Tuesday, June 13, 2017

உடல் இளைக்க இதை சாப்பிடுங்க - கிச்சன் கார்னர்

சுத்தம் செய்யுறதுக்கு கஷ்டம்ன்னுதான் வாழைத்தண்டை வீட்டில் அடிக்கடி செய்வதில்லை. அடிக்கடின்னு கூட சொல்ல முடியாது இப்பலாம் வாழைத்தண்டை சமையலில் சேர்த்துக்குறதே இல்ல. வாழைத்தண்டு சாம்பார், கூட்டு, வடை, பச்சடி, பொரியல்ன்னு விதம் விதமா செய்யலாம். ருசியா இருக்கும். 

வாழை மரம் பூண்டு இனத்தை சேர்ந்தது.  தென்கிழக்கு ஆசியாவில்தான் முதன்முதலில் வாழை தோன்றியது. வாழையில் இலை, பூ, தண்டு,காய், பழம், நார்ன்னு அத்தனை பகுதியும் உபயோகப்படும்.  அடுத்தவர்களுக்காய பாடுபடுபவர்களுக்கு உதாரணமா வாழையைதான் சொல்வாங்க.  பேயன், கற்பூரம், கதளி,  செவ்வாழை, ரஸ்தாளி, பச்சை, மொந்தை, நேந்திரம்ன்னு மொத்தம் அறுபது வகைகளில் வாழை கிடைக்கின்றது. மட்டி வகை வாழைப்பழம் கன்னியாக்குமரி வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும். 


துவர்ப்பு சுவைக்கொண்ட  வாழைத்தண்டில்  அதிகளவு நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் இருக்கு.  வைட்டமின் ஏ, சி,  பி6, பொட்டாசியம்லாம் அதிகளவு இருக்கு.  

பித்தத்தை தணித்து கபத்தை போக்க வல்லது. கொழுப்பை குறைக்கும், வயிற்று புண்களை குணப்படுத்தும், சிறுநீர் எரிச்சலைப்போக்கும். சிறுநீர் பாதையில் இருக்கும் கல் அடைப்பை நீக்கும்.  ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் சுரப்புக்கு பெரிதும் உதவுது. இதய தசைகளை வலுவடைய செய்யுது.  தோல் நோய்களுக்கு மிகச்சிறந்ததாகப்பயன்படுது. இருமல், காதுநோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சக்காமாலைக்குலாம் சிறந்த நிவாரணியாய் இருக்கு. கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வருவதை குறைக்கும்.  வயிற்றிலுள்ள நீர்க்கட்டியை போக்கவல்லது.  உடல் வெப்பத்தை தணிக்கும். வாழைத்தண்டு சாற்றினை தீப்புண் மீது தடவ கொப்பளம் ஏற்படாமல் தடுக்கும்.  வாழைத்தண்டு குளிர்ச்சியானது. 

உடல் எடையை குறைக்க விரும்புவோர் வாழைத்தண்டு ஜூசை குடித்து வந்தால் பசி  உணர்வு குறைந்து, நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் எடை விரைவில் குறையும். 

வாழைத்தண்டை பச்சடி, சாம்பார், பொரியல், கூட்டு, ஜூஸ்ன்னு விதம்விதமாய் சமைத்து சாப்பிடலாம்..வாழைத்தண்டும், வேர்க்கடலையும் சேர்த்து பொரியல் செய்யும் விதத்தை இனி பார்க்கலாம். 

தேவையானப்பொருட்கள்...
வாழைத்தண்டு,
வறுத்த வேர்கடலை,
வெங்காயம்,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
கடுகு,
உளுத்தம்பருப்பு,’
கடலைப்பருப்பு,
எண்ணெய்,
உப்பு

வாழைத்தண்டின் மேலிருக்கும் போலி தண்டுகளை எடுத்து உள்ளிருக்கும் தண்டினை எடுத்துக்கனும்... 


வாழைத்தண்டை பொடிப்பொடியா நறுக்கிக்கனும். கத்தரிக்கா, வாழைக்காய் மாதிரி இதும் கருத்திடும். அதனால, அரிசி கலைஞ்ச தண்ணி இல்லன்னா மோர் கலந்த தண்ணில போட்டு வைக்குறது நல்லது. 


வாழைத்தண்டை வட்டவடிவமா வெட்டும்போதே விரல்ல நாரை சுத்தி நாரை எடுத்துக்கனும். இதுலயே பாதி நார் வந்திடும் . மிச்ச மீதி நாரை முள்கரண்டியால வாழைத்தண்டு இருக்கும் தண்ணில எதிரும் புதிருமா  சுத்தினா மிச்சமீதி நார்லாம் வந்துரும். முன்னலாம் வேலி முள்கொண்டு நாரெடுப்பாங்க. அதை செய்யுறேன்னு அம்மாக்கிட்ட கேட்டு வாங்கி நாரெடுப்பேன்.  இப்ப முள்கரண்டிதான்


வாணலில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடுங்க..

 காய்ந்த மிளகாயை சேர்த்துக்கோங்க...
தோல் நீக்கிய பூண்டை நசுக்கி சேர்த்துக்கோங்க...
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிங்கோங்க...

வாழைத்தண்டோடு உப்பு  சேர்த்து வதக்கிக்கோங்க...

தேவையான அளவு தண்ணி ஊத்தி வேக விடுங்க. குக்கர்ல வேணும்னாலும் போட்டு வேக வச்சுக்கோஒங்க. குக்கர் சமையல் எங்க வீட்டுல பிடிக்காதுங்கறதால வாணலிலயே வேக வச்சுக்குறேன். 
வாழைத்தண்டு வேகுறதுக்குள்ள வறுத்த வேர்க்கடலையுடன்  எண்ணெய்ல வறுத்த மிளகாயை சேர்த்து மிக்சில கொஞ்சம் மசிய விட்டு பூண்டை தோலோடு சேர்த்து கொரகொரப்பா அரைச்சுக்கோங்க. 
வாழைத்தண்டு வெந்து, தண்ணி வத்தினதும்  வறுத்து அரைத்த பொடியை சேர்த்து கிளறுங்க.
கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கிட்டா சூப்பர் வாசத்தோடு வாழைத்தண்டு வேர்க்கடலை பிரட்டல் ரெடி. சாதத்துல நெய் ஊத்தி சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டா டிவைன்.  சாம்பார், ரசம் சாதத்துக்கு ஏத்த சைட் டிஷ். 

செஞ்சு பார்த்திட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க...

தமிழ்மணம் ஓட்டு பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463143
Granny Five-Course Meal: a lovely old lady cartoon character with neat curls and a sugar sweet smile. #cook #cartoon #character #vector #housewife:
நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. நான் இன்னும் 4 கிலோ குறைக்க வேண்டி இருக்கு. உங்க குறிப்பு பிரியோசனப்படும் போல. Try பண்ணலாம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா செஞ்சுபார்த்து உடல் எடை குறைஞ்சதும் சொல்லுங்க. நாங்களும் ட்ரை பண்ணுறோம்.

      Delete
  2. அடடே, நான் தான் முதலாவதா? ஆமா பரிசு ஏதும் உண்டா? :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு டம்பளர் வாழத்தண்டு ஜூஸ் தரவா சகோ

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. வணக்கம்
    வழைத்தண்டுக்கு மருத்குதுவ குணம் அதிகம் இப்படியான உணவுகள் நீண்ட நாள் வாழ வைக்கும் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. மிக நல்ல தகவல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. என் உடம்பு எடையைக் குறைப்பதற்கு வழி சொல்ல விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழைத்தண்டு ஜூசெடுத்து உப்பு, மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்க சகோ. வாரத்தில் மூணு இல்ல நாலு நாள் போதும். சீக்கிரம் எடை குறையும்.

      Delete
  7. //வாழைத்தண்டு சாம்பார், கூட்டு, வடை, பச்சடி, பொரியல்ன்னு விதம் விதமா செய்யலாம். ருசியா இருக்கும்//

    //சுத்தம் செய்யுறதுக்கு கஷ்டம்ன்னுதான் வாழைத்தண்டை வீட்டில் அடிக்கடி செய்வதில்லை. அடிக்கடின்னு கூட சொல்ல முடியாது இப்பலாம் வாழைத்தண்டை சமையலில் சேர்த்துக்குறதே இல்ல//

    உடம்புக்கு நல்லது; ருசியாவும் இருக்கும். கஷ்டம்னு நினைச்சா எப்படி!?

    ReplyDelete
    Replies
    1. என்னை சொல்லலைப்பா. பொதுவாய் சொன்னேன்

      Delete
  8. உடல் நலம் பேண உதவும் இனிய உணவு

    ReplyDelete
  9. வழைத்தண்டு அடிக்கடி செய்வதுண்டு. நீங்கள் சொல்லியிருக்கும் ரெசிப்பியை மஹாராஷ்ட்டிரா சென்றிருந்த போது சாப்பிட்டு வீட்டிற்கு வந்ததும் செய்தும் இருக்கிறேன். அவர்கள் நிலக்கடலை அதிகம் பயன் படுத்துகிறார்கள். ஜவ்வரிசி உப்புமா - சாபுதானா கிச்சடி அவர்கள் மொழியில், பொஹா அதான் அவல் உப்புமா, எல்லாவற்றிலும் நிலக்கடலை சேர்ப்பார்கள்....பொடித்தும் சேர்ப்பார்கல் முழுதாகவும்.

    பூண்டு சேர்த்துப் பொடிக்கவில்லை எனவே உங்கள் இந்த ரெசிப்பையையும் செய்து பார்க்கிறேன்...

    கீதா

    ReplyDelete