Monday, August 21, 2017

மரம் மனுசனுக்கு மட்டுமே சொந்தமா?! ஐஞ்சுவை அவியல்

மாமோய்!  டிஃபன்  எடுத்து வச்சிருக்கேன். சாப்பிடுங்க. 


இதென்ன புதுப்பழக்கம்?! வா சேர்ந்து சாப்பிடலாம்..

ம்க்கும். உன்ன்ன்னாக்கூட ரொம்ப இம்சை மாமா. இன்னிக்கு திங்கக்கிழமை.. சோமவார விரதம் நான் இருப்பேங்குறது மறந்துடுச்சோ!

அட, ஆமாம்ல்ல.. மறந்துட்டேன். சரி காஃபி போட்டு தரேன். சேர்ந்து சாப்பிடலாம் வா. 

ம்ம்ம் மாமா சோமவார விரதம்ன்னா என்னன்னு உனக்கு தெரியுமா?! இந்த விரதத்தை ஏன் இருக்காங்கன்னு தெரியுமா?!

ம்ம்ம் சோமவாரம்ன்றது வார நாட்களில் திங்கட்கிழமையை குறிக்குது. பெரும்பாலும் இந்த விரதம் இருக்க ஆரம்பிக்குறவங்க கார்த்திகை மாசம் முதல் திங்கட்கிழமைதான் ஆரம்பிப்பாங்க. . ஒருவேளை அப்படி ஆரம்பிக்க வாய்ப்பு கிடைக்காதவங்க ஆவணி முதல் திங்கள்கிழமைல இருந்து ஆரம்பிக்கலாம்.. 


சிவனும், பார்வதியும் பேசிக்கிட்டிருக்கும்போது பேச்சு சோமவார விரதத்தின் பக்கம் போனது. சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு பிடித்தவர்கள். என்னிடத்தில் அவர்களுக்கு இடம்கொடுப்பேன்னு சிவன் சொல்லி விரதம் எப்படி இருக்குறதுன்னும் சிவனே பார்வதிதேவிக்கிட்ட சொல்லி இருக்கார்..  விரதம் இருப்பவர் விரதநாளில் அதிகாலையில் நீராடி தினசரி கடமைகளை முடித்து சிவபூஜை செய்யனும்.  தினமும் சிவபூஜை செய்யும் அந்தணரையும், அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவன், பார்வதிதேவியாய் நினைத்து அவர்களுக்கு முடிஞ்சளவுக்கு தானம் செய்யனும். விரதநாளில் பகல் முழுவதும் உண்ணாவிரதமிருந்து இரவு வரும்முன் ஒருவேளை மட்டும் உணவருந்தி சிவசிந்தனையோடு இருந்து வீட்டிலும் சிவபூஜை செய்யனும்.  வீட்டில் சூழ்நிலை சரியா இல்லைன்னா கோவிலுக்கு போய் அடியவர்களுக்கு அன்னதானம் செஞ்சு விரதத்தை முடிக்கனும்..  சோமவாரம் விரதம் இருப்பவர்கள் கையால் உணவு வாங்கி உண்பதும் மிக்க புண்ணியம். சோமவார விரதமிருந்து சந்திரன் சிவப்பெருமானின் தலையில் இடம்பெற்றதையும், அருந்ததி என்ற கற்புக்கரசி நட்சத்திரமானதையும்  ராஜி விரிவா பதிவு போட்டிருக்கா. போய் பாரு. குறைஞ்சது 16 வாரம் இந்த விரதம் இருக்கனும். அப்படி இருந்தா பிரிந்த தம்பதிகள் சேர்வர், குழந்தை பாக்கியம் கிட்டும். களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். சகல சௌபாக்கியமும் கிட்டும்ன்றது நம்பிக்கை. 



சரி மாமா...  விரதம் பத்தியும், விரதம் இருக்க வேண்டிய முறை பத்தியும், இருந்தா என்னென்ன கிடைக்கும்ங்குறதையும் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, மரம் வெட்டுறதால என்னென்ன தீமை நடக்கும்ன்னு நிறைய படிச்சிருக்கேன், டிவி, ரேடியோவுலலாம் சொல்லி கேட்டிருந்தாலும் புரியாத எனக்கு இந்த படத்தை புரிஞ்சுக்கிட்டேன். மனசும் கனத்து போச்சு மாமா.  இனி மரம் நட்டு வளர்க்குறதுல ஆர்வம் காட்டுவேன். நீங்களும் இந்த படத்தை பாருங்க.


ஐயோ! பார்க்கும்போதே கொடுமையா இருக்கு. மரம் மனுசனுக்கு காய், பழம், காத்து, நிழல் மட்டும் கொடுக்கலை. எத்தனையோ உயிர்களின் இருப்பிடமாவும் இருக்குங்குறதை என்னிக்குதான் புரிஞ்சுக்கபோறோமோ?! ஒருத்தருக்காக எத்தனை நாள் காத்திருக்கலாம்?! ஒரு வாரம், மாசம்... இல்ல வருசம்.. ஆனா ஒருத்தர் இங்க உயிர் போறவரை காத்திருந்திருக்காராம்.. நம்புற மாதிரியாவா இருக்கு இதுலாம்?!


ம்க்கும் எல்லாத்துக்கும் கற்பூர வாசனை தெரியுமாக்கும். உன்னைலாம் கட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! 


இதை பார்த்து சிரிச்சுட்டு.. நான் சொல்லும் விடுகதைக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்...

மாரி இல்லாமல் ஆமைக்கெட்டது, ஆமை இல்லாமல் சீமை கெட்டது அது என்ன?!

இதுக்கு விடை யோசிக்கிட்டே இருங்க. நான் போய் பதிவு போட்டுட்டு வரேன்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..


நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. இந்த வாரம் சோமன் விரதம் இருந்த விசயம் அறிந்தேன்.

    மரம் மனிதனுக்கு பல வகைகளிலும் பலன் அளிக்கிறது எல்லாம் மறந்து விட்டான் மனிதன்.

    விடுகதை இதோ..... வர்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நில்லுண்ணே! ஓடாத...

      Delete
  2. சிவன் கூட ராஜியின் பதிவுகள் படிக்கிறார்! :)))

    மரம் வெட்டுவதன் தீமை- படம் பதைக்க வைக்கிறது.

    வே. பாபுவின் கவிதை அருமை.

    மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. சிவன் என் பதிவைலாம் படிக்குறாரா?! இது எப்பத்திலிருந்து...

      Delete
  3. சிவன், ராஜியின் பதிவைப் படிக்கக் கூறியதை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ச்ச்ச்ச்சும்மா சுவாரசியத்துக்காக...

      Delete
  4. வேறென்ன...? வேளாண்மை தான்...

    ReplyDelete
  5. மரம் வளர்போம் உயிரினம் காப்போம்

    ReplyDelete
  6. மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்றே வருகிறது ,சோமவார விரதம் இருந்தால் இந்த பிரச்சினை தீருமான்னு கேட்டு சொல்லுங்க :)

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் இதுக்கு எதுக்கு விரதம்லாம். ஹிஸ்டரிலாம் க்ளியர் பண்ணுங்கண்ணே

      Delete
  7. அருமையான தகவல்கள் எங்கள் தெய்வமான சிவன் குறித்து....

    அடுத்து வேதனை! மனிதன் சுயநலவாதி!

    கவிதை அருமை! ரசித்தோம்....

    கீதா: மேலே உள்ள கருத்துகளுடன்.... ஹலோ இன்னாங்க ராஜி!!! பதிவுக்கு சிவனை எல்லாம் கூப்பிட்டு விளம்பரம் செய்ய வைக்கறீங்க ஹாஹாஹாஹாஹா....ஆனா ரசித்தோம்ன்றது வேற!! மாரி இல்லாம ஆறெல்லாம் வத்தி ..வயல் காஞ்சு விவசாயிகள் எல்லாம் நலிந்து...அதாங்க விடை...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வெளம்பரம் செஞ்சது குத்தமாய்யா... எங்க ஊரு லோக்கல் டிவில மொபைல் விளம்பரத்துக்கு நாரதரும், நாராயணனும் வருவாக.

      Delete
  8. இப்போ த ம 1௦ ஒகே ஆகிவிட்டது :)

    ReplyDelete