Tuesday, March 12, 2019

இதுவா பூரி, சப்பாத்திக்கான சைட் டிஷ்?! - கிச்சன் கார்னர்

 பூரி, சப்பாத்திக்கு கிழங்கும், வடகறியும் சைட் டிஷ்சா சாப்பிட்டு சாப்பிட்டு போரடிச்சு போச்சா?! முட்டைக்கோஸ்ல ஒரு சைட் டிஷ் புதுசா பார்க்கலாமா?! புதுசுன்னு நான் சொல்றேன் . எத்தனை பேரு இப்படி செய்றாங்களோ எனக்கு தெரில!!

தேவையான பொருட்கள்...
பைத்தம் பருப்பு - 1/2 ஆழாக்கு
கோஸ்,
வெங்காயம்
தக்காளி
மிளகாய் தூள்
தேங்காய் துருவல்
உப்பு
எண்ணெய்
கடுகு
பூண்டு 
காய்ந்த மிளகாய்
பெருங்காய தூள்
கறிவேப்பிலை கொத்தமல்லி...


Image may contain: food
பைத்தம் பருப்பை கழுவி வேக விடுங்க.. நான் குக்கரில் அதிகம் சமைப்பதில்லை.. பருப்பு வேகவைக்க மட்டுமே குக்கர் பயன்படுத்துவேன். பருப்பு வேகும்முன் கோஸ்சை கழுவி பொடியா நறுக்கிக்கோங்க.  வெங்காயம் தக்காளியை பொடியை வெட்டிக்கோங்க.
Image may contain: food
பருப்பு வெந்ததும் வெட்டி வச்ச கோஸ்சை போடுங்க. மிளகாய் தூள்  சேருங்க..

Image may contain: food
மிளகாய் தூள் கொதிச்சதும்  வெட்டி வச்ச வெங்காயம் தக்காளியை சேர்த்து வேகவிடுங்க. 

Image may contain: food
Image may contain: food
தேவையான அளவுக்கு உப்பு சேருங்க...
Image may contain: food
தேங்காய் துருவல் சேருங்க..
Image may contain: food
பெருங்காயம் சேர்த்து, தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊத்தி கடுகு போட்டு நசுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கி கொட்டி அடுப்பை ஆ பண்ணிட்டு இறக்கிடுங்க.
Image may contain: food
சப்பாத்தி, பூரிக்கு ஏத்த சைட் டிஷ்.  நெய் ஊத்தி சுடுசாதத்துல பிசைஞ்சும் சாப்பிடலாம்.
Image may contain: food
இது என் மாமியார் வீட்டில் செய்வாங்க. முதன்முதலில் கோஸ்ல பூரிக்கு சைட் டிஷ் செய்யும்போது பயந்துக்கிட்டே சாப்பிட்டேன். நல்லா இருந்துச்சு. அவங்க தேங்காய் துருவல் சேர்க்கமாட்டாங்க. நான் சேர்ப்பேன்.

இப்படி உங்க வீட்டில் செய்வீங்களா?!

நன்றியுடன்,
ராஜி

14 comments:

  1. பார்க்க நல்லா இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடவும் நல்லா இருக்கும்.

      Delete
  2. புதுசா இருக்கு... செய்து பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா! புதுசுதானா?! இப்பதான் நிம்மதியா இருக்கு.

      Delete
  3. இதுவரை இப்படி செய்தஇல்லை.

    சைட் டிஷை விடுங்க.. பூரி பார்க்க அருமையா இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. பூரி நல்லாவே செய்வேன். எல்லா பூரியுமே பூரிச்சு வரும். ரவை ஒரு ஸ்பூன், மைதா, கோதுமை சரிபாதி, சர்க்கரை ஒரு ஸ்பூன், எண்ணெய் சேர்த்து நல்லா கலந்து பிசைந்து கொஞ்ச நேரம் கழிச்சு பூரி சுட்டால் பூரிச்சு வரும். மாவும் கெட்டியாகவும் இல்லாம இளக்கமாவும் இல்லாம சரியான பதத்தில் இருக்கனும். அதான் முக்கியம்.

      Delete
  4. சூப்பர் டிஷ் ராஜி...கோஸ் பொரிச்ச கூட்டு....வித் வெங்காயம் தக்காளி....நான் வெங்காயம் தக்காளியை கொஞ்சம்...லைட்டா வதக்கிச் சேர்ப்பதுண்டு...

    பூரியும் சைட் டிஷும் பார்க்கவே நல்லாருக்கு ராஜி..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தபா வதக்கி சேர்த்து பார்க்கிறேன் கீதாக்கா

      Delete
  5. இதுல தேங்காய் சேர்த்தும் செய்யலாம் சேர்க்காமலும் செய்யலாம்...கோஸ்ல வேற வேற கூட்டும் செய்யலாம்....நல்லாருக்கும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கோஸ்ல கூட்டு செய்யலாம் கீதாக்கா. ஆனா, பூரிக்கு, சப்பாத்திக்கு தொட்டுக்கனுமே!

      Delete
  6. வெங்காயம், தக்காளி வதக்கி போட்டு சீரகம், ஒரு பல் பூண்டுவைத்து தேங்காய்பூவை பிறு பிறு என்று அரைத்து வெந்த பாசிப்பருப்பு முட்டைக்கோஸுடன் கலந்தால் நன்றாக இருக்கும்.
    உங்கள் செய்முறையும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லியவாறு கோஸ் பொரியலாய் செய்வதுண்டு.

      Delete
  7. Replies
    1. பயப்படாம செய்து தரச்சொல்லுங்க. சாப்பிட நல்லா இருக்கும்

      Delete