இந்துக்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப் போக இந்த காலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம் விதமா போடுதுங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலின்னு கிறுக்கி வைக்குதுங்க. எது எப்பையோ கோலம் போடுதுங்களா?! அதுவரைக்கும் சந்தோசம்.
எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எல்லா கோலத்தையும் போட்டுடக்கூடாது. பிறந்த குழந்தையை தொட்டில்ல போட, முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போது தொட்டில் கோலம் போடனும். சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு.. வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திதி, அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் இடக்கூடாது..
கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை. தெய்வீக சக்தியை வரவைக்கும் எந்திரமாகும். அதனாலேதான் அவை வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது. மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்வர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழுமா மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுது. அதேநேரம், சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவுது. இதனால் ரத்த ஓட்டம் சீராகுது. மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாம ஓரளவுக்கு சுத்தமான காத்து சுவாசிக்க கிடைக்கின்றது. இது நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவுது. குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுது.
புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுது. நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. இதனாலதான் சாகும்வரைகூட சில பாட்டிங்க கன்ணாடி போட்டதில்ல.
அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகுது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் எனற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
கோலம் போடுறதால ஐந்து குண நலன் நமக்கு கைவரும். அவை..
நேர மேலாண்மை..
என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரை கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனத் திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.
2. படைப்பாற்றல்
கோலம் போடுறது என்ன கவிதையா இல்ல கதை எழுதுறதா இதுல படைப்பாற்றல் வெளிப்படன்னு நினைக்கலாம். உண்மையில் அவற்றைப் போலவே ஒரு கலைதான் கோலம் போடுவதும். கோலப் புத்தகம் பார்த்து போடுவது, இணையதளங்கள் உதவியோடு சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை வரும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியையும் எழுப்பி விடுகிறீர்கள்.
3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ....
32 புள்ளிகள் வைத்து, அதனை யொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்து விடலாம்.
முடிவெடுக்கும் திறன்...
இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்கு எந்த டிஸைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேண். இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவு வரை நீளும்.
5. போட்டி மனப்பான்மை:
'நான் யாருக்கும் போட்டி இல்லை.. எனக்கு யாரும் போட்டி இல்லன்னு சினிமா டயலாக்குலாம் சொல்லாம நான் எந்த போட்டியை சொல்றேன்னு புரிஞ்சுக்கனும். ஆரோக்கியமான போட்டி சொல்றேன். நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்
இனியும் நம்ம வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம். கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க. கோலம் மேற்கு, கிழக்கு நோக்கி முடிந்தால் நல்லது.
இங்கு பகிர்ந்திருக்கும் கோலங்களில் முதலிரண்டு தவிர அத்தனையும் மார்கழி மாதம் நான் போட்டு முகநூலில் பகிர்ந்த கோலங்களாகும்.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
நன்றியுடன்,
ராஜி.
அழகிய கோலங்களுடன் பதிவு அருமை சகோ
ReplyDelete//கோலம் போடுறது நல்லதாம்.... சொல்லிக்கிட்டாங்க.//
அப்படீனாக்கா.... இதை நீங்க சொல்லவில்லையோ....
நான் சொல்லலண்ணே. எனக்கு ஒரு பெரியவாள் சொன்னாரு.
Deleteஎல்ல்லாம் சரி, அது என்ன?! சந்தடி சாக்குல அக்கான்னு சொல்லிட்டீங்க.
அப்படீனாக்கா.. என்றால் அக்கா கிடையாது குழந்தைகள் சொல்லும் வார்த்தை.
Deleteசரி சரி
Deleteமிக அருமை! கோலத்தைப்பற்றி இன்னும் நிறைய எழுதலாம்!
ReplyDeleteஇப்போது பெண்களில் நிறைய பேருக்கு கோலம் என்பதைப்பற்றித் தெரிவதேயில்லை. 15 வருடங்க்ளுக்கு முன்னால் என் வீட்டில் கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விட்ட போது ' ஒரே கண்டிஷன், தினமும் வாசலில் கோலம் போட வேண்டும்' என்று சொல்லி விட்டேன். அவர்கள் வீட்டுப்பெண் என்னிடமே ஒரு நோட்டில் கோலங்களை வரைந்து வாங்கிக் கொண்டு, தினமும் காலை 7 மணிக்கு மேல் மண்டி போட்டு அமர்ந்து கொன்டு கோலம் போடும் அழகைப்பார்க்கும் போதெல்லாம் அனைவரும் சிரிப்போம்!!
எனக்கு கோலம் போட ரொம்ப பிடிக்கும்ம்மா. ஆனா, என் பொண்ணுங்க ரெண்டுத்துக்கும் கோலம் போட உடம்பு வனையவே இல்ல.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகோலம்..............அருமையான பகிர்வு.கிராமப் புறங்களில் தான் இந்தக் காலத்தில் அதிகமாகப் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.....///இலங்கையில் இந்தப் பழக்கம் அறவே இல்லை.மலையகப் பகுதிகளில் கோவில் திருவிழாக்களின் போது கோலம் போடுவார்கள்.ஆங்கிலேயர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென் இந்தியத் தமிழர்கள் தான் மலை நாட்டுப் பகுதிகளில் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள்.அவர்கள் தான் மாரியம்மனை அதிகம் வழிபாடு செய்வார்கள்..........
ReplyDeleteஇப்ப நகர் புறங்களிலும் கோலம் போடுறாங்க. சின்ன பிள்ளைங்கக்கூட போடுறாங்க. ஆனா பாருங்க புள்ளி கோலமில்ல. எல்லாமே ரங்கோலிதான்
DeleteVirivana thagavuldan padagalum arumai vaalthukal.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ
Deleteபகிர்ந்து கொண்ட அனைத்தும் உண்மை சகோதரி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கண்ணே
Deleteஆண்கள் கோலம் போட்டால் நேரே சொர்க்கம் தான் என்று யாரும் சொல்லிக்கலையா :)
ReplyDeleteஇல்ல. ஆனா, ஆண்கள் போட்டா நரகத்துக்கு போவாங்கன்னு யாரும் சொல்லல
Deleteஅழகியகோலங்கள்.
ReplyDelete"ஆண்கள்கோலம்போட்டால்......" நன்கு ரசித்தேன்.
அதில் என்ன சந்தேகம் நிச்சயம் சொர்கம்தான் .:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க மாதேவி
Deleteகோலங்கள் அழகு. எல்லாம் ஒரு காரணத்தால் தான் நடக்கிறது.
ReplyDeleteஆமாம்ண்ணே. உங்களுக்கும், ஆதி அண்ணிக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்
Deleteதுளசி: எங்கள் கலாச்சாரத்தில் கோலம் என்பது இல்லை ஆனால் ஓணத்தின் போது அத்தப்பூ என்று பூக்களால் கோலம் போடுவது போல் அலங்கரிப்பது உண்டு.
ReplyDeleteகீதா: கோலங்கள் அழகுதான். விதம் விதமாகக் கோலம் போட்ட காலம் எல்லாம் போச்சு. ஊரிலிருந்த வரை தினமும் காலை 4.30க்குக் கோயில் போய் வாசல் மற்றும் கொடிமரம் கீழ பெருக்கி தண்ணி விட்டுக் கழுவி தண்ணிய தள்ளி கோலம் போட்டுட்டு வருவேன். பாட்டி ஒரு இடத்துல போட்டா நான் ஒரு இடத்துல போடுவேன். சமீப காலம் வரை தொடர்ந்தது. இப்போ ஃப்ளாட் ஆகிப் போனதால் போட முடியவில்லை...
நல்ல தகவல்கள்.
பிளாட்லயும் போடலாமேப்பா. பூஜை அறை, வாசல்ன்னு. சின்னதா போடனும், அவ்வளவ்தான்
Deleteகோலம் பற்றி எவ்வளவு தகவல்கள்! பத்தாவது வாக்கு.
ReplyDeleteகோலம் பத்தி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம், விரைவில் இன்னொரு பதிவு வரும் சகோ
Deleteகோலத்தின் வழியே தங்களின் உணர்வை பெண்கள் சொல்வார்களாம் உண்மையா ?
ReplyDeleteயாருக்கு எப்படியோ! எனக்கு அப்பிடிதான்.. மனசும், உடம்பும் நல்லா இருந்தா கோலம் பெருசா அழகா இருக்கும். இல்லன்னா, நாலு புள்ளி கோலம்தான்
Delete