வாங்க சார்! வாங்க என்ன வேணும்?!
பாட்டாசு கடைல பட்டாசு வாங்காம வேறென்னத்தை வாங்க வருவாங்க?! என் பொண்ணுக்கு இது தலை தீபாவளி, அதனால, எப்பவும் வர்ற வெடிலாம் இல்லாம புதுசா வெடிங்க எதாவது வந்திருக்கா?!
ஓ ஓ வந்திருக்கு சார்! “தமிழ் பதிவர்கள் வெடி” ன்னு புதுசா வந்திருக்கு. பார்க்குறீங்களா?!
அட! பேரே வித்தியாசமா இருக்கே! எதோ சாம்பிளுக்கு ஒரு வெடியை காட்டுப்பா...,
சார் இது தனித்தனியா தெரிஞ்ச்சலும், தனித்தனி ஸ்பெஷாலிட்டி குணத்தோட இருந்தாலும்..., ஒரு செட்டாத்தான் கிடைக்கும். தனியா இருக்கும்போது அமைதியா இருக்கும். ஆனா, ஒண்ணு சேர்ந்துட்டாலோ சும்மா கலக்கலா இருக்கும் சார்.
கேக்கவே நல்லா இருக்குதே! சரி, ஒரு பாக்ஸை எடுத்துக் கொடுப்பா! ஒவ்வொரு வெடிக்கும் என்ன ஸ்பெஷல்ன்னு கொஞ்சம் சொல்லேன்!
சார்! இதுக்கு பேரு ”நாஞ்சில் மனோ”ன்னு பேரு..., எல்லா பட்டாசும் வெடிச்சா ஸ்டார் போலதானே நெருப்பு பொறி பறக்கும். ஆனா, இந்த பட்டாசுல ஸ்டாருக்கு பதிலா அருவா, கத்தின்னு டெர்ரர் அயிட்டம்லாம் பறக்கும். உங்களுக்கு யார் கூடவாவது சண்டை இருந்தா அவங்க வீட்டு வாசல்ல கொளுத்துங்க. அத்தோட அவன் தீர்ந்தான்.
ஓ ஓ! இந்த பட்டாசென்ன குட்டியூண்டு கேப்ஸ்யூல் சைஸ்ல இருக்கு..,. இதுவா, இதுக்கு பேரு “மின்னல் வரிகள்”. இதோட ஸ்பெஷல் என்னன்னா, எல்லா பட்டாசோட ஸ்பெஷலையும் அதோட தன்மை மாறாம அப்படியே இந்த சின்ன பட்டாசுக்குள் இருக்கும். இந்த பட்டாசுலாம் சுஜாதா, பழைய குமுதம், விகடன் பேப்பர்ல செஞ்சதும் இதோட ஸ்பெஷல்.
ம் ம் ம் இதென்னப்பா கண்ணை பறிக்குற கலர்ல இருக்கு.
இதுக்கு பேரு “வீடு திரும்பல்” இதோட ஸ்பெஷல் என்னன்னா.., டார்க் கலர்லதான் வரும். ரெண்டாவது இதை, உங்க வீட்டு வாசல்ல பத்த வச்சா, குளு மணாலி, சென்னைல இருக்குற ஓட்டல், புதுசா பார்க்குற மனுசங்க முன்னாடிதான் வெடிக்கும். ஆனா, இதை பத்த வைக்கும்போது டிவி ஆன் பண்ணி இருந்தா! இது வெடிக்கவே வெடிக்காது. டிவி முன்னாடி போய் உக்காந்துக்கும்.
ஹா! ஹா! இப்படி ஒரு வெடியா?
அட, இதை விட சூப்பரா இன்னொரு வெடி இருக்கு சார்! இதுக்கு பேரு ”வசந்த மண்டபம்”ன்னு பேரு.., இது பத்த வெச்சா, எப்பவும் போல டமால்.., டுமீல்ன்னு சத்தம் வராது. சுத்த தமிழ்ல கவிதை படிக்குற சத்தம்தான் கேட்க்கும். கவிதைக்கேத்த அழகான படங்கள் பட்டாசு வெடிச்சு வர்ற பேப்பர்ல இருக்கும்.
ஓ ஓ இதென்ன பார்க்க ஃபாரீன் பட்டாசு போல இருக்கே! புது விதமா இருக்கே!
அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். இது நம்ம மதுரைல தயாரானதுதான். ”அவர்கள் உண்மைகள்”ன்னு ஆனா, அமெரிக்காவுல பத்த வெச்சாதான் இந்த பட்டாசு இங்க வெடிக்கும். அரசியல், பொண்டாட்டிக்கிட்ட வாங்குன அடி, பல்ப், நெட்டுல சுட்ட வீடியோ கிளிப்பிங்குன்னு செம வெரைட்டி காட்டும்.
அதுக்கடுத்து இந்த வெடிக்கு பேரு “கோவைநேரம்” . இதை உங்க வீட்டு வாசல்ல பத்த வெச்சா , ஹோட்டல்லதான் போய் வெடிக்கும். அந்த ஹோட்டல்ல கூட அம்மணிங்க நிறைய இருக்கனும்.., நான் வெஜ் ஹோட்டலா இருந்தா முக்கியத்துவம் தரும். சமயத்துல மலேசியா, இந்தோனிஷியான்னு வெளிநாட்டுகள்லலாம் போய் வெடிக்கும்..
அடுத்து இந்த பட்டாசு பேரு ”மயிலிறகு” இதை பத்த வச்சா, யூனிஃபார்ம் போட்ட பொண்ணுங்களும், காஜல், சமந்தா போட்டோ எங்காவது இருந்தா அங்க போய் வெடிக்கும்..,
இதென்னப்பா ஒரே வெடி ரெண்டு கெட்டப்புல இருக்கு?!
இதுக்கு பேரு “தூரிகையின் தூறல்” இந்த பட்டாசோட ஒரு பக்கம், அழகா மழுமழுன்னு இருக்கும். இன்னொரு பக்கம் மெல்லிசான பேப்பர்ல தாடி போல தொங்கும். அது மட்டுமில்லாம, இதை பத்த வெச்சா ஃபேஸ்புக்குல முனகுனது, பெரியாரை பத்தி பேசுனதுலாம் சவுண்டா வரும். எந்த பட்டாசுலயும் இல்லாத ஒரு ப்யன் இதுல இருக்கு. அது என்னன்னா, இந்த பட்டாசு தயாரிச்ச பேப்பர்லாம், டிஎன்பிஎஸ்சி பரிட்சை எழுதுறவங்க நோட்ஸ்ல இருந்து செஞ்சது.
அடடா! இப்படியும் இதுல ஒரு யூஸ் இருக்கா?! இதென்ன ஒரே பேப்பர்ல ரெண்டு பட்டாசு இருக்கு?!
இதுல பெருசா இருக்குற பட்டாசு பேரு “காணாமல் போன கனவுகள்” இந்த பட்டாசுல ஸ்பெஷல்ன்னு ஒண்ணுமில்லைனாலும் சத்தம் மட்டும் பலமா இருக்கும். இந்த பட்டாசோடு மகள் பட்டாசுதான் இந்த சின்ன பட்டாசு . இதோட பேரு “தேவதையின் கனவுகள்” அதிகமா இது கிடைக்காது. ஆனா, அவங்கம்மா பட்டாசு ரொம்ப சத்தம் போட்டால் இது உடனே பதில் குடுத்து ஆஃப் பண்ணிடும். இந்த செட்டுலயே சின்ன பட்டாசு இது. அதனாலயே எல்லா பட்டாசுக்கும் இது செல்லமாக்கும்.
ஓ ஓ ஓ இதென்ன புதுசா இருக்கு?
இதுக்கு பேரு “கவிதை வீதி” இதுல என்ன ஸ்பெஷல்ன்னா நம்ம செல்போனுக்கு வந்த மேசேஜ்லாம் இந்த பேப்பர்ல இருக்கும். இதுவும், அரசியல், சினிமா, மொக்கைன்னு கலந்து கட்ட்டும். சில சமயம் கவிதையும் இந்த பேப்பர்ல இருக்கும்.
இதென்னங்க ஒரு வெடி கொஞ்சம் கெத்தா இருக்கு?!
இதுக்கு பேரு “தென்றல்” இந்த பட்டாசுல இருக்குற பேப்பர்ல வெறும் கவிதையா இருக்கும். அந்த கவிதைலாம் தேத்தி புத்தகமா போட்டுட்டாங்களாம். அதான் இந்த கெத்து.. ”காணாமல் போன கனவுகள்” பட்டாசு எப்படி வெடிக்குதோ! அதேப்போல சில சமயம் சத்தமா வெடிக்கும். எப்ப பாரு அந்த பட்டாசுக்கூட போட்டிக்கு போய்க்கிட்டே இருக்கும்.
இதென்னங்க, இந்த பட்டாசுல, கம்ப்யூட்டர்ல வர்ற மாதிரி புரியாத இங்க்லீஷ்ல இருக்கு ?!
ஆமாங்க இந்த பட்டாசோட பேரு “தமிழ்வாசி” இந்த பட்டாசோட பேப்பர், பெரும்பாலும் ஜாவா, C++nnu கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகத்துல இருந்ததா இருக்கும். இப்போ சமீபமா அதிகமா எங்கயும் கிடைக்குறதில்லை சார்.
ஐயோ இந்த பட்டாசு பார்க்கவே பயமா இருக்கு.., இதை மட்டும் எடுத்துடேன்.
சார், பார்க்கத்தான், இந்த பட்டாசு கரடு முரடா இருக்கும். ஆனா, அதிகம் சத்தமில்லாம ஆபத்தில்லாத பட்டாசு. முன்னலாம், சினிமா பாட்டு புஸ்தகம் வருமே!? அந்த புக் பேப்பர்ல இருந்து இது தயாரிச்சது. இங்க இருக்குற பட்டாசுகளிலேயே ”ISI" முத்திரை வாங்குன பட்டாசு இது மட்டும்தான். இதுக்கு பேரு ”திண்டுக்கல் தனபாலன்” இந்த பட்டாசு செம செம சுறுசுறுப்பு சார். மத்த வெடிங்க எப்படி வெடிக்குதுன்னு பார்த்து கருத்துலாம் சொல்லும். செம சினிசியரான பட்டாசு சார்.
அவ்வளவுதானா?!
ஐயோ சார், இன்னும் இருக்கு, அதெல்லாம் சொல்லிட்டே இருந்தா அடுத்த தீபாவளி வந்துடும். நானும் வியாபாரத்தை பார்க்கனுமில்ல. அதனால வீட்டுக்கு போய்.., நீங்க ஒரு பட்டாசை பத்த வைங்க, அதுங்களே லிங்க் குடுத்து.., போய்க்கிட்டே இருக்கும். நீங்களே ஆஃப் பண்ணாத்தான் உண்டு. அவ்வளவு பட்டாசு இருக்குங்க சார்.
சரிப்பா.., ஒரு செட் “பதிவர் பட்டாசு” குடு. விலை எவ்வளவுப்பா?!
இது விலை மதிப்பில்லாதது சார். இதை விலை குடுத்தெல்லாம் வாங்க முடியாது.. உங்க பொண்ணு தலை தீபாவளிக்கு என்னோட சீரா இருக்கட்டும் எடுத்து போங்க சார்.
வெடிகளை பஸ், ரயில்லலாம் எடுத்து போகாதீங்க. ராக்கட்டுகளை பாட்டில்லயும் குடிசைங்க இருக்குற இடத்துலயும் வெச்சு வெடிக்காதீங்க..., வெடிகளை பத்த வெச்சு தூக்கி போடாதீங்க.., கம்பி மத்தாப்பு, பென்சில், சாட்டை, சங்கு சக்கரம் கொளுத்தும்போது செருப்பு போட்டுக்கோங்க.., கம்பி மத்தாப்பு கொளுத்தி முடிச்சதும் தூக்கி போட்டுடாம, தண்ணில முக்கி கால் படாத இடத்துல போடுங்க. குழந்தைங்க பட்டாசு வெடிக்கும்போது.., பெரியவங்க யாராவது ஒருத்தர் கூடவே இருங்க.., பெரிய ஊதுவத்தி வெச்சு வெடிகளை கொளுத்துங்க.
நன்றிப்பா! பொண்ணும், மருமகனும் வந்திருப்பாங்க. நான் வரட்டுமா?!
விபத்தில்லாம தீபாவளியை எச்சரிக்கையா கொண்டாடி மகிழுங்க சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.
டிஸ்கி: ”தலைதீபாவளி” கொண்டாடும் புது மண தம்பதிகள் எல்லாருக்கும்..., ” தலைக்கு குளிச்சி” தீபாவளி கொண்டாடும் மற்ற எல்லாருக்கும் “எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை” சொல்லிக்குறனுங்க.
பதிவர் குணங்களை பட்டாசுகளாக்கி விற்பனை செய்த ராஜிக்கு ஜே....
ReplyDeleteடமால் டுமில்னு பயங்கர சத்தமாவும்....
சங்கு சக்கரமா அழகா சுத்தி சுத்தியும் நல்லாவே வெடிக்குதுங்க பட்டாசுங்க எல்லாம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிவர் பட்டாசுகளை ரசித்தியா நாத்தனாரே?! அப்பாடா, அண்ணியை பாராட்டுன முதல் நாத்தனார் நீதான்மா சசி!
Deleteஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteசகோதரரின் தீபாவளி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டேன் சகோ!
Deleteரொம்ப அருமையா இருக்குங்க பட்டாசு கடை பதிவு அதுவும் ஒவ்வொரு பட்டாசின் சிறப்பை விவரித்த விதம் சுவாரஸ்யமா இருந்துச்சு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ!
Deleteவாழ்த்துக்கள் சரவெடி தான் போங்க
ReplyDeleteவாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி சகோ!
Deleteபதிவர் பட்டாசு அற்புதம்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇப்போ சந்தோஷமா இருக்குமே...
ReplyDeleteநல்லது செய்யுங்க...
தங்கள் குடும்பத்துக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள் ( முழுக்க படிச்சாலும் நல்ல நாளில் வம்பு செய்ய வேணாம்னு கிளம்புறேன் )
ReplyDeleteசரி! சரி! போய் பலகாரம்லாம் சுட்டுட்டு வாங்க. அப்புறமா நம்ம சண்டையை வச்சுக்கலாம்.
Deleteபதிவர் வெடிகள் அறிமுகம் சிறப்போ சிறப்பு..
ReplyDeleteவீட்டில் அனைவரும் படித்தார்கள்... கலகலப்பாக இருந்தது... நன்றி சகோதரி...
ReplyDeleteகுடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
நமக்கு ஒரு பார்சல் அனுப்புங்கோ...
ReplyDeleteஅனுபவித்து ரசித்து படித்தேன் சகோதரி...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த
ReplyDeleteதீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...
ரசித்தேன்! நகைச்சுவை இயல்பாக வருகிறது உங்களுக்கு; உங்க கணவரையும் கிண்டல் செய்வீர்களா?!
ReplyDeleteஅவர்தானே எனக்கு ட்ரெயினிக் ஸ்பாட்:-)
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteஎங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரி!....
vaazhthukkal sonthame....
ReplyDeletenalla
உங்கள் வாழ்த்துக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர்கள் வெடி அட்டகாசம்.எல்லோரும் வாங்கிட்டு போய் அவங்க அவங்க பதிவுல நாளை வெடிப்பாங்க!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
பதிவர் பட்டாசை அழகாக கொளுத்தி விட்டிருக்கிறீர்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என்னுடைய இதயம் நிறைந்த இனிய
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
அட பதிவர் வெடி.... நல்லாத் தான் வெடிக்கறீங்க சகோ! :)
ReplyDeleteநல்லா இருக்கு!
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ஜடியாவும் அருமை சொன்ன விதமும் அசத்தல்மா. பதிவர் பட்டாசுக்ள் எல்லாம் சந்தோஷமா வெடிக்கட்டும். இது சந்தோஷ தீபாவளியாய் மலரட்டும். என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeletepayangara comedy
ReplyDelete