Friday, December 18, 2020
உலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி
Monday, December 07, 2020
ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது தவறா?! - ஐஞ்சுவை அவியல்
Sunday, December 06, 2020
என் உதிரத்தில் உதிர்த்த மூன்றாவது உயிருக்கு இன்று பிறந்த நாள்...
பிள்ளைகள் எத்தனை வளர்ந்தாலும் பெற்றோருக்கு குழந்தைதான்.. கருத்தரித்ததை உணர்ந்தது, கருவின் முதல் அசைவு, மசக்கை தொந்தரவு, உடல் உபாதைகள், பிரசவ வலியை தாங்கவேண்டுமென்ற பயம் என தாய் ஒரு பக்கமும், மருத்துவ செலவு, புதுசாய் ஜனிக்கும் குழந்தைக்கும் சேர்த்து பொருள் ஈட்ட என தந்தை ஒருபக்கமும் வெவ்வேறு பக்கம் பயணித்தாலும் தன் குழந்தை இந்த மண்ணில் ஜனிக்க போகும் அந்த நொடிக்காக காத்திருப்போம். அக்குழந்தை ஜனித்த முதல் நொடியில் இருவர் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து என்னமோ இமாலய சாதனை புரிந்தமாதிரி அத்தனை பரவசப்பட்டிருப்போம். அந்த பரவசத்தினை ஒருமுறை அனுபவித்தால் போதுமா?! ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க ஆசைதான். ஆனால், யதார்த்தம் அதற்கு ஒத்துவராது. அதனால்தான் பிறந்த நாள் என ஒன்றினை இறைவன் படைத்தானோ என்னமோ?!
Thursday, November 05, 2020
அருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி
மன அமைதிக்குதான் கோவிலுக்கு போறதே! புகழ்பெற்ற கோவிலுக்கு போகும்போது நேரம், பயணக்களைப்பு, கோவில் நடைமுறை, கூட்டம் என பல காரணங்களால் கசப்பான அனுபவத்தை பலர் அனுபவித்திருப்போம்.. ஆனா, அதிக பிரபலமாகாத கோவில்களுக்கு போனால், கசப்பான அனுபவம் நேராது. அதேநேரத்தில் மன அமைதியும் கிட்டும். உள்ளூர் கோவில் என்றால் நேரம், பணம், உடல் உழைப்பு மிச்சமாகி புண்ணியத்தோடு நல்லதொரு அனுபவமும், நம்ம வட்டாரத்துல இவ்வளவு பிரபலமான கோவில் இருக்கான்னு ஆச்சர்யமும் ஏற்படும்.
அருங்கோண, ஸ்டார் டைப் வயர் கூடை - கைவண்ணம்
ஜூலையில் மகள் கர்ப்பிணியாய் வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியோடு மகளின் பத்திய சாப்பாடு, குழந்தை பராமரிப்பு, குழந்தையை பார்க்க விருந்தினர் வருகைன்னு... வேலை பளு அதிகமா இருக்கும்ன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்.
Wednesday, November 04, 2020
மதுரையின் அழகிய கோலத்தை அலங்கோலமாக மாற்றிய ஆங்கிலேயர் -மௌனசாட்சிகள்.
எத்தனைமுறை சென்றாலும் அலுப்பு தட்டாத நகரம் மதுரை மாநகரம். மீனாட்சி அம்மன் கோவிலாகட்டும், நாயக்கர் மகாலாகட்டும், அழகர் கோவிலாகட்டும், ராணி மங்கம்மாள் மாளிகையாகட்டும்.. பார்க்க பார்க்க அலுப்பு தட்டாது. இந்நாளில் நாம் காணும் பழமையும், புதுமையும் கலந்து காணப்படும் மதுரை, 300 வருஷங்களுக்கு முன்னர் மதுரையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கியது. இப்பொழுது இருந்ததைவிட நேர்த்தியாகவும், அழகாகவும் இருந்ததுன்னு சொன்னா ஆச்சர்யமாதான் இருக்கும். மதுரையை பாண்டிய மன்னர்கள் ஆண்ட 13-ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பெரிய கோட்டை இருந்ததுன்னு வரலாற்று ஆய்வுகள் சொல்வதா படிச்சேன். அது நிஜமா?! பொய்யான்னு இன்றைய மௌனசாட்சிகள் பதிவில் பார்க்கலாம்.
Tuesday, November 03, 2020
வெங்காய பக்கோடா - கிச்சன் கார்னர்
Monday, November 02, 2020
விட்டுட்டு போறதா காதல்!? எதற்கும் விட்டுட்டு போகாமல் இருப்பதே காதல்?! - ஐஞ்சுவை அவியல்
சிக்கனை வாங்கி கொடுத்தது பத்து மணிக்கு ... இப்ப மணி 1ஆகுது.. சாப்பாடு ரெடியான்னு கேட்டா இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்ன்னு சொல்றியே! சிக்கன் கறிதானே சமைக்குறே?! என்னமோ பெரம்பலூர்ல வாழ்ந்த டைனோசர் கறி சமைக்குற மாதிரி இம்புட்டு நேரமா!?
சமைக்குறது அம்புட்டு ஈசியா?! ஒருநாளுக்கு சமைச்சு பாருங்க அப்ப தெரியும் எங்க கஷ்டம்..
Sunday, November 01, 2020
ஒருநாள் நினைவிது,, பலநாள் கனவிது... பாட்டு புத்தகம்
Thursday, September 10, 2020
சம்புவராயர்கள் ஆரணியை அடுத்த படைவீட்டை தலைநகராகக் கொண்டு தொண்ட மண்டலத்தை ஆண்டனர்.
சம்புவராயர்கள் ஆரணியை அடுத்த படைவீட்டை தலைநகராகக் கொண்டு தொண்ட மண்டலத்தை ஆண்டனர்.நல்ல தகவல் திரட்டி எழுது
Wednesday, September 09, 2020
பஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்
சீரியல் பார்க்க பிடிக்காத எனக்கு பின்கோடு, நீரும் நிலமும், ஊரும் பேரும், வரலாற்று சுவடுகள், மண் பேசும் சரித்திரம், மூன்றாவது கண், சுற்றலாம் சுவக்கலாம், ஊர் சுற்றலாம் மாதிரியான இடம் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்க்க பிடிக்கும். அந்தந்த இடங்களின் உணவு, வரலாறு, கலாச்சாரம், கோவில், கோட்டை, கட்டிடங்களை சுத்திக்காட்டும் நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்க்கப்பிடிக்கும். புதுசா ஒரு இடத்தினை பார்த்தால் இங்க போகனும்ன்னு மனசுல நினைச்சுப்பேன். அந்த பக்கம் போகும்போது கண்டிப்பா அந்த இடங்களுக்கு போய் வருவேன். வேந்தர் டிவில பின்கோடு நிகழ்ச்சில வேலூர் பத்தின பெருமைலாம் சொல்லிக்கிட்டு வரும்போது விளாப்பாக்கத்துல பஞ்சபாண்டவர் மலைன்னு இருக்குன்னு சொல்லி காட்டுனாங்க. பஞ்ச பாண்டவருக்கும், வேலூருக்கும் என்னடா சம்பந்தம்ன்னு பல நாளாய் மண்டைக்குடைச்சல்.
Friday, September 04, 2020
ஒரே கோவிலில் ஒன்பது பெருமாள் அவதாரங்களை தரிசிக்கனுமா?! - புண்ணியம் தேடி..
Thursday, September 03, 2020
காலத்தால் அழிந்துவிட்ட பாண்டியன் அணைக்கட்டு - மௌன சாட்சிகள்
என்ற பதிவுக்கு ராஜி வரல, நாம ஏன் ராஜி பதிவுக்கு போகனும்ன்னு இதுவரை நீங்க யாரும் நினைச்சதே இல்ல. கொஞ்சம் கேப் விட்டு வரும்போது உங்க வீட்டு பொண்ணா நினைச்சு என் பதிவுக்கு எல்லாரும் வந்திருக்கீங்க. அதுப்போல இனியும் வரனும். மகளுக்கு பேறுகாலம் நெருங்குது.. எறும்பு சேகரிப்பதுப்போல அவளுக்கும், வரப்போகும் சின்னஞ்சிறு உயிருக்கும் தேவையானதை சேகரிக்கும் பிசியில் இருப்பதால் நேரம் கிடைக்கும்போது வந்து போடும் பதிவுகளுக்கு ஆதரவு கொடுக்கனும்ன்ற நிபந்தனையோடு இன்றைய பதிவுக்குள் போகலாம்..
தழுவியமகாதேவர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பழையாற்றின் கரையோரமாக அடுத்த கோவிலுக்கு போகும்போது பழையாற்றுக்குப்பின் இருக்கும் வரலாற்றை பகிர்ந்துக்கொண்டே சென்றோம்.
Tuesday, September 01, 2020
சீராளம் - பாரம்பரிய சமையல்-கிச்சன் கார்னர்
மகளுக்கு சீமந்தம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டி வந்தாயிற்று. அவள் இனிப்பா எதும் சாப்பிட மாட்டா. சத்தானதுன்னு ராகி புட்டு, ராகி வடை, முருங்கைக்கீரை தோசை, கேரட் ஜூஸ், உருளை கட்லட்ன்னு செஞ்சு கொடுத்தாலும் அவளோட விருப்பமெல்லாம் குக்கரில் செய்யாத வெண்பொங்கலும் சாம்பாரும்... மாலை நேரத்திற்கு காரமா சீராளம், அரிசி வடைதான். முன்னலாம் சிப்ஸ், பப்ஸ்ன்னு சாப்பிடுவா. இப்ப அதுலாம் கொடுக்கக்கூடாதே...
Friday, August 21, 2020
பக்தர்களின் நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி பாஷாண லிங்கம் - புண்ணியம் தேடி
ஆன்மீகபூமியான இந்தியாவில் ஏகப்பட்ட புண்ணிய தலங்கள் உள்ளது. அவை, ஒவ்வொன்றும் தனக்குள் ஒரு அற்புதத்தை ஒளித்து வைத்திருக்கு. ராமர் பூஜித்தது, சிவனை சக்தி எரித்தது, முருகன் வதம் பண்ணியது, பக்தனுக்கு அருளியது, மிகப்பெரியது, தங்கத்தால் இழைத்தது, வருடத்திற்கொருமுறை, ஒருநாள் மட்டுமே திறக்கும் கோவில்ன்னு பலப்பல அதிசயங்களை கொண்ட கோவில்கள் பலதை நாம கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம்.. இன்னிக்கு பதிவில் பார்க்க போகும் கோவிலும் அதுமாதிரி வித்தியாசமான கோவில்தான்.
Friday, August 14, 2020
தழுவிய மகாதேவர்கோவில்- வடசேரி -புண்ணியம் தேடி ஒருபயணம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மகாதேவர் கோவில்கள் இருந்தாலும் அதில் தாணுலிங்கம், தழுவியலிங்கம், பூதலிங்கம் போன்ற ஆலயங்கள் இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவதலங்களாகும். தாணுலிங்கம், சிவதாணு, பூதலிங்கம்ன்ற பேர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது இம்மாவட்டாத்தாரின் வழக்கம்.
Tuesday, August 11, 2020
மகாபலிபுரம் - அன்றும்-இன்றும் - மௌன சாட்சிகள் பாகம் -2
Saturday, August 01, 2020
அதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும் ஆடிப்பெருக்கு - ஆடி 18 ஸ்பெஷல்
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில் வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.