சமீபத்துல முகநூலில் பங்குனி உத்தரத்தன்று முருகன் புல்லட் வாகனத்துல ஹெல்மெட்டோடு பவனி வந்தார்ன்னு வைரல் ஆச்சு. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னாலும், ஆனா, விதம்விதமா அலங்காரத்தை கண்டு ரசிப்பேன். அதன்படி இணையத்துல கண்டு ரசித்த தெய்வ அலங்காரங்கள் சில..
தலைக்கவசம் அவசியம்ன்னு உணர்த்தும் முருகன்...
பால்கோவாவினால் அலங்கரித்த சிவன்...
உக்கிரமான நந்தி பகவான்...
சேலைக்கு மயங்காத பொண்ணுண்டா?! அம்மனும் விதிவிலக்கல்ல...
கொலுசினால் அலங்கரித்த அம்மன்...
வளையல் அலங்கார வாகனத்தில் அம்மன்
வளையல் அலங்காரத்தில் அம்மன்...
வெண்ணெய் அலங்காரத்தில் நந்தி...
சாக்லேட் அலங்காரத்தில் அம்மன்...
பொதுவா எல்லாருக்கும் பொறந்த நாள் வருசத்துல ஒருமுறைதான் வரும். ஆனா எனக்கு மட்டும் ரெண்டு முறை வரும். இங்க்லீஷ் தேதிப்படி வாக்கப்பட்ட வீட்டிலும், இணையம், நட்புகளும் கொண்டாடுவாங்க. ஆனா, அப்பா, அம்மா மட்டும் தமிழ் தேதிப்படிதான் கொண்டாடுவாங்க. கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சு பொறந்ததால முதல் வருஷ பொறந்த நாளை ரொம்பவே விமர்சையா கொண்டாடினதா சொல்வாங்க. அப்பவே மைக் செட் , சீரியல் பல்பு கட்டி, ஊருக்கே சாப்பாடு போட்டதா சொல்வாங்க.
வருசா வருசமும் அப்படி கொண்டாட முடியலைன்னாலும் புது துணியும், சாக்லேட் மட்டும் ஒவ்வொரு வருசமும் வந்திடும். கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து வந்தால் பிறந்தநாள் கொண்டாட்டம் பினிஷ். அது திருமணத்தின் வரை மட்டுமே. பிள்ளைங்க பிறந்தபின், பிறந்த நாள் கொண்டாட்டம் வெறும் பிரியாணியோடும், 100ரூபாயோடும் முடிஞ்சுடும். ஆனா, இந்த வருஷம் என்ன நினைச்சங்களோ தெரியலை. புடவை ஒன்னு எடுத்து கொடுத்தாங்க . புடவை + 100 ரூபாயும் அம்மா வீட்டு சீதனமாய் ....... இந்த வருஷம் பொண்ணுங்களும் ஆளுக்கொரு சேலை எடுத்து கொடுத்து அசத்திட்டாங்க.
பர்த் டே கொண்டாட்டத்துல பதிவு எழுத முடில. அதான் சாமி படங்களை சுட்டு பதிவு தேத்தியாச்சு..
பிளாக்கிலும், முகநூலிலும், போனிலும் வாழ்த்து சொன்ன, சொல்ல மறந்தவங்களுக்கும், இதுக்குலாம் பொறந்த நாள் வாழ்த்து சொல்லனுமான்னு சொல்லாம விட்டவங்களுக்கும் நன்றியோ நன்றி.
நன்றியுடன்,
ராஜி
இத்தனை விதமான அலங்காரங்களா.. கண்ணுக்கு விருந்து....
ReplyDeleteஆஹா மொத்தத்துல உங்களுக்கு புடவைகள் கிடைத்து விட்டது.. சந்தோஷமாக இருக்குமே.
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ
இன்னமும் நிறைய அலங்காரங்கள் இருக்கு சகோ. இது அவசரத்துல தயார் செய்த பதிவு. அதான் கொஞ்சமா படங்கள்
Deleteபிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ
அலங்காரங்கள் சுவாரஸ்யமாய்த்தான் இருக்கின்றன.
ReplyDeleteமகள்களின் பரிசு ஒரு இனிய ஆச்சர்யமாய் இருந்திருக்கும் உங்களுக்கு.
மறுபடியும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.
புடவைகள் அதிகம் விரும்புவதில்லை. பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே சில புடவைகள் எடுக்கும் பழக்கம் எனக்கு. எனக்கு புடவை பரிசளித்தது ஆச்சர்யமே! அதும் மயிலிறகு கலர் ரொம்ப நாளாய் நான் எடுக்க ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தேன்
Deleteமுதல் படத்தினை ரசித்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அலங்காரங்கள் அழகு.
ReplyDeleteமீண்டும் வாழ்த்துகளுடன்...
மீண்டும் வாழ்த்தியமைக்கு நன்றிண்ணே
Deleteஆர்டருடன் இலவசமாக ஒரு புடவையை தவற விட்டீர்கள்...!
ReplyDeleteபெரியவ வாட்ஸ் அப் நம்பர் பொங்கல் போதே அனுப்பிவிட்டேன் என நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.
Delete