1. காதாநாயகனோ இல்ல கதா நாயகியோ இல்ல ரெண்டு பேருமே கோவில் திருவிழாவுக்காக நடுத்தெருவில், ஊர்சனமே பார்க்க ஆடிக்கிட்டு இருக்கும்போது வில்லன் கோஷ்டி அருவா, துப்பாக்கி கையோடு நின்னுட்டு இருக்குறதை ஒரு பயலும் பார்க்க மாட்டான்..,
2. கதாநாயகி(கன்)க்கு தங்கச்சியா பொறந்தா கற்பழிக்கனும், தம்பியா பொறந்தா செத்துதான் போகனும்...,
3. படம் ஆரம்பிக்கும்போது, கதாநாயகி(கன்)யோட அப்பாவோ இல்ல அம்மாவோ ரகசியம் சொல்ல வந்தா “பொட்டு”ன்னு செத்து போறதும்..., படம் முடியும் வேளைன்னா 4 பக்கத்துக்கான வசனத்துல ரகசியத்தை சொல்லிட்டு செத்து போறது....,
4. பணக்கார வீட்டு பையனாவோ இல்ல பொண்ணாவோ பொறந்தா கண்டிப்பா திமிர் பிடிச்சு போய் அழிச்சாட்டியம் பண்ணுற கெட்டவனாத்தான் பொறப்பாங்க...,
5. டூ பீஸ் போல இருக்குற ட்ரெஸ்ல தலை விரிச்சு போட்டுக்கிட்டு யாரையுமே மதிக்காம இருக்குற பொண்ணு.., காதல் வந்ததும்!? இழுத்து போர்த்தி சேலை கட்டிக்கிட்டு தழைய தழைய தலை வாரி கனகாம்பரம் பூ வெச்சுக்கிட்டு வரும்...,
6. செகண்ட் ஹீரோயின்ன்னு ஒருத்தி அந்த படத்துல இருந்தா நிச்சயம் ஹீரோ மேல செம லவ்வாகி டூயட்லாம் பாடி!! ஹீரோவால் நான் உன்னை என் தங்கச்சியாதான் நினைக்குறேன்ன்னு சொல்ல கேட்டு வில்லனை கட்டி கொடுமைக்கு ஆளாவா! இல்லாட்டி வில்லனால் செத்து போவா!!
7. படத்துல ஹீரோவும் அவர் அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் போல காட்டுனா கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து தண்ணியடிச்சுக்கிட்டும் ஃபிகரை தேத்துறதுக்கு ஐடியா குடுக்குறதுமாதான் இருக்கும்...,
8. ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...,
9. செகண்டுக்கு 100 புல்லட்டை துப்புற மெஷின் கன்னிலிருந்து 50 கிமீ வேகத்துல பறக்குற குண்டுல இருந்து (மெஷின் கன்னோட டீட்டெயில் தெரியாது. சும்மானாச்சுக்கும் சொல்லியிருக்கேன். தெரிஞ்சவங்க வந்து கிளாஸ் எடுக்காதீங்கப்பா!) லேசான தலையசைக்குறதானால ஹீரோ தப்பிச்சுடுவார்...,
10. ஹீரோயினோட கல்யாணம் நின்னு போய்ட்டா.., கரெக்டா ஹீரோதான் பெரிய மனசு பண்ணி வாழ்வு குடுப்பார். லட்டு ஃபிகரா இருக்கவே தாலி கட்டுறவர் அட்டு ஃபிகரா இருந்தா தாலி கட்டுவாரா?!
11. ஹீரோ தத்து பிள்ளையா இருந்தா அந்த ரகசியம் கண்டிப்பா அவரோட கல்யாணத்தப்போ தான் தெரிய வரும்..
12. கிராமத்து படமா இருந்தா கண்டிப்பா ஆலமரத்தடி பஞ்சாயத்து சீன் கண்டிப்பா உண்டு. அதுல இப்படியே உக்காந்திருந்தா எப்படிப்பா?! யாராவது ஆரம்பிங்கப்பான்னு ஒரு பெருசு சவுண்ட் விடும்....,
13. பாம்பு, குரங்கு, யானை, நாய்லாம் அந்த படத்துல இருந்தா அதுலாம் இங்க்லீஷ் தெரிஞ்சுக்கனும், வில்லன் கூட கம்பு, கத்தி சண்டை போடனும், துப்பாக்கி சுட ட்ரெயினிங் எடுத்து சர்டிஃபிகேட் வங்கியிருக்கனும்...
14. ஹீரோ கிராமத்துல பொறந்திருந்தா, கண்டிப்பா குடுமி வெச்சுக்கிட்டு அசடாத்தான் இருக்கனும், அவங்க குடும்பத்தை இழந்து பட்டணத்துக்கு போய் கிராப் வெட்டி, கராத்தே, குங்க்ஃபூலாம் கத்துக்கிட்டு செத்தவங்களோட திதி அன்னிக்கு பழிவாங்கனும்...,
15. வில்லங்கன்னா கண்டிப்பா சுமோதான் வெச்சிருக்கனும்.., அத்தோட அவங்க ஆளுலாம் சீட்டுல உக்காரம வெளில நின்னுக்கிட்டு, கத்தி, அருவாலாம் சுத்திக்கிட்டே போகனும்...,
16.சாமி படம்ன்னா எட்டு கால், இருபத்தி நாலு கை, மூணு கண்ணு, நாலு தலைன்னு பெயர் தெரியாத ஜந்து ஒண்ணு கிளைமேக்ஸ்ல நெருப்பை கக்கிட்டே வரணும்.
17. பேய் படத்துல வர்ற பொம்பளை பேய்ன்னா கண்டிப்பா வெள்ளை புடவை கட்டி, பார்லர் போய் சீரா முடி வெட்டி, புருவம் திருத்தி, நகத்தை நீளமா அழகா வெச்சிருக்கனும். ஆம்பிள்ளை பேய்ன்னா பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோல்ன்னு பயம் காட்டனும்..,
18. ஓப்பனிங்க் ஷாட்டுல கிராமம்ன்னா சூரியோதமும், சேவல் கூவுறதும், கோவம், ஏர் தூக்கிக்கிட்டு போற உழவனோடதான் தொடங்கும்.. சிட்டி படம்ன்னா பேப்பர் போடுறது, ஓட ஓட வெரட்டி கொல்லுறது, வாக்கிங்க், ஜாக்கிங்க் போறதுலதான் தொடங்கௌம்...,
19. கிராமத்து படத்துல ஒரு பொண்ணை லேசா உரசிட்டாலே ஊரே ஒண்ணு கூடி அடிக்கும். அதுவே சிட்டி படத்துல நடு ரோட்டுல ஒருத்தனை இழுத்து போட்டு வெட்டுனாலோ இல்ல ஒரு பொண்ணை ஈவ் டீசிங் பண்ணக்கூட யாரும் கண்டுக்காமத்தான் நிப்பாங்க..
20. ஸ்கூல், காலேஜ் சப்ஜெக்ட் படமா இருந்தா ஹீரோவும் அவங்க ஃப்ரெண்ட்ஸும் கண்டிப்பா உருப்படாதவங்களாத்தான் இருப்பாங்க. கடைசி 3 ரீல்ல ஹீரோயின், இல்ல டீச்சர், இல்ல பெத்தவங்க குடுக்குற ஸ்பீச்சுல மனசு மாறி 12 வருசமா தொடாத புக்கை தொட்டு ஒரே மாசத்துல படிச்சு !! பரிட்சைல கோல்ட் மெடல் வாங்குவாங்க??!!...,
டிஸ்கி: எப்பவுமே சினிமாக்கு கூட்டி போனால் வேண்டா வெறுப்பாத்தான் போவேன். ஆனா, அதுக்கு காரணம் தெரியாது. வளர்ந்த பின் தான் காரணம் தெரியுது. கதை, லொக்கேஷன், ஆக்டர்ஸ் மாறினாலும் அடிப்படை விஷயங்கள் மட்டும் மாறுறதே இல்ல. அதனாலயே சினிமா பார்க்குறதே பிடிக்காம போய்ட்டுது. இது சில காரணங்கள்தான் இன்னும் சில காரணங்கள் இன்ன்மொரு பதிவில்....,