Thursday, August 30, 2012

பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா??!!


                                                     இன்னா பொண்ணுடா இவ.....


                                              2025ல இந்தியா வல்லரசாகிடுமோ!!??


                                நம்ம ஆளுங்கள பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க :-)

                                     
                                    நிமிர்ந்ததற்கே இப்படின்னா! இன்னும் பறந்தால்??

                                          
                                                        யாருக்கு ஆறறிவு?!


   நம்ம ஆளுங்க மூளை மட்டும் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து வேலை செய்யுமோ!!??


                                        விஞ்ஞான வளர்ச்சி என்பது இதுதானோ??!!


                                              எப்படிலாம் யோசிக்குறாங்கப்பா!!

                                    இவள்தான் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ!?

                    காப்பாத்துங்க..., காப்பாத்துங்க என்னை அழிக்க பார்க்குறாங்க.
டிஸ்கி: படங்கள் ஃபேஸ்புக்குல இருந்து சுட்டதுங்கோ
                                                          
  

Wednesday, August 29, 2012

பதிவர் சந்திப்பினால் கடுப்பான முருகப்பெருமான்

                                                                                            
கொயந்தே  முருகா! முன்ன  ஒரு தரம் ஒன்லி ஒன் மாம்பழத்துக்கோசரம் உன் நைனாகிட்டயும், ஆத்தாக்கிட்டயும் கோச்சிக்கிட்டு பழனி மலையில  போய் குந்திக்கிட்டே. உன்னை கூலாக்கி உன் வூட்டு ஆளுங்ககிட்ட உன்னை சேர்க்குறதுக்குள்ள என் தாவு தீர்ந்து போச்சு. இப்போ என்னாத்துக்கோசரம் இங்க வந்து குந்திக்கினு கீறே?!

 ஆயா! நான் யாரு?

 இன்னா நைனா இப்படி கேடுப்புட்டே. நீ தமிழ் கடவுளாம் முருகன்னு இந்த  வோர்ல்டுக்கே தெரியும், ஆனா, நீ ஏன் இப்படி கேட்டுப்புட்டியே. இன்னா மேட்டர்? யாராவது உன்கிட்ட ராங்கு காட்டுனாங்களா? என்கிட்ட சொல்லு பாட்டு பாடியே கொலையா கொன்னுடுறேன்.

 நான் யாருன்னு உனக்கு தெரியுது. ஆனா இந்த தமிழ் வலைபதிவு குழுமத்துக்கு தெரியலியே ஆயா!

 ஃப்ரீயா வுடு முருகா! அதுங்களுக்கு தெரியுமா உன் மவுசு என்னன்னு.? என்ன ஆச்சு?  ஏன் இப்படி காண்டாகி பேசுறேன்னு முதல்ல சொல்லு.

 போன ஞாயித்து கிழமை சென்னையில தமிழ் வலைப்பதிவர்கள்லாம் மீட் பண்ணலாம்ன்னு ஐடியா பண்ணும்போதே எனக்கு ரெஸ்பெக்ட் பண்ணனும்னு யாருக்காவது தோணுச்சா? அதுக்கோசரம் அந்த மீட்டிங்கை சொதப்பலாம்னு மழையை பெய்ய வெச்சேன். அந்த மழையைகூட ரெஸ்பெக்ட் பண்ணாம எல்லாரும் வந்து, யாருக்கும் எந்த குறையும் இல்லாம பெஸ்டா  நடத்திட்டாங்களாம். எனக்கு காண்டா கீது ஆயா.

ஹா ஹா நைனா முருகா! விழா சிறப்பா நடந்துச்சு. ஆனா, யாருக்கும் எந்த குறையும் இல்லைன்னு உன்க்கு யாரு சொன்னது?

அதான், அவங்கவங்க பிளாக்ல போட்டு தாக்குறாங்களே. அதை பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் மெர்சலாதான் கீது கெய்வி. இப்படியே போனா உன்னைதவிர  என்னை யாரும் ரெஸ்பெக்ட் பண்ண மாட்டாங்கன்னு.

அப்படிலாம் குறையில்லாம ஃபங்க்சன் முடிஞ்சுடலை. பதிவர் சந்திப்புக்கு போன,  ராஜிக்கு நிறையவே  ஏமாற்றங்கள் கிடைச்சுதாம். புலம்பிக்கிட்டே இருக்கா.

ஐய்ய்ய்ய் கேக்கவே குஜாலா கீது ஆயா. சொல்லு சொல்லு அந்த டீடெய்ல்ஸ்...,

                                          

சரியா மார்னிங் 9.15க்கு  அவ  டாட்டர் தூயாவும், சன் அப்புவும் மண்டபத்தை ரீச் பண்ணிட்டாங்க. அங்க,  கை கூப்பி நின்னு ஒரு பொண்ணு வெல்கம் பண்ற மாதிரி  ஒரு பேனர். தூரத்திலிருந்து பார்த்துட்டு, தன் பசங்ககிட்ட, அது சசிகலா ஆண்டிதான்னு சொல்லி, கிட்ட  போய் பார்த்தா, யாரோ ஒரு மாடலிங் பொண்ணோட போட்டோ.  அதான் முதல் ஏமாற்றம்.

விழா ஹீரோயின் சசிகலா (கவிதை புக் வெளியிட்டதால இவங்கதான் நேற்றைய ஹீரோயின்) வாசல்ல நின்னு வரவேற்பாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டே போனா அம்மணி லேட்டா வந்து ராஜிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்காங்க.

அந்த விழாவுல,  மின்னல் வரிகள்  கணேஷ்,  கவிதைவீதி சௌந்தர், தென்றல் சசிகலா தவிர யாரும் அறிமுகமில்லையே, நமக்கு ரெஸ்பெக்ட் கிடைக்குமான்னு நினைச்சுக்கிட்டு போன ராஜியை, அத்தனை பேரும் ராஜியக்கா, சகோதரி, ராஜிம்மான்னு வயசுக்கேத்த மாதிரி கூப்பிட்டு அவங்களே வலிய வந்து தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டு ஏமாற்றத்தை குட்த்து கீறாங்க.
                                                  

 நல்லா வெள்ளை வெளேர் சட்டையில, அரவிந்த சாமி கலர்ல ஃபுரஃபைல் ஃபோட்டோவுல அசத்துற  “வசந்த மண்டப” மகேந்தரன் விஜயகாந்த் கலர்ல ஃபேண்ட் சர்ட்ல அன்புநிறை சகோதரி நாந்தான் மகேந்திரன்னு இண்ட்ரொடியூஸ் குட்த்து ரெண்டாவது ஏமாற்றத்தை குட்த்து கீறார்.

தாடிக்குள்ள முகத்தை வெச்சுகிட்டு ஆறடி உசரத்துல ஒரு அங்கிள் இருப்பார். அவர்தான் ”தூரிகையின் தூறல்”மதுமதின்னு பசங்ககிட்ட சொல்லிக்கிட்டு மண்டபத்துல எண்டரான ராஜிக்கிட்ட, சகோதரி நாதான் மதுமதின்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா ராஜிக்கு ஏமாற்றத்தை குடுத்து கீறார்.

                                            
முறுக்கு மீசையில பயமுறுத்துற ”திண்டுக்கல் தனபாலன்” சகோதரி நாதான் திண்டுக்கல் தனபாலன்ன்னு ஒரு குழந்தை கணக்கா சிரிச்சுக்கிட்டே அறிமுகப்படுத்திக்கிட்டு ஏமாற்றத்தை குட்த்து கீறார். உஜாலா விளம்பரத்துக்கு போஸ் குடுக்குற மாதிரி வெள்ளை டிரெஸ்ல  எம்பி கணக்கா புரஃபைல் போட்டோவுல அசத்துற ரமணி ஐயா, டீசர்ட் ஃபேண்ட்ல வந்து நான் யூத் பதிவர்ம்மான்னு ராஜியை ஏமாத்தி கீறார்.

வயசுலயும், அனுபவத்துலயும்  பெரியவங்களான ராமானுஜம் ஐயா, சென்னை பித்தன் ஐயாலாம் ஒரு கெத்தா இருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டு போன ராஜியை, தன் டாட்டர் போலவும், தூயாவை பேத்தியாவும் ட்ரீட் பண்ணி விஷ் பண்ணி ஏமாற்றத்தை குடுத்தாங்களம்.

ரொம்ப பெரிய  ஆளு ருக்மணியம்மா, டிவிலலாம்  வராங்க நம்மளைலாம் எங்க மதிக்க போறாங்கன்னு நினைச்சு ஒதுங்கி இருந்த ராஜியை கூப்பிட்டு பேசியதும் இல்லாம  தூயாவுக்கு நீதிநெறி கதைகள் இருக்குற  புக்கை கிஃப்ட் குடுத்து ஏமாத்தியிருக்காங்க.
                                                
சென்னை லேடீஸ்லாம்லாம் பக்கத்து வூட்டுல கீறவங்ககிட்ட கூட பேசமாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்த ராஜியை வல்லிசிம்ஹன் அம்மா ராஜிக்கும் அங்கு வந்த எல்லா பெண்களுக்கும் பூவும், குங்குமமும் தந்து அசத்தி ஏமாத்தி இருக்காங்க.ஆமினா, ஷாதிகாலாம் பல வருட பழக்கம் போல நல்லா பேசி ஏமாத்தி கீறாங்க

அதுலயும் ஆமினா பையன் தன்வீர்,  ஆண்டி, அண்ணா, அக்கான்னு ராஜி குடும்பத்தோட செம அட்டாச் ஆகி அவனும் ஏமாத்தி இருக்கான்.
                                        

                                                
                      
டிவி பொட்டிக்குலாம் பேட்டி குட்த்து டயர்டாகி போய்ட்டாங்க. நம்மக்கிட்டலாம் எங்க பேசப்போறாங்கன்னு நினைச்ச ராஜியை,  அப்பப்போ வந்து என்ன சகோதரின்னும், என்ன வேணும்ன்னு பேச்சுக் குடுத்துக்கிட்டே இருந்த சசிகலாவும், “வீடு திரும்பல்”மோகனும் ஏமாத்தி கீறாங்க.

மருத்துவர்ன்ற பந்தா இல்லாம அக்கான்னு பாசமா கூப்பிட்ட ”மயிலிறகு” மயிலனை தொடர்ந்து , உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆருக்கு போட்டியா ஊர் ஊரா போய் ஹோட்டல்ல சாப்பிட்டு பதிவை தேத்துற ”கோவைநேரம்” ஜீவாவை நல்லா பூசணிக்கா சைசுல எதிர்பார்த்திருந்த ராஜியை,  ” கொஞ்சம் பூசுனாப்புல” வந்து ஏமாத்தியிருக்கார்.

                                           

 அதிகம் பரிச்சயமில்லாத விசேசத்துக்கு போனா நாம தனியே உக்காந்து மோட்டுவளையை முறைச்சுக்கிட்டு குந்திக்குனு இருக்கனும். அதுப்போல இங்கயும் ஆகிடுமோன்னு நினைச்சுக்கிட்டே போன ராஜியை ஒரே குடும்பத்தவர் போல எல்லா பதிவர்களும் பேசிக்கிட்டு லோன்லியா ஃபீல் பண்ண விடாம ஏமாற்றத்தை குட்த்து கீறாங்க.
                                                             
கறுப்பு கண்ணாடி போட்டு, தன்  கிளாமரை கூட்டிக்குவார்ன்னு நினைச்ச அட்ராசக்கை சிபியும், அப்பாடா ஓசி சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டு போறான். ஐ ஜாலின்னு நினைச்சுக்கிட்டு  இருந்த போது,  கரெக்ட் டைமுக்கு வந்து சாப்பிட்ட சிரிப்பு போலீஸ் ரமேசையும் சேர்த்து  ராஜியை ஏமாத்தின பட்டியல் இன்னும் நீளுது நைனா.

ஹா ஹா ச்சூப்பர் ஆயா, இப்பதான் எனக்கு குஜாலா கீது. பதிவர்கள்தான் ராஜிக்கு இம்புட்டு ஏமாற்றத்தை குடுத்து கீறாங்கன்னா, லஞ்ச் எப்படி? அதுவாவது ராஜி மனசுக்கு திருப்தியா இருந்துச்சாமா?

அத்த ஏன் கேட்குற முருகா?! அதுலயும் ஏமாத்தந்தான் ராஜிக்கு.

என்ன மேட்டர் ஆயா?

ஃபங்க்‌ஷன் நடந்தது ஞாயித்துக்கிழமை. சோ, நான் வெஜ் இருக்கும்ன்னு நினைச்ச ராஜிக்கு நான், வெஜ்ன்னு சொல்லிக்கிட்டே வந்துச்சாம் இலையில் வச்ச பதார்த்தம்லாம். சாலட் ல தொடங்கி ஊறுகா வரை போட்டிருக்காங்க. டாக்டர்சும், ஊடகங்களும் பெப்சி மாதிரியான கூல்டிரிங்க்ஸ்லாம் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லியும் கேட்காத ராஜியை பொவண்டோ குடுத்து குடிக்க சொல்லியிருக்காங்க.

அடடா! ராஜியை இப்படிலாமா பதிவர் சந்திப்புல ஏமாத்தியிருக்காங்க. கவியரங்கத்துல என்ன நடந்துச்சு ஆயா?

ம்ம் எல்லா பதிவர்களும் அப்பப்போ சேரைவிட்டு எழுந்து நடந்துக்கிட்டு இருந்தாங்களே முருகா?

உன் குசும்பை என்கிட்டயே காட்டுற பார்த்தியா கெய்வி?

சும்மா தமாசு  பண்ணேன் முருகா. ஏன் குசும்பு உங்க வீட்டு சொத்தா என்ன? நான்லாம் பண்ண கூடாதா? லஞ்சுக்கு முன்னாடி இவங்க பண்ண அலப்பறையை பார்த்து எங்க பாப்பா ஹாஸ்டலுக்கு கொண்டு போய் விடனும். டைம் ஆச்சுன்னு கிளம்புன ராஜியை போக வேணாம். நாங்க உங்களை கொண்டு போய் விடுறோம்ன்னுஅன்புத் தொல்லை செஞ்சு கிளம்ப பார்த்த ராஜியை ஏமாத்தி கீறாங்க.

ஸ்ஸ்ஸ் அபா. ஆயாவுக்கு வயசாய்டுச்சு முருகா. முன் போல ரொம்ப நேரம் பேச முடியல.  அப்பாலிக்கா ஃபங்கஷன்ல நடந்த ஜோக்கான மேட்டரும், அடுத்த தபா பதிவர் சந்திப்பு நடதினா எப்படி நடத்தனும்ங்குற அடவைஸ்லாம் சொல்றேன்.  போட்டோலாம்.
நன்றி:“வீடு திரும்பல்”மோகன். 

Friday, August 24, 2012

கண்ணிரிலும் சுய நலமே?!



அவர்கள் இல்லை.. 
இல்லை,  இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்?! 

அன்று,
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது.

இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ?!

நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்.

தன்
இருப்பை உணர்த்துவதற்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன், 

தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்..., 

உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம் வரையிலான
அற்ப வாழ்க்கை..., 

உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள். 

உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுமுண்டு!!!!

அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்தான்
நாம் நமக்காக அழுகிறோம்.  யாரும் நமக்காக
அழுவதில்லை.

நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்..ஆனால்,
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்!! 

ஆம்,
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை..

Wednesday, August 22, 2012

பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?!

 பதிவர்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்தா இப்படித்தான் டிரெஸ் பண்ணிவிடுவாங்களோ?! 
 

ம்ம்ம்ம் இதுவே நம்ம நாட்டு போலீஸா இருந்தா?! மனுசங்க விழுந்தாலும் கண்டுக்க மாட்டாங்க...

அப்படியே சாப்பிட்டுடுவேன்...

கலியுக ஏகலைவன்....
 

நம்ம வீட்டு போட்டோவுலயும் நிஜமாவே இப்படி  நடந்துட்டா....,நம்ம கதி அதோ கதிதான்.....

மணல்ல கயிறுதான் திரிக்க முடியாது..., ஆனா, வீடு கட்டலாமுங்கோ.....

பிள்ளையாரும் பிளாக் ஆரம்பிச்சுட்டாரோ?!
இப்படியும் ஜடை பிண்ணி போட்டுக்கலாம்ன்னு இத்தனை நாள் தெரியாம போச்சே...,

எங்கிட்ட மோதுனே,  பல்லை பேத்துடுவேன்....,


டிஸ்கி: படங்கள் முகப்புத்தகத்திலிருந்து சுட்டது

Friday, August 03, 2012

போவோமா ஊர்கோலம்?!




போவோமா? ஒரு திருமண
மண்டபத்திற்கு...
உண்மை பொருள்
உணர்ந்திட... 

உயிருடன் நடக்கும் கரும்பு
சக்கை.  அதோ
அவரே. பெண்ணிண் தந்தை...
அதோ மடியில் கட்டப்பட்ட
நெருப்பை அவிழ்த்து விட்டதாய்
கனவு காணும் பெண்ணின் தாயார்... 

உடற்பசிக்கும் பணப்பசிக்கும்
இலவசமாய் பெண் கிடைத்த
மகிழ்ச்சியில் அதோ மணமகன்... 


கடைசி பருக்கை வரை
பெண்ணின் வீட்டில் சுரண்டிய
தெம்பில் மணமகனின் தந்தை... 


வீட்டோடு இலவச வேலைக்காரி
கிடைத்த மகிழ்ச்சி களிப்பில்
அதோ மணமகனின் தாய்... 


வரதட்சணை வில்லேந்தி வந்த
ராமனையே கைப்பிடித்தாள் சீதையென்பதை
மறந்து வாழ்த்தும் கூட்டம்.. 


கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக...

Wednesday, August 01, 2012

ஊடலுக்குப் பின் கூடல்


                                                 
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்ததாக  நன்பரொருவர் மெயில் அனுப்பியிருந்தாங்க.  இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக  பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடலொன்று.  "வாராயோ தோழி வாராயோ!" மெட்டில்...


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்
ஆதாயம் தேட வாராயோ?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!


வழக்குண்டு இங்கு நூறு!- அதில்
வாய்தாவை வாங்கப் பாரு!
எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது
எதற்கும் தேறாத ஊரு!

தமிழ்நாட்டில் ஏது தகராறு!
தலையாட்டும் பொம்மை வரலாறு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!

அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை
இவர் சேர்த்த செல்வம் பெரிதா

வழக்காடு மன்றம் புதிதா-அவர்
வாய்பூட்டும் வழிகள் அரிதா
மகத்தான கொள்கை பணம்தானே?
மடசாம்பிராணி ஜனம்தானே?

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!



பொதிமாடு போல தினமும்-சுமை
புலம்பாமல் தூக்கும் ஜனமும்
அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்
அடிமாடு போலப் பணியும்
அவலங்கள் தீர எதுவுண்டு?
அரசாங்கம் தந்த மதுவுண்டு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
டிஸ்கி: எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.