திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தவிர அருவி, கோட்டை, கொத்தளம், கோவில்ன்னு சொல்லிக்குற மாதிரியும், சுத்தி பார்க்குற மாதிரியும் புகழ்பெற்ற எந்த இடங்களும் கிடையாதுன்ற மனக்குறை எனக்குண்டு. ஆனாலும், பெத்த தாயையும், குடிக்குற தண்ணியையும், வாழும் பூமியையும் பழிக்கக்கூடாதாம். அதனால், வேற ஊருக்கு போயிடலாம்ன்னு மாமாவை இதுவரை கூப்பிட்டதில்லை...
Saturday, May 14, 2022
Wednesday, May 11, 2022
மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிடுங்க சாமியோவ்!!
ஐயா கருப்ப (blog) சாமி!!
பெரிய மகள் திருமணம், கால் எலும்பு முறிவு, பேரன் பிறப்பு, மகள் மருமகன் பேரனுக்கு கொரோனா, மீண்டும் பெரிய மகள் கருத்தரிப்பு, இளைய மகளுக்கு திருமணம், பெரிய மகளின் இரண்டாவது குழந்தை குறை பிரசவம், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றும் கொண்டு வரும் பெரிய பொறுப்பு, மாமனார் இறப்பு, தாய்மாமன் இறப்புன்னு வரிசையா நிக்காம ஓடுனதுல உன்னைய கண்டுக்காம விட்டது தப்புதான்...
பிள்ளைகள் அதது எதிர்காலத்துக்காக ஓடும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம பின் தங்கி தனியா இருக்கும்போதுதான் உங்க அருமை தெரியுதுங்க...
நூத்துக்கணக்குல கமெண்ட் வேணாம், அஞ்சோ பத்தோ போதும்... அதிகமா ஷேரும், வீவர்சும்கூட வேணாம்.. நீங்களே எதாச்சும் பார்த்து என்னைய போரடிக்காம பார்த்துக்கிட்டா போதுமுங்க சாமி!!
என்னைய மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிட்டா மட்டும் போதும்!! காலத்துக்கும் உங்களுக்கு விசுவாசமா இருப்பேனுங்க.. மன்னிச்சு ஏத்துக்கிடுங்க....
நன்றியுடன்,
ராஜி.
Subscribe to:
Posts (Atom)