Tuesday, October 12, 2010

படித்ததில் பிடித்தது


மழையில் நனைந்த
குழந்தையினை
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை....,
மழையில் நனைந்தபடியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லா சிறுவனைப் போல்...,

கடற்கரையிலும் , பூங்காவிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலர்களைப் பார்த்தபடி.....,
தன்னந்தனியே நிற்கிறது
உனக்கான என் காதல்

நன்றி,
தபூசங்கர்.( thaboosankar.blogspot.com)

---------------------------------------------------------
கடவுள்: உலகிலேயே நீதான் அதிசயப் பிறவி
மனிதன்: எப்படி,
கடவுள்: நீ நடந்தால் இரண்டு நிழல் உன் பின்னே வருகிறது. ஒன்று உன்னுடையது, மற்றொன்று அவளுடையது...,
மனிதன்: அப்படியானால், அவள்தான் அதிசயப் பிறவி,
கடவுள்: எப்படி...?
மனிதன்: எங்கோ அவள் இருக்க..., அவள் நிழல் மட்டும் என்னை பின் தொடர்கிறதே...,

வலையில் சிக்கியது
-----------------------------------------------------------------------------

கடவுள் என் வீட்டிற்கு வந்திருந்தார்

மழையற்ற சித்திரையின்
வெக்கையைற்ற நித்திரையை தேடி
என் வீட்டு மொட்டை மாடியில்
இரவின் முகத்தில் முழைத்த
நட்சத்திரங்களுடன் பேசிக்கொண்டிருக்கையில்
என் வீட்டுக்கு கடவுள் வந்திருந்தார்
தோளின் மேல் துண்டும்
ஒரு நான்கு முழ வேட்டி மட்டும்
அனிந்திருந்த அவரை
யார் என்று கேட்கையில்
நான் கடவுள் என்றார்
இங்கே எப்படி என்று யோசிக்கையில்
வேண்டும் வரம் கேள் கிடைக்கும் என்றார்
வெக்கையை போக்க காற்றும்
தாகத்தை போக்க நல்ல குடிநீரும் கேட்டதற்கு
மரம் நடு என்றார் ஒற்றை வரியில்
பதில் எப்படி வரமாகும் என்று யோசித்திருக்கையில்
ஆக்கத்திற்கு நான் அழிவிற்கு நீங்களா என்றார்
பதிலும் கேள்வியும் வரமாகுமா என்றதற்கு
நீ மனிதனாய் இருந்தால் என்று பதில் வந்தது

நன்றி
satturmaikan.blogspot.காம்
-----------------------------------------------------------------

No comments:

Post a Comment