1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காக்க, போராட்டத்தில் உயிர் நீத்த வங்க தேச மொழியுரிமைப் போராளிகளின் நினைவாகவும், அழிந்து வரும் மொழியை காப்பாற்றவும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி தாய்மொழி தினமாக1999ல் அறிவிக்கப்பட்டது. மொழிகளை பொது மொழி, தாய்மொழி என இருவகையாய் பிரிக்கலாம். உலகம் முழுக்க 100 ஆண்டுகளுக்கு முன்ன 6200 எண்ணிக்கையிலிருந்த மொழிகள், இன்னிக்கு 3000க்கும் குறைஞ்சுட்டதா ஆராய்ச்சிகள் சொல்லுது. இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்படுது. இவற்றில் 29 மொழிகள் 10லட்சம் மக்களுக்கு அதிகமாக பேசப்படுது. 122 ,மொழிகள் 10,000க்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுபவை. மத்த மொழிகள்லாம் 10,000க்கும் குறைச்சலான மக்களால் பேசப்படும் வட்டார பேச்சு வழக்கில் பேசப்படும் மொழிகளே! இதில் பல மொழிகளுக்கு எழுத்துருவே இருக்காது. அசாமி, வங்காளம், குஜராத்தி, இந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சந்தாளி, தோக்ரி என 22 மொழிகளே ஆட்சி மொழிகளா இருக்கு. ஆங்கிலம் இணைப்பு மொழியா இருக்கு. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஒடியா.. இந்த ஆறு மொழிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பழமையான மொழிகள்.
உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு...
இந்திய-பாகிஸ்தான் சுதந்திரத்திற்குபின் பாகிஸ்தானில் "உருது மொழியே" அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் அதாவது தற்போதைய வங்கதேசத்தில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சிமொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் முன்னின்று போராட்டங்கள், மறியல்கள் என நடத்தினர். 1952 வருடம், பிப்ரவரி 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும்மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
ஒருவருக்கு தாய்மொழி, தேசிய மொழி, மற்றும் தொடர்பு மொழி மூன்று விதமான மொழிகள் தெரிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு தகுதியுள்ளவனாகிறான் என பெரியோர்கள் சொல்வாங்க. ஆனா, உணர்ச்சிகளை வெளிப்படுத்த காரணியான மொழியே இன்றைக்கு கலவரத்துக்கும், இனவாதத்துக்கும் காரணமாய் ஆகிட்டுது. உலகின் எந்த மூலையிலிருக்கும் மக்களின் தாய்மொழிக்குமே உரிய பாதுகாப்பையும், மரியாதையும் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான கடமையாகும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது. அடுத்தவர் மீது மொழித்திணிப்பு கூடாது. "ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும் என்பதை வலியுறுத்தியே இத்தினம் உருவானது.
இப்பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் முதலில் அறிமுகமாவது தாய்தான். தாய்வழியாகவே இந்த உலகை சேய் புரிந்துக்கொள்கிறது. தாய் வழியாக கேட்கத்தொடங்குகின்ற முதல்மொழியே தாய்மொழி என அழைக்கப்படுகிறது, முதல் மொழி. குழந்தைக்குத் தாயின் மீதுள்ள உரிமையைப் போலவே மொழியின் மீதும் உரிமை உள்ளது. இந்தியா போன்ற பல்வேறுபட்ட கலாசாரம் கொண்ட நாட்டில் மொழி என்பது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. வாழ்வியலும் கூட.
தாய்மொழிகளை பத்தி பார்த்தாச்சு.. நம்ம தாய்மொழியாம் தமிழ்மொழியை இந்நாளில் நினைவுக்கூறலைன்னா எப்படி?!
செம்மொழியாம் தமிழ்மொழிக்குனு தனிச்சிறப்பு பல இருக்கு. மற்ற எல்லா மொழிகளையும்விட தமிழ்மொழி சிறந்ததுன்னு சொல்லக்காரணம், தமிழ்மொழி குறைந்தது இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே தோன்றியது. அதாவது, கிறிஸ்து பிறப்புக்கு முந்தியே தமிழ்மொழி இருக்குன்னு சொல்லப்படுது. தமிழ் என்ற ஒற்றை வார்த்தைக்கு அழகு, இனிமை, இளமைன்னு அர்த்தம். தேன்தமிழ், தீந்தமிழ் ன்ற சொற்களின் பொருளால் இதை உணரலாம். தமிழ் என்ற வார்த்தையை தம்-இழ் எனப் பிரித்தால் தம்மிடத்தில் ’ழ்’ ழைக் கொண்ட மொழி என அர்த்தமாகுது. வேறு எந்த மொழியிலும் இல்லாத ”ழ்”ன்ற எழுத்தே தமிழின் முக்கிய சிறப்பாகும். தமிழ் எழுத்துக்களை உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகை உண்டு. இது உயிர் கொடுக்கும் தந்தையையும், உடல் கொடுக்கும் தாயையும் குறிக்கும். இந்த இரண்டும் சேர்ந்து வரும் எழுத்துக்களான உயிர்மெய் எழுத்துக்கள் தாய், தந்தையருக்கு பிறக்கும் குழந்தையை குறிக்கும். அன்பு, கருணை, தாய்மை, பொறுப்பு, பொருமை எனை அணைத்தையும் கற்றுத்தரும். தமிழ்மொழி எந்த மொழியிலும் இல்லாத ஆயுத எழுத்து என ஒன்று தமிழில் உண்டு. அன்பு காட்டும் அதேவேளையில் தவறுக்கு எதிராய் ரௌத்திரமும் பழகனும்ன்னு சொல்லவே ஆய்த எழுத்து உண்டானது.
உலகமொழிகளில் பலவற்றில் பைபிள் பதிக்கப்பட்டிருந்தாலும் முதன்முதலில் மொழிப்பெயர்க்கப்படது தமிழ் மொழியில்தான். அதை மொழிபெயர்த்தவர் தமிழருமல்ல என்பது இன்னொரு ஆச்சர்ய தகவல் பார்த்தலோமியு சீகன்பால்க் – Bartholomaus Ziegenbalg) தமிழின்மீது கொண்ட காதலால் பைபிளை தமிழில் மொழிப்பெயர்த்தார். அவரைப்போலவே ஜி.யு. போப்பும், கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியும் (வீரமாமுனிவர்) தமிழுக்குத் தொண்டாற்றிய மேல்நாட்டவர்கள். வீரமாமுனிவர் தமிழில் 5 எழுத்துக்களை சீரமைத்துள்ளார். இலக்கண நூல் (சதுரகராதி) ஒன்றையும், பிற இலக்கண, இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார் (தேம்பாவணி, பரமார்த்தகுரு கதைகள்….). ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்.”ன்ற அவரது கல்லறை வாசகமே அவரின் தமிழ்பற்றினை எடுத்துக்காட்டும். தமிழ்த் தாத்தா உ.வே.சா, பரிதிமாற்கலைஞர், முனைவர். கால்டுவெல் மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர்களின் அபாரமான ஈடுபாட்டின் காரணமாகவே இன்று நம் மொழி தொடர்ந்து உயிர்பெற்று இயங்குகிறது எனச்சொன்னால் அது மிகையாகாது. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்று.
தமிழ் மொழி வெறும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தகவல் பரிமாற்று மொழி மட்டுமல்ல! இது பக்தி மொழியும்கூட!! உலகில் வேறு எந்த மொழியிலும் காணக்கிடைக்காதளவு பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்மொழி மட்டுமே! சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றது. தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள், இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இப்படி எல்லா மதத்துவருக்குமான பக்திபாசுரங்கள் தமிழ்மொழியில் மட்டுமே இருக்கின்றன.
பக்தியை மட்டும் தமிழ்மொழி கற்றுத்தரவில்லை. வாழ்வியல் முறைகளையும் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, ஞானக்குறள், நாலு கோடிப் பாடல்கள், நல்வழி நாற்பது மாதிரியான நூல்களையும் நமக்கு தந்திருகிறது. பெருமைப்பட காரணங்கள் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன. நம் தாய்மொழியின் சிறப்பை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவோம்.முடிந்தவரை பிறமொழி கலப்பின்றி தமிழ்மொழி பேசுவோம்.
அனைவருக்கும் தாய்மொழிதின வாழ்த்துகள்!!
நன்றியுடன்,
ராஜி
தமிழுக்கும் அமுதென்று பேர்...
ReplyDeleteஅந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்...
எங்கள் உயிருக்கு நேர்...
பாட்டாவே படிச்சுட்டீங்களா?!
Deleteஆமாம்... இன்றைக்கு இப்போ தான் ஞாபகம் வந்ததோ...? வீட்டில் வேலை அதிகமோ...?
ReplyDeleteஅண்ணே! யூ நோ ஐ ம் வெரி பிசி...
Deleteஅப்படியென்ன பிசின்னு கேக்கப்படாது..
நாய்க்கு வேலை இல்லியாம். ஆனா அது ஓடும் ஓட்டத்துக்கு குறைச்சல் இல்லியாம். அதுமாதிரி இன்னிக்கு ஓடுனதுலாம் வெட்டி ஓட்டம்ண்ணே
தாய்மொழி தின வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி சகோ
Deleteதாய்மொழி தின வாழ்த்துகள்.
ReplyDeleteமுதல் இரண்டு பத்திகளைப் படிக்கும்போது எனக்கு விஜயகாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்கள் தான் நியாபகத்தில் வருகிறது. ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
புள்ளி விவரங்களை எடுத்து சொன்னதால்ன்னு நினைக்கிறேன். அதுலாம் சுட்டது சகோ
Deleteமிக சரி சகோ.
Deleteஆங்கில அகராதி தாய் பேசும் மொழிதான் தாய் மொழி என்று சொல்வதில்லை
ReplyDeleteஆங்கிலம் தாய்மொழி ஆகாதுப்பா.
Deleteஆங்கிலம் தாய் மொழி என்னும் அர்த்தம் தருகிறதா என்பின்னூட்டம்
Deleteஎனக்கு அப்பிடிதான் புரிஞ்சுதுப்பா
Deleteநம்ம தாய்மொழி வளர்ந்துகிட்டே வருது. இப்போ உள்ள வரி வடிவம் சில நூற்றாண்டுகளாகத்தான் வழக்கில் இருந்து வருகிறது.
ReplyDeleteஆமாம் சகோ. படிப்படியாக தமிழ் எழுத்துக்கள் எப்படி வளர்ந்து இப்ப நிலையை எட்டி இருக்குன்னு விளக்கும் படம் வேலூர் அருங்காட்சியம்ல இருக்கு..
Deleteஅதோட லிங்க் இதோ https://rajiyinkanavugal.blogspot.com/2018/04/blog-post_11.html
தாய்மொழி தின வாழ்த்துகள்....
ReplyDeleteதமது மாநிலத்தினை, நாட்டை விட்டு வெளியேறிய பலரின் குழந்தைகளுக்கு தாய்மொழி தெரியவே தெரியாது என்பதையும் இங்கே நினைவு கூர வேண்டியிருக்கிறது!