Tuesday, July 25, 2017

ரவா லட்டு - கிச்சன் கார்னர்

ஆண்களுக்கு பொண்டாட்டியை புடிச்சாலும்கூட புடிச்சிடும். உப்புமாவை மட்டும் பெரும்பான்மையான ஆண்களுக்கு பிடிக்காது. உப்புமாவைதான் பிடிக்காது. ஆனா, உப்புமா செய்ய பயன்படும் ரவைல பாயாசம், பணியாரம், தோசை, இட்லி, பொங்கல், லட்டு.....ன்னு எத்தனை எத்தனையோ செய்யலாம்.  அதுலாம் எல்லாருக்கும் பிடிக்கும்.....

கோதுமை, அரிசி, மக்காச்சோளத்திலிருந்துதான் ரவை கிடைக்குது. இதோட ஆங்கில பெயர் செமோலினா. இத்தாலி மொழில இருந்துதான் இந்த பேர் வந்துச்சு. செமோலினான்னா தவிடுன்னு அர்த்தம்.  இந்தியா, பாகிஸ்தான், நேபாளில் சுஜின்னு சொல்லப்படுது. கோதுமையை சுத்தம் செய்து ஒருநாள் முழுக்க வேந்நீரில் ஊற வைத்து பின் குளிரச்செய்து நீரில்லாமல் மெஷினில் இட்டு கோதுமையின் மேற்பாகம் உடைக்கப்பட்டு ரவையாக்கப்படும். உள்ளே இருக்கும் பகுதி மைதாவாகப் பிரிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியில் உள்ளது ஆட்டாவாக வெளிவரும். ‘க்ளூடன்’ அதிகம் இருக்கும் பகுதி தான் மைதாவாக வரும். அதனுடைய வெண்மை நிறம் கிடைக்க பல கெமிக்கல் கலக்கப்படுது.  கோதுமையின் எந்த பகுதியும் வீணாவதில்லை. கோதுமைத் தவிடும்  பிஸ்கெட் தயாரிக்கவும், கால்நடைகளுக்கு தீவனங்களுக்காகவும் வாங்கிச் செல்லப்படுகிறது. .

ரவையில் நாரச்சத்து, இரும்புச்சத்து, புரதசத்து, மாவுச்சத்து இருக்கு.   இதில் குறைந்தளவு கலோரி இருக்கு. உடல் எடையை குறைக்க நினைக்குறவங்க ரவையை பயன்படுத்தலாம்.ரவையை  வெண்மையாக்க பல கெமிக்கல் சேர்க்குறாங்க. அதனால சம்பா கோதுமை ரவையை பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. நம்மூர்ல அரிசியை உடைத்து ரவையாக்கி வச்சு உப்புமா செய்து சாப்பிடும் பழக்கம் இருந்துச்சு... கால ஓட்டத்தில் அதுலாம் மறைஞ்சு போய் கண்டதையும் வாங்கி தின்னு ஆரோக்கியத்தை கெடுத்துக்குறோம். 



ரவை லட்டு செய்முறை...
ரவை 
சர்க்கரை
ஏலக்காய் பொடி
முந்திரி
திராட்சை
நெய்
பால்


வாணலில நெய் ஊத்தி காய்ஞ்சதும் முந்திரி, திராட்சை போட்டு சிவக்க விடுங்க.. கூடவே இன்னொரு அடுப்புல பாலை காய்ச்சிக்கோங்க.. அடுப்பை அணைச்சுடாம சிம்மிலேயே இருக்கட்டும்


ரவையை கொட்டி வறுக்கவும்.... ரவை நிறம் மாறாம இருக்கனும்.


ஏலக்காய் பொடியை சேர்த்துக்கோங்க.... ரவைக்கு சமமா சர்க்கரையை கொட்டி லேசா சூடுப்படுத்திக்கோங்க...

வறுத்த ரவை, சர்க்கரை கலவையை தட்டுல கொட்டிக்கோங்க.  ரவை சூடா இருக்கும்போதே பாலை கொஞ்சமே கொஞ்சமா சேர்த்து சூடா இருக்கும்போதே உருண்டை பிடிச்சுக்கோங்க.

சீக்கிரமா உருண்டை பிடிச்சு வைங்க. ரவை ஆறிட்டா அப்புறம் உருண்டை பிடிக்க வராது. 


கொஞ்சம் ஆறினதும் மீண்டும் நல்லா அழுத்தி உருண்டை பிடிச்சுக்கோங்க. ரவா லட்டு ரெடி. இதுல டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக்கலாம். கலர் கலரா இருக்குறதால சின்ன பிள்ளைங்க  விரும்பி சாப்பிடுவாங்க... பால் சேர்த்திருக்குறதால அதிகப்பட்சம் ஒரு வாரம்தான் வரும். ஃப்ரிட்ஜ்ல வச்சா கூடுதல் நாள் வரும். 

எனக்கொரு டவுட்... உயிர் போக்கும் துப்பாக்கி ரவைக்கும், இந்த ரவைக்கும் என்ன சம்பந்தம்?! ஏன் இந்த பேரு வந்துச்சு?!ன்னும் சொல்லிட்டு போங்க...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...


நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. என்னமா! உன் வலைவழி தவறாமல் வருகிறேன் இலட்டு மாதிரி ஓட்டுப் போடறேன் ஆனால் நீங்கள்
    என் வலைவருதில்லை ஓட்டும் போடுவதில்லை!இது முறையா? த ம 2

    ReplyDelete
    Replies
    1. நாளை வரை என்னை விட்டுடுங்கப்பா. நாளையோட அம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு போற வேலை இல்ல. அப்புறம் தொடர்ந்து வருவேன்...

      Delete
  2. சென்ற ஐஞ்சுவை பதிவுக்கு வாக்களிக்கவே முடியவில்லை ,ரவா லட்டுக்கு, லட்டுமாதிரி உடனே வாக்கு விழுந்து விட்டதே :)

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் விட்ட வழி

      Delete
  3. நான் வாக்கை வாக்கால் கேட்க மாட்டேன். வந்தால் வரவு இல்லாவிட்டால் பரவாயில்லை ரகம் பதிவு பகிர்வுக்கு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. அவங்க சும்மா கலாய்க்க்குறாங்க சகோ. உங்க பதிவுக்கு வரக்கூடாதுன்னு இல்ல. நான் கூகுள் பிளஸ்ச்ல அதிகம் புழங்குறதில்ல. அதான் உங்கூட்டுக்கு வர முடில

      Delete
  4. ரவா லட்டு - எனக்கும் பிடிக்கும்! கொஞ்சம் தில்லிக்கு அனுப்பி வைக்கறது!

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிட்டா போச்சு. அட்ரஸ் சொல்லுங்கண்ணே

      Delete
  5. நல்ல பதிவு........பிரெஞ்ச் பாசையில இத சிமுள்ன்னு சொல்லுவாங்க.(Semoul)

    ReplyDelete
  6. சுவையான பதிவு.

    ReplyDelete
  7. ராஜி நல்ல ரெசிப்பி...ரவைய வறுத்துட்டு மிக்சிலயோ அல்லது மெஷின்லயோ கொடுத்து னைஸாக்கிட்டு, சர்க்கரையை (இப்பல்லாம் சர்க்கரைய மெஷின்ல பொடிக்கறாங்களானு தெரியல...) மிக்ஸில பொடி பண்ணிட்டு இரண்டையும் கலந்து டப்பால வைச்சுக்கிட்டா எப்ப வேணாலும் டக்னு எடுத்து லட்டு பிடிச்சுறலாம். மத்ததெல்லாம் அதே ப்ரொசீஜர். பொதுவா எந்த லட்டுக்கும் பால் தெளித்துப் பிடிப்பதில்லை. சீக்கிரம் கெட்டுப் போய்டும்னு. ஸோ சூடா நெய் ஊற்றி வேணும்னா சூடு தண்ணி கொஞ்சமா தெளிச்சு பிடிக்கலாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா கொடுத்தீங்க கீதாக்கா. நெய் அதிகம் சேர்த்துக்கலாமோ?! உடம்புக்கு ஆகாதில்ல

      Delete
  8. மிகவும் பிடிக்கும். ஆனா அதிகம் சாப்பிட முடியாதே!! நானே ஸ்வீட்டு!!

    ReplyDelete
    Replies
    1. ஓ. அப்ப அடுத்தவங்க சாப்பிடுறதை பார்த்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்

      Delete
  9. செய்முறை சிற‌ப்பாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  10. எங்கள் ஊரில் எல்லா விழாக்களிலும் இது இடம் பிடிக்கும். எங்கள் வீட்டில் ஒருவருக்கும் பிடிப்பதில்லை.

    ReplyDelete
  11. ரவா லட்டு ....

    அம்மா நல்லா செய்வாங்க...நான் நல்லா சாப்பிடுவேன்....

    கீதாக்கா சொன்ன மாதரி நாங்களும் பால் விட்டு செய்றது இல்ல....
    ரவையையும், சர்க்கரையும் பொடித்து நெய் விட்டு பிடிப்போம்...



    முதல் முதலா தம வாக்கு ...நம்ம ரவா லட்டுக்கு தான்

    ReplyDelete