வெண்டைக்காய்ன்னா எல்லாருக்கும் தெரியும். இதுக்கு இங்க்லீஷ்ல லேடீஸ் பிங்கர்ன்னு பேரு. இது எத்தியோப்பியாவிலிருந்து வந்தது. இந்த வெண்டைக்காயில் வைட்டமின் ஏ,பி,சி,ஈ,கே இருக்கு. அதில்லாம, கனிமங்கள், கால்சியம், இரும்புசத்து, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் இருக்கு. வழவழப்பான நார்ச்சத்து இருக்கு. அதனால் வெண்டைக்காயை சூப், பொரியல், சாம்பார், புளிக்குழம்புன்னு செஞ்சு அடிக்கடி சாப்பிடலாம். பச்சையா சாப்பிட்டா இன்னும் நல்லது.
வெண்டைக்காயிலிருக்கும் வழவழப்பான நார்சத்து, செரிமானத்துக்கு உதவி, பிரச்சனையில்லாம மலங்கழிக்க உதவும். அதனால், வயிற்று பொருமல், தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், மூலம் மாதிரியான ஏராளமான வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வாகுது. அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுது இந்த நார்ச்சத்து. வெண்டைக்காயிலிருக்கும் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், சான்தீன், லூட்டீன் மாதிரியான ஆண்டி ஆக்சிடெண்டுகள் இருக்கு. இவைலாம் கண்பார்வை தெளிவா வச்சுக்க உதவுது. கண் புரை உட்பட பல கண் பிரச்சனைக்கு வெண்டைக்காய் தீர்வாகுது.
இதிலிருக்கும் அதிகப்படியான வைட்டமின் ஏவும், ஆண்டி ஆக்சிடண்டும் சரும பிரச்சனைகளை போக்குது. முகப்பரு, தழும்பு, வறட்சி மாதிரியான பிரச்சனைகளை போக்கி முகம் பளபளப்பா இருக்க உதவுது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குது. ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். நம்ம உடம்பிலிருக்கும் சோடியத்தை வெண்டைக்காயிலிருக்கும் பொட்டாசியம் சமப்படுத்துறதால, உடலிலிருக்கும் நீர்ச்சத்து சமநிலைப்படுத்தப்படுது. ரத்தக்குழாய்கள் சீராய் வேலை செய்ய வெண்டைக்காய் உதவுது. அதில்லாம, இதயக்குழாய்களின் மீதான இறுக்கத்தை குறைப்பதால் இதய சம்பந்தமான பிரச்சனை வராம தடுக்கப்படுது. முக்கியமா ரத்தம் உறைதலை சமப்படுத்தி, தமனிதடிப்பு ஏற்படாம தடுக்குது.
எல்லாத்துக்குமே இருவித குணங்கள் உண்டு. அது வெண்டைக்காய்க்கும் உண்டு. இம்புட்டு நல்லது செய்யுற வெண்டைக்காயின் அதிகப்படியான ஆண்டி ஆக்சலேட் பித்தக்கல் மற்றும் சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்தும். அதேப்போல வெண்டைக்காயை வதக்குவதால் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். அதனால், கொழுப்பு சத்தின் அளவை சீராய் வைக்க எண்ணெயில் வதக்குறதை ஒதுக்கிட்டு சாம்பார், சூப், மாதிரி சமைச்சு சாப்பிடலாம். தப்பில்ல. இன்னிக்கு வெண்டைக்காய் வச்சு ஒரு புளிக்குழம்பு செய்றது எப்படின்னு பார்க்கலாமா?!
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
காரப்பொடி
உப்பு
புளி
எண்ணெய்
அரைக்க..
சின்ன வெங்காயம்
தேங்காயம்
பூண்டு
சீரகம்
வெண்டைக்காயை கழுவி, துணியால் ஈரம்போக துடைச்சு ஒரு இஞ்ச் நீளத்துக்கு வெட்டிக்கனும். வெங்காயம், தக்காளியை பொடியா நறுக்கிக்கனும், புளியை ஊறவச்சுக்கனும்.
வெட்டி வச்சிருக்கும் வெண்டைக்காயை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கனும். கலர் மாறிடாம பார்த்துக்கோங்க.
பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிச்சதும் பூண்டை போட்டு வதக்கனும்.
அடுத்து வெங்காயத்தை போட்டு வதக்கனும். வெங்காயம் சிவந்ததும் அடுத்து தக்காளியை சேர்த்து நல்லா வதக்கனும்.
அடுத்து தேவையான அளவுக்கு காரப்பொடி சேர்த்துக்கனும், கூடவே உப்பு சேர்த்து மிளகாய்தூள் வாசனை போகும்வரை வதக்கனும்.
மஞ்சப்பொடி சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து கொதிக்க விடனும்.
குழம்பு கொதிக்குறதுக்குள் அரைக்க கொடுத்திருக்கும் தேங்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயத்தை அரைச்சுக்கனும்.
குழம்பு கொதிச்சதும் புளித்தண்ணியை சேர்த்து கொதிக்க விடனும்.
புளித்தண்ணி பச்சை வாசனை போனதும்,. அரைச்சு வச்சிருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி கொதிச்சதும், வதக்கி வச்சிருக்கும் வெண்டைக்காயை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினா ஹோட்டல் ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி.
தேங்காய் விழுதை அரைக்கும்போது, கூடவே வறுத்த வேர்க்கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்து அரைச்சா, குழம்பு திக்கா, இன்னும் சுவையா, வாசனையா இருக்கும்.
விதம் விதமா சமைப்பவரா நீங்க?! எப்படி நல்லா சமைச்சாலும் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லாம கட்டுன சுவத்துக்கு கலவை அடிக்குற மாதிரியான புருசனை கட்டிக்கிட்டு பாராட்டுக்கு ஏங்குபவரா நீங்க! உங்க திறமையை பலர் பாராட்டும்படி செய்யும் வாய்ப்பினை நம்ம வேலூர் ஹலோ எஃப்.எம் ஏற்பாடு செஞ்சு கொடுக்குது. வரும் சனிக்கிழமை 27/10/2018 அன்னிக்கு லட்சுமி கார்டன்ல மகளிருக்கான நிகழ்ச்சி நடக்குது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே வருவாங்க. அனுமதி இலவசம். வாங்க, வந்து கலக்குங்க தோழி’ஸ்
நன்றியுடன்
ராஜி
வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கு நல்லதுனு சொல்வாங்களே உண்மையா சகோ ?
ReplyDeleteஅது மூளை இருக்கவுங்க கவலைப்படனும். நான் எதுக்கு கவலைப்படனும்?!
Deleteவெற்றி பெற போகும் சகோதரிக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteநான்லாம் எந்த போட்டியிலும் கலந்துக்க கூடாதுண்ணே
Deleteநான் சிறு வயதில் என் வீட்டு தோட்டத்தில் பயிரிட்டு சாப்பிட்ட வெண்டைக்காய்கள் தற்போது கிடைப்பதில்லை. அதை பச்சையாகவே செடியில் பறித்து சாப்பிடுவேன் சுவையாக இருக்கும். தற்காலத்தில் கிடைப்பவை எல்லாம் மரபணு மாற்றம் செய்யப்பட்டவைகள். அவைகளில் மணமும் இல்லை சுவையும் இல்லை. அதில் உள்ள விதைகள் ஜீரணமாவதில்லை. வயிற்றில் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. நான் அவைகளில் உள்ள விதைகளை அகற்றிவிட்டுதான் தற்போது உண்ண வேண்டியுள்ளது. இருந்தாலும் அவைகளின் அந்தக்கால சுவை இல்லை.
ReplyDeleteநாட்டு வெண்டைக்காய் இளம்பச்சையில் குட்டையா இருக்கும். அதேப்போல் அதில் முடிகள் மாதிரியான நார் அதிகமா இருக்கும். ஹைபிரிட் வெண்டைக்காய் ஆழ்ந்த பச்சையில் இருக்கும். அந்த நார் கொஞ்சமா இருக்கும். இதான் வித்தியாசம்ப்பா
Deleteவெண்டைக்காயை நான் பச்சையாகவே சாப்பிட்டு விடுவேன். சாம்பார் ஓகே. பொரியல் செய்வதாய் இருந்தால் அரைவதக்கல்தான் நல்லது, சுவை.
ReplyDeleteநானும், என் பையனும் அப்படிதான். வெட்டும்போதே பாதி உள்ள போயிடும்
Deleteபோட்டியில் கலந்து கொள்ளுங்கள்
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகள் சகோதரியாரே
ஹலோ எஃப்.எம்மில் வேலை செய்றவங்க குடும்பத்தார்லாம் போட்டில கலந்துக்க கூடாதுண்ணே
Deleteநல்ல வாய்ப்பு.
ReplyDeleteஎங்க ஊருக்கு இதுதான் முதல்முறை.
Delete