Sunday, May 31, 2020
தெய்வீக ரகசியத்தை அறிந்துக்கொள்ளனுமா?! - ஐஞ்சுவை அவியல்
மானே தேனே கட்டிப்புடி - பாட்டு புத்தகம்
Saturday, May 30, 2020
அரிசி குத்தும் அக்கா மகளே! - கிராமத்து வாழ்க்கை
Friday, May 29, 2020
ஸ்ரீலட்சுமண சித்தர் சுவாமிகள் -பாண்டிச்சேரி சித்தர்கள்.
பொழுதன்னிக்கும் சாமி கும்பிட்டுக்கிட்டும், இறை
உணர்வோடும், தரும சிந்தனையோடும் இருக்கும் இறை பக்தர்கள்
நம்மில் பலர் உண்டு. இன்னும் கொஞ்சம் அதிகமான இறை பக்தியுடன் குடும்பத்தை விட்டு
விலகி சாமியாராய் போனவர்களும் நம்மில் சிலர் உண்டு. ஆனா,
நம்மில் எத்தனை பேர்கள் சித்தர்களா மாறி இருக்கோம்?! அதென்ன பெரிய விசயமா ஓலைச்சுவடிகளை படிச்சு சித்து வேலைகளை
கத்துக்கிட்டால் சித்தராகிடலாம்ன்னு பதில் வரும். ஆனால், அது
முடியாது. ஏன்னா, பக்தர்கள்/சாமியார்களுக்கும் சித்தருக்கும்
ஒரே வித்தியாசம்தான் இருக்கு. பலவாறாய் குழம்பி, இறைவனை காண
முயன்று, கோவில் குளம் என இறைவனை தேடிக்கொண்டிருப்பவர்கள்
பக்தர்கள்/சாமியார்கள். இறைவனை கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். இறைவனை
கண்டபின் சித்தர்களுக்கு
எங்கும் எதிலும் இறைவனே! இறைவன் ஒருவனே என உணர்ந்ததால் பெரிதாய்
இறைவழிபாட்டில்கூட அவர்கள் அதிகமாய் ஈடுபடுவதில்லை. முடிந்தளவுக்கு
அடுத்தவர்களுக்கு உதவி செய்துவிட்டு சதா சர்வக்காலமும் தான் உணர்ந்த இறைவனை
நினைத்து கொண்டு தனிமையில் இருப்பர்.
Tuesday, May 26, 2020
சுலபமாய் செய்யலாம் முறுக்கு வத்தல் - கிச்சன் கார்னர்
Monday, May 25, 2020
தாராவியினை இதே நிலையில் இருக்கச்சொல்கிறதா Slum Tourisam?!- ஐஞ்சுவை அவியல்
Sunday, May 24, 2020
என்னை ஏன் பிடிக்காது என்றாய்?! - பாட்டு புத்தகம்
Saturday, May 23, 2020
அன்பு எப்படி இருக்கனும்ன்னு தெரியுமா?!
Friday, May 22, 2020
சிவன்மலையில் வீற்றிருப்பது யார்?! - புண்ணியம் தேடி..
Sunday, May 17, 2020
வீட்டில் திட்டு வாங்க வைத்த பாட்டு - பாட்டு புத்தகம்
Saturday, May 16, 2020
தொற்றுநோயாளிகளை அரவணைத்துக்கொள்ளும் தாம்பரம் சானிடோரியம்
Friday, May 15, 2020
அருள்மிகு ஸ்ரீமஞ்சனீஸ்வரர் அய்யனாரப்பன் திருக்கோவில் -கீழ்ப்புத்துப்பட்டு.
நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு,
மாட்டிக்கிட்டு முழிக்குதே அய்யாக்கண்ணு..ன்னு
பழைய பாட்டு ஒன்னு இருக்கும், அதை அனுபவப்பூர்வமா உணர்ந்தேன்.
என்ன அனுபவம்ன்னு படிக்கும்போதே தெரிஞ்சுப்பீங்க!. போனவாரம் ஸ்ரீமௌலானாசாகிப் சுவாமிகள் ஜீவ சமாதியான தர்காவினை பற்றி பார்த்தோம். அங்கிருந்து கீழ்புத்துபட்டு ஸ்ரீலஷ்மண சுவாமிகள் ஜீவ சமாதிகளை
பார்க்கலாம்ன்னு கிளம்பினோம். வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகுதுன்னு
யாருமே அறியாதது. அதுமாதிரிதான் நாங்க நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு...
Wednesday, May 13, 2020
அரிச்சந்திரன் நல்லவனா?! கெட்டவனா?!- தெரிந்த கதை, தெரியாத தகவல்
Tuesday, May 12, 2020
Monday, May 11, 2020
இப்படியா சோறு திம்பாங்க?! - ஐஞ்சுவை அவியல்
என்னவாம்?! உன் ஃப்ரெண்ட் ஒரண்டை இழுக்காத ஆள் யாராவது இருக்காங்களா?! எல்லார்க்கிட்டயும் சண்டை இழுக்குறதே அவளுக்கு வேலை. சரி, பெத்த புள்ளைக்கிட்ட எதுக்கு சண்டை போட்டாளாம்?!
அப்பு புதுசா வாங்குன தன் வண்டியின் முன்பக்கத்தில் தன்னோட பேரும், சிறகு இருக்கும் ஒரு கொம்பை, இரு பாம்புகள் பின்னி இருக்குற மாதிரி ஒரு குறியீட்டை வரைஞ்சு வந்திருக்கான். இதை ஏன்டா வரைஞ்சேன்னு ராஜி கேட்டதுக்கு, இது மருத்துவத்துக்கான குறியீடு, இதை டாக்டர்கள், நர்ஸ், ஹாஸ்பிட்டல், ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த தொழிலாளர்கள், வண்டிகள், இடங்களில் பயன்படுத்தலாம், நான் பிசியோதெரபி படிக்குறதால், நான் என் வண்டியில் வரைஞ்சுக்கிட்டேன்ன்னு சொல்லி இருக்கான்.
சரியாதானே சொல்லி இருக்கான்?! அப்புறம் எதுக்கு புள்ளைய திட்டினா?!
யார்கிட்ட கதை விடுறே! ஆம்புலன்ஸ்சில் சிகப்பு கலர்ல ப்ளஸ் குறிதான் இருக்கும். நிறைய டாக்டர்கள் தங்களோட வண்டிகளில் அதைதான் போட்டிருக்காங்க. நான் நிறைய அதுமாதிரி பார்த்திருக்கேன்னு சொல்லி இருக்கா.
ராஜி சொல்றதும் சரிதானே?!
மாமா! யாராவது ஒருத்தங்க பக்கமா பேசுங்க! ரெண்டு பேரில் யார் சொல்றது சரி?!
ரெண்டு பேரும் சொல்வதுமே சரி. பரவலா சிவப்பு கலர் ப்ளஸ்தான் மருத்துவமனை, ஆம்புலன்ஸ்சில், ஹாஸ்பிட்டலில் இருக்கு. ஜெனிவா ஒப்பந்தப்படி போர்க் காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்பவர்களும், மருத்துவ உதவி செய்பவர்களும் வெள்ளை நிறத்து பிண்ணனியில் சிவப்பு நிறத்து பிளஸ் குறியீட்டை பயன்படுத்துவாங்க. இதுக்கு ரெட்கிராஸ்ன்னு பேரு. நம்ம ஊரு ஸ்வஸ்திக்ல இருந்து இந்த குறியீடு வந்ததுன்னு நம்மாளுங்களும், இல்லை எங்க சிலுவை சின்னத்திலிருந்து வந்ததா கிறிஸ்துவர்களும் சொந்தம் கொண்டாட, உங்க ரெண்டு பேரு சகவாசமே வேணாம்ன்னு அரபு நாட்டினரும், இன்னும் சில நாட்டினரும் இந்த குறியீட்டுக்கு பதிலா பிறை, சிங்கம், செம்படிகம்ன்னு வேறு சில குறியீட்டையும் பயன்படுத்திக்கிட்டாங்க. 1864ல் போர்ப்படையில் மருத்துவப்பிரிவினர் தங்களை தனித்து அடையாளப்படுத்திக்க இந்த ரெட்கிராஸ் சின்னத்தை பயன்படுத்திக்க ஆரம்பிச்சாங்க. தூரத்திலிருந்தும் பளிச்சுன்னு இந்த குறியீடு தெரியும் காரணத்தினாலும், உதவி தேவைப்படுறவங்க சுலபமா அடையாளம் காணவும், சுலபமா வரையக்கூடியதாலும் இந்த குறியீடு உலகம் முழுக்க பரவிச்சு. ஹாஸ்பிட்டல், ஆம்புலன்ஸ், மருந்துக்கடைன்னு எல்லாரும் இந்த குறியீட்டை பயன்படுத்தி வர்றாங்க. ஆனா, மருத்துவத்துக்கான குறியீடுன்னு பார்த்தா அப்பு வரைஞ்ச கொம்பை சுத்தி இரு பாம்புகள் இருக்கும் படம்தான் சரியானது.
சரி, இந்த குறியீட்டின் அர்த்தம் என்ன மாமா?!
நமக்கு எதுவுமே சாமிக்கிட்ட ஆரம்பிச்சாதான் புரியும், கடைப்பிடிப்போம். அதனால், ஆன்மீக காரணத்தை சொல்றேன். சிவன் கோவில்கள், ஆல/அரச/வேப்ப மரத்தடியில் இரு பாம்புகள் பின்னி இருக்கும் சர்ப்ப பிரதிஷ்டைகளை பார்த்திருப்போம். இந்த பிரதிஷ்டையை தினமும் தரிசனம் செய்தால் நாம் செய்த கர்மவினைகள் நீங்கும், தீராத வியாதிகள் எல்லாம் தீரும்ன்றது நம் நம்பிக்கை. இதை பார்த்துதான் இந்த குறியீடு உண்டாக்கினதா சொல்றாங்க.
ஜோதிட ரீதியா செவ்வாய்கிரகம் நோய்க்கு காரணமான ரோகக்காரன்னும், பகைக்கு காரணமான சத்ருகாரகன்னும், கடன் தொல்லைக்கு காரணமான ருணக்காரன்னும் சொல்வாங்க. இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தன்னிக்கு செயலற்று போகும்ன்னு ஜோதிடம் சொல்லுது. ஆயில்யம்ன்னா பிண்ணிக்கொள்வதுன்னு ஒரு அர்த்தமாம். ஆயில்யம் நட்சத்திரத்தின் குறியீடா பிண்ணிக்கொண்டிருக்கும் பாம்பைதான் சொல்றாங்க. அதனால்தான் மருத்துவம் பார்க்க ஆயில்யம் நட்சத்திரம் சிறந்ததுன்னு சொல்றாங்க. அதனாலும் இந்த குறியீடு வந்ததா சொல்றாங்க.
Sunday, May 10, 2020
கள்ளழகர் அருள் புரிவாரா?!
Saturday, May 09, 2020
அடுத்த வீட்டுக்கு டிவி பார்க்க போயி அவமானப்பட்டதுண்டா?! - கிராமத்து வாழ்க்கை
Friday, May 08, 2020
ஸ்ரீ மௌலானாசாகிப் சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்.
தமிழ்நாட்டின் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி இருப்பதை பார்த்திருப்போம். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நம்மால் உணர முடியும். நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்குமாம். இதனை பீட்டா அலைகள்ன்னு சொல்றாங்க. நாம் ஓய்வெடுக்கும்போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்குமாம்.