ஆறுகளை பெண்களாய் நினைத்து போற்றி கொண்டாடுவது நமது வழக்கம். அம்மன் மாதமான இந்த ஆடியில் பெண் ரூபமான நதிக்கும் முன்னுரிமை கொடுத்து வழிபாடு செய்யும் பழக்கம் நம்மிடம் உண்டு. பஞ்சபூதங்களை நாம் கடவுளாய் நினைத்து நாம் வணங்குகிறோம். பஞ்சபூதங்களில் தண்ணீரை நாம் அதிகம் விரயம் செய்தால் பணமும் விரயம் ஆகுமென சாத்திரம் சொல்லுது. கங்கை, யமுனை, காவிரி மாதிரியான புண்ணிய நதிகளை வழிபடுவது நம்மிடையே இருந்தாலும் ஆடி மாதம் இவைகளை வழிபடுவது இன்னும் விசேசமானது. ஆடிப்பெருக்கு உண்டான கதையை இனி பார்ப்போம்.
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.
மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின் மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார். அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன்.
மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின் மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார். அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன்.
ராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்லநேர்ந்தது. ராமன் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தால் பலர் கொல்லப்பட்டதால் ராமனுக்கு பிரம்மஹத்திதோசம் பிடித்துக்கொண்டது. இந்த தோசத்திலிருந்து தான் விடுபட என்ன செய்ய வேண்டுமென வசிஷ்ட முனிவரிடம் ராமன் கேட்டான். இந்த பாவத்திலிருந்தும், தோசத்திலிருந்தும் விடுபட காவிரியில் ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உன்னை பிடித்திருக்கும் தோசங்கள் நீங்குமென கூறினார் வசிஷ்டர். முனிவர் கூறியது போல ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி தன் பாவத்தை போக்கிக்கொண்டார்.
இந்நாளில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், அவர்தம் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்திட்டு, தங்களால் முடிந்த புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், நகை, பாத்திரமென சீர் செய்வர். சாதாரண மனிதனே இவ்வாறு சீர் செய்யும்போது , காவிரியை தங்கையாய் ஏற்றுக்கொண்ட ரங்கநாதர் சும்மா இருப்பாரா?!
தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது.
அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்குசீர் வரிசையை கொண்டு வருவார்கள்.அதை பெருமாள்முன் வைத்து, உங்கள் தங்கைக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கும் சீரை பாருங்கள் என காட்டுவார்கள். அதன்பின் தீப ஆராதனையும் செய்வார்கள். அதன்பின், புடவை, தாலிப்பொட்டு, பூ,பழம், வெற்றிலை, பாக்கு என அத்தனையையும் காவிரியில் மிதக்க விடுவர். .
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில் வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
அங்கே தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்.... பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள். வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. அதேசமயத்தில் சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள். தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதைப் போல இருக்கும் இந்தக் காட்சி.
தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது.
அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்குசீர் வரிசையை கொண்டு வருவார்கள்.அதை பெருமாள்முன் வைத்து, உங்கள் தங்கைக்காக நாங்கள் கொண்டு வந்திருக்கும் சீரை பாருங்கள் என காட்டுவார்கள். அதன்பின் தீப ஆராதனையும் செய்வார்கள். அதன்பின், புடவை, தாலிப்பொட்டு, பூ,பழம், வெற்றிலை, பாக்கு என அத்தனையையும் காவிரியில் மிதக்க விடுவர். .
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில் வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
இவ்வாறு பூஜித்த மஞ்சள் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும், ஆண்கள் தங்கள் கைகளிலும் கட்டிக்கொள்வர். காவிரியை பூஜித்து சந்தோசப்படுத்தின்னால் நம் குடும்பத்திற்கும் எந்த தீங்கும் வராது. நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவரின் ஆயுள்அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சள் கயிற்றைமாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
திருமணமான பெண்ணுக்கு, தாலி கோர்த்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் இணையும் சமயம், மூத்த சுமங்கலிகள், அப்பெண்ணை இனி இக்கயிறு பிரியாமல் தீர்க்க சுமங்கலியாக வாழட்டும் என்றும், இழை பிரியாமல் இல்லறம் நல்லறமாகட்டும் என்றும், இக்கயிறுப்போல தம்பதிகள் பிரியாமல் இருக்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள். ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். ஆற்றங்கரையை அடைய மூன்று மணி நேரமாகும். அங்கே தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்.... பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள். வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. அதேசமயத்தில் சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள். தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதைப் போல இருக்கும் இந்தக் காட்சி.
சிறுவர்கள் இவ்வாறு குதூகலிக்க, வாலிபர்களோ.... கரையில் இருக்கும் மரங்களின் மீதேறி ஆற்று வெள்ளத்தில் குதித்துக் கும்மாளமிடுவார்கள். ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள்.
அட்சய திருதியை மட்டுமில்லாம இன்றைய நாளில் நகைகள் வாங்க உகந்தது. நகைகள் மட்டுமில்லாம, வீட்டு உபயோகபொருட்கள் வாங்கவும், புதுத்தொழில் தொடங்கவும் இந்நாள் சிறந்தது. ஆடிமாதத்தில் புதுத்தொழில் எதும் தொடங்கப்படுவதில்லை. ஆனா, ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்கு. இந்நாளில் செய்யப்படும் எதுமே பல்கிப்பெருகும். அதனால, பொருள்தான் வாங்கனும்ன்னு இல்ல. தான தர்மங்களும் செய்யலாம். அனைவரையும் வாழ வைக்கும் காவிரித் தாயை வழிபட்டு நன்றி செலுத்துதல், குடும்ப ஒற்றுமை, ஊர் ஒற்றுமை, குதூகலமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவுவதற்கு ஆடிப்பெருக்கு விழா தூண்டுகோலாக இருக்கிறது. இனியேனும், தண்ணீருக்கு மரியாதை கொடுப்போம். ஆறுகளைச் சுத்தமாக்குவோம். ஆடிப்பெருக்கன்று பழைய களை கட்டட்டும்!
நன்றியுடன்
ராஜி.
நிறைய விடயங்கள் அறிந்தேன் புகைப்படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதங்கைக்கு சீர் பாத்திரங்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கு.... பழங்கள் விற்கும் விலையில் இன்று இதெல்லாம் சாத்தியமா ?
அப்ப உங்கக்கிட்ட இருந்து இந்த தங்கச்சிக்கு சீர் எதும் தேறாதாண்ணா!?
DeletePala puthiya thagaval arithu kondan. vaalthukal.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅரசு நிர்வாகமும் மனிதர்களும் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக நதிகளையும் நீர் நிலைகளையும் கருதும் மனப்பாங்கு நீங்கினால்தான். உண்மையான ஆடி (ஆனந்த) பெருக்கு மனிதர்களுக்கு .நல்ல புத்தியை அந்த காவிரி மாதா அருளவேண்டும்.
ReplyDeleteஆமாம்ப்பா. இப்பதான் எல்ல ஆறு, குளம்ன்னு தூர் வாறிக்கிட்டிருக்காங்களே. ஊர் கூடினா தேர் ஓடும். ஒருசிலர் ஓடி என்ன செய்ய?
Deleteஆறுகள் ஓடிவரும் அழகை ரசித்தேன் :)
ReplyDeleteரசித்தமைக்கு நன்றிண்ணே
Deleteகங்கையென வரும் பதிவுகள் கண்டு களித் தேன் த ம 5
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா
Deleteபடங்களை பார்த்தாவது மகிழ்ந்து கொள்வோம்...!
ReplyDeleteஆமாம்ண்ணே.
Deleteஆடிப் பெருக்கின்மகத்துவம் பற்றி விரிவாக தந்துள்ளீர்கள். காவேரிதாயை வணங்கும்
ReplyDeleteநீர் நிலைகள் நிரம்பட்டும்.
எங்க ஊர் குளம் இப்பவே பாதி நிரம்பிட்டுப்பா
Deleteஆடிப்பெருக்கின் மகத்துவத்தையும், காவிரியின் பெருமையையும், புராண இதிகாசங்களோடு விளக்கமான ஒரு பதிவு. மறுபடியும் அகத்தியர் இந்த பூமிக்கு வந்தால், கமண்டலத்தை தமிழ்நாட்டில் மேட்டுர் பக்கம் மட்டுமே கவிழ்க்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆடிப் பதினெட்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஏன்?! எங்க ஊர்லாம் என்ன பாவம் செந்ததாம்?!
Deleteபடத்திலாவது தண்ணீர் கொட்டுகிறதே மகிழ்ச்சி
ReplyDeleteபிளாஸ்டிக்கை கண்ட இடத்துல போடனும்., இருக்குற மரத்தையெல்லாம் வெட்டிடனும், ஆறு, கால்வாய், ஏரிலாம் வீடு கட்டிடனும்,அப்புறம் மழை வரனும், கூடவே ஆத்துல தண்ணி ஒடனும்.
Deletetha.ma.6
ReplyDeleteநன்றிண்ணே
Deleteஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள். அழகான விவரங்கள்.
ReplyDeleteபடத்தில் தண்ணீரைப் பார்க்கும் போது ஆனந்தம்.
ஆமாம்மா. படத்துல பார்க்கும்போதே இப்படின்னா.. இன்னும் நேர்ல பார்த்தா?
Deleteதமிழ்மண வாக்கு - 7
ReplyDeleteநன்றிம்மா
Deleteநல்ல பகுர்வு. தண்ணீர் மட்டும் தான் இல்லை. வெறும் கொண்டாட்டம் மட்டுமே மிச்சம்.
ReplyDeleteகொண்டாட்டமாவது இருக்கேன்னு சந்தோசப்படுங்கண்ணே
Deleteஆடிப் பெருக்குன உடனே அருவியும் தண்ணியுமா ஓடுது..ஹப்பா இங்கனயாவது பாத்து கண்குளிர பாத்து சந்தோஷப்பட்டுக்கறேன்...பபின்ன வீட்டுல தண்ணியே இல்ல....சரி நான் கொஞ்சம் பிடிச்சுக்கலாம்னு பார்த்தா...ஹிஹிஹி...நெட் வழியாவே தண்ணீ பிடிச்சுக்கலாம்னா நல்லாத்தான் இருக்கும்...
ReplyDeleteஇனி பாருங்க வருங்காலத்துல எல்லாமே வெர்ச்சுவலா ஆயிடப் போகுது...
கீதா
நெட் வழியா எல்லாம் கிடைக்குது.. தண்ணி, உணவு, உடைன்னு கிடைச்சா?!
Deleteபத்தாவது வாக்கை அளித்து, பக்தியுடன் படித்துச் செல்கிறேன்!
ReplyDeleteபக்தி இல்லன்னா உம்ம்மாச்சி கண்ணை குத்திரும்
Deletearumayana virivana vilakkam
ReplyDelete