Thursday, April 25, 2019

ஷாப்பிங் போக வயர் கூடை பின்னலாமா?!... - கைவண்ணம்

 ஒரு ரோல்ல போட்ட சின்ன கூடை. கோவில், பால் வாங்க கொண்டு போக உதவும்....
 அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இன்னிக்கும் வயர் பேக்கில்தான் மதிய சாப்பாடு கொண்டு போகுதுங்க. தனியார் பள்ளி குழந்தைகள்தான் டப்பர்வேர், கேன்வாஸ் பேக்ன்னு இருக்குதுங்க.  தெரிஞ்சவங்க தன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தனுப்ப பின்னி தர சொன்னாங்க. 

 பிளாஸ்டிக் ஒழிப்புன்னு இன்னிக்குதான் சட்டம் வந்து எல்லாரும் வயர் பைக்கு மாறிக்கிட்டிருக்காங்க. ஆனா.  எங்க வீட்டில் எப்பவுமே வயர் பைதான் கொண்டு போவோம். வெளிய போக கிளம்பினதும் வயர் பையைதான் கை தேடும். உழவர் சந்தைக்கு போகும்போது நான் கொண்டு போகும் கூடையை பார்த்துட்டு ஒரு பாட்டி இந்த கூடை எங்க கிடைக்கும்?! எவ்வளவுன்னு கேட்டாங்க.  பாட்டி! நானே பின்னினதுன்னு சொன்னேன்.  காய்களை கொண்டுவர உன் கையில் இருப்பதைவிட கொஞ்சம் பெருசா ஒரு கூடை வேணும்.  பின்னி தர்றியாம்மான்னு கேட்டாங்க.  

 
சரி  பாட்டி, என் கையில் இருப்பது ரெண்டு ரோல் வயரில் பின்னினது. உனக்கு 3 ரோலில் பின்னிவரவா?! மத்தவங்களுக்கு 300ரூபா கொடுப்பேன். நீ 275 ரூபா கொடுன்னு சொன்னேன். சரின்னு சொல்லிட்டுது. தினசரி காய்கறிகள் கொண்டு போறதால சீக்கிரம் கூடை அழுக்காகிடும். அதனால்  டார்க் கலர்ல கூடை போட்டேன். 

ஒரு  எட்டு அடி  நீளத்துக்கு 30 துண்டுகள் வெட்டிக்கிட்டு,  ரன்னிங்க் வயர் கொண்டு நார்மல் முடிச்சு போட்டுக்கிட்டு வரனும்.   காய்கறிகள் வைக்க அடி அகலமா இருக்கனும்ன்னு 13 வரிசை போட்டுக்கிட்டேன். 

 25 வரிசை உயரம் போட்டுக்கிட்டேன்.  
 அதிகமா எடை சுமக்கனும்ன்னா கைப்பிடி மெல்லிசா இருந்தால் கைகள் எரியும். அதனால், கனமான கைப்பிடிக்காக உள்ளுக்குள் 5 வயர் வச்சு முறுக்கு கைப்பிடி போட்டேன். 

வயர் கூடை ரெடி. பாட்டிக்கிட்ட கொண்டு போய் கொடுத்தேன்.  அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் கூடுதலா  நாலு சுண்டைக்காய் போட்டு அனுப்பிச்சுது... 

நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. ம்... ம்... மாமாவுக்கும் ஸைடு வருமானந்தேன்...

    ReplyDelete
  2. கூடை ஏற்கெனவே போட்டு பதிவிட்டிருந்தீர்களோ...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் அது வேற இது வேற ஹா ஹா ஹா ஹா...(ஆமாம் போட்டிருந்தாங்க. அதுல காய்க்கூடை வரலை.!)

      கீதா

      கீதா

      Delete
  3. மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி. - துளசிதரன்

    ராஜி கலக்கறீங்கப்பா...கீதா

    ReplyDelete