Monday, February 20, 2012

ஐஞ்சுவை அவியல்

 ஆன்மீகம்:
                                  
சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். உமையவள் பூஜித்த இடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  ”தேவிகாபுரம்”.   மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கிய  இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.


   சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

    சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி’ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
                       
குட்டீஸ் குறும்பு:
என் சின்ன பொண்ணு இனியாவுக்கு அப்போ 4 வயசு. பஸ்சுல போய்க்கிட்டு இருக்கும்போது,  எவ்வளவு சொல்லியும் கேட்காமல்   ஜன்னலுக்கு வெளியே கைநீட்டிக்கிட்டு வந்தாள். அப்படி செய்ய கூடாது அப்படி செய்தாள் டிரைவர் அங்கிள் நம்மை திட்டுவார்ன்னு சொல்லி அதட்டுனேன். அவளும் பயந்து தன்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு வந்தாள்.

கொஞ்ச நேரம் கழிச்சு அம்மா அங்கெ பாரு, டிரைவர் அங்கிளெ வெளியே கையை நீட்டி வெளையாடிக்கிட்டு இருக்கார். அவரை யார் திட்டுறதுன்னு, பின்னால் வந்த வண்டியை முன்னால் போக சொல்லி சிக்னல் குடுத்துக்கிட்டு இருந்த டிரைவரை காட்டி கேட்க அருகிலிருந்த கண்டக்டர் உட்பட  அனைவரும் சிரிச்சுட்டோம். 
                        
ஜோக்: 
 என் பொண்டாட்டி பேச ஆரம்பிச்சா பைத்தியம் பிடிச்சுடும், அவ சமையல் வாய்ல வைக்க சகிக்காது. எங்க அம்மா கூட சண்டை போட்டுக்கிட்டே இருப்பா.

 யோவ்..... பாங்க்ல வந்து ஏன்யா இதெல்லாம் சொல்றே.

நம்ம கஷ்டத்தை சொன்னாக்கா பேங்க்ல லோன் குடுப்பாங்கன்னு சொன்னாங்க அதான்.
                              
                                
புதிரோ புதிர்
 திட்டச்சேரியில் எட்டு முட்டு; 
ஒரு முட்டுக்கு எட்டு பனை;
ஒரு பனைக்கு எட்டு பொந்து;
ஒரு பொந்துக்கு எட்டு ஆந்தை;
ஒரு ஆந்தைக்கு எட்டு முட்டை;
ஒரு முட்டைக்கு ஒரு குஞ்சு;
ஒரு குஞ்சுக்கு கால்படி கம்புன்ற கணக்கு படி பார்த்த்தால் எத்தனை படி கம்பு செலவாகும்? நான் கணக்குல பட்டதாரின்னு சர்ட் காலரை தூக்கிவிடுறவங்களாம் விடை சொல்லுங்க. நான் அடுத்த பதிவில் சொல்றேன்.
                             
டிப்ஸ்: 
ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, உணவின் சுவையும் சூப்பராக இருக்கும்.

27 comments:

  1. வெரி டேஸ்ட்டி அவியல் தங்கச்சி. ஏவ்வ்... அடிக்கடி அவியல் வரட்டும்!

    ReplyDelete
  2. ஜோக் உண்மையில் நடந்தது போல இருக்கு ?

    ReplyDelete
  3. சிவனின் கதையில் தொடங்கி கடிக்கேள்வியுடன் முடித்த பதிவு பிடித்திருக்கு.பதில் நாளை சொல்லும் வரை க/கு போட்டுப்பார்க்கலாம்.

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு புதிருக்கு விடை தெரியவில்லை . காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    அடுத்த பதிவில் விடை பார்த்துக் கொள்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சுவைத்தேன் மிக இனிதாய் உள்ளது.......

    ReplyDelete
  7. அவியல்?!!!!!!!!!!!!!!!!!!!!

    ஹி ஹி ஹி

    ReplyDelete
  8. அஞ்சாங்கிளாஸ் படிச்சப்ப அந்த புதிர் டீச்சர் சொல்லிக்குடுத்தாங்க. மறந்தாச்சு அவ்வ்வ்வ்

    ReplyDelete
  9. அவியல் பிரமாதம் ரசித்துப் படித்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. உங்க குட்டீஸ் குறும்புதான் நல்லாப் பிடிச்சுது ராஜி !

    ReplyDelete
  11. ஐஞ்சுவை அவியல் அசத்தல்...எல்லாம் நல்லாயிருந்தது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. ஐஞ்சுவை அவியல் சுவையாக இருக்கு.

    சிவராத்திரி பற்றிய தகவல் அருமை,
    இனியாவின் கேள்வி அசத்தல்.
    புதிருக்கு விடையை நீங்களே சொல்லிடுங்க..

    ReplyDelete
  13. அவியல் ருசியாயிருக்கு..

    ReplyDelete
  14. இந்தப் புதிர் கணிதமேதை ராமானுஜத்திடம் கேட்டபோது உடனடியாகப் பதில்சொன்னதாகப் படித்த ஞாபகம்.

    திட்டச்சேரியில் எட்டுப்பனை
    பனைக்கெட்டு பொந்து
    பொந்துக்கெட்டு ஆந்தை
    ஆந்தைக்கெட்டு குஞ்சு
    குஞ்சுக்கு காற்படி அரிசி என்றால் எத்தனை படியரிசி?

    எல்லாமும் எட்டாகவே வரும். எப்படியாயினும் இதுபோன்ற புதிர்கள் நினைவூட்டல் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நல்ல மூளை இயக்கத்திற்கான பூஸ்ட் போல. அருமை.

    ReplyDelete
  15. அந்த ஜோக் செம சூப்பர். புதிருக்கு பதில் நீங்களே சொல்லிருங்க. உங்க பாப்பா நல்லா யோசிக்கிறா (உங்க சார் மாதிரினு நினைக்கிறேன்)

    ReplyDelete
  16. அந்த ஜோக் மட்டுமல்ல அவியலும் ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  17. ஐஞ்சுவை அவியல் அசத்தல் என்றாலும் அவற்றுள் நகைச்சுவை சற்று தூக்கல். கணக்கிலே புலி இல்லை என்றாலும் புலியைப் பார்த்து சூடு போட்டப் பூனையாகவாவது இருக்கமாட்டோமோ என்ற நப்பாசையில் கண்டுபிடித்தவிடை 8,192 படி கம்பு. சரியான்னு சொல்லுங்க ராஜி.

    ReplyDelete
  18. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்


    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    ReplyDelete
  19. அவியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!இன்னும் கொஞ்சம் போடுங்க!

    ReplyDelete
  20. நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  21. வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
    நன்றி
    சம்பத்குமார்
    மனம் கவர்ந்த பதிவுகள்

    ReplyDelete
  22. ஐஞ்சுவை அவியல் விருந்து சுவை தான்

    ReplyDelete
  23. ஐஞ்சுவை அவியல் அறுசுவையும் மனதில் கொண்டுவந்தது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete