சின்ன பிள்ளையா இருக்கும்போது அழகா இருப்பேன். ப்ளீஸ் பேச்சு பேச்சாதான் இருக்கனும். ஏன், கல்லுலாம் தேடுறீங்க?! சரி சுமாரா இருந்தாலும் அறிவா இருப்பேன்..., ப்ளீஸ், இதையாவது ஒத்துக்கோங்களேன்!!! எப்ப பாரு எதாவது யோசனை பண்ண்கிக்கிட்டே இருப்பேனாம். வருங்காலத்துல பிளாக் எழுதுவேன்னு எனக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. அதான் அப்பத்திலிருந்து பதிவை தேத்த யோசனை பண்ணிக்கிட்டு இருந்திருகேன்.
அப்படி என்னதான் என் மண்டைக்குள்ள பல்ப் எறிஞ்சுச்சுன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாம்??! அதுக்குதான் இந்த பதிவு...,
1. பென்சில் சீவி வரும் தூளை “சாதம் வடிச்ச கஞ்சி”ல ஊற வெச்சா அழி ரப்பர் வரும்ன்னு நினைச்சுப்பேன்!!??
”2. சூட்டு கொட்டையை” சூடு பறக்க தேய்ச்சு, பக்கத்துல உக்காந்து இருக்குற புள்ளைங்க தொடையில வெச்சு ரசிச்சு சிரிப்பேன்!!
3. வேப்பங்கொட்டை ஓட்டினை ரெண்டா உடைச்சு கை விரல் முட்டில வெச்சு ஓங்கி அடிச்சு ரத்தம் வர வெச்சு வீரம் காட்டுவேன்!!??
4. சினிமா தியேட்டர்ல வெட்டி வீசியெரிஞ்ச ஃபிலிமை காசு குடுத்து வாங்கி வந்து, பியூஸ் போன பல்புல தண்ணி நிரப்பி வெளிச்சம் பாய்ச்சி தாத்தாவுக்கு தெரியாம அவர் வேட்டியை கொண்டு வந்து திரையாக்கி படம் காட்டி அலட்டிக்குவேனாக்கும்!!??
5. வாத்தியார் அடிக்குறதுக்காக தினம் ஒரு புது குச்சி உடைச்சு வர்ற பக்கத்து கிளாஸ் பையனுக்கு வாந்தி, பேதி வரனும்ன்னு எல்லையம்மனுக்கு காசு வெட்டி போட்டிருக்கேன்!!??
6. சைக்கிள் கடையில் கிடைக்குற வாஷர்களை கொண்டு போய் பாணியர் காலத்து “ஓட்டை காலணா”ன்னு சீன் போட்டிருக்கேன்!!??
7. ஆத்துல மிதக்குற தலை பிரட்டையை “மீனு”ன்னு நம்பி வீட்டு கிணத்துல கொண்டு வந்து நிரப்பி கிணத்தை நாசம் பண்ணி செம மாத்து வாங்கியிருக்கேன்!!??
8. நுங்கு சாப்பிட்டு மிச்சம் இருக்குற பனங்கா ஓட்டுல வண்டி செஞ்சு அமெரிக்கா, ஜப்பான்லாம் விசா இல்லாம போய் வந்திருக்கேன்!!??
9. கொட்டான்குச்சியில் நிரப்பி சுட்ட மணல் இட்டிலியும், கருவேல இலையில் அரைத்து வைத்த சட்டினியும் பசி போக்கியது அப்போது!!??
10.கண்ணாடி போட்டிருக்குறவங்கலாம் அறிவாளிங்கன்னு நம்பி..., வீட்டுல தலை வலிக்குதுன்னு பொய் சொல்லி கண்ணாடி போட்டுக்கிடு தடுக்கி விழுந்திருக்கேன்!!??
11. குரைக்குற நாய் கடிக்காதுன்னு நம்பி அதுங்கிட்ட வீரத்தை காட்டி கடிப்பட்டிருக்கேன்??!!
12.தீப்பெட்டியில் கயிறு கட்டி டெலிபோனா நினைச்சு, அண்டார்டிக்கா, ஆப்பிரிக்காக்குலாம் பேசினேன்??!!
13. தண்டவாளத்துல சில்லறை காசை வெச்சு அதன் மேல ரயில் ஏறி இறங்குனா, அந்த சில்லறை காசு காந்தமா மாறிடும்ன்னு நம்பி இருக்கேன்??!!
14. குலத்தெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு அம்மா சேர்த்து வெச்ச சாமி உண்டியல்ல இருந்து காசை சுட்டுக்கிட்டு (காசு சேர்ந்ததும் டபுள் மடங்கா போடுறதா சாமிக்கிட்ட சின்ன ஒப்பந்தம் போட்டுக்கிட்டுதான்) போயி கம்ர்கட் வாங்கி தின்னது!!??
15. லெட்டர்லாம் தபால்ல போடாம பாம்புக்கிட்டயும் லெட்டர் குடுத்தனுப்பலாம்ன்னு இராம. நாராயணன் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.