Sunday, October 15, 2017

புருசன் பொறந்த ஊரை பார்க்க கசக்குமா என்ன?! - பாட்டு கேக்குறமாக்கும்


வெளி உலகு தொடர்பு இல்லாத பொண்ணுங்களுக்கு கிராமத்தை சுத்தி பார்க்கனும்ன்னா விருப்பம் அதிகம். அதிலும் புருசன் பொறந்த ஊரை அவன் கதை கதையா சொல்ல.. அவ மனசுக்குள் அந்த ஊர் பத்தி கற்பனை நீண்டுக்கிட்டு போகும். அங்க இருக்கும் ஆறு, குளம், கோவில்ன்னு... அதை பார்க்க ஆசை ஏற்படும். அங்க போயி, அவன் பொறந்த வீடு, தவழ்ந்த தின்னை, விளையாடின தெரு, ஒதுங்கினது, பதுங்குனதுன்னு அவன் விளக்கி சொல்ல நேர்ல பார்க்கனும்ன்னு ரொம்ம்ம்ம்ப ஆசை இருக்கும்.அதே மாதிரிதான் தன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கூட்டி போய் காட்டனும்ன்னு நினைப்பா. அது மாதிரி ஒரு பாட்டுதான்.. பார்க்கவும், கேக்கவும் சூப்பரான பாட்டு... 
ஆசை கேப்பக்களிக்காசை..
ஆசை கெளுத்தி மீனுக்காசை..
ஆசை கேப்பக்களிக்காசை... 
ஆசை கெளுத்தி மீனுக்காசை...

நீ பொறந்த கிராமத்தை நானும் வந்து பார்க்கனும்..
அரிசி எந்த மரத்துல காய்க்குதுன்னு கேக்கனும்..
பாட்டுக்கட்டும் நம்ம வைரமுத்துவை கேட்டு
பாரதிராசா சொன்ன கிராமத்தை காட்டு...

ஆசை கேப்பக்களிக்காசை..
ஆசை கெளுத்தி மீனுக்காசை..
ஆசை கேப்பக்களிக்காசை... 
ஆசை கெளுத்தி மீனுக்காசை..

உங்க பாத்ரூம்முல குளிக்கையிலே பாதிதானே நனையும்!
எங்க ஆத்தில் குளிச்சு பார். அடியே  புள்ள! ஆணிவேரே நனையும்...
இந்த வேப்பர காத்துக்கு  விலையில்லையே!
இந்த வாழ்ந்து வந்தா உடல் வலியில்லையே!

இங்க வெட்டவெளி பொட்டலுக்கு  குறைவில்லையே!
நாம கிட்டி அடிக்க ஒரு தடையில்லையே!
அங்க பச்சைமரத்துல
பனித்துளி ஆடுது சடுகுடு..
உன் பாசிமாலைக்கு பனித்துளியை கோர்த்து எறியுறேன்...

ஆசை கேப்பக்களிக்காசை..
ஆசை கெளுத்தி மீனுக்காசை..
ஆசை கேப்பக்களிக்காசை... 
ஆசை கெளுத்தி மீனுக்காசை...

அந்த ஆலமரத்துல கிளிக்கு 
ஆரு ஊஞ்சல் கட்டி விட்டது?!
இந்த கரிசல் மண்ணுக்கு
துணிஞ்சு யாரு பச்சை கட்டிவிட்டது?!

இங்க ஆடு மேய்க்கும் பையனுக்கு
இருக்கும் சுகம் ஒரு மந்திரிக்கில்ல!
அது தந்திரிக்கில்ல!
இங்க நாத்து நடும் பொம்பளை
ஒரு பாட்டு சொன்னா அதில் திருத்தமில்ல!
அதில் திகட்டலில்ல!

அந்த ஏசி ரூமைதான் விட்டு வாழ
இங்க வருவியா?!
இந்த ஆத்தங்கரையிலே ஒரு குடிசை ஒண்ணு 
போட்டு குடுமய்யா!.....

ஆசை கேப்பக்களிக்காசை..
ஆசை கெளுத்தி மீனுக்காசை..
ஆசை கேப்பக்களிக்காசை... 
ஆசை கெளுத்தி மீனுக்காசை...

நீ பொறந்த கிராமத்தை நானும் வந்து பார்க்கனும்..
அரிசி எந்த மரத்துல காய்க்குதுன்னு கேக்கனும்..
பாட்டுக்கட்டும் நம்ம வைரமுத்துவை கேட்டு
பாரதிராசா சொன்ன கிராமத்தை காட்டு...
படம் : தமிழ்செல்வன்
நடிகர்கள் : ரோஜா, விஜயகாந்த்
இசை : தேவா

பாடலின் லிங்க்: https://www.youtube.com/watch?v=xTPz7KPkYP4

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474759
நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. Replies
    1. இப்ப கேட்டீங்களா?! விஜயகாந்த் அரசியலுக்கு காரணமான படம் இது.

      Delete
  2. இப்படி ஒரு பாட்டு இருக்கா? கேட்டதில்லை!

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் ஓவர். எப்படி ஹிட்டடிச்ச பாட்டு இது?! கண்டிப்பா உங்க இளமைக்காலத்துல (இப்ப முதுமையான்னு சண்டைக்குலாம் வரப்படாது) கேட்டிருப்பீங்க. இப்ப மறந்துட்டேன்னு சொல்லுங்க.

      Delete
  3. பாட்டை எழுதியவர் பெயரைப் போட மறந்து விட்டீங்களே :)

    ReplyDelete
  4. இந்தப் படம் பத்தியும் தெரியலை...பாட்டும் கேட்டதில்லை...

    ReplyDelete
    Replies
    1. விஜயகாந்த் அரசியலுக்கு வர காரணமான படம்ண்ணே

      Delete
  5. படங்கள் அழகு.
    பாடல் அருமை.

    ReplyDelete
  6. படங்கள் அருமை
    பாடலும் அருமை
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  7. ஆசை கேப்பக்களிக்காசை..
    ஆசை கெளுத்தி மீனுக்காசை..
    ஆசை கேப்பக்களிக்காசை...
    ஆசை கெளுத்தி மீனுக்காசை...

    அடாடா...எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...

    சின்ன வயசுல அண்ணங்க பாட்ட கேசட்டல ரெகார்ட் பண்ணி எப்போது ஓட விடுவாங்க...அப்ப இந்த பாட்டு அடிக்கடி வரும்...சோ மனசுல ரெகார்ட் ஆச்சு...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா., உனக்கு தெரியுது, மிடில் ஏஜ்ல இருக்க ஆம்பிள்ளைகளுக்கு தெரில. அதும் ரோஜா பாட்டு இதுங்களுக்கு தெரிலயே!

      Delete
  8. கிராமத்து அருமையான பாட்டு பாராட்டுகள் த.ம. வுடன்

    ReplyDelete
  9. அருமையான பாட்டு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  10. பொதுவாகப் பெண்களுக்கு தங்கள் ஊர் பற்றிப் பேசுவதும் நினைப்பதுமே பிடிக்கும் மீதியெல்லாம்கற்பனைகளே

    ReplyDelete
    Replies
    1. புருசனை பிடிச்சுட்டா அவன் சார்ந்தது எல்லாமே பிடிச்சுடும்

      Delete