Sunday, November 17, 2013

கார்த்திகை தீபத் திருநாள் வரலாறும், விளக்கேற்றும் முறையும்

எல்லோருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்.  இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒண்ணு. இந்த பண்டிகை கொண்டாட பல்வேறு கதைகள் சொன்னாலும் ஒரு அறிவியல் காரணமும் இருக்கு. முதல்ல எனக்கு தெரிஞ்ச புராண காரணங்களை சொல்லிட்டு, அடுத்து அறிவியல் காரணத்தை சொல்றேன். 

படைப்புக் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்னுவுக்கும் யார் பெரியவங்கன்ற ஈகோவுல சண்டை.  விடை தெரிய அழிக்கும் கடவுளான சிவன்கிட்ட வந்திருக்காங்க. சிவன், என்னோட முடி இல்லாட்டி அடியை யார் முதல்ல பார்க்குறாங்களோ அவங்கதான் பெரியவங்கன்னு சொல்லி வானுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபமெடுத்தாராம்.

விஷ்ணு வராக(பன்றி) ரூபமெடுத்து சிவப்பெருமானின் பாதத்தைக் காண பூமியைத் தோண்டிக்கிட்டு போனாராம்.  படைக்கும் கடவுள் நான், பாதத்தைக் பார்க்கப் போவதா!?ன்னு நினைச்சுக்கிட்ட பிரம்மா, சிவனின் முடியைக் காண மேல்நோக்கி பறவை ரூபமெடுத்து போனாராம், நாட்கள் கடந்ததே ஒழிய, இருவராலும் முடிவை எட்ட முடியல. விஷ்ணு தன்னோட தோல்வியை ஒத்துக்கிட்டு சிவப்பெருமானிடம் சரணடந்தாராம்

முடியை நோக்கி போய்க்கிட்ட இருந்த பிரம்மன் கண்ணில், சிவப்பெருமான் கூந்தலிலிருந்து விழுந்த தாழம்பூ பூமியை நோக்கி வந்துட்டு இருந்துச்சாம்.  சிவனின் முடி எவ்வளவு தூரம் இருக்கும்ன்னு தாழம்பூவை விசாரித்தாராம் பிரம்மன். சிவனின் முடில இருந்து விழுந்து 40000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பூமியை எட்டலைன்னு சொன்னதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை வந்தது. சரி, நான் சிவனின் முடியை பார்த்துட்டதா சொல்றேன். நீயும் ஆமாம்ன்னு சொல்லுன்னு கேட்டதுக்கு சரின்னு சொல்லி ரெண்டு பேரும் பூமிக்கு வந்தாங்க. 

தோல்வியை ஒத்துக்கிட்ட விஷ்ணுவும், பொய்ச்சாட்சியோடு நின்ன பிரம்மனையும் கண்ட சிவன், இனி பிரம்மனுக்கு எங்கயும் கோவில் கூடாதுன்னும், சிவப் பூகைக்கு இனி தாழம்பூ கூடாதுன்னும் சாபம் அளித்தாராம். பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அகந்தை நீங்கி உலகுக்கு உணர்த்த அக்னிப் பிழம்பாய் காட்சி தந்த  இடம்தான் திருவண்ணாமலை. அந்த நாளையே கார்த்திகை தீபம்ன்னு கொண்டாடுறோம்.
அசுரனை அழிக்க சிவப்பெருமானின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகள் அவதரித்தது. அந்தப் பிள்ளைகளை கார்த்திகை பெண்கள் பாராட்டி வளர்த்து வந்தனர். பிள்ளைகளை காண வந்த பார்வதி தேவி அறுவரையும் சேர்த்து அணைக்க, ஆறு முகத்தோடும், பன்னிருக் கையோடும், ஒற்றைப் பிள்ளையாய் முருகன் தோன்றினார். அப்படி ஆறு பிள்ளையும், ஆறுமுகம் தெய்வமாய் மாறின நாளும் இதே கார்த்திகை தீபத்தன்றுதான். அப்பனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்துதான் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுறாங்க. 

புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! ஐப்பசி மாசம்ங்குறது மழைக்காலம் முடியுற நேரம். இந்தக்காலக் கட்டத்துல கொசுவோடு வைரஸ் லாம் சேர்ந்து நோய் பரப்பும். அதனல, வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் சேர்த்து காட்டன் திரில விளக்கேத்தும்போது அதில் இருந்து வரும் நெடியால நோய்க் கிருமிகள் வள்ர்ச்சியை முற்றிலும் அழிக்குதுங்குறதாலயும் கார்த்திகை மாசத்துல காலையும், மாலையும் விளக்கெத்துற பழக்கம் வந்துச்சாம்!!.

இனி விளக்கேத்துற முறைகள் பற்றி பார்ப்போம்..., 

வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேத்தனும்.  அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் ளும், மாலை ஆறு மணிக்குள்ளும் விளக்கேத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூ இல்லாட்டி ஊதுவத்தி இல்லாட்டி வத்திக்குச்சி கொண்டு விளக்கை குளிர்விக்கலாம். 
 
விளக்கேற்றும் பலன்: 
குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால்   நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும், நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும், ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்ங்குறது ஐதீகம். 

அதேப்போல கிழக்கு நோக்கி விளக்கேத்தினால்  துன்பம் நீங்குவதோடு குடும்ப அபிவிருத்தி அடையும்.மேற்கு நோக்கி விளக்கேத்தினால் கடன், தோஷம் நீங்கும், வடக்கு நோக்கி விளக்கேத்தினால் திருமணத்தடை அகலும். தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாதாம். 


திருவிளக்கின் சிறப்பு:
தினமும் நாம வீட்டில் ஏத்தி கும்பிடும் காமாட்சி அம்மன் விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாம தடுக்குது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எண்ணெயின் பலன்:
எல்லா எண்ணெயிலும் விளக்கேற்ற முடியாது.  தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயினைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். நெய் விளக்கு செல்வத்தையும், நினைத்தை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் உடையது. நல்லெண்ணெய் ஆரோக்கியத்தையும், தேங்காய் எண்ணெய் வசீகரத்தையும், இலுப்பை எண்ணெய் சகல காரிய வெற்றியையும், விளக்கெண்ணெய் புகழையும், இந்த ஐந்து எண்ணேயும் சேர்த்து விளக்கேற்றினால் அம்மனின் அருளும் கிட்டும். கடலை எண்ணெய் க்டனையும், குடும்பத்துக்கு தீமையும் சேர்க்கும்ன்னும் சொல்லப்படுது.
 திருவிளக்கில் வாசம் செய்யும் தெய்வங்கள்: 
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைத்து ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகிய தெய்வங்களை தியானிக்கனும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்” ன்ற ஐந்து பூதங்களையும், சூரியன், சந்திரன் ன்ற கண்கண்ட தெய்வங்களையும், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றதாம்.

இனி, எந்த தெய்வங்களுக்கு எந்த எண்ணெய் உகந்ததுன்னு பார்க்கலாம்..., 

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வங்களுக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்,பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய்யினால் விளக்கேற்றுவது சிறப்பு.

படங்கள் கூகுள்ள சுட்டது.

22 comments:

 1. சிறப்புப் பதிவு
  வெகு வெகு சிறப்பு
  ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும்
  இணைத்தவிதத்தை மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவைப் படித்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றிப்பா!

   Delete
 2. அருமை சகோதரி... இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!

   Delete
 3. ///சிவனின் முடில இருந்து விழுந்து 40000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பூமியை எட்டலைன்னு சொன்னதும்,///


  இந்த இடம் கொஞ்சம் இடிக்குதே. சிவன் அவதாரம் எடுத்தது பிரம்மன் விஷ்னுக்கு ஏற்ப்ட்ட போட்டியின் போதுதானே அந்த போட்டி என்ன 40000 ஆண்டுகள் நடந்ததா?

  ReplyDelete
  Replies
  1. சிவனும் முன்னாடியே அவதரிச்சுட்டாரு. ஆனா, ரெண்டு பேர் சண்டையில யார் பெரியவங்கன்ற போட்டில பஞ்சாயத்து பண்ண சிவன்கிட்ட போய் இருக்காங்கன்னு புராணம் சொல்லுது சகோ!

   Delete
 4. எந்த தெய்வங்களுக்க் என்ன எண்ணெய் பலனளிக்கும் சொன்ன நீங்கள் தெய்வமாகிய எனக்கு என்ன எண்ணெய் உபயோகிக்கலாம் என்று சொல்லவில்லையே

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு பெட்ரோல்தான் சரிப்பட்டு வரும்!!

   Delete
 5. உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது.... ஆன்மீகத்தை பேசி பேசியே நல்ல சாமியார் ஆகிவிடலாம்.... நீங்க பெரிய சாமியார் ஆனால் நாந்தான் உங்கள் தொண்டன்

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்க கிளைக்கு நீங்கதான் தலைமை. சரியா!?

   Delete
 6. அழகாக ஆன்மிகத்தை படத்துடன் நீங்கள் எடுத்து சொன்ன முறை மிக அருமை.. ஆன்மிகவாதிகளுக்காக தொடருங்கள்... பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி சகோ!

   Delete
 7. புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! // அக்கா நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி...

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரத்துலயே விஞ்ஞானத்துக்காக ஆஸ்கர் அவார்ட் வாங்கப்போறேன் பாருங்க!

   Delete
 8. கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி!

   Delete
 9. எவ்ளோ விஷயம் சொல்லியிருக்கீங்க! ஆஹா! அற்புதம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. நல்ல சிந்தனை. பதிவை விட பதிவில் போடப்பட்ட வாழ்த்துப்படம் அருமை.

  இப்புராணக்கதையை வைணவர்கள் ஏற்றார்களா?

  நீங்கள் ஏற்கவில்லையென்பது 'வந்தாராம்.. சொன்னாராம்...என்று எழுதுவதிலிருந்து தெரிகிறது.

  இப்பண்டிகை இந்துக்களுக்கு என்று சொல்வதை விட தமிழ் இந்துக்களில் சைவர்களுக்கு என்பது பொருந்தும்.

  வடமாநிலங்களில் இப்பண்டிகை கிடையாது. அவர்கள் இந்துக்கள்தானே?

  விஞ்ஞானம் என்ற கைத்தடியை வைத்துத்தான் ஒரு மதம் நடக்கவேண்டுமென்றால் இறைவன் மிகச்சிறியவன் என்றுவருகிறதே? கவனித்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. சொல்லும்போதே புராணக்கதைகள்ன்னுதான் சொல்றாங்க. கதைன்னு சொல்லும்போதே அதுல கொஞ்சம் மிகைப்படுத்துதல் இருக்கும். ஒரு ஊருல இருக்கும் பண்டிகை அடுத்த ஊரில் இருப்பதில்லை. அதனால, வழிவழியா வரும் கொண்டாட்டத்தை விடனுமா!? விஞ்ஞானத்தால கூட விளக்க முடியாத புள்ளி வரும். அந்த புள்ளிதான் இறைவன். இதுக்கு மேல விளக்கம் சொல்லும் அளவுக்கு ஆன்மீகத்துல கரை கண்டவள் அல்ல நான்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

   Delete
 11. சிறப்பு பகிர்வு - சிறப்பான பகிர்வு.... தொடரட்டும் பகிர்வுகள்!

  ReplyDelete