அவர்கள் இல்லை..
இல்லை, இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்?!
அன்று,
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது.
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ?!
நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்.
தன்
இருப்பை உணர்த்துவதற்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன்,
தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்...,
உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம் வரையிலான
அற்ப வாழ்க்கை...,
உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள்.
உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுமுண்டு!!!!
அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்தான்
நாம் நமக்காக அழுகிறோம். யாரும் நமக்காக
அழுவதில்லை.
நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்..ஆனால்,
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்!!
ஆம்,
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை..
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை..
உலகம் ஒரு நாடக மேடை... என்ன செய்வது...?
ReplyDeleteநல்ல வரிகள்... நன்றி சகோதரி... (TM 1)
பாராட்டுக்கு நன்றி சகோ
Deleteநல்லாருக்கு...:)
ReplyDeleteஅழுவது பொய் என்று சொல்லாமல் சுயநலம்ன்னு சொன்னதுதான் ஒட்ட செய்கிறது...
அக்காவின் கருத்தோடு ஒத்து போனதற்கு நன்றி தம்பி
Deleteம் ...
ReplyDeleteகவிதையை ரசித்து ம் சொன்ன நண்பருக்கு நன்றி
Deleteஆழமான சிந்தனை
ReplyDeleteஅழுத்தமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteஅந்த
ReplyDeleteதனித்த நம் அழும் தருணத்தில்தான்
நாம் நமக்காக அழுகிறோம். யாரும் நமக்காக
அழுவதில்லை.
நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்..ஆனால்,
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்!!
ஆம்,
யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை..
-அருமை! அருமை! பகிர்விற்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)
//யாரும் யாருக்காகவும்
ReplyDeleteஅழுவதில்லை..///
உண்மை அக்கா..
காலத்தின் நிஜம்...
ReplyDeleteவாழ்க்கையின் சூட்சமம்...
ஒவ்வொருவரும், தனக்கு யாரும் இல்லை என்கிற உணர்வு வாழ்க்கையில் அனுபவிக்கும் தருணம் அமைந்தே தீரும்! தன்னை அறிய நடக்கும் நிகழ்வு! இனி என்ன செய்ய வேண்டும்? என்பதனை சிந்திக்க வேண்டிய தருணம்! கவிதை அருமை.... இந்தக் கவிதையினைத் தொடர்ச்சியாக தொடரவும்! நன்றி!
ReplyDelete////இன்றைய
ReplyDeleteஅவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ?!
////
நிதர்சனமான வரிகள் அக்கா
சொற்கள் பிரயோகம் அருமை, நல்ல கவிதை (TM 6)
ReplyDeleteஅட...
ReplyDeleteஉண்மைதான் ராஜி. இறந்தவர் போயாச்சு. இருப்பவர் நாம். அவர் துணை நமக்கு இல்லையே என்றுதானே அழுகிறோம். மரணவீட்டின் அழுகை நமக்காகத்தான்.
ReplyDeleteஆழ்ந்த கருத்துள்ள கவிதை.
ReplyDeleteஅருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
நிதர்சனம். நானும் பலமுறை இது போன்று யோசித்துக் கொள்வதுண்டு,
ReplyDeleteநல்ல கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteமனிதன் செய்யும் அனைத்திலும் சுயநலம்தான்
ReplyDeletesuper kavithai sis...
ReplyDeleteஇந்த தேசம் உருப்படுமா ?
ராஜி: எனது மெயில் ஐ. டி: snehamohankumar@yahoo.co.in
ReplyDeleteஇதற்கு உங்கள் மெயில் ஐ. டி அனுப்பவும்.
(உங்கள் மெயில் தெரியாததால் தான் இங்கு பகிர்கிறேன். நீங்கள் இந்த கமன்ட் போடணும் என்றில்லை)