Friday, May 08, 2020

ஸ்ரீ மௌலானாசாகிப் சுவாமிகள்-பாண்டிச்சேரி சித்தர்கள்.

தமிழ்நாட்டின் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி இருப்பதை பார்த்திருப்போம். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும்ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நம்மால் உணர முடியும். நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்குமாம். இதனை பீட்டா அலைகள்ன்னு சொல்றாங்க. நாம் ஓய்வெடுக்கும்போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்குமாம். 

தமிழ்நாட்டின் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி இருப்பதை பார்த்திருப்போம். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நம்மால் உணர முடியும். நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்குமாம். இதனை பீட்டா அலைகள்ன்னு சொல்றாங்க. நாம் ஓய்வெடுக்கும்போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்குமாம். அந்த அலைகளை ஆல்பா அலைகள் எனக் கூறுகின்றனர்.அதே உடல் தியான நிலையில் இருக்கும்போது, எட்டு ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்குமாம். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவநிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான். அதனால்தான், கடவுளால் முடியாததுகூட சித்தர்களால் முடியும்.  அப்பேற்பட்ட சித்தர்கள் நம் தமிழ்கத்தில் அனேகம்பேர்  அவதரித்தனர். அந்தவகையில் இன்று நாமப்பார்க்கபோறது ஒரு இந்துக்கோவிலோ இல்ல  சிவலிங்கம் வைத்துவழிபடும் சித்தர்களின் ஜீவ சம்மதியோ இல்ல. ஒரு முஸ்லீம் தர்காவில் ஜீவ சம்மதியடைந்திருக்கும் ஒரு மகானை பற்றி பார்க்கப்போகிறோம். 

போனவாரம் நாம ஓம் ஸ்ரீசக்திவேல் பரமானந்தகுரு சுவாமிகளின் ஜீவசமாதியை தரிசனம் செய்தோம். எங்களால் முடிந்தளவு ஒவ்வொரு நாளும் எவ்வளவு ஜீவசமாதிகளுக்கு செல்லமுடியுமோ அவ்வளவு இடங்களுக்கும் சென்றோம். ஆரம்பத்தில் எங்களிடம் பாண்டிச்சேரியிலும், பாண்டிச்சேரியை சுற்றி ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் சித்தர்கள் ஜீவசமாதி   லிஸ்ட் கொடுக்கப்பட்டது. சரியென்று எல்லவற்றையும் பார்த்துக்கொண்டே வரும்போது ஸ்ரீ மௌலானா சாஹிப் சுவாமிகள் என்ற பெயர் இருந்தது. பெயரே வித்தியாசமாக இருக்க ஏற்கனவே ஸ்ரீமகான் படே சாஹிப் சுவாமிகள் என்று ஒரு இஸ்லாமிய சித்தரை பற்றி பார்திருந்தோம். அதுப்போல வேற்று  மதத்தை சார்ந்த ஒரு சித்தர் என்று மனசுக்குள் தோன்றியதால்  அவரை தரிசிக்கும் ஆவல் அதிகமானது.. 


சரி ஸ்ரீமௌலானாசாஹிப் சுவாமிகள் ஜீவசமாதியை தரிசிக்கும் ஆவலோடு சென்று கொண்டிருந்தோம். நாங்கள் சென்ற நேரம் இந்த சமாதி பூட்டி இருந்தது .யாரைவது விசாரிக்கலாம் என்றால்  அருகில் யாருமில்லை. அச்சுஅசலாக அது ஒரு முஸ்லீம் தர்கா போன்றே இருந்ததால் என்ன செய்யலாம்?! று ஒருநாளில் பார்த்துக்கொள்ளலாம் என அங்கிருந்து திரும்ப நினைத்து திரும்ப எத்தனிக்கையில்எங்களைப்போலவே வேறு ஒரு குழு அவரை தரிசிக்க வந்திருந்தது. எங்களைப்போலவே அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அங்கிருந்த ஒருவர் வியாழக்கிழமையன்று விசேஷமாக பூஜை செய்வார்கள் மற்ற நேரங்களில் நேரமே சாத்திவிடுவார்கள் என்று சொன்னார். அதிலும் வியாழக்கிழமை மட்டுமே பெண்களுக்கு அனுமதி என்றும் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். சரி இனி சித்தரின் அருள் இருந்தால்தான் வியாழக்கிழமை வரமுடியும் என்று சித்தரின் மேல் பாரத்தை போட்டு பயணத்தை தொடங்க ஆயத்தமானோம். சித்தரைத்தான் தரிசிக்கமுடியவில்லை. இந்த சித்தரின் வரலாறையாவது தெரிந்துக்கொள்வோமே என்று நம் கையிலேயே இருக்கும் உலகத்தில் அதாங்க  கூகுளில் தேடினால் அவரைப்பற்றிய எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. சரி, சித்தரை பற்றியும் தெரிஞ்சுக்க முடியாது. ஒரு பதிவும் போச்சுதுன்னு  முகத்தை கொங்கப்போட்டுக்கிட்டு வண்டிக்கு திரும்போது, வேறு குழுவில்  இந்த சித்தரை தரிசிக்க வந்த ஒரு பெரியவர் கவனித்துவிட்டார் போல! மெதுவாக அருகில் வந்து சித்தர்கள் ஜீவசமாதிகளை தரிசிக்கவந்தீர்களா?! எங்கிருந்து வர்றீங்க என்ற விவரம் எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். இவரிடம் இந்த சித்தரை பற்றி கேட்டு பார்க்கலாம் என நினைத்து, ஐயா! நீங்க சித்தர் வழிபாடுகளில் ஆர்வமுள்ளவரா?! எனக்கேட்க அவர் வரிசையாக சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகள் அங்கு எப்படி செல்வது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் என் கவனமெல்லாம், தூண்டில்காரனுக்கு தூண்டில் தக்கை மேல்தான் கண் என்பதுப்போல இந்த மௌலானாசாஹிப் சுவாமிகள் பற்றி சொல்லுவாரான்னுதான் இருந்தது. அவரும் எல்லா சித்தரையும் பற்றி சொல்லிக்கொண்டே வந்தார் இவரைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நான் மெதுவாக ஐயா இந்த மௌலானாசாஹிப் சுவாமிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன் .அங்கேதான் சித்தரின் அருள் விளையாட ஆரம்பித்தது.
தெரியும் ஆனால் எல்லாமே கேள்விஞானமே! எனக்கே இப்பொழுது வயசாகிவிட்டது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கடலூரில்தான். நான் சிறுவயதாக இருக்கும்போதுஎனது தாத்தா பெரிய ஆன்மீகவாதியாக இருந்தார். அப்பொழுதெல்லாம் ரயில்வண்டிதான் வெளியூர் பயணத்திற்கு.. நானும் அவருடன் பல கோவில்களுக்கு செல்வேன். நிறைய சித்தர் சமாதிகளுக்கு கூட்டி செல்வார். அவர்தான் எனக்கு இந்த வழிபாட்டு முறைக்கு வழிவகுத்தவர். அப்பொழுது இந்த மௌலானாசாஹிப் சுவாமிகள் பற்றியும் சொல்லி இருக்கிறார். செவிவழியாக வந்த வரலாற்றைத்தான் என் தாத்தாவுக்கு அவருடைய தககப்பனார் சொல்லிக்கொடுத்தாராம். ஆனால் யாருக்கும் சரியான வருஷம் தெரியாது என்று முன்னுரையோடு இந்த சித்தரை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

மௌலானா சாஹிப் மெய்ஞ்ஞான சுவாமிகள் கிபி 17-ம் நூறாண்டில் தமிழ்நாட்டில் ஆற்காடு என்னும் ஊரில் வெள்ளாளர் குலத்தில் மிகச்செல்வ செழிப்புமிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்தாராம். இவர் பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னாலும் ஆடம்பரத்திலும்செல்வச்செழிப்பிலும் சிறிதுகூட நாட்டம் கொள்ளாமல், செல்வத்தையே மதிக்காமல் எப்பொழுதும் இறை சிந்தனையுடன் ஆன்மீகத்தில்  நாட்டம் உள்ளவராக திகழ்ந்தாராம். பகலெல்லாம் விரதம் இருப்பதும், இரவில் உள்முகமாக இறைவனின் தரிசனத்தை கண்டுகளித்தவராக தனது வாழ்க்கையின் முக்கிய வேலையாய் இருந்தாராம் .தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதில்லையே ஆனந்தம் கொண்டாராம். இவருக்கு அப்பொழுதே பல சீடர்களும்,பக்தர்களும் இருந்தார்களாம். ஒருநாள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு யாரிடமும் சொல்லாமல் புதுசேரிக்கு வந்துவிட்டாராம். பல ஆண்டுகள் புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி வீதி என்று சொல்லப்படுகிற லால்பகதூர் சாஸ்திரி வீதி சட்டக்கல்லூரி தற்போது இருக்கும் இடத்தில் தங்கியிருந்து இறைத்தொண்டு செய்துவந்தார். தன்னை தேடிவந்த மக்களுக்கு ஞானத்தை போதித்தார். ஒருநாள் இவரை திடீரென காணவில்லை. எங்கு சென்றார்என்ன ஆனார்? என்று யாருக்கும் தெரியவில்லை. இவரது சீடர்கள்லாம் இவரின் நிலை என்னவானது என்று கலங்கி நின்றனர். இப்படியே காலங்கள் சென்றது .

சிலநாட்களுக்கு பிறகு இவர் லட்சதீவில் இருப்பது தெரியவந்துள்ளது. எப்படி சென்றார் என யாருக்கும் தெரியாது. சிலர் கடல்மார்க்கமாக சென்றிருக்கக்கூடும் என நினைத்தனர். லட்சத்தீவில் ஆன்மீக பணிகள்மக்களுக்கு ஆத்ம ஞானத்தை போதித்தல்மக்கள் குறைகளை போக்குதல் என தன் வாழ்நாளை வகுத்துக்கொண்டிருந்தார் இந்த மெய்ஞ்ஞானி. இவரது ஆன்மீக தொண்டினை கேள்விப்பட்ட அப்போது லட்சத்தீவை ஆண்டுவந்த முஸ்லீம் மன்னர் இவரை நேரடியாக சந்தித்தார். லட்சதீவு மன்னரும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராததால் இருவரும் சிறந்த நட்பு பாராட்டி வந்தனர். ஆன்மீகவாதியான அந்த மெய்ஞ்ஞானியின் ஆன்மீக கருத்துக்களினாலும்செயல்பாடுகளினாலும்வணக்கவழிபாடு முறைகளினாலும்  லட்சத்தீவு மன்னர் மிகவும் சந்தோஷமடைந்து அவரை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டார். இஸ்லாம் வழக்கப்படி செய்யும் எல்லா மரியாதைகளும் இந்த மெய்ஞ்ஞானிக்கும் வழங்கப்பட்து. இறைவன் ஒன்றே என  உணர்ந்தவர்களுக்கு ஜாதி மதமேது?! நாடு, நகரமென எல்லா இடங்களிலும், ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி என்ற வித்தியாசம் பார்க்காமல் அந்தந்த நாட்டின் கலாச்சார முறைகள், புவியில் அமைப்பிற்கேற்ப  உருவத்தால் பெயரால்தான் இறைவன் வேறுபட்டு நிற்கிறானே தவிரஅகில பிரமாண்ட கோடி பிரபஞ்சத்திற்கும் ஏக இறைவன் ஒருவனே என்று கண்டுணர்த்தவர்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்பது அவர்கள் கண்ட ஆத்ம ஞானம். அப்படி இந்த மெய்ஞ்ஞானியும் மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.அந்தக்காலத்தில் பிற மதங்களில் இருந்து இஸ்லாத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு பெயரின் முன்னே மௌலா என்ற அடைமொழி வழங்கப்பட்டு வந்தது.அந்தவகையில் இந்த மெய்ஞ்ஞானிக்கு சையது அஹமது மௌலா சாஹிப் எனப்பெயர் மாற்றப்பட்டது. அந்நாள்முதல் மக்களும் இவரைப்பின்பற்றிய சீடர்களும் இவரை மௌலா சாஹிப் என்றே அழைத்து வந்தனர்.    

இந்த மெய்ஞ்ஞானியின் வரலாறு செவிவழியாக சொல்லப்படுவதில், சரி நமக்கு லட்சத்தீவை ஆண்ட மன்னர்களின் வருஷங்களை பார்த்தால் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என, வரலாற்றில் ஆராய்ந்தால்புரட்டினால் இலட்சத்தீவுகள் முதலில் சேர அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு,கத்தோலிக்க போர்த்துகீசியர்கள் 1498 இல் வந்தனர்.  ஆனா, 1545 வாக்கில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் இப்பகுதியை முஸ்லீம் மன்னர்கள் பரம்பரை ஆண்டுவந்தனர்.  அதை 1787ம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின்கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. தொடர்ந்து திப்பு சுல்தான் ஆண்டு  1799ல் இறந்தபோது, இப்பகுதியின் பெரும்பகுதி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் சென்றதுசெவிவழியாக சொல்லப்பட்ட மௌலானா சாஹிப் கதை இரண்டரை நூறாண்டுகளை கடந்துவிட்டாலும் வரலாற்று சம்பவங்களோடு ஒத்துபோகின்றது.

இவர் இருக்கும் காலத்தில் இருந்த லட்சத்தீவு மன்னருடன் இருமுறை ஹஜ் பயணம் செய்து புனித காபாவை தரிசித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. சில ஆண்டுகாலம் லட்சத்தீவுகளிலே தங்கியிருந்து இறைத்தொண்டை செய்துவந்தார். இந்நிலையில் தனது இறுதிக்காலம் நெருங்குவதை மௌலானாசாஹிப் சுவாமிகள் உணர்ந்தார். தான் இறந்தபிறகு தனது உடலை பதனிட்டு பெட்டியில் வைத்து ,தன்னுடைய பெயரையும் வரலாற்றையும் அதில் எழுதிவைத்து கடலில் விட்டுவிடவேண்டும். இதுவே எனது இறுதி ஆசை என்று மன்னரிடம் மௌலானாசாஹிப் சுவாமிகள் கூறினார். குறிப்பிட்ட நாளும் வந்தது சுவாமிகள் சொன்னமாதிரி அவர் இப்பூவுடலை விட்டு நீங்கினார். அவர் அசைபட்டமாதிரியேமன்னரும்மௌலானாசாகிப் இறந்ததும் அவருடைய மையத்தை (பூதவுடலை)பதனிட்டு ஒரு பெட்டி செய்து அதில்வைத்து கடலில் மிதக்கவிட்டார் லட்சதீவு மன்னர் .
பலநாட்களுக்கு பிறகு அந்த மௌலானா சாஹிப் உடலை சுமந்த  சந்தனப்பெட்டி அந்தநாளைய வடஆற்காட்டின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியின் கடற்பகுதிக்குள் மிதந்து கரை சேர்ந்தது. அப்ப அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கடலலையில் மிதந்துவந்த அந்த சந்தனப்பெட்டியை பிடிக்க படகை செலுத்தியபோதுஅது இவர்களது கைகளுக்கு சிக்காமல் தண்ணீரில் போக்கு காட்டிக்கொண்டிருந்தது. இவர்கள் அதனருகில் செல்லசெல்ல அந்த பெட்டியும் விலகி சென்றதாம். அந்த பெட்டி முஸ்லீம் மத முறைப்படி இருந்ததால், அதைப்பார்த்த மீனவர்கள் கரைக்கு வந்து அங்குள்ள முஸ்லீம் பெரியவர்களிடம் தெரியப்படுத்தினராம். அங்குள்ள முஸ்லீம் பெரியவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலரும் கடலுக்குள் சென்று அந்த சந்தனப்பெட்டியை கரைக்கு கொண்டுவந்தனர். கரைக்கு கொண்டுவந்ததும் அந்த பெட்டி சந்தனப்பெட்டி  ஒரு முஸ்லீம் சம்பிரதாயப்படி இருந்ததால், இது ஏதோ ஒரு முஸ்லீம் பெரியவரின் சந்தன(சவ)பெட்டியாக இருக்கக்கூடும் எனக்கருதி அந்த பெட்டியை இப்பொழுது இருக்கும் 7-ம் நாள் திருச்சபை (7th Day Adventist Church) இருக்கக்கூடிய இடத்தில அன்றைய காலத்தில் முஸ்லிம்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.அந்தக்காலத்தில் முஸ்லீம் மக்களின் அடக்கஸ்தலம் இன்று இருக்கும் 7-ம் நாள் திருச்சபை இருக்கும் இடமாகும் என்று புதுச்சேரி வரலாறு கூறுகின்றது .

பல ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களின் குடியேற்றம் பெருகப்பெருக அவர்கள் இடத்தை ஆக்கிரமிக்க வெள்ளையர்கள் பகுதியில் வசித்துவந்த முஸ்லீம்கள் இந்துக்களின் பகுதிக்கு குடிப்பெயர வேண்டியதாயிற்று . இப்பொழுதுபோல் அல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தகாலம் அது. அவர்கள் இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிபெயர்ந்ததால் இந்த மெய்ஞ்ஞானியின் கபர்(கல்லறை ) கவனிப்பாரற்று போயிற்று. அங்கேயும் யாரும் செல்லவும் முடியவில்லை. தனித்து விடப்பட்ட கபர் (கல்லறை )கவனிப்பாரற்று பாழடைய தொடங்கியது. அது ஒரு கபர்(கல்லறை) இடமாக இருந்ததால் பிரெஞ்சுக்காரர்களும் அதை ஆக்கிரமிக்காமல் எதற்கும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். பாழடைந்த அந்த இடத்தில் பொதுமக்கள் அசுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அவ்விடத்தை கழிப்பிடமாக பயன்படுத்த தொடங்கினர். ஒரு மெய்ஞ்ஞானியின் அடக்கஸ்தலத்தில் அசுத்தம் செய்வதைக்கண்ட முஸ்லீம் மக்கள் வருந்தினார்கள்.

மௌலான சாஹிபின் தெய்வீக சக்திக்கு இது ஏற்றதாக இல்லாததினால்ஒருநாள் ஊர் காஜியார்ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றிய இந்த மகான்தம்மை  அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அசுத்தம் செய்வதை எடுத்துக்கூறி இப்பொழுது இருக்கும் (7th Day Adventist Church) 7-ம் நாள் திருச்சபை இருக்கும் இந்த இடத்தை சுட்டிக்காட்டி ,இங்கே இருப்பது தன்னுடைய பூத உடலே என்று தெளிவுபடுத்தி, அந்த இடத்திலிருந்து தம்மை அகற்றுமாறு எல்லோர் கனவிலும் இந்த மகான் அறிவுறுத்தினார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு தொடர்ந்து பலமுறை பலரின் கனவில் தோன்றி இதுபோல தனது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறையை (கபர் ) அங்கிருந்து பெயர்த்தெடுத்து தற்போது இருக்கும் வைட்டவுன் பகுதியில் அமைந்திருக்கும் முல்லாத்தெருவில் அமைத்துள்ள பள்ளிவாசலுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்யுங்கள் என்று கனவில் தோன்றி கூறினார். இதனால் அந்த ஊர் காஜியார்நாட்டாமைகாரர்கள் மற்றும் முஸ்லீம் பெரியவர்கள், ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றுக்கூடி ஆலோசனை செய்து அப்பொழுதைய பிரெஞ்சு கவனருக்கு மனு கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி காஜியார்ஊர் நாட்டாமைகள், முஸ்லீம் பெரியவர்கள்ஊர் பொதுமக்கள் எல்லோரும் பிரெஞ்ச் கவர்னரை நேரில் சந்தித்து இப்பொழுது திருச்சபை இருக்கிற அந்த இடத்தை சுட்டிக்காட்டி இங்கே ஒரு முஸ்லீம் மகான் சமாதி இருக்கிறதுகவனிப்பாரற்று கிடக்கும் இந்த சமாதியில் பொதுமக்கள் அசுத்தம் செய்வதால் தன்னை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அடக்கம் செய்யுமாறு எங்கள் கனவில் தோன்றி சொன்னார் எனக்கூறினர். இதைக்கேட்ட கவர்னர்  ஏளனமாக சிரித்தார் .உடனே கவர்னரை காணச்சென்ற அனைவரும் நாங்கள் சொல்வதுபடி அந்த இடத்தில் மகானது கல்லறை  இருப்பது உண்மை இல்லையென்றால் கவர்னர் கொடுக்கும் எந்த தண்டனையையும், அபாரதத்தையும் நாங்கள் ஏற்கத்தாயர் எனக்கூறினார். அவர்களது உறுதியை பார்த்ததும் கவர்னரும் சரிஇதுகுறித்து மத்த அதிகாரிகளுடன் தாம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக அவர்களிடம் சொல்லிவிட்டு கூட்டத்தை அனுப்பிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியை சாதரணமாக எடுத்துக்கொண்ட  அப்பொழுது கவர்னராக இருந்தவர்  (Francis Martin-François Martin (1634–31 December 1706) was the first Governor General of Pondicherry.) இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். ஒருநாள் கவர்னர் கனவில் மகான் தோன்றி கவர்னரை அச்சுறுத்தி ஊர் பொதுமக்கள் மற்றும் முஸ்லீம்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றுமாறு தெரிவித்தார். கவர்னரும் பயந்து மகானது கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினார்.ஒருநாள் கவர்னர் பிரெஞ்சு அதிகாரிகளை அழைத்து அந்த காஜியார், நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்களை அழைத்துவரும்படி கட்டளையிட்டார். எல்லோரும் கவர்னரின் அழைப்பை ஏற்று சந்தோசத்துடன் கவர்னரை சந்தித்தனர். அப்பொழுது கவர்னர் நீக்கள் சொல்லிய அந்த  அதிசயமான மகானின் கல்லறை பற்றி அவரே என் கனவில் வந்து எனக்கும் அறிவுறுத்தினார் என்று பொதுமக்களிடம் விளக்கி கூறியதுடன் அல்லாமல் உடனே நாம் இதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்கலாம் என்று உறுதியளித்தார் .இதைக்கேட்ட பொதுமக்கள் சந்தோஷத்துடன் திரும்பினார்கள் .

ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு காஜியார் பேஷ்இமாம்(மதகுரு)ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் எல்லோரும் இந்த மகான் மௌலானா சாகிப் பூதவுடல் அடக்கம் செய்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு பிரெஞ்சு ராணுவ அதிகாரிகளும்பிரெஞ்சு அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர். மகான் மௌலானா சாஹிப் மக்களின் கனவில் உணர்த்திய குறிப்பை வைத்து கமானின் உடல் சுமந்த சந்தனப்பெட்டி இருந்த இடம் அடையாளம் காட்டப்பட்டது. உடனே அந்த இடம் தோண்டப்பட்டது. அந்தசமயத்தில் அந்தமண்ணில் இருந்து இரத்தம் வந்ததாம். அது அங்கு இருப்பவர்கள்மீதும் தெரித்ததாம். உடனே கடப்பாரை மண்வெட்டிகளை எறிந்துவிட்டு கைகளால் அங்கிருந்த மண்ணைவிலக்கி அந்தப்பெட்டியின்மீது எந்த சேதாரமும் இல்லாமல் பெட்டியை வெளியே எடுத்தனராம். அதைக்கண்ட பிரெஞ்சு அதிகாரிகள் ஆச்சர்யம் அடைந்தாராம். காஜியார் ஊர் பொதுமக்கள் சொன்னதுலாம் உண்மையே என்றுணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டனராம். மகான் மௌலா சாஹிப் உடல்அடக்கம் செய்த அந்த இடத்திலிருந்து அவரது பூதவுடலை தாங்கிய சந்தன பெட்டியைபிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் எல்லோரும் ஊர்வலமாக ஆரவாரத்துடன் எடுத்துச்சென்றனராம். பின்னர் முல்லாவீதி குத்பா பள்ளிவாசலுக்கருகில் உள்ள காலிமனையில் இந்த சந்தனப்பெட்டியை இறக்கிவைத்தனராம். பின்னர் பிரெஞ்சு அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள், முஸ்லீம் பெரியவர்கள் முன்னிலையில் அந்த சந்தனப்பெட்டி திறக்கப்பட்டது. அதில் முஸ்லீம் மத வழக்கப்படி மையத்தை சுற்றி அடுக்கடுக்காக மூன்று துணிகள் வைத்து சுற்றி தலைமாட்டிலும், கால்மாட்டிலும் கயிற்றால் கட்டப்பட்டு துணியால் மூடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாம் அவருடைய பூதவுடல்.
பின்னர் மகானது உருவத்தைக்காணும் ஆவலில் தலைமாட்டில் உள்ள துணியை பிரித்துப்பார்த்தபோது எல்லோரும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனராம். சச்சிதானந்த நிலையில் பெருவாழ்வு வாழ்கின்ற அருளாளர்போல் அன்றலர்ந்த தாமரைபோல் இளம்புன்னகையோடு ஒரு உடல் இறந்த பிறகும் அழியாமல் உயிரோட்டமாக இருந்தது. அதைப்பார்த்தவர்கள் இந்த மகான் தூக்கத்தில் இருப்பதுபோலவே இருக்கிறார். தூங்காமல் தூங்கி அமைதியாக யோகநித்திரையில் அவரது முகம் இருப்பதை கண்டு எல்லோரும் ஆச்சர்யமடைந்து அந்த மகானை வணங்கி நின்றனர் அந்தப்பெட்டியில் இருந்த ஆதாரத்தின்மூலம்தான் இந்த மகானின் வரலாறு, அவர் லட்சத்தீவுக்கு சென்றதுலாம்  எல்லோருக்கும் தெரிய வந்ததாம். பின்னர் முஸ்லீம் பெரியவர்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் காஜியாரும், முஸ்லீம் மத குருமார்களும்ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து பிரெஞ்சு ராணுவ சகல மரியாதையுடன் இஸ்லாமிய முறைப்படி  குத்பா பள்ளிவாசலின் தெற்குப்பக்கம் இருந்த காலிமனையில்  இப்பொழுது இருக்கும் இந்த இடத்தில நல்லடக்கம் செய்யப்பட்டதாம் .இதெல்லாம் ஏறக்குறைய இரண்டரை நூறாண்டுகளுக்கு மேற்பட்ட காலங்களில் நடந்தவை என்பதால் செவிவழியாக மட்டுமே இன்றளவும் பேசப்பட்டுவருகிறது.
இந்த மகானின் தர்காவுக்கு செல்ல பாண்டிச்சேரி ஒயிட் டவுனுக்கு அருகிலுள்ள முல்லா தெருவழியாக செல்லவேண்டும். பாண்டிச்சேரி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 300 மீ தொலைவிலும்சின்னக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், பாண்டிச்சேரி பஸ்ஸ்டாண்டில் இருந்து 2 கிமீ தொலைவிலும், பாண்டிச்சேரி ஏர்போர்ட்டிலிருந்து 7 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து சென்றால் சுமார் 150 கிமீ தொலைவிலும் இருக்கிறது. இந்த மௌலானாசாகிப் தர்கா. பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து நிறைய ஆட்டோ வசதிகள் உள்ளன. வாரத்தில் எல்லா நாட்களிலும் நேரமே திறந்து விரைவில் மூடிவிடுவார்கள் என சொல்லப்படுகிறது. அனைத்து மதத்தினரும் இங்கு வந்து இந்த மகானை வழிபாட்டு செல்கின்றனர். பெண்களுக்கு வியாழக்கிழமை மட்டும் அனுமதி உண்டு என்று சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றநேரம் தர்கா மூடியிருந்ததால் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ளமுடியவில்லை. தெரிந்தவர்கள் கருத்துரையில்  பதிவிடலாம். வீண் அலைச்சல் தவிர்க்க எல்லோருக்கும் அது உபயோகமாக இருக்கும்.

மீண்டும் வேறொரு சித்தரின் ஜீவ சமாதியிலிருந்து உங்களை அடுத்தவாரம் சந்திக்கிறேன் .

நன்றியுடன்

ராஜி.

9 comments:

 1. பாண்டிச்சேரிக்குப் பலமுறை சென்றதுண்டு. பார்க்கலாம், இந்தச் சித்தரின் ஜீவ சமாதியைக் காணும் பேறு எப்போது கிட்டுமென்று. தங்கள் கோர்வையான தகவல்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 2. நிச்சயமாக சென்று வாங்கப்பா..இனியும் நிறைய தகவல்களை சேகரித்து,கமெண்ட் பகுதியில எழுதுங்க,அடுத்தமுறை செல்லும் போது தரிசனம் செய்ய வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 3. நீ...ளமான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவை டைப் செஞ்சுட்டு, எடிட் செய்யும்போது முதல்பாதியை தனி பதிவாக்கலாம்ன்னு எடுத்து வச்சிட்டேன். அதையும் சேர்த்து பதிவாக்கி இருந்தால் என்ன சொல்லி இருப்பீங்களோ!?

   Delete
 4. ஒரு இடத்தையும் விட்றதில்லை போல...

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் இல்லைண்ணே! எப்பயுமே போறதில்லை. ஆனா, போகும்போது பல இடத்தை பார்ப்பது வழக்கம். ஒரு இடத்துக்கு போனால் அதை சுற்றி இருக்கும் முக்கியமான கோவில்கள், இடங்களை குறிப்பெடுத்து பார்க்க முயற்சிப்பேன். இந்த பாண்டிச்சேரி முழுக்கவும், அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிறைய சித்தர்கள் இருக்கிறார்கள் இருக்காங்க. அதை தரிசிக்கலாம்ன்னு குழுவா கிளம்பும்போதே எங்ககிட்ட லிஸ்ட் கொடுத்தாங்க. அதில் 50கும் மேற்பட்ட சித்தர்கள் இருக்குறதா முகவரியோடு இருந்துச்சு. நேரமின்மை காரணமா பல சித்தர் சமாதிகளை தரிசிக்க முடியல. சிலது நாங்க போகும்போது நடையடைச்சுட்டு இருப்பாங்க. அதையும் தரிசிக்க முடியலை. அம்புட்டுதானே தவிர எதுவும் பிளான் பண்ணி போறதில்லை.

   Delete
 5. நல்ல பகிர்வு. சில இடங்களில் வாக்கியங்கள் இரண்டு முறை வருகிறது. சரி பாருங்கள்.

  எத்தனை எத்தனை சித்தர்கள். தொடரட்டும் பயணம் - தொடரட்டும் பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. கவனிக்கவில்லை அண்ணா தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..இன்னும் நிறைய சித்தர்கள் ஜீவ சமாதிக்கு செல்லமுடியவில்லை,விடுபட்ட அவர்களையும் பற்றி எழுதவேண்டும் என்பதுதான் என் ஆசை ,இறையருளும்,குருவருளும் கூடிவந்தால் அதுநடக்கும்...

   Delete
 6. சித்தர் வாழ்க்கை படிக்கும் போதே ஆச்சரியம் தருகிறது.

  ReplyDelete