Wednesday, May 06, 2015

நாயக்கர் மஹால் ஒலி - ஒளி காட்சி -மௌனசாட்சிகள்

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி  நாயக்கர் மஹாலின் அழகை பகலில் மட்டும் பார்த்து  ரசிச்சோம். ஆறு மாசமனதால மறந்திட்டிருப்பீங்க. அதனால ஒரு எட்டு போய் பாகம் 1, பாகம் 2  பார்த்துட்டு வந்துடுங்க.

என்ன சுத்தி பார்த்துட்டு வந்தாச்சா!?  இனி, இரவின் நிசப்தத்தில் வண்ண வண்ண விளக்கு ஒளியில் பார்த்து ரசிக்கலாம்.  இந்த இரவு காட்சியானது ஆங்கிலத்திலும், தமிழிலும் நடத்தப்படுகிறது.  முதல் காட்சி 6.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. அது ஆங்கில மொழியில் நடத்தப்படுது.   பள்ளிக்கூட குழந்தைங்க கூட நிறையப்பேர்  வந்துகிட்டு இருக்கிறாங்க. நாமும் வேகமா போய் அவங்களோடு சேர்ந்து ரசிக்கலாம். இப்ப காட்சி தொடங்கபோறாங்க. வாங்க! வாங்க!! 
முதலில் நாயக்க மன்னகர்களின் வரலாறு சொல்லப்படுகிறது. அதுவும் சரவுண்ட் சவுண்ட் எபெக்டில் விளக்குகள் மாறிமாறி எரிகின்றன.  இனிய தமிழ் கிளாசிகல்   பாடல்கள் இசைக்கப்படுகின்றன.  
வலப்பக்க தூண்கள்லாம் வண்ண விளக்குகளால் மின்னுகின்றன. கூடவே கர்நாடக சங்கீதத்தில் கீர்த்தனைகள் ஒலிக்கப்படுகின்றன.

திடீரென வலபக்க தூண்கள் எல்லாம் மறைந்து இடபக்க தூண்கள் மின்னுகின்றன. உடனே குதிரை ஓசையும், மன்னர் வரவும் ஒலி வடிவில் இசைக்கப்படுகிறது.
எல்லா விளக்குகளும் அணைத்து சிம்மாசனம் இருக்கும் இடத்தை மட்டும் ஒளி வெள்ளத்தில் பிரகாசிக்க வைக்கின்றனர் 
மன்னர் சிம்மாசனத்தில் அமர  நாட்டியப்   பெண்கள் நாட்டியமும், மக்களின் கோஷமும், மன்னர் வாழ்க! மன்னர் வாழ்க!! என கோஷமிடும் போது சிம்மாசனம் தனியாகவும்  ஒளிர்கிறது.
எல்லா விளக்குகளும் அணைய சில தூண்களில் மட்டும் வண்ண விளக்குகள் நாயக்க மன்னரின் கதை பின்னணிகளோடு விவரிக்க படுகிறது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்விளக்குகளின் வர்ண ஜாலங்கள் நம்மை வியக்க வைக்கின்றன   
நாம் பகலில் பார்க்கும் காட்சியைவிட இரவில் நாயக்கர் மஹால் அழகாக மின் விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது 
தூரத்தே இருக்கும் தூண்களில் மட்டும் விளக்கு எரியவிடபட்டு மன்னரின் புகழை சரவுண்ட் சிஸ்டம் முறையில் ஒலிக்கின்றனர் அது கேட்பதற்கு நன்றாக இருந்தது 
இங்கே கதைகள் சொல்வதை  விட விளக்கு ஒளிகள் தான் நிறைய காட்சிகளை  கதைகளாக பேசுகின்றன
நாட்டிய மங்கையர் நடனமாடுவதும் பாடல் ஒளிபதுமாக தூண்களின் பின்னே இருந்து விளக்கு ஒலியுடன் சப்தம் வருகிறது
தாங்கள் மட்டும் பிரகாசமாக ஆனால் நிகழ்சிகளில் எதிபார்த்த அளவு பிரகாசம் இல்லை நிகழ்சிகளின் கோர்வை ஒருவித சலிப்பு தன்மையை உருவாக்குகிறதுகிறது
ஆவலுடன் கண்டுகளித்த பள்ளிகுளைந்தைகள் கூட பதியிலேயே எஸ்கேப் ..நமக்கும் தான் ஆனா பதிவாக இடவேண்டுமே என்ற பொறுமை கடைசிவரை சீட்டில்  கட்டிபோட வைத்துவிட்டது
இப்பொழுது பலவிதமான  தொழில்நுட்டபங்கள் வந்து விட்டது 3ட் தோழில் நுட்பங்கள் வந்துவிட்டன அதற்கேற்றமாதிரி காட்சிகளை மாற்றம் செய்யலாம் .
இருந்தாலும் அந்த ஒளிபின்னணியில் சொல்லப்படும் கதைகளும் பாடல்களும் இனிமையாகவே இருக்கின்றன
ஒருவழியாக ஒளி ஒலி காட்கள் நிறைவடைந்தது நம்முடைய நாயக்கர் மஹால் பதிவும் நிறைவடைந்தது
மீண்டும் மற்றுமொரு வரலாற்று முக்கியமான ஒரு இடத்திலிருந்து மௌன சாட்சிகள் பதிவில் மூலம் அடுத்த வாரம் சந்திக்கலாம் ...

11 comments:

  1. படங்கள் அனைத்தும் பிரமாதமாக உள்ளது சகோதரி...

    ReplyDelete
  2. நாயக்கர் மஹால் வித்தியாசமான கோணத்தில் ..படங்கள் அருமை ...

    ReplyDelete
  3. ஆகா, இது சூப்பர் தான். நான் இதுவரை பார்த்தது இல்லை. புகைப்படங்கள் அத்துனையும் அருமை. எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முன்பிருந்தே இந்த காட்சிகள் நடக்கின்றன ஆனால் பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்தபிறகும் அவர்கள் அரைத்தமாவையே அறைபதுதான் போரடிக்கிறது ..

      Delete
  4. நான் பகலில் கண்டு இருக்கிறேன் சகோ. இரவில் உங்கள் மூலமாக பார்த்து விட்டேன். புகைப்படங்கள் அருமை. நன்றி சகோ. தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..நிறைய போடோஸ் இருக்கு ஆனால் எழுதுவதற்கு விஷயங்கள் இல்லாததினால் குறைவான போடோக்களே இங்கே பதிவேற்றம் செய்ய முடிந்தது

      Delete
  5. சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் பார்த்தது! இப்போதும் மாற்றங்களோ, தொழில் நுட்ப முன்னேற்றமோ இல்லை என்றால் சோகம்தான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ ..பார்வையாளர்களை கட்டிபோடும் விதமாக இருக்கவேண்டும் நிகழ்சிகள் ஆனால் அவ்வுளவு ஆவலாக வந்த ஸ்கூல் பிள்ளைகள் நிகழ்ச்சியின் வேகத்தை கண்டு பாதியிலேயே எஸ்கேப் ஆகிவிட்டன

      Delete
  6. ஜெட் வேகத்தில் கிளம்பி காற்று போன பலூனாய் நிகழ்ச்சி தோய்கிறது என உணரவைக்கிறது உங்கள் பதிவு:)) சூப்பர் க்கா!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ..மைதிலி ..அதன் பிறகு என்ன எழுதுவது என விஷயம் இல்லை படங்கள் மட்டும் தான் கதை சொல்லவேண்டும் ..

      Delete