Saturday, June 13, 2020

அரசு இயந்திரம் இயங்க இந்த 6823 ஸ்பேர் ஸ்பார்தான் காரணம்-சுட்ட படம்

பக்கம் பக்கமா படிக்கும் இம்சையிலிருந்து இன்று விடுதலை... இணையத்தில் வலம் வந்த படங்கள், வீடியோக்களின் தொகுப்பு இது..

வாட்ஸ் அப், யூட்யூப்ல வருவது அத்தனையும் உண்மைன்னு நம்பும் ஆட்கள் இன்னமும் இருக்கத்தான் செய்றாங்க. அதிலும் பேமிலி க்ரூப்பில் ஒரு மெசேஜ் வந்துட்டா அது 200% வெரிஃபைடு... மேல இருக்கும் படத்தில் இருக்கும் படத்தை வாட்ஸ் அப் பேமிலி க்ரூப்பில் வலம் வர அதுக்கு  வாழ்த்துகள்ன்னு பெருசுங்க கமெண்ட் பண்ணுதுங்க. அது நிவேதா பெத்துராஜ்ன்ற நடிகை. விஜய் ஆண்டனியுடன் நடிச்ச  திமிரு பிடிச்சவன் படத்து ஸ்டில்ன்னு நான் எப்படி புரிய வைப்பேன்?!
பொதுவா எனக்கு சாமியார்கள்ன்னாலே அலர்ஜி. அதிலும் தன்னை கடவுள் ரேஞ்சுக்கு முன்னிலைப்படுத்தும் ஆட்கள்ன்னாலே பிடிக்காது. 90களில் புட்டர்பத்தி சாய்பாபா வெகு பிரபலம். அதிலும் அவரது ஹேர் ஸ்டைல் பலராலும் பேசப்பட்டது. அவரது ஆசிரமம், அவர் செய்யும் நற்காரியங்கள்ன்னு கடவுள் இல்லைன்னு சொன்ன கலைஞர் வீட்டுக்கே இவரை போக வச்சது. 90 களில் இவரது கல்லூரியில் படிச்ச பசங்க 2 பேரு துப்பாக்கியும் கையுமா இவரது அறையில் சுடப்பட்டு இறந்தாங்கன்னு அப்ப படிச்சிருக்கேன். அதிலிருந்து இன்னும் பிடிக்காமல் போனது..  ஒரு கைக்குட்டையால் வாய துடைப்பதுப்போல் லிங்கத்தை வாயில் வைக்குறதும், இன்னொரு கைக்குட்டையால் வாய தொடைச்சுக்கிட்டு, சிவலிங்கத்தை எடுக்குற சீன்.. அப்பப்பா! சிவாஜி தோத்துட்டார். பொதுவில் வாந்தி வந்தால் நாம எழுந்து பொடுவோம், இல்ல கவர், பாத்திரத்தில் துப்புவோம். இப்படியா வாந்தி எடுப்போம்?!
தமிழக அரசு எதுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கு பாருங்க. அதுசரி, அரசு இயந்திரம் இயங்க இந்த 6823தான் காரணம்...
ஒத்தரூபா தாரேன்.. ஒனப்பு தட்டு தாரேன்னு குஷ்பு அக்கா ஒரு படத்துல கரகத்தை வச்சிக்கிட்டு பாடும். அதேப்போல சின்ன ஜமீன் படத்துல ஒனப்பு தட்டு புல்லாக்கு வாங்கி தாரேன் ராசையான்னு சுகன்யா கார்த்திக்கை பார்த்து பாடும். வெள்ளித்தட்டு, சில்வர் தட்டு, பீங்கான் தட்டு, பிளாஸ்டிக் தட்டு தெரியும். அதென்ன ஒனப்பு தட்டு?! அது ஒனப்பு தட்டு இல்லீங்க வனப்பு தட்டு... 30 வயசுக்கு மேற்பட்ட ஆளுங்களோட பாட்டிங்க,  காதுல வரிசையா கம்மல் போட்டு பார்த்திருப்பீங்க. அந்த மொத்த கம்மலையும் சேர்த்தாலே 5 பவுன் தேறும். அப்படி காது குத்து ஒன்னொன்னுத்துக்கும் ஒவ்வொரு பேரு. இப்ப அது சுருங்கி கம்மலுக்கு மேல் ஒரு குட்டி கம்மலை நம்ம பிள்ளைக போட்டுக்கிட்டு இருக்கு. அந்த குட்டி கம்மலுக்கு பேருதான் வனப்பு தட்டு. இந்த கம்மலுக்கும், மூக்குத்திக்கும் இடையில் ஒரு செயின் இருக்குற மாதிரி விசேஷங்களில் பெண்கள் அணிவாங்க. அது பெண்களுக்கு வனப்பு கொடுக்கும். வனப்பு தட்டுதான் ஒனப்பு தட்டாகிட்டு... 
போற போக்கை பார்த்தா,  இதுங்க, உங்க லட்சணம் தெரியும்.  எங்களை அத்து விட்ருங்க நாங்க தனி நாடாகி எங்களை நாங்க பார்த்துக்குறோம்ன்னு சொல்லும்போல! இந்த ஐந்தறிவு ஜீவன்கள் அம்புட்டு அறிவோட இருக்குதுங்க. 

இப்ப ஊர்ப்பேரையெல்லாம் தமிழ் படுத்துறேன்னு கொதறி வச்சிருக்கும் ஆளுதான் இதையும் மொழிப்பெயர்த்திருப்பார் போல! உடலுக்கு பல நன்மைகள் செஞ்சதால் அதுக்கு நல்ல எண்ணெய்ன்னு பேரு. எள்ளுக்கு இங்கிலீஷ்ல seasameன்னு பேரு. எள்ளிலிருந்துதான் நல்லெண்ணெய் கிடைக்குறதால் அதுக்கு Seasame oil ன்னு  பேரு. அதுகூட தெரியாம.. இப்படி குதறி வச்சிருக்கானுக...

அதுசரி, எல்லாருமே என்னையப்போலவே புத்திசாலியா இருப்பாங்களா?!

நன்றியுடன், 
ராஜி..


14 comments:

  1. // சிவலிங்கத்தை எடுக்குற சீன்... அப்பப்பா! சிவாஜி... //

    நிறைவாய் பல ஜிவாஜிகள் இன்னும் வலைப்பூவில் உள்ளனர் என்பதை ஏற்கனவே முகநூலில் உங்களுக்கு தெரிவித்தேன் அல்லவா...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. முகமூடி கழண்ட பிறகுதான் நிஜ முகம் தெரிகிறது. ஆனா, அதுக்கு நாம மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்குண்ணே

      Delete
  2. வணக்கம்

    ரசித்துப் படித்தேன் மிக மிக அருமை https://rtamilkavithaigal.blogspot.com/2020/06/blog-post.html?m=1

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
    Replies
    1. ஆன்லைன் வகுப்புன்னு லாப்டாப்பை பிள்ளைங்க பறிச்சுக்குறாங்க. நேரம் கிடைக்கும்போது வருகிறேன் சகோ

      Delete
  3. விலங்குகள் புத்திசாலிகள்

    ReplyDelete
  4. அனைத்தையும் ரசித்தேன். மொபைலில் பார்த்ததாலோ என்னவோ மாடு காணொளி புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. திறந்திருக்கும் குழாயில் மாடு தண்ணி குடிக்குது. குழாயை திரும்ப திரும்ப மூடிட்டாலும் குழாய திறந்து மாடு தண்ணி குடிக்குது

      Delete
  5. பாவம் அந்த மாடு - தண்ணீர் குடிக்க விடாமல் இது என்ன கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. மாட்டின் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கிறாராம்..

      Delete
  6. எல்லாமே ரசித்தேன்.

    துளசிதரன்

    ராஜி எல்லாம் ஓகே ஆனா மாடுதான் பாவம். அது புத்திசாலி என்பதை இப்படி தண்ணிய நிறுத்தி அது திறக்க வைத்து வீடியோ எடுத்துப் ...பாவம்பா

    சென்னைல எங்க வீட்டருகில் இருக்கும் சின்டக்ஸ் டாங்கில் கார்ப்பரேஷன் லாரி தண்ணி நிரப்பி வைச்சு மக்கள் அதுலருந்து குடம் வைத்து எடுத்துக்குவாங்க. அந்த பைப்பை திறந்து மாடு தண்ணி குடிக்கும் நான் வீடியோ எடுத்திருக்கேன். ஆனா பாவம் அது அதுக்குத் திறக்க தெரியும். குடிச்சுட்டு போயிடும் அப்புறம் நான் போய் முடுவேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ம்ம் காக்கா, குருவிக்கு தண்ணி வைக்கும் நாம் தெருநாய், மாடு, ஆடுகளுக்கு தண்ணி வைப்பதில்லை..

      இந்தமுறை நாய்க்கு தண்ணி வைப்பதை வழக்கமாக்கி இருக்கேன்.

      Delete