Monday, January 07, 2013

திருமணமாம்.., திருமணமாம்...,


                                              
ஒரு சில கல்யாணத்துல போனா, பொன்னூஞ்சல் ஆடுறது, பானைக்குள்ள மோதிரம் போட்டு எடுப்பது, அப்பளம் உடைக்குறது.., தாய் மாமன்கள் சுமக்க மால மாறி கொள்வது.., அப்படி வரும்போது சிக்காம இருக்க போக்கு காட்டுறதுன்னு சொந்தங்கள், நட்புகள், மணமக்கள்ன்னு சந்தோஷப்பட நிறைய விசயங்கள் இருக்கும்.

ஆனா, எங்க சமுதாய  திருமண சடங்குகளில்..,   எல்லாரும் ரசிக்கும்  இந்த சின்ன சின்ன  விளையாட்டுக்கள்  இல்லாம வெறும் .சடங்குகள் மட்டுமே இருக்கும். அது எனக்கு பெரிய குறையாவே இருக்கும்.

இந்த குறையை தீர்க்கத்தானோ என்னவோ.., திருமண சடங்குகள் முடிந்து ”மறுவீடு”ன்னு ஒரு நிகழ்ச்சி இருக்கும். முன்னலாம் திருமணம் முடிஞ்ச மூன்றாம் நாள், ஐந்தாம் நாள்ன்னு வச்ச இச்சடங்கு இப்போ, பசங்களுக்கு ஸ்கூல், பெரியவங்களுக்கு ஆஃபீஸ், போக்குவரத்துன்னு எல்லாத்தையும் மனசுல வெச்சு.., கல்யாணம் முடிஞ்ச மதியமே மண்டபத்துலயே வெச்சிடுறாங்க.

                                       
(சின்ன கவுண்டர் படத்துல வர்ற முத்துமணி மாலை.., பாட்டை மணமக்களை பாட சொன்னாங்க. என் நாத்தனார் வெக்கப்பட்டு பாடலை. ஆனா, மாப்பிள்ளை செமையா பாடி அசத்திட்டார்...,)

கல்யாண பொண்ணுக்கு ஸ்பூன் முதற்கொண்டு, ஃப்ரிட்ஜ், பீரோ, கட்டில், பித்தளை செம்பு சாமான்கள், வெள்ளி பொருட்கள்ன்னு அவங்கவங்க வசதிக்கு தகுந்த மாதிரி சீர் வரிசை வாங்குவாங்க. அப்படி வாங்குபோதே “அரை வரிசை”க்குன்னு தவலையோ, ஒரு டப்பாவோ, இல்ல ஒரு பக்கெட்டோ தங்கள் வசதிக்கு ஏத்த மாதிரி வாங்குவாங்க.

அது எதுக்குன்னா, தங்கள் வீட்டில் பிறந்து, கல்யாணம் கட்டிக்குடுத்து இருக்கும் கல்யாணப் பெண்ணின் மூத்த பெண்பிள்ளைகளுக்காக..,  அது எத்தனை தலைமுறை பெண் இருந்தாலும்.., கணவனையே இழந்திருந்தாலும்..,  அவங்களுக்கு மரியாதை செஞ்சுட்டுதான் கல்யாண பெண்ணுக்கு சீர் வரிசை கொடுப்பாங்க.

ஒரு பாத்திரத்துல, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழம்,  ஸ்வீட், காரம், பொருள்விளங்கா உருண்டை, அதிரசம், காரம்ன்னு போட்டு சீனியாரிட்டி படி குடுத்துட்டே வருவாங்க.  அந்த சீரையும் கல்யாண பொண்ணோட சகோதரகள்தான்  கால்ல விழுந்து கொடுக்கனும்ங்குறது சம்பிரதாயம். அப்போ சீர் கம்மியாருக்கு நான் வாங்க மாட்டேன்ன்னு அத்தை, அக்காக்கள்லாம் செல்லமா சண்டை போடுவாங்க(சில வீட்டில் நிஜமாவே நடக்குங்குறது வேற விஷயம்). அவங்களை சமாதான் படுத்துற மாதிரி சும்மாவே அலம்பல் பண்ணுவாங்க பசங்க.

போன மாசம் எங்க நாத்தனாருக்கு கல்யாணம். அப்போ எடுத்த போட்டோக்கள் சில...,


                                 
கல்யாண பொண்ணோட அத்தைக்கு ”அரைவரிசை சீர்” என் கொழுந்தனார் செய்யுறார்.
                                   
(கல்யாண பொண்ணோட அக்காக்கு மரியாதை.., உடன் பிறந்த சகோதரி இல்ல.., பெரியப்பா மகளுக்கும்கூட சீர்...,)

                                    
(தன் சித்த்தப்பா மகளுக்கு சீர் செய்யும்போது...,)



(கல்யாண பெண்ணுக்கு சீர் செய்யும்போது...,)

இதுதான் எங்க குடும்பம். என் மாமனாருக்கு சகோதரர்கள் 4 பேர். அவங்க பிள்ளைங்க, பொண்ணுங்க அவங்க எல்லாரோட பேரன் பேத்திகள்ன்னு இருக்குற இதுப்போல குரூப் ஃபோட்டோவை என் கல்யாணத்திலிருந்து இன்று வரை மிஸ் பண்ணதில்ல..., பெரிய ஃபேமிலிதான்னு கண்ணு வைக்காதீங்கப்பா. இதுலயே நம்ம தூயா மிஸ்ஸிங்க். என் கொழுந்தனார் மகன், இன்னும் ரெண்டு கொழுந்தனார், அவங்க மனைவிகள்ன்னு சிலர் மிஸ்ஸிங்.


எங்களுக்குள்ளயும், கோவம், சண்டைன்னு இருக்கும்.. ஆனா, இதுப்போல கல்யாணம், காதுகுத்து போன்ற வீட்டு விசேஷங்களில் அதெல்லாம் காணாம போய் எல்லாரும் செம கலகலப்பா இருப்போம். மச்சினன் மனைவிக்கு தலை பின்னிவிடும் ஓரகத்திகள், தம்பி மனைவிக்கு என்ன வேணும்ன்னு கேட்டு ஓடிபோய் கொண்டு வந்து தரும் கொழுந்தனார்கள், மருமகளை உக்கார வெச்சு பரிமாறும் மாமனார்கள்ன்னு எங்க வீட்டு விசேஷம்லாம் செமையா களை கட்டும். அதனாலயே நான் எந்த விசேசத்தையும் மிஸ் பண்றதில்லை. நான் என் புகுந்த வீட்டை ரொம்ப விரும்புறேன். இனி ஒரு முறை பெண்ணாய் பிறந்தாலும் இதே வீட்டில் வாழ்க்கப்படனும்ன்னு வேண்டிக்குறேன்.


20 comments:

  1. அருமை! இது போன்ற விசேசங்கள் நம்மிடையே வேற்றுமை கலைந்து ஒற்றுமை பொங்க செய்கின்றன! உறவுகளின் கேலியும் கிண்டலும் பாசமும் மறக்க முடியாதவை! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. ஓரகத்தி என்றால் யார்?

    ReplyDelete
    Replies
    1. கணவனோட சகோதரர்களின் மனைவிலாம் ஓரகத்தி இல்லன்னா ஓர்ப்படின்னு சொல்வாங்க

      Delete
    2. ஒரகத்தி என்றால் ஒரமாக நின்று கத்துபவர்கள் என்ரு அல்லவா நினைத்தி இருந்தேன்

      Delete
  3. உங்க ஹஸ்பெண்டு படம் இருந்தால் காட்டுங்களேன்!

    [[இனி ஒரு முறை பெண்ணாய் பிறந்தாலும் இதே வீட்டில் வாழ்க்கப்படனும்ன்னு வேண்டிக்குறேன்.]]

    ReplyDelete
    Replies
    1. கீழ பச்சைக் கலர் சட்டை போட்டிருக்கும் பாப்பா பின்னாடி உக்கந்திருக்கும் ப்ளூ கலர் முழுக்கை சட்டை போட்டவர்தான் எனக்கு வாழ்க்கைப்பட்ட அப்பாவி

      Delete
    2. அப்பாவி என்பதால்தான் அவரை தரையில் உட்கார வைத்திருக்கிற்றிர்களோ?

      Delete

  4. //மாப்பிள்ளை செமையா பாடி அசத்திட்டார்..////
    மாப்பிள்ளைக்கு பாடுவதற்கு இதுதான் கடைசி சான்ஸ் அதுனாலதான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டார் என நினைக்கிறேன். கல்யாணத்திற்கு அப்புறம் பாடப் போவது பெண்தானே குரல் நல்லா இல்லையென்றாலும் கேட்க வேண்டியது மாப்பிள்ளையின் பாடு..


    மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாப்பிள்ளைக்கு வருங்காலத்தில் மணமகள் பாடு பாட்டை எப்படி வலி வராமல் கேட்பதற்கு டிரெய்னிங்க் வேண்டுமானால் நான் செல்வில்லாமல் தர நான் தயார்

    ReplyDelete
  5. உங்க குடும்ப போட்டோவில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக தெரிகிறதே......

    ReplyDelete
  6. ஒ......அப்படியா என் கல்யாணம் எல்லாம் அப்படியெல்லாம் நடக்கலை....உங்க பதிவை படித்த பின் ஆர்வமாக இருக்கிறது. முடிந்தால் பொண்ணு பார்த்து வைக்கவும்...ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலிருந்து நாலாவது வீட்டுல 64 வயசு முதிர்கன்னி இருக்காங்க. ஓக்கே வா?

      Delete
  7. பதிவு நன்றாக உள்ளது.
    இனிய நல்வாழ்த்து.
    என்ன ராஜி ரெம்ப பிசியோ!
    அந்தப் பக்கமே காணோமே!
    நல்வரவு!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. happy new year.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  9. vaazhka valamudan....


    enathu manamaarntha vaazhthukkal sako....

    ReplyDelete
  10. ஒரு திருமண வைபவத்தை நேரிலேயே
    காட்டிவிட்டீர்கள் சகோதரி...

    ஆயிரம் கசப்புகள் இருந்தாலும்
    எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு
    நிகழ்ச்சி நல்லமுறையாக நடக்கவேண்டும்
    என்ற எண்ணத்துடன் அனைவரும் கூடி
    நடத்தும் வைபவம் இந்தத் திருமணம்...
    கூச்சல்..சந்தோசம்...கடுப்பு..ஆரவாரம்..
    அங்கலாய்ப்பு இப்படி அவர் அவர்களுக்கு
    ஏற்றார்போல வாய்ப்பாக அமையும்
    உணர்வுகள் அங்கே வெளிப்படும்...
    உண்மையிலேயே இவ்வளவு பெரிய குடும்பத்தை
    பார்க்க மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது பா...

    வாழிய மணமக்கள்...

    ReplyDelete
  11. மிக அழகாக கல்யாண சடங்குகளைப் பற்றி விவரித்திருக்கீங்க ராஜி.
    ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும் நாள்,கிழமைகளில் ஓன்று சேர்ந்து இருப்பதுதான் நம் நாட்டின் சிறப்பு.மிக அருமையாக சொல்லியிருக்கீங்க..

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நல்ல குடும்பம் அமைவதும் ஒரு கொடுப்பினைதான்மா. நினைவுகளை அழகா புகைப்படங்களோட எங்களுக்கு பகிர்ந்தது அருமை. மிக ரசித்தேன்.

    ReplyDelete
  13. சுவாரஸ்யம்... வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
  14. ஆஹா கல்யாணம்கற ரேஞ்சில கல்யாணங்கள் நடக்கின்றன.அற்புதமான குடும்பம். வளமாக வாழுங்கள் ராஜி. அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete