Monday, December 31, 2018

வாழை இலையில் எப்படி சாப்பிடனும்ன்னு தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

மாமா பிளாஸ்டிக்லாம் பயன்படுத்தக்கூடாதுன்னு சட்டம் வந்திருக்கே! ஷாம்பு, எண்ணெய், பால்..இதுலாம் பிளாஸ்டிக் கவர்ல சிந்தாம சிதறாம பேக் பண்ணி வருமே! இனிமே அப்படி விற்கமாட்டாங்களா?!


ஒட்டுமொத்தமா எல்லா பிளாஸ்டிக்கையும் தடை செய்யலை. செய்யவும் முடியாது. இப்போதைக்கு, ஹோட்டல்களில்  பார்சல் கட்ட, தட்டுக்களில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பர், மேஜைமேல  விரிக்கும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் தெர்மாக்கோல் கப், பிளாஸ்டிக் தட்டு,  டீ/காபி/ஜூஸ்/தண்ணி/ சாப்பாடு  கொடுக்கும் கப்,  தண்ணி பாக்கெட், ஜூஸ் குடிக்கும் ஸ்ட்ரா, காய்/மளிகைசாமான்/துணிகள்/ மருந்துகள்ன்னு கடைகளில் சாமான் போட்டு கொடுக்கும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கொடிகள் .. இதுமாதிரியான 13 பொருட்களுக்கு தடை விதிச்சிருக்காங்க. இதுலாம் அன்றாடம் நாம அளவுக்கு அதிகமா பயன்படுத்தும் பொருட்கள். இதேமாதிரி, குளிர்பானங்கள், தண்ணி பாட்டில்களை தடை பண்ணா இன்னும் நிறைய பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். ஆனா, கார்ப்பரேட்காரன் விடமாட்டாங்க. கேஸ் போட்டு தடை வாங்குவாங்க.

முன்போல எங்க போனாலும் மஞ்சப்பை, வயர்கூடை,  கொண்டு போகனும்..


இரு மாமா! வயர்கூடைன்னு சொல்லுறியே அதுகூட பிளாஸ்டிக்ல ஆனதுதான். அதை மறந்துட்டியா?!

மறக்கல! ஆனா பாரு, ஒருமுறை வயர்கூடை வாங்கினா குறைஞ்சது மூணு வருசம் வரும். மூணு வருசத்துக்கொருமுறை ஒரு பையை குப்பையில் வீசுறதுக்கும், தினத்துக்கு நாலு பிளாஸ்டிக் கவரை வீசுறதுக்கு நிறைய வித்தியாசமிருக்கு. கணக்கு போட்டு பாரு. 365*3=1035 பைகள் வருது. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி குப்பையை வீசினா வீதி என்னாகும்?! இப்ப புரியுதா?! மெல்ல மெல்ல பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களையும், தண்ணியும் வாங்காம விட்டா பிளாஸ்டிக் பயன்பாடும் குறையும், தண்ணியும் மிச்சப்படுத்தலாம்.

ஆமா மாமா. இப்பலாம் கல்யாணம், காதுகுத்து மாதிரியான விசேச வீடுகளில்,  அரை லிட்டர் பாட்டிலில் தண்ணி வைக்குறாங்க. ஒரு பாட்டில் தண்ணீரையும் குடிப்பவங்க கொஞ்ச பேரே! தண்ணியும் வீணாகுது. பாட்டிலும் சேர்ந்து ஊரே கெடுது. அடுத்து இப்ப ஹோட்டல்ல எடுப்பு சாப்பாடு வாங்கினா சோறு கட்ட பிளாஸ்டிக் பேப்பர், சாம்பார்/ரசம்/காரக்குழம்பு/மோர்/பொரியல்/கூட்டு, அதை போட்டு கொடுக்க ஒரு கவர்ன்னு குறைஞ்சது  எட்டு பிளாஸ்டிக் பொருள் வரும். இப்ப அதுலாம் பிளாஸ்டிக் டப்பாவுல அடைச்சு தர்றாங்க. ஸ்வீட், சாப்பாடுன்னு பேக் பண்ணி வரும் டப்பாக்கள்ன்னு அது ஒருபக்கம்  வீட்டுல குமியுது. 

ம்ம்ம் அதேதான். அதுமாதிரி தேவையில்லாம அதிகப்படியான பொருட்களுக்குதான் இப்ப தடை விதிச்சிருக்காங்க. அரசாங்கம் யாருக்கும் அடிபணியாம சட்டம் போட்டு, அதை மக்களும் எதிர்காலத்தினை மனசில் கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கனும். பூமி நம்மை வாழ்த்தும். இந்த பூமி நமக்கு மட்டுமே சொந்தமில்லை. தண்ணி இல்லன்னா நீர்வாழ் உயிரினம் என்னவாகும்?! காசு இருக்கு நாம போர் போட்டு தண்ணி எடுத்து பயன்படுத்திக்குறோம். மத்த ஜீவராசிகள் தாகத்துக்கு எங்க போகும்?! இங்க விளையலைன்னா விளையுற இடத்தில இருந்து நாம இறக்குமதி பண்ணிக்கலாம். ஆனா, கால்நடைகள்?! வெயில் கொடுமைன்னு நாம ஏசி போட்டுக்கலாம், மத்த ஜீவன்கள்?!  இதுலாம் யோசிச்சு இனியாவது இயற்கையை காப்பாத்துவோம் அது நம்மை காப்பாத்தும்...
எல்லாம் சரி மாமா.. பிளாஸ்டிக் பேப்பரை தடை பண்ணிட்டா, ஹோட்டல்ல எல்லாரும் ஒரே தட்டைதான் கழுவி கழுவி யூஸ் பண்ணனுமே! ஒருமாதிரி சங்கடமா இருக்குமே! சாப்பிடுறவங்க உடல்நிலையை மனசில் வச்சிக்கிட்டு தட்டு, டம்ப்ளர்லாம் நல்லா க்ளீன் பண்ணுவாங்க.  பிளாஸ்டிக் பேப்பர் போடுறதால சில ஹோட்டல்களில் பிளேட்டை கழுவுறதே இல்ல. இதை நானே பார்த்திருக்கேன். கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் வாழை இலை பிளேட்ல போட்டிருப்பாங்க. இனி எல்லா இடத்துலயும் முன்போல வாழை இலை, மந்தாரை இலை, ஆல இலைல செஞ்ச இலைகள்லாம் புழக்கத்துக்கு வரும்.

வாழை இலையில் சாப்பிடுவது உடம்புக்கும் நல்லதுதானே மாமா.

ஆமா, வாழை இலையில் சாப்பிடுறது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுதவிர, இதில் சாப்பிடுறதால உடம்புக்கும் ரொம்ப நல்லது. இப்பலாம் க்ரீன் டீ குடிக்குறது ஃபேஷனாகிடுச்சு. க்ரீன் டீயில்  இருக்கும் Epigallocatechin gallate (EGCG) போன்ற பாலிபினால்ஸ்கள்  வாழை இலையில் அதிகமா இருக்கு. . இது, பல நோய்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ளா உதவுது. இன்னிக்கு அதிகமா பரவிவரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் வாழை இலை நம்மை காக்குது. வாழை இலையை அப்படியேவும் சாப்பிடமுடியாது, சமைக்கவும் முடியாது. அதனால்தான் வாழையிலையில் வச்சு கொழுக்கட்டை, மீன் மாதிரியான சில உணவுகள் செய்யப்படுது. வாழையிலையில் சமையல் செய்வது எல்லா இடத்துலயும் வழக்கமில்லாததால் சாப்பிட ஏற்பாடு செஞ்சாங்க. வாழை இலையில் சூடா சாப்பாடு, பதார்த்தம்லாம் பரிமாறும்போது அந்த சூட்டில் பாலிபினால்ஸ்கள்  இளகி சாப்பாட்டில் சேரும்.  இதில் ஆன்டிஆக்சிடண்ட் அதிகமா இருக்குறதால நோய் தடுப்பாகவும், சரும பாதுகாப்பிற்கும் பயன்படுது. 


வாழை இலையிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்தும். ரூட்டின் ஒரு சிறந்த  ஆக்ஸிஜனேற்றியாகும்.  வாழை இலை இயற்கையாவே உருவான கிருமி நாசினி, இதில் சாப்பிடும்போது சாப்பாட்டிலிருக்கு  நச்சுத்தன்மையை போக்குவதுடன்  நம் உடலில் எதிர்ப்பு  சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.


வாழை இலையில் உணவை பரிமாறும்விதத்தை பத்தியும் சொல்லி இருக்காங்க.  சாப்பிடுறவங்களுக்கு தலைவாழை இலைன்னா வாழை இலையின் நுனிப்பகுதி இடப்பக்கமாவும், அகலமான காம்புப்பகுதி வலப்பக்கமாவும் வரனும். பாதியில் கிழிச்ச ஏடுன்னா தண்டுப்பகுதி நம்ம சாப்பிடுறவங்க பக்கம் வரனும். இந்த அமைப்பு எதுக்குன்னா, உடம்புக்கு கெடுதல் செய்யும் உப்பு, இனிப்பு, ஊறுகாய்லாம் கொஞ்சமா பரிமாறவே. குறுகிய இடத்தில் கொஞ்சமாதானே வைக்கமுடியும்?! அடுத்து பச்சடி,பொரியல், அவியல், கூட்டுன்னு இருக்கனும். அகலமான அப்பளமும், நீளமான வாழைப்பழமும் வைக்க இடம் வேணுமே. அதுக்குதான் இலையில் விரிஞ்ச பக்கம்.  முதல்ல சோறு, பின் பருப்பு நெய்.. சாம்பார், காரக்குழம்பு/மோர்க்குழம்பு, ரசம், மோர்.. இப்படித்தான் உணவை பரிமாறனும். வாழை இலையில் கூட்டு, பொரியல், அப்பளம்,இனிப்புன்னு எதுமே இல்லாம வெறும் இலையில் சோறை போடக்கூடாது. அது கெட்டதுக்கான அறிகுறி. சாப்பிட்டபின் இலையை தன் பக்கமா மடிக்கனும். அப்படி மடிக்குறது சாப்பாட் நல்லா இருந்துச்சுன்னு சொல்லவும், உறவை நீட்டிக்க ஆசைன்னும் அர்த்தம், இலையை வெளிப்பக்கமா மடிச்சா சாப்பாடு நல்லா இல்லைன்னும், உறவை தொடர விருப்பமில்லைன்னு சூசகமா சொல்லும் முறை. 

இழவு வீட்டிலும் வெளிப்பக்கமாதானே இலையை மடிக்கனும் மாமா. 

ஆமா, இதுமாதிரியான துக்க நிகழ்ச்சியில் இனியொருமுறை உங்க வீட்டில் கலந்துக்க விருப்பமில்லைன்னு சொல்லாம சொல்லவே இந்த ஏற்பாடு. 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15நாள்தான் மாமா இருக்கு. எப்ப புடவை எடுக்க போகலாம்?!

பீரோ நிறைய புடவை அடுக்கி வச்சிருக்கியே! அதுல பாதிய ஒழிச்சு கட்டு அப்புறமா கூட்டி போறேன்.

போ மாமா, தினத்துக்கு உடுத்த, சும்மா கடைவீதிக்கு போக... கல்யாணத்துக்கு போக பட்டுச்சேலை.. மத்த நிகழ்ச்சிகளுக்கு போக டிசைனர் சேலை, அப்புறம் சடங்கு சேலை, கல்யாண சேலை, அப்பா வாங்கி கொடுத்தது, மகன் வாங்கி கொடுத்தது நினைவார்த்தமா கட்டாமயே சில புடவைகள்ன்னு ரெண்டே ரெண்டு கப்போர்ட்ல வச்சிருக்கும் சேலை உனக்கு கண்ணு கரிக்குதா?!

 மறைஞ்ச நகைச்சுவை நடிகர் நாகேஷ் ஐயா, மார்கழி மாச கடைசியில் வீட்டிலிருக்கும் எல்லார் துணிகளையும் நல்ல நிலையில் இருப்பவைகளைலாம் ஓரிரு உடைகளை வச்சிக்கிட்டு மத்ததுலாம் இல்லாதவர்களுக்கு கொடுத்துடுவாராம்.  நகைகள் தவிர்த்து வீட்டிலிருக்கும் பொருட்களையும் மார்கழி மாசக்கடைசி வாரத்துல கொடுத்துட்டு தைமாசம் புதுப்பொருட்களோடு பண்டிகையையும், அந்த வருசத்தையும் வரவேற்பாராம்!!

நல்ல பழக்கமாதான் இருக்குல்ல! இனி நானும் அப்படியே செய்றேன். நல்ல நிலையில் இருக்கும்போதே செண்டிமெண்ட் பார்க்காம  எடுத்து கொடுத்திடுறேன் மாமா.

அப்படியே செய் நல்லது.. வீடாவது அடைச்சல் இல்லாம நல்லா இருக்கும்.


பார்த்ததும் சிரிச்ச விடியோ... இனி சாப்பிடமுடியாதோ.ன்னு ஏக்கமும், தெரியாம சங்கத்துல சேர்ந்துட்டோமோன்னு வருத்தத்தோடும், , அழகான முகபாவனையில் குட்டி பையன் சூப்பர். பின்னாடி பேசும் நெல்லை பாஷையும் செம.  கேட்டு பாரேன் மாமா.

அண்டத்தினை விந்து நெருங்குதலை ஈசியா புரிய வைக்கும் இந்த படம் நெட்டுல சுட்டது.  எதாவது மகப்பேறு மருத்துவர் ஐடியாவா இருக்கும் இந்த படத்தை பாரேன். நல்லா இருக்குல்ல!

ம்ம்  நான் கடைக்கு போய் வயர் வாங்கிட்டு வந்து கூடை பின்னுறேன். அதான் நாளையிலிருந்து கவர்லாம் கிடைக்காதுல்ல!

நல்ல காரியம்தான்.. போய்வா!

நன்றியுடன்,
ராஜி

14 comments:

 1. வாழையிலையின் மேற்பகுதி காலியாகி விட்டால், நம் மேற்பகுதி நிரம்பும்...

  குட்டி பையன் காணொளி இன்று தான் வந்தது... அதற்குள் இங்கே...

  ReplyDelete
  Replies
  1. அந்த வீடியோ மூணு நாளாய் சுத்திக்கிட்டு கிடக்குண்ணே!!

   Delete
 2. சுவாரஸ்யமான விவரங்கள். வாழை இலை விவரங்கள் அறிந்தவைதான் ஆயினும் மீண்டும் ஒரு முறை படிக்க சுவாரஸ்யம். குப்பையில் அமர்ந்திருக்கும் அந்த மாடு மனதை பாதிக்கிறது. எல்லாப் படங்களுமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. பூமிப்பந்து மனிதனுக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைச்சுதான் பூமியை கெடுத்து சுடுகாடாகிட்டு இருக்கோம்.

   Delete
 3. காணொளி பார்த்துச் சிரித்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நானும், பையனோட பாவங்கள் அருமை சகோ. அதுவும் இனி பசிச்சா சாப்பிடக்கூடாதான்னு கேட்கும் இன்னொசண்ட் செம..

   Delete
 4. இப்படி ஒரு மாமா சந்தேகங்களை தெளிவிக்க கொடுத்து வைத்தவர் நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. ம்க்கும் அந்தாளே ஒரு குழப்பவாதி. அந்தாளு என் சந்தேகத்தை தீர்த்து வச்சிட்டுதான் மறுவேலை.. காமெடி பண்ணாதீங்கப்பா

   Delete
 5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே

   Delete
 7. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி/ ராஜி..

  வாழை இலையில் பரிமாறல் பற்றி ஏற்கனவே அறிந்தது என்றாலும் மீண்டும் இங்கும் பார்த்துக் கொண்டாயிற்று..

  ப்ளாஸ்டிக் இல்லாமல் இருப்பது கூடியவரை தவிர்க்கலாம்..

  அனைத்தும் அருமை...சகோ/ராஜி

  கீதா: மாடு பாவம் அதைச் சுற்றி ப்ளாஸ்டிக்....மனம் கஷ்டமாகிடுச்சு. திருப்பதில ஒரு மாடுக்கு பிரசவம் ஆனப்புறம் நடக்க முடியாம அதோட உயிர் ரொம்ப டேஞ்சரான நிலைல இருந்துருக்கு திருப்பதி வெட்னரி காலேஜ் ஆஸ்பத்திருக்கு கூட்டிட்டுப் போனா வயிற்றுனுள் 40 கிலோ ப்ளாஸ்டிக்மற்றும் வேஸ்ட் துணிகளாம்.....ஆப்பரேட் செய்து எடுத்தனர்...அந்த மாடு கொஞ்சம் கிரிட்டிக்கல் அப்புறம் மஹாராஷ்டிராவுல 50 கிலோ வயுத்துக்குள்ள...

  பாவம்ல...நாம மனுஷங்க திருந்தவே மாட்டோமோ?

  ReplyDelete
 8. திருந்த மாட்டோம் கீதாக்க/ துளசி சார்..

  பயன்படுத்த எளிதானதுன்னு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஏகத்துக்கும் பயன்படுத்தி தினத்துக்கு நாலு பொருட்களை வீசி எறிஞ்சு சுற்றுச்சூழலை வீணடிச்சிருக்கோம். அதேமாதிரி குளிர்பான/தண்ணி பாட்டில்களையும் தடை பண்ணா நல்லா இருக்கும்.

  ReplyDelete