Thursday, July 02, 2020

பழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்

முன்னலாம்  பாத்திரக்காரருக்கு கொடுத்து, பாத்திரம் வாங்குவது வழக்கம். இப்ப யாரும் அப்படி வருவதில்லை. அதனால் துணிகள் நல்லா இருக்கும்போதே  கொடுத்துடுவேன். சேலை வாங்குமளவுக்கு பேண்ட், சர்ட், பொண்ணுங்க சுடிதார்லாம் யாரும் வாங்குவதில்லை.  இப்பலாம் துணிகள் சாயம் போவதுமில்லை, அதிகம் கிழிவதில்லை. நம் அஜாக்கிரதையால கிழிச்சிக்கிட்டாதான் உண்டு.  

பழைய துணிகளை குப்பையில் வீசவும் மனசில்லாமல் எல்லார் வீட்டிலயும் கப்போர்ட்ல இடத்தை அடைச்சுக்கிட்டிருக்கும்.  பழைய துணியில் நிறைய பொருட்கள் செய்யுறதை யூடியூப்ல பார்த்திருக்கேன். இப்போதைக்கு கால் மிதியடி செய்யத்தான் வருது. வருங்காலங்களில் துணியில் பழக்கூடை, அழுக்கு துணி கூடைலாம் செய்ய கத்துக்கனும்.. எனக்கு குரோஷா பின்னத்தெரியாதவங்ககூட கால் மிதியடி செய்யலாம்..
பழைய புடவையை  கிழிச்சு, மூன்று பாகமா எடுத்துக்கிட்டு, அதை தலைப்பின்னல் மாதிரி பின்னிக்கனும்... 
அப்படி பின்னிக்கிட்டதை நமக்கு பிடிச்ச வடிவில் சதுரம், வட்டம், நீள்வட்ட வடிவில் ஊசி நூலால் கோர்த்துக்கிட்டே வரனும்.. 

காட்டன் புடவை, டி.சர்ட் துணியில் மிதியடி செய்தால் ஈரம் இழுக்கும். நைலான் புடவையில் செய்தா ஈரம் இழுக்காது. ஆனா, அழகுக்காக போட்டுக்கலாம்.
நன்றியுடன்,
ராஜி.

6 comments:

  1. ஏகப்பட்ட தொழில் கைவசம் இருக்கும் போல... வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  2. கொரானா காலத்துல மாமாவோட வருமானத்தை ஈடு கட்டியாச்சு.

    ReplyDelete
  3. கைவண்ணமும் கற்பனையும் மிக அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. சூப்பரா இருக்கு ராஜி/ இதில் இப்படியே டேபிள் மேட்டும் செய்யலாம். காட்டந்தான் நான் பயன்படுத்தியதுண்டு. இப்ப செய்வதில்லை. எல்லாம் பழைய கதை ஹா ஹா ஹா

    கீதா

    நல்ல கைவண்ணம்

    துளசிதரன்

    ReplyDelete