Wednesday, March 27, 2013

மறந்துப்போன காதலனுக்கு கடிதம்

     உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அந்தகடிதத்தை எப்படி எழுதி , யாரிடம் தந்து அனுப்புவது..இதோ ஒரு வழியாக கடிதம் எழுதிவிட்டேன் . எப்படியோ அது உன்னிடமும் வந்து சேர்ந்தும் விட்டது.., உனக்கான கடிதத்தை ஆரம்பிக்கையிலேயே எனக்கு குழப்பம்.., எப்படி ஆரம்பிப்பது அன்புள்ள என்றா? அல்லது பாசத்துடன் என்றா? அன்பும், பாசமும் இல்லாத உன்னை எப்படி, அப்படி விளிப்பது ஆகவே, எதையும் சொல்லாமலே இக்கடிதத்தை ஆரம்பித்துவிட்டேன்.., 
    என்னை எப்படியடா மறந்தாய்? உனக்கும் எனக்குமான நட்பு ஒன்றிரண்டு ஆண்டுகளா என்ன? நான் உனக்கு அறிமுகமாகி சுமார் பதினோறு ஆண்டுகள்ஆச்சே.
       எனக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது நமக்கான நட்பு அரும்பிய முதல் நாள்..., ஒரு மதிய நேரத்தில் நீ உன் வீட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு இருந்தபோது வேறொருவன் சொந்தமாக உன் வீட்டில் அடியெடுத்து வைத்தேன். அன்றே உனக்கும் எனக்குமான நட்பு விதை ஊண்றப் பட்டதோ என்னவோ யார் கண்டது?
 
உன் கண்ணில் அடிக்கடி பட்டதாலும், எனது ஸ்பரிசம் உன் மீது பட்டதாலோஎன்னவோ? என் மீதான உன் வேட்கை அதிகமானதா? பிறிதொரு நாளில் என்னை நீயே விரும்பி ஏற்றுக் கொண்டாய். அன்றிலிருந்து இருவரின் விடியலும் அடுத்தவர் முகத்தில், இருவரின் தூக்கமும் பிரிவின் விளிம்பில் ஆற்றொனா துயரத்தில் தொடங்கும்!!??

  மீண்டும் பொழுதுப்புலர்ந்ததும் என்னைக் காண புன்னகையுடன் ஓடி வருவாய். என்னை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தப் பின்தான் உனக்கு சோறே உள்ளிறங்கும்...,
அதன்பின் உனது பொழுதுகள் என்னோடு விளையாட, உண்ண, பால்வாங்க, குளிக்க செல்ல, இப்படி ஒவ்வொரு மணித்துளியும் என்னோடு தான் கழிப்பாய்..,ஒரு தாயின் பரிவோடு என்னைக் கவனித்துக் கொள்வாய் , ஒரு தந்தையின் அக்கறையோடு எனக்கான தேவைகளை பூர்த்தி செய்வாய்..,
   நீ முதுகலைப் பட்டம் பயில வெளியூர் செல்ல நேர்கையில் என் பிரிவை எண்ணி உன் கண்ணில் கண்ணீர் அரும்பியதே மறந்துவிட்டாயா? பின்வந்த நாட்களில் தொலைப்பேசியில் நான் எப்படி உள்ளேன் என, உன் வீட்டாரிடம் நலம் விசாரிப்பாயே அதாவது நினைவிருக்கிறதா
  பின் வேலைத்தேடி நீ நகரத்திற்கு சென்ற பின்னும் உன் நலம் விசாரிப்புகள் தொடர்ந்ததே.., நான் கூட அச்சமயங்களில் நினைத்ததுண்டு.., என்னைத்தவிர உன்னை யாரும் நெருங்க முடியாதென்று இருமாந்திருந்ததுமுண்டு..,
 
பின் எப்படி, எங்கே விரிசல் விட்டது நமது உறவில்!!??
   ஆங்ங்ங்க் நினைவிற்கு வந்துவிட்டது உனது திருமணத்தின்போதுதான்..,உன்திருமணத்திற்கு பேசும்போது நானும் உடனிருந்தேன். நூறு பவுன் நகை, ஐம்பதுகிலோ வெள்ளி, "புதுவண்டி" என பேரம் பேசுகையில் என் வயிற்றில் புளியைக்கரைத்தது. ஓரக்கண்ணால் உன்னைக் கவனித்தேன். நீ சம்மதிக்க மாட்டய் என.., ஆனால், நீ சம்மத்துவிட்டாய்!!
 
     உன் நண்பர்கள் கூடகேட்டார்கள்.., எப்படிடா இதை பிரிவாய், நீ வேற எதையும் "ஓட்டி"ப் பழக்கமில்லையே என.., நீ அதற்கு, இல்லடா நான் கல்லூரியில்படிக்கும்போது வேறவேறவற்றை "ஓட்டி" பழகியிருக்கிறேன் என்றாய்..,
   மெல்ல, மெல்ல எனை மறந்து உன் புது உறவின்மேல் நாட்டம் கொள்ளஆரம்பித்தாய்..,நீ உன் புதுமனைவியுடன் வெளியில் செல்லும்போது சத்தியமாய் பமையுடன் நெஞ்சம் கனத்து ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன் .நீ என் நில பற்றியறியாமல் , என்னெதிரிலேயே உன் நண்பனிடம் உன் புது உறவைபற்றி....,
 
    "சூப்பர் வண்டிடா மாப்ளே, ஹோண்டா கம்பெனியோடது, சூப்பர் கலர், பெட்ரோல் அதிகமா குடிக்கலை, பராமரிப்பு செலவும் கம்மி, குலுங்கவே இல்லடானு" புகழ்ந்து பேசுவாய் ....,எனக்கு எப்படி இருக்கும் என சிறிதாவது யோசித்தாயா? ,இதற்கு நீ என்னை அழித்ே  போட்டிருக்கலாம்
இப்படிக்கு,
உன் பிரிவை எண்ணி வாடும்
உன் மிதிவண்டி
           

   சே என்ன கனவுடா இது என்று சலித்துக் கொண்டவாறே தூக்கத்திலிருந்துதிடுக்கிட்டு எழுந்தான் கண்ணன். ஏன் இப்படி கனவு வந்தது எனயோசிக்கையில்.., 
    காலையில் அலுவலகம் செல்லும்போது, மிதிவண்டியில் வந் ஒருவனைதெரியாமல் தன் புது வண்டியில் இடிக்க,மிதிவண்டியில் வந்தவனுக்கு அவ்வளவாக அடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்கு மட்டும் பலத்த சேதம்.
 
  அவன் நல்லவன் போல, மற்றவர்களைப்போல் சண்டையிடாமல், தவறு தான் மீதும் உள்ளதெனக் கூறி, அவனே கூட்டத்தினரை விலக்கியும்விட்டான்.
மருத்துவமனை செலவுக்கும், புது மிதிவண்டி வாங்கிக்கொள்ள சொல்லி கண்ணன் ஐந்தாயிரம் நீட்ட, அவனோ ஐநூறை மட்டும் எடுத்துக் கொண்டு "இந்தமிதிவண்டி, என்னோட பத்து வருசமா இருக்கு, அதைவிட்டு வேறோரு வண்டிவாங்க என்னால் முடியாது. அதை பழுதுப் பார்க்க இந்த ஐநூறு போதுமென' கூறி சென்றது நினைவுக்கு வந்து மூளையில் உறைத்தது.., .
 
காலையில் முதல் வேலையா எழுந்து "ஷெட்டுல இருக்குற தன்னோட பழைய மிதிவண்டியை போய் பார்க்கனும்" னு நினைத்துக் கொண்டே உறங்கிப்போனன்.



Monday, March 18, 2013

ஆசை!! ஆசை! பேராசை


புத்தம் புது உறவே! 
 என் ஆசை சொல்லவா!!?? 
பொத்தி வைத்து மறைத்தேன்..,
அதை வெட்கம் விட்டு  சொல்லவா!!?
மெல்லிய சாரல் மழையில் தோளுரசி நடந்திட ஆசை!!
  உன் கைக்கோர்த்துவீடெங்கும் சுற்ற ஆசை!!.
 உன் கால் பிடித்து.., கை விரல் சொடுக்கெடுக்க ஆசை!! 

 உன் மடிமீது தலை  சாய  ஆசை!! 
சாயும்  தலைக்கோத ஆசை!!
கோதும் விரல் பிடித்து முத்தமிட ஆசை!!
தாயாய்,, சேயாய் மாறிட ஆசை!!

உன் கைக்குட்டை திருட ஆசை!!
அதை என் இடுப்பில்  எப்போதும் செருகி வைக்க  ஆசை!!
பின்னிரவிலும்  உனக்காக காத்திருக்க ஆசை!!
 காலதாமதாமாய் வரும் நீ..,
 என் மன்னிப்புக்கு கை கட்டி நிற்க ஆசை!!

சின்ன சின்ன சண்டை ஆசை!!
 ஊடலுக்குப் பின் கூடல் ஆசையோ ஆசை!!
 உன் விரல் தொட்டு சூடும்  மல்லிகைப்பூ   ஆசை!!
 உன் விழி பார்த்து வெட்கப்பட ஆசை!!

கரும்பாம்பாய் நீண்டிருக்கும் சாலையில்...,
 மோட்டார்சைக்கிளில் உலா வர ஆசை!!,
 நீ சுட்டு தரும் தோசையும், ஆம்லெட்டும் ருசிக்க ஆசை!!
 சிறு பிள்ளையாய் மாறி பருப்புசோறும், நெய்யும் ஊட்டிக் கொள்ள ஆசை!!

முழுமதி உடல் நனைக்க நிலா சோறு உண்ண ஆசை!!]
 சின்னஞ்சிறிய கதைகள் பேசி..,
 உன் மடியினில் குழந்தை போல் துயில ஆசை!!
 வாழ்கின்ற காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசை,
சாகிறபோது நான் மட்டும் சாக ஆசை????????

Tuesday, March 12, 2013

என் வாசத்தின் முகவரி...,

     

கைக்குட்டையிலும் உன் வாசம்!!
என் சட்டைகையிலும் உன் வாசம்!!
பூத்துவாளையில் உன் வாசம்!!
பூக்களுக்குள்ளும் உன் வாசம்!!

தண்ணீரில் உன் வாசம்!!
என் தலையணைக்குள்ளும் உன் வாசம்!!
 உன் வாசம்!! உன் வாசம்!!  உன் வாசம்!! 
என் வீடெங்கும் உன் வாசம்!!

உன் வாசம் முகர்ந்த என் இதயம்..,
என் வாசல் வரை வந்து உன்னை எதிர்பார்க்கும்!!
நீ இல்லாத நிஜம் என்னை!!??
நிதம் நிதம் என்னை தாக்கும்..,

கதவின் பின்னே ஒளிந்திருப்பாய் என
ஆயிரம் கதை சொல்லும் உன் வாசம்!! 
காதலுடன் அருகில் சென்றால்...,
காயங்களே மிஞ்சும்...,

கட்டிலடியில்.., மாடிப்படியில்...,
உன் வாசத்தின் ஊற்றை
எங்கெங்கும் தேடி, தேடி களைக்கையில்..,
மீண்டும் தென்றலாய் உன் வாசம்!!!

அடி, கண்டுபிடித்துவிட்டேனடி..., உன்
வாசத்தின் முகவரியை!!??
அது நான் காணும் பொருட்களில் இல்லை!!

உன் வாசமே! என் சுவாசமாகிப்
 போனதின் வினைதான் அது என்பதை!!!!!!

Tuesday, March 05, 2013

பொம்மை நினைவுகள்...,

 
 பொக்கிஷமாய் தனிமை வாய்த்தது,
 வயல்காட்டில் நமக்கு...

நான் பேசுவேன் என நீயும்!!
நீ பேசுவாய் என நானும்!!

நாம் பேசுவோம்///. என 
“சோளக்காட்டு பொம்மை”யும் பார்த்திருந்தோம்!!

அப்புறம், பேசிக் கொள்ளலாமென,
வெட்கத்தோடு நாம் வந்துவிட...

ஏமாற்றத்தோடும், ஏக்கத்தையும்
சுமந்துக் கொண்டு...,
 காவல் காத்துக் கொண்டிருக்கிறதாம் இன்னும்....