Thursday, February 23, 2012

மெகந்தி பழகலாம் வாங்க...,

எங்க வீட்டுல என்னைவிட நல்லா சமைக்கும் ”அக்கா” இருக்காங்க. என்னைவிட நல்லா பிள்ளைகளை கவனிக்கும்”அண்ணி” இருக்காங்க. பெரியவங்களுக்கு மரியாதை தரும் ”நாத்தனார்” இருக்காங்க. ஆனால், அவங்களுக்குலாம் கைவராத ஒரு விஷயம் எனக்கு சுமாரா  கைவந்திருக்கு.அது என்னன்னா, மெகந்தி போடுறது.

ம்க்கும் ரொம்ப கஷ்டமான விசயம்ன்னு முணுமுணுக்காதீங்க. நான் ரொம்ப சோம்பேறி. எனக்கு எப்படி ஒரு நுணுக்கமான விசயம் கைவந்திருக்குன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு.

இதை கத்துக்கிட்டதால் உனக்கு என்ன லாபம்ன்னு நீங்க நினைக்கலாம். நிஜம்தான் பைசா லாபமில்ல. ஆனால், அதைவிட பெரிய லாபம் ரெண்டு இந்த மெகந்தி போடுறதால எனக்கு கிடைச்சு இருக்கு.


 லாபம் 1: என்கையால் என் பொண்ணுகளுக்கு போட்டு அது  சிவந்து அழகா இருக்குறதுல பார்க்கும் போதும்...,   அக்கா, அண்ணி, நாத்தனார் பிள்ளைகளுக்கு வச்சு விடும்போது தேங்க்ஸ் அத்தை, தேங்க்ஸ் பெரியம்மான்னு சொல்லி முத்தமிடும்போது கோடி ரூபாய் கிடைத்த சந்தோசம். லாபம் 2: பிள்ளைகளுக்கு வச்சுவிடும் சாக்குல வீட்டு வேலைல இருந்து கொஞ்ச நேரத்துக்கு தப்பிச்சுக்கலாம் பாருங்க ஹி ஹி.

உக்காந்த இடத்துலயே தண்ணி கொண்டுவா, காஃபி டம்ப்ளர் கொண்டு போய் வை, லேஸ் பாக்கட்டுல பங்கு குடுன்னு குட்டீஸ்களை மிரட்டி நோகாமல் நோம்பு கும்பிடலாம்.

 
             ( பொங்கலுக்கு பெரிய பொண்ணுக்கு மணிக்கட்டுக்கு கொஞ்சம் மேல  மாங்காய் டிசைன் போட்ட்டு அதை டெவலப் பண்ணி கை முழுக்க வரைஞ்சேன்...,)



                         
(நாத்தனார்  கேட்டபடி உள்ளங்கையில் மட்டும் வருமாறு ஒரு சிம்பிள்  டிசைன்..., ஒரு பூ வரைந்து, அதை ஒட்டி அதே போல் வேற பூ வரைந்து, ஒரு பூவின் மேல் மாங்காய் வரைந்து.., சைடுலலாம் இலை கொடி வரைந்து, விரலுக்கு ஒரு டிசைன் வரைந்து...,)

                                 
                                     
சின்ன பொண்ணு அடுத்த கைக்கு கொடி போல வேணும்ன்னு கேட்டாள். அதேப்போல வரைந்தது...,




அடுத்த கைக்கும் சிம்பிள் டிசைன், அவ விருப்பப்படி...
                               
                               
சின்ன பொண்ணோட ரெண்டு கையிலயும் சிம்பிள் மெகந்தி டிசைன் ....
இது கொசுறு என் கைக்கு நானே போட்டுக்கிட்டது...,
                           

புதுசா மெகந்தி போட கத்துக்குறவங்க ஒரு எக்சாம் பேடுல சதுர வடிவ பாலிதின் பேப்பர் வச்சு நேர்க்கோடு, வட்டம், சதுரம், அ, ஆ.., ஏ, பி, ன்னு கைக்கு வந்ததை போட கத்துக்கோங்க. அப்புறம் சிம்பிள் டிசைன் பென்சிலால வரைஞ்சு பழகுங்க. நல்லா வரைய வந்த பின் குட்டீஸ்களுக்கு போடுங்க. ஏன்னா அப்போதான் நாம தப்பா வரைஞ்சாலும் திட்டாதுங்க அதுக்குதான். ரொம்ப நல்லா வரைஞ்சபின் பெரியவங்களுக்கு போடுங்க. பாராட்டுவாங்க.

 இன்றைய புதிர்: இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
விடை தெரிஞ்சவங்க கமெண்ட்ல சொல்லுங்க. ஆனால், நான் அடுத்த பதிவுலதான் சொலுவேன். போன பதிவுல கேட்ட   திட்டச்சேரியில் எட்டு...ன்ற கணக்கு புதிருக்கு விடை 8192ன்னு கரெக்டா விடை சொன்னது சகோதரி, “கீதமஞ்சரி” மட்டுமே. அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

டிஸ்கி: என் பெரிய பொண்ணு இந்த வருசம் பள்ளி இறுதி ஆண்டு படிக்குறா. அவங்க ஸ்கூல்ல நடந்த ஃபேர்வெல் பார்ட்டில அவ ஃப்ரெண்ட் என் பொண்ணுக்கு எழுதிய கவிமடல் காண இங்கே போங்க...,

27 comments:

  1. ‘கை‘ வண்ணம் அருமைம்மா... பாக்கவே நல்லா இருந்திச்சு. அதுசரி... ஸ்டெப் ஸ்டெப்பா போட்டேர்ஸ் எப்படி? ப்ளானிங்? சூப்பர்.

    ReplyDelete
  2. சுகந்தி முந்தி போட்டுட்டா மெஹந்தி- எப்படி டைட்டில்?

    ReplyDelete
  3. மெஹந்தி டிசைன் எல்லாம் சூப்பர்.மெஹந்தி போடுவது ஒரு நல்ல கலை. உங்களுக்கு அது கைவந்த கலையாக இருப்பது சிறப்பு.

    குழந்தைகளுக்கு மெஹந்தி போட்டு அவங்க சந்தோஷப் படுவதை பார்க்கும் போது நமக்கும் சந்தோஷமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான கை வண்ணம்

    ReplyDelete
  5. சிற‌ந்த ஓவியரின் நுணுக்கமான கைத்திறன் போல இருக்கிறது நீங்கள் மெஹந்தி வரைந்திருக்கும் விதம்! இனிய பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  6. ம்..மெகந்தி..மெகந்தி..
    அருமை போங்க..
    சரி புதிருக்கு விடை நத்தை என்று நினைக்கிறேன் சரியா?

    ReplyDelete
  7. எங்க வீட்டு விசேஷத்தக்கும் வாங்க.

    ReplyDelete
  8. நேர்த்தியான படங்களுடன்
    ஒவ்வொரு ஸ்டெப்பாக விளக்கிப் போனவிதமும்
    கைவண்ணமும் அருமை.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    புதிருக்கு விடை யோசித்துக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  9. உங்களின் 'அழகான மன எண்ணம்' போல கைகளில் வரைந்த 'கை வண்ணம்' குழந்தையின் கைகளை அழங்கரித்தோடு அல்லாமல் அது நெட்டிலும் அழகாக அழங்கரித்துள்ளன. உங்களின் கை வண்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்

    உங்க அக்கா நல்லா சமைகிறங்க....அண்ணி குழந்தைகளை நல்லா கவனிக்கிறாங்க....நீங்க குழந்தைகளுக்கு நல்லா மெகந்தி போட்டு மகிழ்விக்கிறீங்க....அப்ப நெக்ஸ்ட் டைம் இந்தியா வரும் போது என் குழந்தையை உங்க வீட்டில் விட்டு விட்டு போகலாம். சாப்பாடு கவனிப்பு எண்டர்டெய்மெண்ட் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால் அது கண்டிப்பாக சொர்க்கமாகத்தான் இருக்க வேண்டும் அம்மா தாயே நான் இந்தியா வரும் போது உங்க விலாசம் தாங்க நானும் சொர்க்கத்திற்கு போகனும்

    ReplyDelete
  10. பதிவுக்கு நன்றி நானும் முயர்ச்சி செய்து மெகந்தி போடுகிறேன்.....

    ReplyDelete
  11. மதுமதி கூறியது...

    ம்..மெகந்தி..மெகந்தி..
    அருமை போங்க..
    சரி புதிருக்கு விடை நத்தை என்று நினைக்கிறேன் சரியா?
    >>>
    ஹா ஹா நத்தை வேகமா போகாது சகோ

    ReplyDelete
  12. Avargal Unmaigal கூறியது...

    உங்களின் 'அழகான மன எண்ணம்' போல கைகளில் வரைந்த 'கை வண்ணம்' குழந்தையின் கைகளை அழங்கரித்தோடு அல்லாமல் அது நெட்டிலும் அழகாக அழங்கரித்துள்ளன. உங்களின் கை வண்ணத்திற்கு எனது வாழ்த்துக்கள்

    உங்க அக்கா நல்லா சமைகிறங்க....அண்ணி குழந்தைகளை நல்லா கவனிக்கிறாங்க....நீங்க குழந்தைகளுக்கு நல்லா மெகந்தி போட்டு மகிழ்விக்கிறீங்க....அப்ப நெக்ஸ்ட் டைம் இந்தியா வரும் போது என் குழந்தையை உங்க வீட்டில் விட்டு விட்டு போகலாம். சாப்பாடு கவனிப்பு எண்டர்டெய்மெண்ட் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கிறது என்றால் அது கண்டிப்பாக சொர்க்கமாகத்தான் இருக்க வேண்டும் அம்மா தாயே நான் இந்தியா வரும் போது உங்க விலாசம் தாங்க நானும் சொர்க்கத்திற்கு போகனும்
    >>>
    ஓ தாராளமா விட்டு போங்க. நல்லா பார்த்துக்குவோம் உங்க மகளை.

    ReplyDelete
  13. ராஜி....என் சுவிஸ் சிநேகிதி மெஹந்தி போட நிறைய நாளுக்கு முன்னம் கேட்டிருந்தாள்.அவளுக்கு உங்கள் பக்கத்தை அறிமுகப்படுத்தப்போகிறேன்.மிகவும் சந்தோஷப்படுவாள்.நன்றி ராஜி !

    ReplyDelete
  14. தொப்பி மருதாணி ஒரு வகையில் அழகு. மெஹந்தி ஒரு வகையில் அழகு. உங்க கைவண்ணத்தில் குழந்தைகள் கை வண்ணத்தில்! பாராட்டுகள்.

    ReplyDelete
  15. போன விடுகதையில் நான் சொல்லிய விடை சரிதானா? ரொம்ப சந்தோஷமா இருக்கு ராஜி. வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. மெஹந்தி டிசைன்ஸும் படிப்படியா அதை நீங்க மெருகேத்தின விதமும் அழகு.. நல்லாருக்கு.

    ReplyDelete
  17. கைவண்ணம் இங்கு கண்டேன்,உங்கள் சொல்வண்ணமும் இங்கு கண்டேன்!

    இதெல்லாம் கத்து வச்சுக்கறதில எவ்வளவு அனுகூலம் பாருங்க.

    ReplyDelete
  18. சிரமமான ஒன்று உங்களுக்கு எளிதில் வந்திருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. ராஜி !!!!!!! சூப்பரா இருக்குங்க .இங்கே மெஹந்தி போட்டுவிட நல்ல வசூல் .
    மிக நுணுக்கமா வரைஞ்சிருக்கீங்க .பார்ட்டைம் நீங்க இதை செய்யலாமே .
    எனக்கு இப்படியெல்லாம் போடவே வராது அல்ட்டா போட்ட மாதிரி cap தான் போடுவேன்

    ReplyDelete
  20. பதிவும் படங்களும் சூப்பருங்க !

    ReplyDelete
  21. அழகான மெகந்திப் படம் போட்டு செய்யும் முறையும் விளக்கியவிதம் ரசித்தேன்!

    ReplyDelete
  22. ரொம்ப அழக்காக இருக்கு.

    ReplyDelete
  23. ENNODA EMAIL ID KU DESIGNGNS ANUPUNGA

    ReplyDelete
  24. அழகு designs. எங்க வீட்டுல என் தங்கைதான் எல்லோருக்கும் வரைந்துவிடுவா. அவளுக்கு இடதுகையில் மட்டும் தான் வைத்துக் கொள்ளமுடியும், பாவம் :) என் திருமணத்திற்கு கூட அவள் தான் அழகாய் வரைந்தாள்.

    ReplyDelete