வாழைப்பூவை சமைக்குறதுன்னாலே கொஞ்சம் வேலை அதிகம். மத்த காய்கள் மாதிரி வாங்குனோமா, கழுவினோமா, தோல் சீவினோமா, வெட்டி சமைச்சோமான்னு சட்டுன்னு வேலை ஆகாது. வாழைப்பூ மடலுக்குள் இருக்கும் அரும்பில் கள்ளனையும், நரம்பையும் எடுக்கனும். அப்புறம் வெட்டி சமைக்கனும்... அதனாலாயே பெரும்பாலும் வாழைப்பூவை இப்பலாம் அவாய்ட் பண்ணிடுறோம்.
இவங்கதான் கள்ளன், நரம்புன்னு சொல்றவங்க. இவங்களை எடுத்துட்டுதான் சமைக்கனும். இல்லன்னா கசக்கும். வாழைப்பூ மடலுக்குள் இருக்கும் சீப்பை கையால் நுனியை லேசாகத் தேய்ச்சா பூக்கள் பிரிந்து இந்த நரம்பு வெளிலவரும். இதையும், இதுக்கு கீழ கண்ணாடி மாதிரி தோல்மாதிரி இருக்கும் அதையும் எடுத்துடனும். வாழைப்பூவை நறுக்கும்போது கைலாம் கருப்பாகிடும். அதனால எண்ணெய் இல்லன்னா தூள் உப்பு கையில் தொட்டுக்கிட்டா கை கருப்பாகாது. வாழைப்பூவை நறுக்கி வெச்ச கொஞ்ச நேரத்தில கருத்திடும். அதனால, கொஞ்சம் எண்ணெய், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து பிசிறி வெச்சா வாழைப்பூ புதுசுமாதிரி இருக்கும்.
வாழைப்பூவில் கூட்டு, வடை, கோப்தா, பஜ்ஜி, உசிலின்ற புட்டு, சூப்லாம் செய்யலாம். உடம்புக்கு ரொம்ப நல்லது. வாழையோட வரலாற்றை தெரிஞ்சுக்க இங்க க்ளிக் பண்ணுங்கோ.
வாழைப்பூவை வாரம் இரண்டு முறை சமைத்து உண்டு வந்தால் ரத்தத்திலிருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றி, ரத்தத்தில் இருக்கும் பசைத்தன்மை குறைந்து ரத்தம் தங்குத்தடையின்றி ரத்தம் உடலெங்கும் பாயும். இதனால் உடலில் ஆக்சிஜன் அதிகளவு கிடைக்கும். இரும்பு சத்து அதிகளவு கிடைத்து ரத்த சோகை வராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்திலுள்ள அதிகளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் வாழைப்பூவிற்குண்டு. செரிமான பிரச்சனையை சரிசெய்வதோடு வயிற்றுப்புண்களை ஆற்றும் சக்தி கொண்டது. மூலநோயை குணப்படுத்துது. மலச்சிக்கலை போக்குது. சீதபேதியை மட்டுப்படுத்துது. வாய்ப்புண்ணை ஆற்றி வாய் துர்நாற்றத்தை போக்குது. பெண்களுக்குண்டான கருப்பை கோளாறுகளையும் மாதவிலக்கின் குறைந்தளவு ரத்தப்போக்கினையும், வெள்ளைப்படுதலையும் வாழைப்பூ சரிச்செய்கிறது. வாழைப்பூ வயிற்றிலிருக்கும் புழுக்களை கொன்று வெளியேற்றும் சக்தி கொண்டது. ஆண்களுக்கு விந்துவை கெட்டிப்படுத்தி குழந்தை பிறப்பை உண்டு பண்ணுது.
இனி வாழைப்பூவில் புட்டு எப்படி செய்யுறதுன்னு பார்ப்போம்...
கடலைப்பருப்பு
வாழைப்பூ,
வெங்காயம்
ப.மிளகாய்,
காய்ந்த மிளகாய்,
பூண்டு,
சோம்பு,
பட்டை,
உப்பு,
எண்ணெய்
கடலைப்பருப்பை ஊற வெச்சுக்கனும், வாழைப்பூவை ஆய்ந்து, பொடியா நறுக்கிக்கனும்.
மசாலா பொருட்களை கடலைப்பருப்போடு, உப்பு சேர்த்து கொரகொரப்பா அரைச்சுக்கனும்.
அரைத்த கடலைப்பருப்பு மாவோடு நறுக்கி வெச்ச வாழைப்பூவை சேர்த்து நல்லா கலந்துக்கோங்க.
வாணலில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், கடலைப்பருப்பு, உளுந்தப்பருப்பு போட்டு சிவக்க விடுங்க. காரம் வேணும்ன்னு நினைச்சா காய்ந்த மிளகாய் போட்டுக்கலாம்.
உப்பு சேர்த்து பொன்னிறமா வதக்குங்க..
இட்லிப்பானையில் வேக வெச்ச வாழைப்பூ கலவையை தூளாக்கி வதங்கின வெங்காயத்தில் சேர்த்து வதக்குங்க. கறிவேப்பிலை சேர்த்து இறக்கிடுங்க.
வாழைப்பூ புட்டு ரெடி.
வாழைப்பூவை மரத்திலிருந்து பறிச்ச ரெண்டு நாளில் சமைச்சுடனும். வாழைப்பூவில் அதிகளவு நார்ச்சத்தும், வைட்டமின் ஏ, பொட்டாசியமும் இருக்கு. குறைந்தளவு சர்க்கரையும், சோடியமும் இருக்கு. அதனால வாரத்துக்கு ரெண்டு முறை நம்ம உணவில் சேர்த்துக்கனும்... சேர்த்துக்குவீங்களா?!
நன்றியுடன்,
ராஜி
அருமையான வாழைப்பூ புட்டு.
ReplyDeleteகள்ளன் எடுப்பது மட்டும் கஷ்டம்.
செய்முறை எளிதாக இருக்கிறது.
ஆவியில் அரைத்ததுவரம் பருப்பை மட்டும்
வேக வைத்து கலந்து செய்து இருக்கிறேன்.
இது போல் செய்து பார்க்கிறேன்.
எங்க ஊர்ப்பக்கம்லாம் கடலைப்பருப்புதானுங்க சகோ
Deleteவாழைப்பூவில் இவ்வளவு மகத்துவமா ?
ReplyDeleteத.ம.1
ஆமாம்ண்ணே
Deleteவாழைப்பூ புட்டு - புதிய செய்முறை... நன்றி சகோதரி...
ReplyDeleteஎங்க வீட்டில் அடிக்கடி செய்யுறதுதான் சகோ. நல்லா இருக்கும். ஸ்னாக்ஸ் மாதிரி அப்படியேவும் சாப்பிடலாம்.
Deleteவாழைப் பூவில் எது செய்தாலும் செம டேஸ்ட்தான்:)
ReplyDeleteஆரோக்கியமானதும்கூட
Deleteஉடல் நலம் காக்க உதவும் உபயோகமான பதிவு. மன நலத்துக்கு உடல் நலமும் தேவைதானே.
ReplyDeleteஆமாம்ப்பா. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்
Deleteஇனித்தான் செய்து பார்க்க வேண்டும் வாழைப்பூ புட்டு!
ReplyDeleteசெய்து சாப்பிட்டு பாருங்க. கூடவே அடிக்கடி நம்ம பக்கம் வாங்க.
Deleteஹோ ராஜி இதனை நாங்கள் பருப்புசிலி என்போம்...வெங்காயம், சோம்பு இதெல்லாம் சேர்க்காமலும் செய்வதுண்டு...ஆனால் பாண்டியில் இருக்கும் போது இதெல்லாம் சேர்த்தும் செய்ததைச் சாப்பிட்ட பின் இப்படியும் செய்வதுண்டு. கடலை பருப்பு மட்டுமின்றி துவரம்பருப்பு க பருப்புக்குச் சமமாக ஊற வைத்து இதே போன்று செய்வதுண்டு...ஆவியில் வேக வைக்காமல் நேரடியாகப் பருப்பை உசிலித்து (வெங்காயம் சேர்த்தோ சேர்க்காமலோ) வேக வைத்த வாழைப்பூவைச் சேர்த்துப் பிரட்டி செய்வதும் உண்டு...
ReplyDeleteஇதனைப் புட்டு என்று நீங்கள் சொல்லுவதையும் தெரிந்து கொண்டேன்....நல்லாருக்கு ராஜி!!
கீதா
ஆவியில் வேக வைக்காம செஞ்சா கரண்டில பிசுபிசுன்னு ஒட்டுமே அதான்.
Deleteவாழைப்பூ மிகவும் நல்லது இல்லையா!!! அடிக்கடிச் சேர்ப்பதும் உண்டு ராஜி..
ReplyDeleteகீதா
ம்ம்ம் இங்கயும் வாரத்தில ஒருமுறையாவது செய்வோம். ஒரு பூ பத்து ரூபாங்க கீதா
Deleteமிஸ் ஆகிப் போன உங்கள் பதிவுகளைப் பார்க்க வேண்டும் பார்க்கிறோம்....
ReplyDeleteதுளசி, கீதா
இருவரும் பார்த்துட்டு வாங்கப்பா
Deleteஎங்கள் வீட்டில் வாழைப்பூ வடை அடிக்கடி செய்வார்
ReplyDeleteநான் எப்பவாவதுதான் வடை செய்வேன்ப்பா. ஏன்னா எண்ணெய் பலகாரமாச்சே. அதான்
Deleteபருப்புசிலி என்று சொல்வோம். துளி புளி விட்டு வேகவைத்தால் வாழைப்பூ கறுக்காது. பெண்கள் மாதவிடாய் பிரசினைக்கெல்லாம் இந்தப்பூ சமைலில் சேர்த்தால் மிகவும் நல்லதென்பர்.கூட்டு,மோர்க்கூட்டு,அடை,வடை,துவையல் என பலவிதங்களிலும் செய்யலாம். அன்புடன்
ReplyDelete