குறாங்க தெரியுமா?!
நம்ம தமிழ் கலாச்சாரத்தில் விருந்து உபசரிப்பென்பது மிகமுக்கியமானது. நாம தினமும் பயன்படுத்தும் தட்டையே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு பரிமாறுவது சிலருக்கு சங்கடத்தை தரும். பணப்புழக்கம் குறைச்சலா இருந்த காலக்கட்டத்தில் எல்லார் வீடுகளிலும் எல்லாருக்கும் சாப்பிட தட்டிருக்காது. குழந்தைகளுக்கு தட்டுகளில் பரிமாறிட்டு பெரியவங்க இலைகளில் சாப்பிடுவாங்க.
முன்னலாம், தோட்டத்துல வாழைமரங்கள் இருக்கும். ஊருக்கு நாலு ஆலமரம் இருக்கும். அந்த இலைகளை பறிச்சு காயவச்சு அந்த இலைகளை வச்சு தச்சும், மந்தாரை இலைகளை தைச்சும் பயன்படுத்திக்கிட்டிருந்தாங்க. அதனால் வீட்டுக்கு வர்றவங்களுக்கு டக்குன்னு இலைகளில் பரிமாறினாங்க. சுத்தமானது, பயன்படுத்த எளிது, சீக்கிரத்துல மக்கி மீண்டும் உரமாகும். இப்படிப்பட்ட இலைகளில் சாப்பிடுறது உடலுக்கு ஆரோக்கியமும்கூட..
வாழை இலையில் சாப்பிடுவது ஆரோக்கியம்ன்னு தெரியும். மத்த இலைகளில் சாப்பிட்டாலும்கூடவா ஆரோக்கியத்துக்கு நல்லதா?! என்ன சொல்றே மாமா?!
ஆமா புள்ள, வாழை இலைகளின் பயன் என்னன்னு முன்ன ஒரு பதிவில் பேசியாச்சு. வாழை இலைக்கு ஈடாக வேங்கை இலையை சொல்லலாம். வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் வேங்கை இலைகளில் சாப்பிடுவதால் கிடைக்கும்.
மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது' ன்னு ஒரு சித்தமருத்துவப் பழமொழியே இருக்கு. ஏகப்பட்ட மருத்துவகுணங்களை கொண்டது இந்த மந்தாரை இலைகள். இதில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் இருக்கு. வாதநோய், கால்வலி, இதய படபடப்பு, தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், அஜீரணக்கோளாறுக்குலாம் அருமருந்தா பயன்படுது. மந்தாரைக்கு திருவாச்சின்னு இன்னொரு பேரு. மந்தாரை மலர்கள் சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்கும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் இந்த இலையின்மீது அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மந்தாரை இலைன்னா நாலைந்து இலைகள், பலா, ஆலமர இலைகள்ன்னா 10 இலைகளை ஒன்றாக்கி , வட்டவடிவில் தட்டு மாதிரி ஈர்க்குச்சியால் இணைத்து இலையாக்கி சாப்பிட பயன்படுத்துவாங்க. முன்னலாம் மந்தாரை இலையில் சூடான பக்கோடா, ஜிலேபி மாதிரியான பண்டங்களை கட்டி அப்பா வாங்கி வரும்போது, இலைவாசனையோடு அந்த பண்டம் அம்புட்டு ருசிக்கும்.மந்தாரை இலை, வேங்கை இலை, ஆல இலை மட்டுமில்லாம மாவிலை, பின்னை இலை, பலாஇலை, தாமரை இலை, இலுப்பை இலை, செண்பக இலை, பாதிரிஇலை, பலாசு இலை, சுரை இலைகளைகூட நம் முன்னோர்கள் உணவருந்த பயன்படுத்தி இருக்காங்க. ஆல இலைகளில் சாப்பிட்டா ஆண்களின் உயிரணுக்கள் அதிகரிக்கும். பெண்களின் பிரச்சனைகளான வெள்ளைப்படுதல், சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை குணமாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். பலா இலையில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. தாமரை இலையில் சாப்பிட்டா உடல் சூடு அதிகரிக்கும். இலையில் சாப்பிடுறது நல்லதுதான். ஆனா, எந்தெந்த இலையில் சாப்பிட்டா என்ன பலன்னு பார்த்து சாப்பிடனும். அதேப்போல நீத்தார் கடன் செய்யும்போதும், அமாவாசை மாதிரியான முன்னோர்களுக்கு படைக்கும்போதும் மந்தாரை இலையைதான் பயன்படுத்தனும்.
ம்ம்ம் தெரிஞ்சுக்கிட்டேன் மாமா. இனி ஆல இலை மாதிரியான இலைகளை அவாய்ட் பண்ணிடுறேன். பிளாஸ்டிக் ஒழிக்குறதை பத்தி பேசிக்கிட்டிருக்கும்போது ஒரு படம் வாட்ஸ் அப்ல வந்துச்சு. இதை பாரேன். நாய் இறந்தபின் அதோட வயித்துல அது முழுங்குன பைகள் இருக்குறதா படம் சொல்லுது. இது ஃபேக் படம் மாதிரிதான் தெரியுது. இருந்தாலும் இதுமாதிரி நிஜத்துலயும் நிகழ வாய்ப்புண்டுதானே மாமா?!
அதே வாட்ஸ் அப்ல வந்த படத்தை பாரு. வாழ தெரிலன்னு அடிக்கடி புலம்புவியே! இப்பவாவது வாழ தெரியுதான்னு பாரு புள்ள!...
யூட்யூப்ல எதோ தேடிக்கிட்டிருக்கும்போது இந்த பாட்டு சிக்கிச்சு. முருகன் இந்த பொண்ணுக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறாரு.
ஆமா புள்ள! மாம்பழம் கிடைக்காமதான் பழனி மலைமேல உக்காந்திருக்கார். இந்த பாட்டை கேட்டா அமேசான் காட்டுக்குள் போய் ஒளிஞ்சுக்குவாரு போல!
இயற்கைக்கு திரும்புறேன்னு நம்ம ஆளுங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே! தாங்க முடில. தூக்கி எறியும் கொட்டாங்கச்சியை சீவி 1365 ரூபாய்க்கு விக்குறாங்க.ரொம்ப நாள் கழிச்சு ஒரு கேள்வி கேக்குறேன். இதுக்கு பதில் சொல்லு மாமா!
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே.
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயர்
அந்த பேரென்னன்னு சொல்லு மாமா!
நன்றியுடன்,
ராஜி
This comment has been removed by the author.
ReplyDeleteமுருகா... முருகா...
ReplyDeleteகுணா படத்தில் கமல் எழுதும் கடிதத்தில் வரும், முதல் சொல் தான் பதில்...
டிடி இருக்க கேள்விகளுக்கு பயமேன்?!!!
Deleteபயன்படுத்தாம வச்சிருந்தா அப்புறம் துரு பிடிச்சுடும்..
Deleteஇலையில் இவொலோ விஷயம் மா...அருமை ராஜி க்கா..
ReplyDeleteவிடுகதை யோசிக்கிறேன்ன்ன்ன்ன்ன்னன்ன்ன்...
ம்ம் இப்பதான் டிஸ்போசபிள் தட்டு வந்திட்டு. முன்னலாம் எல்லார் வீட்டிலும் மந்தாரை, ஆலம், பலா இலைகளால் ஆன தையல் இலைகள் உண்டு. விருந்தாளிகளுக்கு அதில்தான் சாப்பாடு பரிமாறுவாங்க
Deleteஇலைகளைப் பத்தி இவ்வளவு விஷயமா. நமக்கு தெரிஞ்சது எல்லாம் வாழை இலை மட்டும் தான்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ. அப்புறம் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேக்க கூடாது. வேணும்னா கூடவே பதிலையும் சேர்த்து எழுதுங்க .
ம்க்கும் யோசிங்க சகோ
Deleteஅந்தக் காலத்தில் பூரி மசால் மந்தாரை இலையில் கட்டித் தருவார்கள். அதன் மணமும் ருசியும் தனி.
ReplyDeleteஆமாம் சகோ.
Deleteஇங்கு பாக்கு மட்டையில் press செய்துதட்டு செய்கிறார்கள் நன்றாகவே இருக்கிறது நல்ல விலை உண்டு
ReplyDeleteஇங்கும் கிடைக்குறதுப்பா. ஆனாலும், தையல் இலைகளின் அழகும், வாசமும் நேர்த்தியும் பாக்குமட்டை இலையில் கிடையாது
Deleteராஜி பதில் கண்மணி???
ReplyDeleteஇலைகள் செமைஅய இருக்கும் வாசனை. மிகவும் பிடிக்கும். என் மாமியாரின் அம்மாவுக்கு வீட்டுல பலா இஅலை வைச்சு தைச்சுக் கொடுத்திருக்கேன். அவங்களும் தைபபங்க. அவங்க ஈர்க்குச்சு வைத்து தைப்பாங்க நான் நூல் வைச்சும் தைச்சுருக்கேன்...
அது சரி யாரு இந்த சுசிலா ராமன்? அதுக்கு சாமி வந்துருச்சோ?!
கீதா
ம்ம் யூட்யூபில் சமீபத்தில் பார்த்தேன் கீதாக்கா. இலைகளை தைக்குறாங்க.
Deleteசிறப்பான தகவல்கள்... எங்கள் அத்தைப் பாட்டி இருந்த வரை தையல் இலை வீட்டில் இருந்தது. இலை எடுத்து வருவது என் வேலை. தைத்ததும் உண்டு.
ReplyDeleteநானும் தைப்பேன் சகோ
Delete