புடவை, பட்டு புடவை, தாவணி, காக்ரா சோளி, பாவடை சட்டை, மிடி, சுடிதார், ஜின்ஸ்......, ஸ் அப்பா மூச்சு வாங்குது. ட்ரெஸ்ன்னாலே அதிகமா பெண்களுக்குதான் முக்கியத்துவம். அதில் எந்தவித ஆச்சர்யமும் இருக்கப்போவதில்லை. அதேநேரத்துல, ஆண்களுக்கு இந்த வீணாப்போன பேன்ட்டும் சட்டையும் விட்டா எதைத்தான் போடுவது! என்று நினைத்த காலம்லாம் மலையேறி விட்டது.
ட்ரெஸ் விசயத்தில் பெண்கள் அளவிற்கு ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் தற்போது பல்வேறு வகையான மாடல்களை வெளியிட்டு கலக்கி வருகிறார்கள். நான் இதில் ரொம்ப மாடர்ன் அளவிற்கு எல்லாம் சொல்லாமல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பயன்படுத்துற ட்ரெஸ் இன்னும் எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்று கூறுகிறேன்

Casual Dress
சில நேரங்களில் நம்ம பசங்க போட்டுட்டு வர ட்ரெஸ்ஸை பார்த்தால் செம்ம டென்ஷன் ஆகிடுவேன்.. என்னடா உங்க ரசனை? இப்படி மஞ்ச மாக்கான் மாதிரி ஒரு ட்ரெஸ்ஸை போட்டுட்டு திரியறீங்க என்று கோவம் கோவமாக வரும். ஆண்கள் இனத்தையே டேமேஜ் பண்ணுறீங்களே என்று ஆத்திரமாக வரும். பின்ன என்னங்க பசங்கனா ஒரு ஸ்மார்ட்டா இருக்க வேண்டாமா!?
ஒரு ரிசப்சன் போறோம் இல்லைனாஃபங்க்சனுக்கு போறோன்னா உடனே கஞ்சி போட்டு அயர்ன் பண்ணுன ஒரு மொட மொட னு ஒரு சட்டையை எடுத்து மாட்டிட்டு முழுக்கைச் சட்டையாக இருந்தால் கையைக்கூட மடித்து விடாமல் ஆபீசுக்கு போற மாதிரி ஒரு கெட்டப்புல வந்து ஹி ஹி னு நின்னுட்டு இருப்பானுக. ஏன்டா! ரிசப்னுக்கு தானே வந்து இருக்கீங்க என்னமோ ஐ நா சபைல இந்தியா சார்பா பேசப்போகிறவன் மாதிரி முறுக்கிக்கிட்டு வந்து நிற்கறீங்க!ன்னு கடுப்பாக இருக்கும்.

இதே குடும்பஸ்தன் என்றாலும் கல்யாணத்தில் இதே மாதிரி வந்து நிற்பார்கள்.. (கிராமம் என்றால் வேறு வழி இல்லை) விட்டா டையும் சேர்த்துக் கட்டிக்கிட்டு வருவாங்க போல இருக்கு. என்னய்யா மேட்டருன்னு கேட்டா டீசன்ட்டாம்! அது சரி. அப்புறம் எப்படித்தான் இது மாதிரி நேரத்துல ட்ரெஸ் பண்றதுன்னு ஆண்கள்லாம் கேக்குறீங்க. இருங்க.... இருங்க.. அதைதான் இனி சொல்ல போறேன்....,
முதல்ல எல்லோரும் ஒண்ணு. சரி இரண்டு, மூன்று ...தெரிஞ்சுக்குங்க ஆபீஸ் நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலையும் (அதாவது ப்ரொஃபசனலா நடந்துக்க வேண்டிய இடம் தவிர்த்து) இந்த மாதிரி ட்ரெஸ்ஸை போடவே கூடாது.
ஜீன்ஸ்
இந்த ஜீன்ஸ் இருக்கு பாருங்க.. இதை அடிச்சுக்க உலகத்துலையே எதுவும் கிடையாது. அது பெண்களுக்காக இருந்தாலும் சரி, ஆண்களுக்காக இருந்தாலும் சரி இதற்கு என்று உள்ள மதிப்பே தனி. அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியமில்லை அணிந்து கொள்ள எளிது. பெரும்பாலான சட்டைகளுக்கு பொருத்தமாக இருக்கும். அதை விட உங்கள் வயதைக் குறைத்துக்காட்டும் அதைவிட முக்கியமாக உங்கள் அருகில் உள்ளவர்கள் கொஞ்சம் ரிலேக்சாக இருக்க முடியும். ப்ரொஃபசனலா உடை அணிந்து இருந்தீர்கள் என்றால் டேய்! மச்சி இவரு கணக்கு மாஸ்டர் மாதிரி இருக்காருடா! நம்மை வாய்ப்பாடு சொல்லச் சொல்லி கேட்பாரு போல இருக்கு கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்துக்க என்று பயப்படும் படி ஆகி விடும். நீங்க என்னதான் ஜாலி டைப்பாக இருந்தாலும்.
டி ஷர்ட் & காட்டன் ஷர்ட்
ஜீன்ஸ் க்கு 100% பொருத்தமானது என்றால் யோசிக்காமல் டி ஷர்ட் ன்னு சொல்லலாம் அல்லது காட்டன் ஷர்ட்டை சொல்லலாம். ஆபீஸ் தவிர மற்ற இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்காட்டாக ரிசப்சன், திருமணம், ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி, டூர்,பர்த்டே பார்ட்டி, தியேட்டர், பீச்ன்னு எங்க போனாலும் ஜீன்ஸ் + டி ஷர்ட் அல்லது காட்டன் ஷர்ட் மட்டுமே சரியான தேர்வு. டி ஷர்ட்டில் காலர் வைத்தது காலர் வைக்காதது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. கல்யாணம் காட்சிகளுக்கு போகும்போது காலர் வைத்த டி ஷர்ட் அணிந்து செல்வது நாகரீகமா இருக்கும். காலர் வைக்காத டி ஷர்ட்டையும் அணிந்து செல்லலாம்இருந்தாலும் காலர் வைத்த டிஷர்ட்னா ராயல் லுக் குடுக்கும்.
டி ஷர்ட் அணிவது என்றால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை தொப்பை. அவங்களுக்கு முன்னாடி அவங்க தொப்பை போயிட்டு இருக்கும் இவங்க காட்டன் டி ஷர்ட்டை உபயோகப்படுத்தி இதில் இருந்து தப்பிச்சுக்கலாம். தயவு செய்து தொப்பை இருந்தால் உடற்பயிற்சி செய்தாவது குறையுங்க நானும் பல நாட்டு மக்களை பார்த்துட்டேன் நம்ம பசங்க தான் தொப்பையோட குறிப்பா தென் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இப்படி சுத்திக்கிட்டு டென்ஷன் பண்ணுறாங்க. என்ன இதுன்னு கேட்டால், “செல்ல தொப்பை” ஹி ஹின்னு சிரிப்பானுங்க. சரி! சட்டையை இன் (In) செய்றதாவது ஒழுங்கா செய்றாங்கன்னா அதுவும் ம்ஹூம், ஒரு ஒழுங்கே இருக்காது சட்டையை பேன்டுக்குள்ள போட்டு திணித்து வைத்ததைப்போல பெப்பரப்பேன்னு நின்னுட்டு இருப்பாங்க சீராக இல்லாமல் அங்கங்கே ஏற்ற இறக்கமாக இருக்கும்.
அலுவலக உடை
உங்க கிட்ட எத்தனை பேண்ட் இருந்தாலும் முக்கியமா இருக்க வேண்டிய கலர் கருப்பு கலர்தான். எந்த சட்டைக்கும் பொருந்தக்கூடிய ஒரே வண்ணம் இது தான் (வெள்ளை சட்டை தவிர்த்து). அலுவலகத்திற்கு செல்பவர்கள் ப்ரைட்டான சட்டைகளை அதிகம் பயன்படுத்துங்கள் டார்க்கான சட்டை நம்மை டல்லாக காட்டும்.
Flat Front
நீங்கள் Flat Front பேன்ட் அணிபவராக இருந்தால் கண்டிப்பாக துணியை அயர்ன் செய்யும் போது ஜீன்ஸ் பேன்ட்டை அயர்ன் செய்ற மாதிரி செய்ய கூடாது. (பலருக்கு ஜீன்ஸ் பேன்ட்டையே எப்படி அயர்ன் செய்றதுன்னு கூட தெரியாது) பக்கவாட்டில் அயர்ன் செய்ய வேண்டும். வழக்கமாக மற்ற பேன்ட்களை அயர்ன் செய்ற மாதிரி செய்யக்கூடாது. பல பேர் இந்தத் தப்பைதான் செய்றாங்க. Flat Front என்பதன் அர்த்தமே முன் பகுதி எந்த பிளீட்டும் இல்லாமல் இருப்பது தான் அதில் நீங்கள் அயர்ன் செய்த கோட்டை வச்சீங்கன்னா அந்த பேன்ட் டிசைன் அர்த்தமே மாறிப்போகும்.
தற்போது ப்ளீட் வச்சு தைக்குறதெல்லாம் தைப்பது எல்லாம் Out of fashion ஆகி போச்சு. அதனால, Flat Front மாடல் பேண்ட்தான் இப்போ ஃபேஷன். இது வந்து ரொம்ப வருடங்களாகி விட்டாலும் இன்றும் அதே கவர்ச்சியுடன் உள்ளது. தொப்பை உள்ளவர்கள் Flat Front மாடல் பேன்ட்டை போட முடியாது போட்டாலும் நல்லா இருக்காது. அவங்களுக்கு ஒரே வழி ப்ளீட் தான் அதுனால தொப்பை இருக்குறவங்கள்லாம் மனசை தேத்திக்குங்க.
ட்ரெஸ் எடுக்குறதுல கொஞ்சம் கவனம் செலுத்துங்க.. இப்போலாம் ஆண்களுக்குன்னு நிறைய வகை மாடல்கள் வந்திருக்கு. ஏனோ தானோவென்று ட்ரெஸ் பண்ணாமல் சரியான ட்ரெஸ்ஸை தேர்வு செய்யுங்க. உங்களுடைய ட்ரெஸ் கூட உங்களுக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய விஷயங்களுல் ஒண்ணு. அதனால, ட்ரெஸ் விசயத்துல வேண்டாம் அலட்சியம்.
கொசுறு 1
என்னால சகிச்சுக்கவே முடியாத ஒரு விஷயம் குழந்தைகளுக்கும் பெரியவங்க போடுற மாதிரி ஷர்ட் மற்றும் பெரிய பசங்க போடுற மாதிரி ட்ராயர் போடுறது தான். செம்ம கடுப்பாகிடுவேன். குழந்தைகளுக்கு அழகு அழகா எத்தனை உடைகள் உள்ளது அதெல்லாம் எப்படித்தான் அவங்க கண்ணுல பட மாட்டீங்குதுன்னே தெரியல.. தேடிப்போய் ஒரு மொக்கையா ஒரு ட்ரெஸ் வாங்கிட்டு வந்து குழந்தைக்கு மாட்டி விட்டு அது சோளக்கொல்லை பொம்மை மாதிரி சுத்திட்டு திரிவதை பார்த்துட்டு இருப்பாங்க. பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை இல்லை ஆண் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்சனைகள்.
நான்கு அல்லது ஐந்து வயது வரை குழந்தையை வைத்து இருப்பவர்கள் தயவு செய்து பெரியவர்கள் போடும் பட்டன் வைத்த சட்டையையும் பெரிய பசங்க போடுற டிராயரையும் பேன்ட்டையும் போடுறதை நிறுத்துங்க. இதைப்போல குழந்தைகளுக்கு காலர் வைத்த, வைக்காத டி ஷர்ட் தான் அழகாக இருக்கும் குறிப்பாக மிக்கி மவுஸ், கார்ட்டூன் படங்கள் மற்றும் சுவாரசியமான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டை போடுங்க. டிராயர் மொட மொட என்று இல்லாமல் ஜட்டி டைப்பில் மென்மையாக இருக்குறதா பார்த்து வாங்குங்க. ஏன்னா, குழந்தைகளுக்கு உடலை உறுத்தாமல் சவுகரியமாக இருக்கும். சிறு வயதில் (இரண்டரை வயதிற்கு மேல்) இருந்தே குழந்தைகளுக்கு உள் ஜட்டி போட்டு பழக்கப்படுத்துவது நல்லது.
கொசுறு 2: கல்யாணங்களுக்கு போற ஆளுங்க மாப்பிள்ளைக்கு போட்டியா கோட் சூட், குர்தாலாம் போடுக்கிட்டு போகாதீங்க. அது உங்களை அந்நியப்படுத்தி காட்டும். அதனால Casual Dress போட்டுக்கோங்க. மணமகனுக்கு சகோதரனாக, மச்சானாக இருந்தால் நைட் ரிசப்ஷனுக்கு கோட் சூட், காலை முகூர்த்தத்துக்கு வேட்டி சட்டையில இருந்தா, டிஃபரண்டாவும் ராயல் லுக்காகவும் இருக்கும்.
கொசுறு 3: கோவிலுக்கு போகும்போதும், பண்டிகைகள் போதும் லுங்கி, ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு சிலர் இருப்பாங்க. அதை பார்க்கும்போது சென்ஸே கிடையாதான்னு கேட்க தோணும். அதனால, கோவில், மற்றும் பண்டிககள் போது வேட்டி, பட்டு சட்டை இல்லைன்னா வெள்ளை காட்டன் சட்டை போடுறது உங்க மேல் மரியாதை கூட்டும்.