Saturday, January 04, 2014

விஜய் டிவிக்கு நன்றி! - கேபிள் கலாட்டா

ரசித்தவை:
முகப்புத்தகத்தில் ரசித்தவற்றை கேப்டன் டிவில தொகுத்து வழங்குறாங்க. அதுல ஒரு வீடியோவுல பரபரப்பான ரோட்டுல பெரிய மரம் ஒண்ணு விழுந்துடுது. மழை பெய்யுது. கார், பஸ், லாரி, சைக்கிள்ன்னு எல்லா வாகனமும் நின்னுட்டு, பெரிய டிராஃபிக் ஜாம் ஆகிடுது. ஓட்டு வாங்கி நாட்டை காப்பாத்த வேண்டிய அரசியல்வாதி சலிச்சுக்கிட்டு தன் கார்ல இருந்து இறங்கி, தன் அதிகாரத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தி வேற காரை வைரவைக்குறார். இறங்கி வேலை செய்ய வேண்டிய காவல்துறையும் ஜீப்புல உக்காந்து தூங்குது. பஸ்சுல, கார்ல உக்காந்திருக்குறவங்க சலிச்சுக்குறாங்க. வண்டில, சைக்கிள்ல இருக்குறவங்க டீக்கடையில ஒதுங்கி மழைக்கு இதமா டீக் குடிக்குறாங்க.

ஸ்கூல் விட்டு வரும் ஏழெட்டு வயது பையன், புத்தகப்பையை கீழப் போட்டுட்டு அந்த மரத்தை தள்ளப் பார்க்குறான். சுத்தி இருக்குறவங்கலாம் நமுட்டு சிரிப்போடு அந்த பையனை ஏளனமா பார்க்குறாங்க. அவனைப் பார்த்து அங்க ரோட்டுல விளையாடிக்கிட்டிருந்த மத்த பசங்க ஒடி வந்து தள்ளப் பார்க்குதுங்க. அடுத்து தன் காதலனை துரத்தி விடுறா ஒரு மாடர்ன் பொண்ணு. ஒவ்வொருத்தரா சேர்ந்து அந்த மரத்தை தூக்கி தூரப்போட்டுடுறாங்க. அவங்க உழைப்பையும், விடாமுயற்சியையும் பார்த்து இயற்கையே வழிவிட்ட மாதிரி மழை நின்னு சூரியன் வெளிவருது. எல்லோரும் அந்தப் பையனை தூக்கி கொண்டாடுறாங்க. விடாமுயற்சி, உழைப்பு, ஒற்றுமையை எடுத்துச் சொல்லும் க்ளிப் நல்லா இருந்துச்சு.


விஜய் டிவி நீயா!? நானா!?வை ஆரம்பக் காலக்கட்டத்துல விடாம பார்த்துட்டு இருந்தேன். ஆனா, சமீபக்காலங்களில் நிகழ்ச்சியை பார்க்குறதையே தவிர்த்துட்டேன். ஆங்கில புத்தாண்டு அன்னிக்கு சேனல் மாத்திக்கிட்டு வரும்போது தற்செயலா நீயா!? நானா!?வைப் பார்க்க நேர்ந்தது. வந்தது வந்துட்டோம். என்ன தலைப்புன்னு பார்த்துட்டு போலாம்ன்னு பார்த்தா நீயா!?நானா!? அவார்ட்ன்னு தலைப்பு. சரி சினிமா, குத்துப்பாட்டு, சண்டைக்குதான் அவார்டுன்னு சேனல் மாத்த போகும்போது அறிவிக்கப்பட்ட விருதுகள்லாம் வித்தியாசமாய் இருக்கவே பிள்ளைகளையும் பார்க்க வச்சேன். 

ஃபேஸ்புக்குல நாம அப்லோட் பண்ணுற படத்தை யார் வேணுமினாலும் அழிக்கலாம்ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதை, மார்க்குக்கு சுட்டிக்காட்டி அப்படி அழிக்க முடியாத மாதிரி செட்டிங்க்ஸ் மாத்தி 8 லட்சம் பரிசு வாங்குன தமிழகத்தை இளைஞர், கல்வி மறுக்கப்பட்ட மளிகைக்கடைக்காரர் ஒருத்தர் நடத்த ஆரம்பிச்ச ஸ்கூல், எழுத்தாளர் பாரதிதம்பி, தலித் பெண்களின் பிரச்சனைக்காக ஓங்கி குரல் கொடுக்கும் சமூக சேவகி, நீச்சல் போட்டியில் சாதித்து வரும் “தலைவாசல் விஜய்” அவர்களின் மகள், இந்திய டாப் 10 ஹோட்டல்களில் ஒன்றான, பாரீஸ் கார்னர்ல நடைப்பாதையில் இயங்கி வரும் ஒரு தாய்லாந்து உணவம், போலியோவினால பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் இருந்தவாறே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாசம் 20லட்சம் சம்பாதிப்பவர் என விருது வாங்கியவர்கள் அனைவரும் சாமானியர்களே! வருச ஆரம்பத்துல ஒரு நல்ல நிகழ்ச்சி பார்க்க வைத்த விஜய் டிவிக்கு நன்றி!

ஆச்சர்யம்:
ஜி தொலைக்காட்சியில் குஷ்பூ தொகுத்தளிக்கும் நம்ம வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. டைட் ஜீன்ஸ், ஷர்ட், மிடில தலைவிரிச்சுப் போட்டுக்கிட்டு வராம அழகா தலைவாரி குஞ்சலம் நெத்திச்சுட்டி வச்சு, பாவாடை தாவணி கட்டி அழகா வந்தாங்க.  முதல் சுற்று ”தமிழ் பேசு” ஆங்கில கலப்பில்லாம ஒரு நிமிசம் தமிழ் பேசனும். ரெண்டாவது சுற்று “கண்டுபிடி கண்டுபிடி”. வழக்கம்போல திரைக்குப்பின்னே மறைந்திருக்கும் பிரபலத்தை கண்டுப்பிடிப்பது. மூணாவது சுற்று “திறந்திடு சீசே”. பல சாவிகளில் பெட்டிக்குண்டான சாவியை குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுப்பிடித்துவிட்டால் பெட்டிக்குள் இருக்கும் பொருள் கண்டுப்பிடிப்பவருக்கே. நாலாவது சுற்று பத்து நொடி காட்டப்படும் விடியோ க்ளிப்பிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லனும்.


ஆர்வம்:
30 டூ 40 காலக்கட்டத்து ஆளுங்கலாம் தவறாம தங்களோட சின்ன வயசுல ஒவ்வொரு ஞாயிறு மதியம் 1.15 மணிக்கு டிவி முன் ஆஜர் ஆகிடுவாங்க.  காது கேளாதவருக்காக ஒருவர் நியூசை ஆங்கிலத்தில் படிக்க, ஒரு அம்மா சைகை மொழியில் அதை சொல்லிக்கிட்டே வருவாங்க. அப்பத்தி ஆளுங்களுக்கு சூரியன், நிலா, மழை, இலங்கை, பாகிஸ்தான், ரயில்களுக்கெல்லாம் எப்படி ஆக்ட் பண்ணுறதுன்னு இன்னிக்கும் நல்லாவே தெரியும். அதுப்போல இப்ப புதிய தலை முறை சேனல்ல தினமும் சாயங்கால நேரத்துல போடுறாங்க. சொல்லும் மொழிப் புரிந்தாலும், அவங்க சைகைப் பாஷைக்காகவே நிகழ்ச்சிப் பார்க்குறேன்.

எரிச்சல்:
சாயந்தர நேரத்துல சும்மா இல்லாம சேனல் மாத்திக்கிட்டு வரும்போது பிள்ளைநிலா சீரியலை பார்க்க நேர்ந்தது. நிலான்ற பத்து வயசு அம்மா யாருக்கோ பத்து லட்சம் காசு கொடுக்கனும் போல! அவங்க வந்து நிலா அம்மாக்கிட்ட சண்டைப் பிடிக்க, நிலா அம்மா எப்படி பைசா திருப்பி தருவதுன்னு தெரியாம முழிக்க, பத்து வயசு பொண்ணு நிலா, ”இன்னும் ஒரு வாரத்துல உங்க பணம் உங்க கைக்கு வரும். அதுக்கு நான் பொறுப்பு”ன்னு சவால் விடுது. அதைக்கேட்ட கடன் கொடுத்தவங்களும் சரின்னு போய்டுறங்க. பத்து வயசுப் பொண்ணு எப்படி பத்து லட்சம் பணத்தைப் புரட்டும். என்னதான் குழந்தைகளை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் இப்படியா!? 



10 comments:

  1. அந்த வீடியோ நல்லா இருந்தது... சைகைப் பாஷை பார்க்க வேண்டும்...

    எப்படி இத்தனை நிகழ்ச்சிகளும் பார்க்க நேரம் கிடைக்கிறது சகோ....?

    ReplyDelete
  2. நானும் நீயா நானா பார்த்தேன் அருமை

    ReplyDelete
  3. New year அன்னிக்கு TV யே போடலை. பசங்க எல்லார் விட்டுக்கும் போய் wish பண்ணி கொண்டாடினோம்.இனி 2மணி நேரம் TV பார்ப்பது 1 மணி நேரம் TV பார்ப்பது என முடிவு பண்ணி இருக்கோம். so no tension

    ReplyDelete
  4. விடா முயற்சி, ஒற்றுமை தாங்கள் கூறிய சிறிய தொகுப்பினை நானும் பார்த்தேன் சகோதரியாரே
    அருமை உண்மை

    ReplyDelete
  5. சைகை பாஷை நானும் அவ்வப்பொழுது பார்ப்பதுண்டு... இதனுடன் சேர்த்து புதிய உலகம் தொலைக்கட்சியில் காலை 7.30க்கு போடும் பேப்பர் தோசை நிகழ்ச்சி முடிந்தால் பருங்கள்... அது ஒரு செய்தி நிகழ்ச்சி வித்தியாசமான வடிவில்... :)

    ReplyDelete
  6. ஆக மொத்தத்துல, நீங்க வீட்டில வேலையே பார்க்கிறது இல்லைன்னு தெரியுது.!!!!!!!!!!

    ReplyDelete
  7. டிவி நிகழ்ச்சி தொகுப்பு நன்றாகவே இருந்தது.. நீயா நானா பார்த்தேன். நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

    ReplyDelete
  8. விஜய் டிவி நீயா!? நானா!?வை ஆரம்பக் காலக்கட்டத்துல விடாம பார்த்துட்டு இருந்தேன். ஆனா, சமீபக்காலங்களில் நிகழ்ச்சியை பார்க்குறதையே தவிர்த்துட்டேன்

    naanum same

    ReplyDelete