நேத்து நான் பேங்குக்குப் போயிருந்தேன். எழுதப் படிக்கத் தெரியாத வயசானப் பாட்டி ஒருத்தர் தனியா வந்திருந்தாங்க. 500 ரூபா எடுக்க வேண்டித் தனகாக யாரோ எழுதிக் கொடுத்த வித் ட்ரா ஸ்லிப்பைக் கொண்டு வந்து கேஷியர்கிட்டக் கொடுத்தாங்க. ஆனா, கேஷியர் உங்க அக்கவுண்ட்ல 800 ரூபாதான் இருக்கு. அதனால், 300ரூபா எடுத்துக்கன்னு சொல்லி வேற ஒரு ஸ்லிப் கொடுத்தார். அந்தப் பாட்டி எதும் புரியாம முழிச்சுக்கிட்டு இருந்துச்சு.
எப்பவும் போல முந்திரிக் கொட்டைத் தனமா, கொடு பாட்டி! நான் எழுதித் தரேன்னு சொல்லி வித் ட்ரா ஸ்லிப் ஃபில் பண்ணிக் கொடுத்து, பாட்டிம்மாக்கிட்ட கைநாட்டு வாங்கி கேஷியர் கிட்ட கொடுத்து காசு வாங்கிக்கச் சொன்னேன்.
கொஞ்ச நேரத்துல பாட்டி குய்யோ முறையோன்னு கத்துற சத்தம். என்னன்னு போய் பார்த்தா என் மவன் 500 ரூபா போடுறேன். நீ பேங்க்ல போய் எடுத்துக்கன்னு சொன்னான். ஆனா, இப்ப 300தான் கொடுத்தாங்க. எழுதிக்கொடுக்குறேன்னு சொல்லி ஒருத்தி 200ரூபா ஆட்டைய போட்டுட்டான்னு கத்துசு. இனி இதுக்குலாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதுன்னு மீ எஸ்கேப்.
நல்லது செய்வோம்ன்னு நினைச்சுப் போன இடத்துல திருட்டுப் பட்டம். தேவையா எனக்கு!?
என் மகளுடன் படிக்கும் பெண். உடம்புக்கு முடியலைன்னு சொல்லி பள்ளிக்கு சரி வர செல்வதில்லை போல! இந்த வருசம் பத்தாவது பொது தேர்வை ஒட்டி வருகை குறைவாக இருக்கவே, மெடிக்கல் சர்டிஃபிகேட் வேணும்ன்னு சொல்லி பள்ளியில் உள்ள மருத்துவரிடம் அனுப்பி இருக்காங்க. அங்கப் போனப் பின் தான் தெரிஞ்சது அந்த குழந்தை 5 மாசம் கர்ப்பம்ன்னு.
தினமும் அம்மாவிடம் பள்ளிக்குப் போவதாய் சொல்லி, கிளம்பி.., வழியில் ஆட்டோ ட்ரைவர் ஒருவருடன் காதல் செய்திருக்கும் போல! இப்ப வயத்துல குழந்தை!!! அந்த ட்ரைவருக்கு வயசு 35. ஏற்கனவே மணமானவர். இத்தனைக்கும் அந்தப் பென் வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் செல்பவள். அப்புறம் எப்படி அவர்களுக்குள் பழக்கம் என தெரியல.
இத்தனைக்கும் அந்த குழந்தையின் அம்மா ஹவுஸ் வொயிஃப். அப்பா எலக்ட்ரீசியன். பொண்ணு எங்கப் போகுது!? என்னப் பண்ணுது!?ன்னு இருவருமே கவனிக்கல. அந்தப் பொண்ணு ஏமாத்துச்சுன்னு வச்சுக்கிட்டாலும் தன் மகளின் மாதவிடாய் விவரங்கள் கூடவா ஒரு தாய் தெரிஞ்சு வச்சுக்காம இருப்பாங்க. ஸ்கூல்ல இருந்து அந்தக் குழந்தையை அனுப்பிட்டாங்க. இனி அக்குழந்தையின் எதிர்காலம்.
சார்! டைம் என்னனு கொஞ்சம் கடிகாரத்தைப்பார்த்து சொல்லுங்களேன்"
"கடிகாரத்தைப் பார்காமலே கூட சொல்லுவேன்.கடிகாரம் ஒடலை"
"கடிகாரத்தைப் பார்காமலே கூட சொல்லுவேன்.கடிகாரம் ஒடலை"
2004ல என் மச்சினருக்குக் கல்யாணம். அப்ப இனியாக்கு 4 இல்ல 5 வயசு இருக்கும். மண்டபத்துக்குப் போக எல்லோரும் ரெடி ஆகிட்டு இருந்தோம். என் மாமியார் மஞ்சள் கயிறுல மாங்கல்யம் கோர்த்து என் அக்காக்கிட்டக் கொடுத்து கயிறு அளவு சரியா இருக்கான்னு பாரும்மான்னு சொன்னாங்க. இதைக் கவனிச்ச இனியா, பாட்டி! தாலிக்கயத்துல ஊக்கு (safty pin) இன்னும் கோர்க்கலைன்னு சொன்னா. என்னன்னு புரியாம நாங்கலாம் முழிக்க..,
சேலைக் கட்டுறதுக்காக அம்மா, பெரியம்மா தாலிக்கயத்துலலாம் ஊக்கு கோர்த்திருப்பாங்க. அத எடுத்து சேலைல குத்திப்பாங்க. அதுப்போல சித்திக்கு கட்டப் போற தாலிக்கயத்துல ஊக்கு இல்லாட்டி சித்தி சேலைக் கட்டும்போது ஊக்கு இல்லாம எப்படி சேலைக் கட்டுவான்னு கேட்டு எங்களைலாம் அசடு வழிய வச்சா.
ஒற்றை கால் குள்ளனுக்கு எட்டு கைகள்.அது என்ன?
பாட்டிக்கு உங்கள் பாணியில் 'சொல்லி' புரிய வைக்க வேண்டாமா சகோதரி...?
ReplyDeleteஅந்தக் குழந்தையின் எதிர்க்காலத்தை விட பெற்றோர்கள்...?
வெளியே மழை பெய்கிறது (எங்க ஊரில் 2 வருடமாக கனவில் தான்...) நனையாமல் இருக்க எதை கொண்டு செல்ல வேண்டுமோ அது தான் விடை.., (சரியா சகோதரி)
விடை சரிதான்ண்ணா!
Deleteபர்சைத் திறந்து ஒரு இரண்டு நூறு ரூபாயைக் கொடுத்துட்டு
ReplyDeleteபோகவேண்டியது தானே.
பாவம் கிழவி.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
சரிதான்.
Deleteநல்லதுக்கே காலமில்லை..
ReplyDeleteஅந்தப் பொண்ண இன்னும் குழந்தைன்னு சொல்றீங்களே..
விபரீதத்தை அறியாத குழந்தைதான் கிரேஸ்
Deleteபடிக்கிற வயசில என்ன எழவு காதல் வேண்டியிருக்குன்னு கோபமா அந்தச் சிறுமியை நாலு அப்பு அப்பணும்னு தோணினாலும் இன்னொரு பக்கம்... ஐயோ, பாவம் இனி அது என்ன ஆவுமோன்னு வருத்தமாவும் இருக்கத்தான் செய்யுது!
ReplyDeleteநிஜம்தான்ண்ணா!
Deleteசிறுமியை அடிக்கிறதைவிட அதற்கு காரணம் ஆன ஆட்டோ டிரைவரைதான் அடிக்கனும். பெரிய பொண்ணுகளையே ஆசை வார்தை சொல்லி ஏமாற்றும் இந்த உலகில் சின்ன பொண்ணு பாவம் என்ன செய்யும்?
Deleteஅந்த டிரைவர் அமெரிக்காவில் இருக்கனும் இந்நேரம் ஜெயில் இருப்பான்....இங்கு ஜெயில் தண்டனை பெரிதல்ல ஆனால் ஜெயில் இருக்கும் சக கைதிகள் அவனை பின்பக்கம் புணரும் போதுதான் அவனுக்கு தெரியும் வலியும் வேதனைகளும்....
Deleteஅடுத்தாக குறை சொல்லவேண்டுமானால் பெற்றோர்களை சொல்லாம். அதிலும் ஒருத்தர் ஹவுஸ் வொய்ப்பாக இருக்கிறாம். அவருக்கு குழந்தையின் நடவடிக்கைகள் உடலில் ஏற்படும் மாற்றங்க ஏதும் தெரியதா என்ன? பள்ளி செல்லும் குழந்தைகளிடம் தினமும் என்ன நடக்கிறது என்று கூடவா கேட்க மாட்டார்கள்
Delete//தேவையா எனக்கு!?// ஹா ஹா ஹா நல்லா தேவைதான் :-))))))
ReplyDelete//இனி அக்குழந்தையின் எதிர்காலம்.// செல்லம் என்ற பெயரில் நடைபெறும் அட்ராசிட்டிகள்.. கவனமாய் கண்டிப்பாய் இருந்திருக்கலாம்.. இனி அழுது பிரயோசனம்.. மணமான அந்த நாதாரி நாய்க்கு அறிவு என்னாச்சாம் :-((((
அதைக் கூட கவனிக்காத அம்மாவை என்ன சொல்லலாம்!?
Deleteநல்லாத்தான் சொன்னீங்க நாலு வார்த்தை! ஆட்டோக்காரனுக்கு என்ன? ஜாமீனில் வந்து விடுவான். பாவம் அந்த பெண்.
ReplyDeleteசித்தீ..... .... இனியாவின் முன் யோசனை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பாட்டி கதையில் ஒரு திருத்தம். கைரேகைக்காரர்கள் பணம் எடுப்பதற்கு முன் , போட்டோவுடன் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காட்டி, பணம் எடுக்கும் சலானில் அவர் முன் கைரேகையை நாட்டி , ஒப்புதல் பெற்ற பின்னரே பணம் எடுக்க முடியும்.
அதெல்லாம் நிறைய பைசா எடுக்குறவங்களுக்குதான். இது வெறும் 300ரூபாய்தானே!
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
பாட்டியை விட்டு நீங்கள் சென்றது நல்லது...
பாவம் அந்தப்பிள்ளை.... எதிர்காலம் ?... இப்படியான ஜென்மங்கள் இருந்து என்ன லாபம்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்
Deleteபாட்டிக்கு பார்ம் பில்லப் பண்ணும் முன்னரே விபரம் சொல்லியிருக்க வேண்டும் நீங்கள்!, பள்ளிச்சிறுமியின் எதிர்காலம் பயங்கரம்தான்! பெற்றோர்கள் கவனிக்க தவறியதால் வந்த விளைவு. பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇனி இதுப்போல உதவும் முன் நிறைய யோசிப்பேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteபாட்டியில் கதையிலும், அந்தப் பருவப் பெண்ணின் கதையிலும் அறியாமைதான் விளையாடியிருக்கிறது. பதின்ம வயதுப்பெண்களில் தெரிந்தே தைரியமாக இதுபோன்ற காரியங்களில் இறங்குவதுதான் வேதனையாக இருக்கிறது.
ReplyDeleteவயசுப் பசங்களை வீட்டில் வச்சிருக்குறது மடியில் நெருப்பை கட்டி இருப்பது போலன்னு சொல்றது எத்தனை உண்மைன்னு இப்பதான் தெரியுது சகோ!
Deleteஓட்டுப்போட மறுந்துட்ட்டேன். த.ம.6
ReplyDeleteஓட்டுப் போடுவது ஒவ்வொரு குடி மகனின் கடமை சகோ! அதை மறக்கலாமா!?
Deleteநீங்க நல்லா உதவி செய்கிற ஆள் ஆச்சே சரி இப்ப எனக்கு பேங்கில் இருந்து பணம் எடுக்கனும் ஆமாம் நீங்கள் கணக்கு வைச்சிருக்கும் பேங்கில் இருந்துதான் அதுவும் உங்க அக்கவுண்டில் இருந்துதான்.. கொஞ்சம் செக் எழுதி கொடுக்க முடியுமா? tha.ma 7
ReplyDeleteமுதல்ல உங்க அக்கவுண்ட்ல இருந்து என் அக்கவுண்டுக்கு பணம் போடுங்க. அப்புறமா நான் காசு எடுத்து தரேன்
Deleteஎன்ன என்ன அநியயம் எல்லாம் நடக்கிறது ராஜி. நினைக்கவே கதிகலங்குகிறது. ஒருபக்கம் பெண்கள் தானாகக் கெடுகிறார்கள். இல்லாவிட்டால் கெடுக்கப் படுகிறர்கள்.
ReplyDeleteஇங்கு தானாய் கெடுவதுதான் அதிகம்
Deleteஇந்தக்கால பெண் குழந்தைகளுக்கு ஒன்னும் தெரியாதா...?
ReplyDeleteஎன்னமோ போங்க..
பாட்டி விசயத்தைப் படிக்கும் பொழுது.... இனி யாருக்கும் உதவக்கூடாது என்ற எண்ணம் வந்துவிடப் போகிறது!! ம்ம்ம்...
உதவி ச்ய்யும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டியுள்ளது நிஜம்தான் அருணா.
Deleteநானும் பேங்குல இப்பிடி மாட்டி இருக்கேன்...
ReplyDeleteஒரு பெரியவர் வந்து பாரம் நிரப்ப கேட்டார் பணிவுடன், எழுத பென் எடுத்ததுமே என்னை மிரட்ட ஆரம்பித்தார், ஐநூறு ரூபாய் மட்டுமே எழுத வேண்டும் என்று பயங்கரமாக மிரட்டினார், அப்புறம் கைநாட்டு வைத்துவிட்டு என்னையே கவுண்டரில் கொடுத்து காசெடுக்க கியூவில் நிற்க வைத்து, என் பின்னாடியே நின்றுகொண்டு காசை வாங்கி கொண்டு விட்டுதான் என்னை விட்டார் ஒரு நன்றிகூட சொல்லாமல்...!
அண்ணனும், தங்கச்சியும் இப்படி சிக்கி இருக்கோமே அண்ணா!
Deleteஅந்தக் விவரமறியாக் குழந்தை(அதுதான் உண்மை)யின் பெற்றோரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.. அதிலும் தாய்க்கு இதைக் கவனிப்பதை விடுத்து வேற்றுலக பிரச்சனைகளை தன் பிரச்சனையாக பார்த்துக்கொண்டிருப்பதுதான் காரணம்(தொலைக்காட்சி தொடர்கள்)...எங்கே சென்றுகொண்டிருக்கிறது?... வருத்தமாக இருக்கிறது....
ReplyDeleteஎன் மகளை விட சின்ன பெண். அதை பாக்கும்போதெல்லாம் வருத்தம் அதிகமாகுது எழில்
Deleteபாத்திரம் அறிஞ்சி பிச்சை போடுன்னு சொல்றாப்பல உதவி செய்யிறதுக்கும் சொல்லணும் போலருக்கு. இல்லன்னா உதவி செஞ்சிட்டு உங்கள மாதிரி திட்டு வாங்க வேண்டியதுதான். நடுவுல சொன்ன கடிகார ஜோக் சிரிக்க வச்சிது. நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!
Deleteபடிக்கிற வயசுல கர்ப்பமா இருக்கிறது அதிர்ச்சியாத்தான் இருக்கு.... பெண் குழந்தைகளை வச்சிருக்கிற பெற்றோர் அவர்களுக்கு வயது மாற்றங்களால் எண்ணங்கள் திசை திரும்பாத வண்ணம் வாழ்க்கையையும், கல்வியின் அவசியத்தையும் புரிய வைக்க வேண்டும்.. மனசாட்சியே இல்லாமல் சிறு பெண்ணை ஏமாற்றிய அந்த ஆட்டோ டிரைவரைதான் போட்டு உதைக்கனும்...அப்புறம்தான் அந்த பொண்ணை கேட்கனும்... இன்னொன்னு ஆசைய வளர்த்து விடற மீடியா.... ! பெண்ணோட அம்மா மாதவிடாய் சமயத்தை கூட கவனிக்காம இருந்தது ஆச்சரியமா இருக்கு..... இங்கு பெண்ணும், பெண்ணை பெற்றோரும்தான் ரொம்ப பாதிக்கப்படறாங்க....
ReplyDeleteபெத்தவங்களை விட பெண் தான் அதிகம் பாதிக்கப் படுது.
Deleteமுதல்லேயே வங்கிப் பணியாளர் தானே விபரம் சொல்லி வேறே சலான் கொடுத்திருக்கார். அவரிடமே அழைத்துச் சென்று புரிய வைத்திருக்கலாமோ?
ReplyDeleteஇதே போல் இன்னொரு பெண் குழந்தையும் பள்ளியில் கழிவறையிலேயோ குளியலறையிலேயோ குழந்தை பெற்றெடுத்துவிட்டு அதைப்பள்ளியில் கூடத் தெரிவிக்கவில்லைனு தினசரி செய்திகளில் படித்தேன். ஆனால் நீங்க சொல்வது போல் பெண்ணின் மாதவிடாய் குறித்த தகவல்களைக் கூட அறிந்து வைக்காத பெற்றோரை நானும் பார்த்திருக்கேன். எங்க வீட்டிலே வீட்டு வேலைகளுக்கு உதவும் பெண்ணின் ம்களுக்கும் இப்படித் தான் ஆயிற்று. இது குறித்துப் பதிவு கூடப் போட்டிருந்தேன்.
பாட்டிகள் சொல்றதுப் போல கலிகாலம்
Deleteபாட்டி விஷயம் புரிய வைப்பது கடினம் தான்...:))
ReplyDeleteஅந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறி தான்...பெண்ணின் அம்மா எப்படி இப்படி கவனிக்காமல் இருந்திருக்கிறாங்களோ!!!
பிள்ளைகள் மேல் அத்தனை நம்பிக்கைங்க ஆதி!
Deleteஅந்த பெண்ணை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு .ஆதலால் காதல் செய்வீர் என விளக்கமா படம் கூட எடுத்துகாட்டிடாங்க ?
ReplyDeleteஇந்த பெற்றோரை நினைச்ச என்னத்த சொல்றதுக்கா?
தினமும் அந்தக் குழ்னதையை பார்க்கும் எனக்கு ஆத்திரம் அழுகை, எரிச்சல் வரும்.
Deleteநல்ல இடுகை!
ReplyDelete+1
பாட்டியின் செயல் சிரிப்பு! மகளின் செயல் நெருப்பு!
ReplyDeleteஇராஜிம்மா ! மன்னிக்க! என்னைப் பற்றிய அறிவிப்பு (வலைச்சரத்தில்)
தனபால் மூலம் அறந்தேன் ! இருவருக்கும் மிக்க நன்றி!
பாட்டிக்கு நீங்க ஸ்லிப் எழுதுரப்பவே சொல்லிட்டு எழுதிருக்கலாம் அக்கா.. அந்த பெண் விசயத்தில் அவள் அம்மவின் அக்கரையின்மை ஆச்சர்யத்தை கொடுக்குது.. அது எப்படி 5 மாசம் ஆகுற வரை அம்மக்கு தெரியாம இருக்கும்.... ஹ்ம்ம்ம் எப்பவும் டீவி சீரியலே கதினு இருந்தா இப்படித்தான் வீட்டுல என்ன நடக்குதுனே தெரியாது....
ReplyDeleteநல்ல இடுகை.....
ReplyDeleteபல இடங்களில் உதவி செய்யும்போது தொல்லையும் கூடவே வருகிறது....
மாணவி - என்னத்த சொல்ல.... இனி அவள் வாழ்க்கை....