பாதத்தில் புரளும்
கொசுவத்தை சற்றுத் தூக்கிப் பிடித்து,
சப்தமிடும் கணுக்கால்
கொலுசு வெளித் தெறிய..,
சிணுங்கும் கண்ணாடி வளையலும்,
மருதாணி சிவப்பேறிய கைகளாலும்
உயர்த்திப் பிடித்து,
சாலையோரம் தேங்கியுள்ள
நீரில் கால் நனைத்து,
நேற்றிரவு பெய்த மழையின்
மீதத்தை சேமித்திருக்கும்
இலை பிடித்து இழுத்து,
வேலியோரத்து பூக்களின்
தேனை வண்டுக்கு தெரியாமல்
களவாடி செல்கையில்,
வாகனங்களில் செல்வோரின்
ஏளனப் பார்வைக்கு பயந்து,
கைகள் தன்னிச்சையாக
கொசுவத்தை விட்டு...,
என்னிலிருந்து மாறுபட்டு
பதவிசாக நடப்பதாக
நடிக்க ஆரம்பிக்கிறேன் நான்....,
//வேலியோரத்து பூக்களின்
ReplyDeleteதேனை வண்டுக்கு தெரியாமல்
களவாடி செல்கையில்,//
விளக்கம் புரிகிறது
நல்ல வரிகள்.
//என்னிலிருந்து மாறுபட்டு
பதவிசாக நடப்பதாக
நடிக்க ஆரம்பிக்கிறேன் நான்....,//
Finishing Touch
உங்கள் கவிதைகளை அனந்த விகடனுக்கு அனுப்பலாமே? மிகவும் நன்றாக இருக்கிறது
இது போல நீங்கள் இன்னும் நன்றாக எழுத விழைகிறேன்.
ஆதிரை
அந்த கொடுக்கு காணாமலே போயிருக்கலாம் என சிலர் எண்ணுவதாக செய்தி -பெயரில்லா
ReplyDeleteSimply Superb, Keep it up.
ReplyDeletegood writing