Tuesday, October 02, 2018

மயக்கம் தரும் பொங்கல் - கிச்சன் கார்னர்

அரிசியும், பாசிப்பருப்பும் சேர்ந்ததுதான் பொங்கல். ஆனா, அது என்ன மாயமோ மந்திரமோ தெரில. பொங்கல் சாப்பிட்டாலே கண்ணை கட்டுது. அதனாலயே வேலை நாட்களில் பொங்கல் செய்றதில்லை. எனக்கும் என் பெரிய பொண்ணுக்கும் பொங்கல்ன்னா இஷ்டம். ஆனா, என் சின்ன பொண்ணுக்கு பொங்கல்ன்னா எட்டிக்காய்தான். 

தேவையான பொருட்கள்..
பச்சரிசி - 1 பங்கு
பாசிப்பருப்பு - 1/2பங்கு
சீரகம்
மிளகு
இஞ்சி, 
முந்திரி
எண்ணெய்
நெய்
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை.

அரிசியை அரை மணிநேரமாவது ஊற வச்சுக்கனும். இஞ்சியை தோல் சீவி நசுக்கி வச்சுக்கனும். பாசிப்பருப்பை கழுவிக்கனும்.
குக்கரில் எண்ணெய், நெய் ஊத்தி காய்ஞ்சதும் மிளகு, சீரகம் போட்டுக்கனும்.. மிளகு, சீரகத்தை பொடிச்சும் போட்டுக்கலாம். ஆனா, பொங்கல் கலர் மாறிடும். 
முந்திரியை போட்டுக்கனும்.
சுத்தம் செய்த பாசிப்பருப்பை போட்டு வறுத்துக்கனும். சிலர் முதல்லியே பாசிப்பருப்பை வறுத்து அரிசியோடு ஊற வச்சு சேர்ப்பதும் உண்டு. 
தட்டி வச்ச இஞ்சியை சேர்த்துக்கனும்.
ஒரு பங்கு அரிசி, பருப்புக்கு ரெண்டு பங்கு தண்ணி சேர்த்துக்கனும். 

பெருங்காயத்தூள் சேர்த்து நல்லா தண்ணியை கொதிக்க விடனும்.

அரிசியை நல்லா கழுவி சேர்த்து ஒரு கொதி கொதிச்சதும் குக்கர் மூடியை மூடி மூணு விசில் விட்டு அடுப்பை அணைச்சு பிரசர் அடங்கினதும் திறந்து நல்லா கிளறி விட்டுக்கிட்டா
குழைவான பொங்கல் ரெடி. சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இதுக்கு ஏத்த சைட் டிஷ். 

குக்கர்ல வைக்காம பாத்திரத்துல வைக்குறதா இருந்தால் முதல்ல பாசிப்பருப்பை குழைய வேகவச்சு பச்சரிசி, உப்பு சேர்த்து குழைய வேகவிட்டு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் மிளகு, சீரகம், முந்திரி பெருங்காயம்லாம் போட்டு தாளிச்சு கொட்டி கிளறி இறக்கினால் பொங்கல் தயார்.

நன்றியுடன்,
ராஜி


11 comments:

  1. பொங்கல் சுவை நிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பா?!

      நிறப்பு?! புதுசா இருக்கே இந்த வார்த்தை!!

      Delete
  2. பொங்கலுக்கு சாம்பாரையும், சட்னியையும் விட பொருத்தமான ஸைட் டிஷ் ஒன்று உண்டு.

    கத்தரிக்காய் கொத்சு.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! அடுத்த தபா செஞ்சு பார்க்குறேன்.

      Delete
  3. மணக்க மணக்க பொங்கல் அடடா...

    ReplyDelete
    Replies
    1. கண்ணு வைக்காதண்ணே

      Delete
  4. Replies
    1. இப்பலாம் பொங்கல் நல்லாவே செய்றேன்ண்ணே

      Delete
  5. எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

    இப்பொழுது எல்லாம் இரவு உணவுக்கு தான் நான் செய்வது..

    ReplyDelete
    Replies
    1. இரவு உணவாய் பொங்கலா?! எங்க ஊர் பக்கம்லாம் காலை உணவாதான் பொங்கல் சாப்பிடுவாங்க.

      Delete
  6. ரொம்ப பசி மயக்கத்துல இருக்கும்போது (பொங்கல் சாப்பிடாதபோதே) படம்லாம் எடுத்தீங்களா? ஒன்று கூட நல்லா வரலையே... பொதுவா நீங்க போடற படமே சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டுமே...

    ReplyDelete