1990 ல
தூயா இங்க வாம்மா
என்னம்மா?
பக்கத்துல வந்து உக்காருடி செல்லம் நாம ஏ,பி,சி,டி சொல்லலாம்.
எங்கே சொல்லு பார்க்கலாம் ஏ,பி,சி,டி..,
ஏ,பி,சி,டி
ம் அப்புறம்...,
அப்புறம் என்னம்மா
முழுசா ஏ,பி,சி,டி, சொல்லும்மா.
ம் முழுசா ஏ,பி,சி,டி
அவ்வ்வ்வ்வ் 2000ல
அவள் ஹோம்வொர்க் நோட்டுல, ஒரு வார்த்தையில சியும் டியும் விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டி
சிடி எங்கேம்மா தூயா?
இரும்மா அலமாரில இருக்கான்னு பார்த்துட்டு வரேன்.
நற நற நற
2011 ல
சில நாட்கள் வெளியூருக்கு நான் மட்டும் போக வேண்டிய சூழல். திரும்பி வந்து பார்க்கும்போது
கம்ப்யூட்டர் சியும், டியும் எழுத்துக்கள் அழிஞ்சுப் போயிருந்துச்சு
தூயா . கீப்போர்டுல இருந்த சிடியை காணோமேம்மா.
லூஸுப் போல உளறதேம்மா. கீப்போர்டுல எப்படி சிடி இருக்கும்?
அது சிடி டிரைவ்லதானே இருக்கும்
கிர்ர்ர் டமால்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இப்படி என்னை கலாய்ச்சு, பல்ப் குடுக்கும் என் செல்ல மகளுக்கு இன்று பிறந்த நாள் அவளுக்கு வாழ்த்து சொல்லும் இந்த இனிய வேளையில், அவள் தந்த பல்ப்க்களை எண்ணி, "எண்ணி" சிறு வெட்கத்துடன் பெருமிதமும் கொள்கிறேன்.
டிஸ்கி1:என் கண்ணசைவில் என் எண்ணத்தை புரிந்து சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் நடக்க வல்லவள். சில நேரங்களில் மட்டும் மகளாகவும், மற்ற நேரங்களில் தாயாகவும்,தோழியாகவும், ஆசானாகவும் அவதாரமெடுக்கும் இவள், வெகுசில சமயங்களில் மட்டும் குட்டிசாத்தானாகவும் மாறி உயிரை எடுப்பாள்.
அவளுக்கு பரிசாய் ஒரு கவிதை:
அப்படிதான் இருந்தாள் அவள்..,
தங்கச் சிலைக்கு
உயிர் பெற்று, அசைந்தாடி..,
வெள்ளி மணிகளின் நாதம் போல்
அழுகையுடன்...,
கரை தொலைத்த படகாய்
நானிருக்க, தூரத்தில்
கண்சிமிட்டி வழிகாட்டும் கலங்கரை
விளக்காய் நீ வந்தாய்...,
எனக்காவே பிறந்தாய் நீயென்று
உன்னை நான் உச்சி முகர்ந்த
அத்தருணமே.., என் மனம்
சாந்தியடைய கண்டேன்..,
என்னவளே!
எனக்கு வரமாக கிடைத்தவளே!
இறைவனிடம் எனக்காக
வரமொன்று கேட்பாயா?!
என் விழிநீர் உனைத்தழுவ
உன் மடிதனில் முகம்
புதைத்திருக்கும் வேளையினில்
எனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,
உன் பிறப்பில் உளமகிழ்ந்தேன்
என்னுயிரையும்விட நேசிக்கிறேன் உன்னை..,
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.
தங்கச் சிலைக்கு
உயிர் பெற்று, அசைந்தாடி..,
வெள்ளி மணிகளின் நாதம் போல்
அழுகையுடன்...,
கரை தொலைத்த படகாய்
நானிருக்க, தூரத்தில்
கண்சிமிட்டி வழிகாட்டும் கலங்கரை
விளக்காய் நீ வந்தாய்...,
எனக்காவே பிறந்தாய் நீயென்று
உன்னை நான் உச்சி முகர்ந்த
அத்தருணமே.., என் மனம்
சாந்தியடைய கண்டேன்..,
என்னவளே!
எனக்கு வரமாக கிடைத்தவளே!
இறைவனிடம் எனக்காக
வரமொன்று கேட்பாயா?!
என் விழிநீர் உனைத்தழுவ
உன் மடிதனில் முகம்
புதைத்திருக்கும் வேளையினில்
எனக்கான மரணம் நிகழ வேண்டுமென்று..,
உன் பிறப்பில் உளமகிழ்ந்தேன்
என்னுயிரையும்விட நேசிக்கிறேன் உன்னை..,
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கின்றேன்.
என் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லும் அதே வேளையில், அவள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெறனுமினு கடவுளை வேண்டிக்கணுமினு கேட்டுக்குறேன்.
Wish You Many More Returns of The Day Thooyaa.