Friday, March 23, 2012

நீயின்றி நானில்லை...,



என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்??!!

நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!
நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்....

என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்....,

என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரித்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………

ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….
 

19 comments:

  1. காதலை விட்டுப் பிரிந்து செல்லும் உன்னை திட்டக்கூட மனமில்லாமல் தவிக்கிறேன்... நிஜமான வரிகள்! அனுபவித்தவர்கள் நன்குணர்வார்கள். நன்று!

    ReplyDelete
  2. // என்னுயிரில் கலந்த
    உன்னை மட்டும் பிரித்து
    செல்ல நினைக்காதே……
    நானில்லாமல் நீயிருப்பாய்………


    ஆனால்…..
    நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்//

    அழகான, கவித்துவமான
    மனதில் நிலைக்கும் வரிகள்
    அருமை!



    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. உருகும் காதல் வரிகள், நெஞ்சை தொட்டு விட்டது...!!!

    ReplyDelete
  4. நானில்லாமல் நீயிருப்பாய்………


    ஆனால்…..
    நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்//

    நெஞ்சை தொட்ட வரிகள்...!!!

    ReplyDelete
  5. arumai!
    urukkiyathu !
    ulukkiyathu!

    ReplyDelete
  6. அருமையான உணர்வுபூர்வமான வார்த்தைப்பிரயோகம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. காதலன் பி எஸ் சி பாட்டனி போல

    ReplyDelete
  8. காதல் கவிதை நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  9. /நானில்லாமல் நீயிருப்பாய்……… ஆனால்…..
    நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….///

    ஒருத்தன் அப்பாவியா மாட்டிகிட்டா அவன் கதறினாலும் கடைசிவரை விடமாட்டேன் என்று இந்த வரி சொல்லுகிறதோ. இப்படியெல்லாம் சொல்லி அப்பாவியை மயக்கிவிடுகிறார்கள் இந்த பெண்கள்... ஹீ..ஹீ

    ReplyDelete
  10. காதல் பிரிவின் வலி.

    ReplyDelete
  11. hoooo...superaaa irukku...romba touching to my hearttuuu tuuuuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  12. வரிகள் அருமை ! காதல் கவிதை நன்றாக இருக்கிறது !

    ReplyDelete
  13. உருக்கமான காதல் கவிதை

    ReplyDelete
  14. love...nice one

    ReplyDelete
  15. இறைஞ்சிநிற்கும் காதல் வேதனையை வெளிப்படுத்தும் ஆழமான கவிதை. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  16. தவறாக நினைக்க வேண்டாம்

    "நானில்லாமல் நீயிருப்பாய்………"

    "ஆனால்…..நீயில்லாமல் நானிருக்க மாட்டேன் "


    இந்த வரிகள் காதலனின் அன்பை ஐயப்படுவது போல இருக்கிறதே?

    ReplyDelete
  17. அனுபவங்கள் கூட சில சமயம் இனிப்பும் கசப்பும் தரும். என் மனப் புலம்பல்களுக்கு மருந்தாய் இக்கவிதை.

    நீரோடை மகேஷ்.

    ReplyDelete
  18. ///என் கனவுகளை
    கவிதைகளாக வரைந்து
    கண்ணீரில் கரைக்கிறேன்
    யாருக்கும் தெரியாமல்....,///

    இந்த வரிகள் நன்று!

    ReplyDelete