மகளுக்கு சீமந்தம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டி வந்தாயிற்று. அவள் இனிப்பா எதும் சாப்பிட மாட்டா. சத்தானதுன்னு ராகி புட்டு, ராகி வடை, முருங்கைக்கீரை தோசை, கேரட் ஜூஸ், உருளை கட்லட்ன்னு செஞ்சு கொடுத்தாலும் அவளோட விருப்பமெல்லாம் குக்கரில் செய்யாத வெண்பொங்கலும் சாம்பாரும்... மாலை நேரத்திற்கு காரமா சீராளம், அரிசி வடைதான். முன்னலாம் சிப்ஸ், பப்ஸ்ன்னு சாப்பிடுவா. இப்ப அதுலாம் கொடுக்கக்கூடாதே...
பட்டாணி பருப்பில் செய்யும் இந்த சீராளம் காரசாரமா அட்டகாசமா இருக்கும். மழைக்காலத்து மாலை நேரத்துக்கான நல்லதொரு பண்டம். இரவு உணவாகவும் எடுத்துக்கலாம். சீராளத்தை துவரம்பருப்பிலும் செய்வாங்க. ஆனா, பட்டாணிப்பருப்பில் செஞ்சா இன்னும் ருசி அதிகமா இருக்கும். கடலைப்பருப்பைவிட விலை மலிவா இருக்கும் இந்த பட்டாணிபருப்பு.
தேவையான பொருட்கள்...
பட்டாணி பருப்பு - 1/4 கி
பச்சரிசி- 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்
பூண்டு,
வெங்காயம்.
தக்காளி,
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
கறிவேப்பிலை கொத்தமல்லி
உப்பு
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு..
கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு..
பட்டாணி பருப்புங்குறது கடலைப்பருப்பு மாதிரி கொஞ்சம் பெருசா இருக்கும். அதுல சும்மா ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி போட்டு இரண்டு மணிநேரம் தண்ணில ஊற வைங்க.
காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பா அரைச்சு , இட்லி பானைல வேகவிடுங்க. கொஞ்சம் ஆப்பசோடா சேர்த்துக்கலாம்.
மாவு வெந்ததும், எடுத்து ஆறினதும், துண்டாக்கிக்கனும்...
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகு, க.ப,உ.ப, சோம்பு, பட்டை, லவங்கலாம் போட்டு சிவக்க விடனும்.
அடுத்து ப.மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நல்லா வதக்கனும்..
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கனும்...
மிளகாய்தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்கி, தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்..
மிளகாய்தூள் வாசனை போனதும் துண்டாக்கி வச்சிருக்கும் சீராளத்துண்டுகளை சேர்க்கவும்...
கரம் மசாலாவை சேர்த்து சேர்த்து கிளறிட்டு, கறிவேப்பிலை, கொ.மல்லி சேர்த்துக்கோங்க.
சூடாய் மட்டுமில்ல ஆறிப்போயிருந்தாலும் சாப்பிட நல்லா இருக்கும். வெங்காயத்தை வழக்கத்தைவிட அதிகமா சேர்த்துக்கிடனும். தேங்காய்பூ சேர்ப்பவங்களும் உண்டு. நாங்க சேர்ப்பதில்லை. செஞ்சு பார்த்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லுங்க... வர்ட்ட்ட்ட்டா?!
நன்றியுடன்,
ராஜி.
நல்ல குறிப்பு.
ReplyDeleteநல்லாயிருக்கே...!
ReplyDeleteநன்று. இது நாங்களும் செய்வோம். பச்சை பாசிப்பருப்பு,உளுத்தம் பருப்புகளிலும் செய்வோம்.
ReplyDelete