Saturday, April 01, 2017

ஏப்ரல் ஃபூல் ஏமாந்த ஃபூல் - முட்டாள் தினம்

மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றுக்கும் தினம் ஒதுக்கி கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாத்துவதையே பழக்கமாய் வைத்திருப்பவர்களுக்காக ‘முட்டாள்கள் தினம்’ கொண்டாடப்படுது. குழந்தைகளால் பெரிதும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் இந்நாள்.முன்பு  ஏப்ரல் 1 அன்று, காலை முதல் மாலை வரை இத்தினத்தை கொண்டாடினர். பின்னர் மதியம் வரை கொண்டாடினர். இந்த மாதம் முழுக்க பிள்ளைகள் கொண்டாடி வருகின்றனர்.
பிரான்சில் முட்டாள்கள் தினத்தன்று ஏமாறுபவர்களின் முதுகில் காகிதத்தில் செய்த  மீனை அவருக்கு தெரியாமல் ஒட்டி  ‘ஏப்ரல் பிஷ்’ என்றழைத்து கிண்டல் செய்வர்.  கனடா, ஆஸ்திரேலியா, சைப்ரஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் வெகுவாய் கொண்டாடப்பட்டு வருது. இந்தியாவில் இப்படி கொண்டாடும் பழக்கமில்லையென்றாலும் மேல்நாட்டு கலாச்சார தாக்கத்தால் இங்கும் கொண்டாடப்படுது. 
இதுமாதிரியான ஒரு தினத்தை கொண்டு வந்ததில் ’பாஸ்வெல்” என்பவருக்கு முக்கிய பங்குண்டு. சில பழங்குடி மக்கள் இத்தினத்தை வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாய் சூரியனை வழிப்பட்டு கொண்டாடப்பட்டனர். பண்டைய காலத்தில் ரோமானியர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தினை ஏப்ரல் 1 தேதிதான் கொண்டாடி வந்தனர். ஐரோப்பிய  நாடுகளும் ஏப்ரல் 1 தேதியில்தான் புத்தாண்டை கொண்டாடினர். 1562ஆம் ஆண்டு கிரகோரி என்ற போப்’ஜார்ஜியன்’ என்ற காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஏப்ரல் 1 க்கு பதில் ஜனவரி 1 தான் புத்தாண்டு தினமாய் குறிக்கப்பட்டு, இனி புத்தாண்டை ஜனவரி 1 தான் கொண்டாடப்படவேண்டுமென உத்தரவிட்டார். 

இங்கிலாந்தில் இந்த மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு ஏப்ரல் 1யே புத்தாண்டு தினமாய் கொண்டாடினர். மேலும் போப் பின் உத்தரவு போய்ச் சேராத நாடுகள் ஏப்ரல் 1ஐ புத்தாண்டாய் கொண்டாடினர்.  பழைய காலண்டர் முறை மாறி புது காலண்டர் முறை வந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாடுபவர்களை முட்டாள்களென  கிண்டல் செய்தனர்.  காலப்போக்கில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமானது. 
நம்மூர்ல சட்டையில் இங்க் அடிப்பது, காலுக்கு கீழ் பாம்பு இருக்கு, இன்னிக்கு ஸ்கூல் லீவ்ன்னு முட்டாள்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். எது எப்படியோ எப்பயாவது முட்டாளாக ஏமாறுபவர்களுக்கு இத்தினம் ஒரு கொண்டாட்டதினம். அனுதினமும் ஏமாறுபவர்களுக்கு?! இந்நாளும் மற்றொரு நாளே!
ராஜி 

5 comments:

  1. சித்திரை முதல் நாள்

    முட்டாள் நாள் (ஏப்பிரல் பூல்) என்கிறாங்க

    மாற்றாரை முட்டாளாக்கத் தான் என்று

    முயற்சிகள் பல எடுக்கிறாங்க - அதற்கு

    மூளை வேலை செய்யிற அளவுக்கு

    தன் வாழ்க்கையில் தான் முன்னேற

    மூளை வேலை செய்யிறதாக

    எனக்குத் தெரிய வில்லையே!

    ReplyDelete
  2. தினம் தினம் எதாவது ஒரு விதத்தில் ஏமாற்றப்படுகிறோம்... ஏமாற்றுகிறோம்... இதில் ஏப்ரல் பூல் என்பதற்கு தனி தினம் வேறு....
    நல்ல பகிர்வு அக்கா...
    அந்த லிப்ட்.... ஹா...ஹா....

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள். ரசிக்க ஒருநாள்!

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு. லிஃப்ட் காணொளி - :)

    ReplyDelete
  5. காணொளி ரசித்தேன். முட்டாள் தினம் பற்றி புதிய செய்திகளை அறிந்தேன்.

    ReplyDelete