எனக்கு ரவா இட்லின்னா பிடிக்கும். ஆனா, இதுவரை ஹோட்டலில் சாப்பிட்டதில்லை. எங்காவது கல்யாணம், காட்சின்னு போனால் சாப்பிடுவதோடு சரி. யூட்யூப், பேஸ்புக்ல உலா வரும்போது அடிக்கடி ரவா இட்லி செய்முறை கண்ணில் படும். அதில் தயிர் சேர்ப்பதால் புளிப்பு சுவையா இருக்குமோன்னு புதுசா ட்ரை பண்ண பயமா இருந்துச்சு.
நேற்று வீட்டில் யாருமில்லை. சரி ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு இறங்கிட்டேன். சின்னவதான் பரிசோதனை எலியா மாட்டிக்கிட்டா. நல்லாதான் இருக்கும்மான்னு சொன்னா. அது எந்தளவுக்கு உண்மைன்னுதான் தெரில:-( . ஆனா, இட்லி சாஃப்டா வந்தது. இனி அடிக்கடி செய்யனும். மருமகப்பிள்ளைக்கு ஆக்கிப்போட ஒரு புது டிபன் தயார்..
தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம்
கேரட்
இஞ்சி
ப.மிளகாய்
கறிவேப்பிலை கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
ஆப்பசோடா
உப்பு
ரவையை சுத்தம் செய்து வச்சுக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவி வச்சுக்கனும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியா நறுக்கி வச்சுக்கனும். இஞ்சியை கழுவி தோல் நீக்கி நசுக்கி வச்சுக்கனும்
வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடனும்..
ப.மிளகாயை போடனும்...
வெங்காயத்தை போட்டு லேசா வதக்கவும்..
நசுக்கி வச்சிருக்கும் இஞ்சியை சேர்க்கவும்..
துருவி வச்சிருக்கும் கேரட்டை சேர்த்து நல்லா வதக்கனும்...
கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து லேசா வதக்கனும்...
சுத்தம் செய்து வைத்திருக்கும் ரவையை கொட்டி வறுக்கனும்.... ஒரு ரெண்டு நிமிசம் வறுத்ததும் அடுப்பை அணைச்சி ஆற விடனும்..
ரவை+கேரட் கலவை ஆறினதும் ஒரு பங்கு ரவைக்கு முக்கால் பங்கு தயிர் சேர்த்து நல்லா கிளறி விடனும். கொஞ்சமா தண்ணி சேர்த்து கலக்கனும். தேவையான அளவுக்கு உப்பு, ஆப்பசோடா சேர்த்து கலந்து 15 நிமிசம் மூடி வச்சுடுங்க.
மாவு தண்ணியா இருக்கக்கூடாது. மாவு தண்ணியா இருந்தால் இட்லி சப்பையா இருக்கும். கொஞ்சம் கெட்டியா அள்ளி எடுத்து வைக்கும் பக்குவத்தில் மாவு இருந்தால்தான் இட்லி பூரித்து வரும். இட்லிப்பானையில் வச்சு அவித்தெடுத்தால் ரவா இட்லி ரெடி.
ரவை+கேரட் கலவையோடு தயிர் கலந்தபின் பத்து நிமிசம் கண்டிப்பா ஊறவிடனும். இல்லன்னா இட்லி கல்லுப்போல் இருக்கும். அதிகமா தண்ணி சேர்க்கக்கூடாது. தயிர் சேர்க்க விருப்பப்படாதவங்க ஈனோ சால்ட் சேர்க்கலாம். முந்திரிப்பருப்பு சேர்க்கலாம். வீட்டில் இல்லாததால் நான் சேர்க்கலை. பச்சை பட்டாணி கொஞ்சமா சேர்க்கலாம்..
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னிலாம் இதுக்கு சைட் டிஷ்சா பக்காவாய் பொருந்தும்..
நன்றியுடன்,
ராஜி
ரவா இட்லில வெங்காயமா? இது என்ன புதுசா இருக்கு?
ReplyDeleteஅப்படிதான் யூட்யூபில் செய்தாங்க
Deleteரவா இட்லி - பார்க்க நன்றாக இருக்கிறது. சுவைத்துப் பார்க்க ஆரணிக்குத் தான் வரணும் போல! வெங்காயம் சேர்த்து இட்லி - கேள்விப்பட்டதில்லை.
ReplyDelete