புரிந்துக் கொள்ளாத அன்புக்கு,
அருகிலிருந்தும் பயனில்லை....,
புரிந்துக் கொண்ட அன்புக்கு,
தூரம் ஒரு பிரிவு இல்லை.
உன் வாழ்க்கை முழுதும்
உன்னுடன் வரத் தயாராய் இருக்கிறேன்.
உன் கோவத்தால் என்னை
விரட்டி விடாதே.,
இப்படிக்கு,
உன் "புன்னகை".
நல்லவங்களை
உலகத்துல எந்த மூலையில
தேடினாலும்,
கிடைக்க மாட்டாங்க.
ஏன் தெரியுமா?
*
*
*
*
நான் வீட்டுல இருக்கேன்.
(நோ, நோ, அழப்படாது, .)
மழையிலும் உன் ஞாபகம்,
வெயிலிலும் உன் ஞாபகம்,
போனமுறை என் வீட்டுக்கு
வந்தபோது கொண்டு சென்ற
என் குடையை திருப்பித் தாயேன் ப்ளீஸ்
வாழ்க்கை என்பது
மலைப்பாதை பயணத்தைப்போல்,
ஏறும்வரை கடினமாக இருக்கும்,.
எறியப் பின்தான் உணர்வோம்,
நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்று.
பொறுமையிருந்தால் சல்லடையில்கூட
தண்ணீரை அள்ளலாம்.
அது பனிக்கட்டியாகும் வரைக் காத்திருந்தால்......,
ஒருப் பொண்ணு ரோடை தவறாக் கிராஸ் பண்ணால்
பார்த்துப் போம்மா என்பார்கள்.
அதுவே ஒரு பையன் கிராஸ் செஞ்சா
சாவுகிராக்கி என்பார்கள்.
என்ன கொடுமை சார் இது.
காசுக் கொடுத்து திட்டு வாங்கும்
பரிதாபமான ஜந்து எது?
"மாணவர்கள்".
பிறந்த நாளன்று,
கணவன்: உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்டா செல்லம்?
மனைவி: ஒரு ரிங் கொடுங்க போதும்.
கணவன்: ஏர்செல் ல இருந்தா? ஏர்டெல் ல இருந்தா?
இல்ல வோடபோனே ல இருந்தா?
மனைவி:!!!????
மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்த பொண்ணு நல்லா இல்லீங்க.
அவருக்கு நீங்க எடுத்து சொல்லக்கூடாதா?
கணவர்: நான் ஏன் சொல்லணும். அவன் மட்டும் சொன்னானா?
மனைவி: ?????
மனைவி: நமக்கு கலியாணம் செய்து வைத்தாரே புரோகிதர்
அவர் அநியாயமா விபத்துல செத்துட்டாராம்.
கணவன்: பண்ண பாவமெல்லாம் சும்மா விடுமா என்ன?
பிரண்ட் 1 : டேய் மச்சான் .வெள்ளிக் கிழமை எனக்குக் கல்யாணம்டா. நீ கண்டிப்பா வரணும்..
பிறந்த: 2 : நீ போ மாமா, உனக்கு ஒரு கஷ்டமினா, உன் பக்கத்துல நிக்குற முதல் ஆளு நாந்தான்.
தண்ணீர் குடிக்க
மனம் வரவில்லை.
நினைப்பது நீயானால்.
நீடிக்கட்டும்
இன்னும் சில நிமிடங்கள்....,
"விக்கல்"
நான் நினைக்கும்போதெல்லாம்,
உனக்கு விக்கல்
வருதென்றால்
இந்நேரம் நீ விக்கியே.....,
செத்திருப்பாய்.
"நான் நினைக்கும் போது எல்லாம் நீ விக்குவாய் என்றால், இந்நேரம் நீ விக்கியே செத்து போய் இருப்பாய்!"
ReplyDelete"நன்று மிக நன்று"
--ஆதிரை