டிங்... டிங்... டிங்...ன்னு ரோட்டில் மணிசத்தம் கேட்டால் சோன்பப்டிக்காரர் வந்திருக்கார்ன்னு அர்த்தம். எட்டிப்பார்த்து, அவரை கொஞ்ச நேரம் இருக்கச்சொல்லிட்டு, வீட்டுக்குள் வந்து, சேர்த்து வைத்திருக்கும் குளத்தங்கரை, ஏரிக்கரையில் கண்டெடுத்த பீர்/பிராந்தி பாட்டில் பழைய பேப்பர், இரும்பு, உடைஞ்ச குடம் இதுலாம் எடுத்துக்கிட்டு போய் சோன்பப்டிக்காரர்கிட்ட கொடுத்தால் பாதியாய் வெட்டி வச்சிருக்கும் பேப்பரை லாவகமா கூம்பாக்கி அதில் கொஞ்சம் சோன்பப்டி போட்டு தருவார். காசுக்குலாம் கொடுக்க மாட்டார். கெஞ்சி கேட்டால் மட்டுமே போனால் போகுதுன்னு பத்து காசுக்கு கொஞ்சமா தருவார். என்னதான் இன்னிக்கு விதம்விதமான ஃப்ளேவரில் சோன்பப்டி சாப்பிட்டாலும் அன்றைய சோன்பப்டியின் சுவை வராது.
சிலசமயம் எங்க வீட்டில் அம்மா கோழி வளர்த்திருக்காங்க. மாலையில் கூடையை கோழிமேல் கவுத்து போட்டு மூடி, கூடை நகராமல் இருக்க, கனமான கல்லை வைப்பாங்க. காலையில் கோழியை திறந்து விடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். கோழியை வாங்கி சிலநாட்கள் வீட்டிலேயே கட்டி வைப்பாங்க. பிறகு, வெளியில் போகாதமாதிரி வாசல் தோட்டத்தில் வச்சிருப்பாங்க. ஒரு வாரம் பத்து நாட்கள் கழிஞ்சதும், அடுப்பு முன் கோழியை மூன்று தடவை சுத்தி வெளியில் அனுப்புவாங்க. காலையில் போன கோழி மாலை நேரத்தில் சமர்த்தா வீடு வந்து சேர்ந்திடும். ஒருவேளை அப்படி வரலைன்னா கோழி நமதில்லைன்னு தெரிஞ்சுக்கலாம். கோழியின் இனப்பெருக்க காலம் வந்தால், கோழி வீட்டையே சுத்தி சுத்தி வரும். அதை தெரிஞ்சுக்கிட்டு அம்மா கூடையை சுவத்தில் சார்த்தி வைப்பாங்க. கோழி கூடைக்குள் போய் உக்காந்து முட்டையிடும். முட்டை இட்டபின் கோழி வெளில போகாது. அதை துரத்தி அடிப்பது கஷ்டம். பிறகு முட்டையை கொண்டு வந்து சமைச்சு கொடுப்பாங்க. இல்லன்னா மொத்தமா முட்டை சேர்ந்ததும், வைக்கொல் நிரப்பி, அதன்மேல் முட்டை வைப்பாங்க. கோழியும் அடை காத்து குஞ்சு பொறிக்கும். சுடச்சுட கோழிமுட்டையை கையில் எடுப்பது அத்தனை சுகம்.
முதன்முதலாய் எங்க வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் இதுதான். படத்தில் ஒரு சின்ன வித்தியாசம், அப்பா ஸ்பீக்கரை திருப்பி வச்சிருப்பார். அப்பா தறி நெய்ய, இதில் பாட்டு ஒலிக்கும். சவுண்டு சும்ம அதிரிபுதிரியா இருக்கும். இப்படி பாட்டு கேட்டு வளர்ந்து வந்தாலோ என்னமோ நான் பாட்டு பிரியை ஆகிட்டேன்.
கிளாஸ்கோ பிஸ்கெட்... மளிகைப்பொருட்கள் வாங்கிவரும்போது மொத்தமா வாங்கி வந்து பாட்டில்ல போட்டு கைக்கெட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா தூரத்தில் வச்சிருப்பாங்க. தினத்துக்கு ஸ்கூலுக்கு போகும்போதும், ட்யூஷனுக்கு போகும்போதும் 5 தருவாங்க. அப்பலாம் சின்ன பாப்பாக்குலாம் இந்த பிஸ்கெட், சர்க்கரையை சுடுதண்ணில கரைச்சு கொடுப்பாங்க. அப்பத்திய செர்லாக் இதுதான். அதைப்பார்த்து அம்மா இல்லாதபோது நானும் கரைச்சு சாப்பிடுவேன்.
1979ல் சோனி நிறுவனத்தால் பாக்கெட்ல வச்சுக்குற மாதிரியான வாக்மேன் அறிமுகமாச்சு. எங்க வீட்டில் தங்கி படிச்ச அண்ணாக்கிட்டதான் இந்த வாக்மேனை முதன்முதலில் பார்த்தேன். இப்ப இருக்குற மாதிரி குட்டியூண்டா இருக்காது இயர் போன். பெருசா வளையல் சைசுக்கு ஸ்பீக்கர் கொண்ட இயர்போன் தான் இருக்கும். ரெண்டு ஸ்பீக்கரையும் இணைக்க வயரும், ஸ்ட்ப்னெசுக்கு ஸ்டீல் கம்பி இருக்கும். 4 புது பேட்டரி போட்டா 4 கேசட் ஓடும். அப்புறம் இழுக்க ஆரம்பிச்சிரும் . 90களில் வாக்மேன் மாட்டி பாட்டு கேட்பது பெரிய கெத்து...
கொசுவர்த்தி சுருள் மீண்டும் ஏற்றப்படும்....
நன்றியுடன்,
ராஜி.
இந்த சுருள் எனது நினைவுகளையும் பெரிய சுற்றாக சுற்றி விட்டது... அனைத்துமே இனிமையான நினைவுகள்...
ReplyDeleteஆமாம்ண்ணே. அத்தனையும் பொக்கிஷங்கள்
Deleteஆமாம்... எனக்கும் தோன்றும் அன்றைய சோன்பப்டி வேறு சுவையில் இருந்ததோ என்று... உங்களுக்கும் அப்படித் தோன்றுமா?
ReplyDeleteருசியின் வேறுபாடு எனக்கு தெரியும் சகோ. இப்பயும் ரோட்டில் விற்கும் சோன்பப்டியை வாங்கி சாப்பிடுவேன். அந்த ருசிக்கும் இனிப்பு கடைகளில் விற்கும் சோன்பப்டிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
Deleteஅடுப்புமுன் மூன்று தடவை சுத்தி வெளியே அனுப்புவாங்களா? அது ஏன்? பொதுவான காரணம் வீட்டுக்குத் திரும்பிவர... ஆனால் இது எப்படி வொர்கவுட் ஆகும்? என்ன நம்பிக்கை?
ReplyDeleteஎன்ன நம்பிக்கைன்னு தெரில. ஆனா, அம்மா அப்படிதான் செய்வாங்க. பத்தாண்டுகளுக்கு முந்திவரை திடீர்ன்னு நினைப்பு வந்தால் நாலு கோழிக்குஞ்சு வாங்கி வளர்ப்பாங்க. அப்பயும் இப்படிதான் செய்வாங்க.
Deleteக்ளாஸ்க்கோவா? பிரிட்டானியா இல்லை?
ReplyDeleteகம்பெனி பேர் எதுவா இருந்தாலும் இந்த ரவுண்ட் பிஸ்கெட்டுக்கு கிளாஸ்கோ பிஸ்கெட்ன்னுதான் பேரு.
Deleteவாக்மேன்... நானும் வைத்திருந்தேன். இந்த வரிசையில் பேஜரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ReplyDeleteபேஜரை நான் கண்ணுலக்கூட பார்க்கலீங்க சகோ. டெலிபோன்,... அங்கிருந்து செல்போன்தான்..
Deleteபிரிட்டானியா கம்பெனியின் பிரிட்டா பிஸ்கெட்! டின்களில் வரும்! நானும் சுவைத்திருக்கிறேன். ஐந்து பைசாவிற்கு ஐந்து தருவார் கடைக்காரர்!
ReplyDeleteகொசுவர்த்தி சுத்தி இருக்கீங்க... இனிய நினைவுகள் அவை...
நானும் கடைகளில் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். ஆனா, என்னோட பேவரிட் கலர் அப்பளம்தான். அதில் இருக்கும் சிக்கல், சாப்பிட்டப்பின் கலர் நாக்கில் ஒட்டி வீட்டில் காட்டிக்கொடுக்கும், ரெண்டாவது அப்பளம் மேல் அண்ணத்தில் ஒட்டிக்கும்.
Deleteநினைவுகளைப் பின்னோக்கி இழுத்துக்கிட்டுப் போய்ருச்சு... ரெண்டு பானையில் இது போல ஸ்பீக்கர் வச்சி... வீட்டுல இருந்தா தம்பி டொம்மு டொம்முன்னுதான் பாட்டுப் போடும்ன்னு அம்மா திட்டினாலும் சத்தமாய் பாடல்கள் கேட்பதுன்டு... அந்த ரொட்டி அதிகம் சாப்பிட்டிருக்கிறேன்...
ReplyDeleteஎங்க வீட்டில் ஒரு பானைதான்.. அதன்பின் டேப்ரிக்கார்டரும், ஸ்பீக்கர் பெட்டியும் வந்தாச்சு..
Deleteஇளமைக்கால நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வந்த பாதையை திரும்பி பார்க்குறதுல தப்பில்லைண்ணே
Deleteஇளமைக்கால நினைவுகளை ரசித்தேன். நானும் வாக்மென், பேஜர்லாம் வைத்திருந்தேன். ஆரம்ப காலத்துல எனக்கு செங்கல்ல (நீள் பகுதில) பாதி சைஸ்ல ஒரு மொபைல் கம்பெனி கொடுத்திருந்தாங்க. அதைப் பிடித்துக்கொண்டு, கார் ஸ்டீரியங்கையும் பிடிக்க முடியாது.
ReplyDeleteஇந்த வட்ட பிஸ்கட் ஓகே (இப்போவும் இது வருகிறது தெரியுமா? கேரளாவில் ஒரு கம்பெனி இதனைத் தயாரிக்கிறது. எனக்கு ரொம்பப் பிடித்தது). இதற்கு முந்தைய குச்சி ரொட்டி தெரியுமா? நான் 74-75ல் சாப்பிட்டிருக்கேன்.