இன்னிக்கு என்ன விசேஷம்?! ஸ்வீட்லாம் கொடுக்குறே?!
கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம்ன்ற சர்வதேச அமைப்பு. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் உறுப்பினரா இருக்கு. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதியைவே அனைத்து நாடுகளிலும் 'உலக கழிப்பறை தினமா கடைபிடிக்கப்படுது. கழிப்பறையின் அவசியம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். உலக அரங்கில் போதிய கழிப்பறை வசதி இல்லாத இடத்தில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கு. 35.5 கோடி பெண்களும், சிறுமிகளும் சரியான கழிப்பறை இல்லாம அவதிப்படுறாங்க. அவங்களைலாம் வரிசையில் நிக்க வச்சா, பூமியை நாலுமுறை சுத்தி வரலாமாம். அதுக்கடுத்து சீனா. 3வது இடத்தில் நைஜீரியா. உலகில் மூன்றில் ஒருவருக்கு கழிப்பறை வசதி இல்ல. திறந்தவெளியில் ஒதுங்குவதால் பல வியாதிகள் வரும்ன்னு சொல்லும் அதேநேரத்தில், பெண்கள் பாலியல் தில்லைக்கு ஆளாகும் அபாயமும் புதுசா சேர்ந்திருக்கு. இப்ப புரியுதா மாமா கழிப்பறையின் அவசியம்?!
நல்லாவே புரியுது. அதேமாதிரி இப்ப கஜா புயலின்போது சமூக வலைதளத்தில் பார்த்து மனசை பாதித்த படங்கள் சிலதை பார்க்கலாமா?!
இன்னிக்கு உலக ஆண்கள் தினம் மாமா! அதான் ஸ்வீட்.
அடடா! எப்பப்பாரு என்னைய கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்கியே! என்மேல ஆயிரம் குறை சொல்லி கோவமா இருக்கியே! இன்னுமா ஆண்வர்க்கத்தையே வெறுக்கலை?!
எந்த ஒரு விசயத்திலும் நல்லது, கெட்டது, விதிமீறல்ன்னு உண்டு. கருணையே வடிவானவர் கடவுள்ன்னு சொல்றோம். அவரே சிலசமயம் உயிரை பறிப்பதில்லையா?! அதுமாதிரிதான். கோவம்லாம் உன்மேலதானே தவிர, ஆண்கள்மீது இல்லை. ஆண்வர்க்கத்தின்மீதே கோவப்பட்டா அப்புறம் பூமில வாழமுடியாது. நம்ம தனிப்பட்ட அனுபவத்துக்காக எதுமீதும் கோவப்படவோ, ஒதுக்கி வைக்கவோ கூடாது.
நீ சொல்றதும் சரிதான். ஒரு ஆணை பத்தி நான் சொல்றதைவிட, ஒரு பெண் நீ சொன்னா நல்லா இருக்குமே! நீயே ஆண்வர்க்கத்தினை பத்தி சொல்லேன்.
மகனாய், சகோதரனாய், தகப்பனாய், கணவனாய், தந்தையாய், சக ஊழியனாய், முதலாளியாய், தொழிலாளியாய், குற்றவாளியாய், சமூக ஆர்வலனாய்... இப்படி பல வடிவெடுக்கும் ஆணுக்குதான் எத்தனை எத்தனை கடமைகள்?! பெண்ணைவிட ஆணுக்கே பொறுப்புகள் அதிகம். விவரம் தெரியாத வயதிலேயே சகோதர சகோதரிகளை காப்பதிலிருந்தும், கடைக்கு போய் வருவதிலிருந்தும் அவன் பொறுப்புகள் ஆரம்பிக்குது. குறிப்பிட்ட வயதில் வேலைக்கு போகனும், வீடு கட்டனும், சகோதரிக்கு கல்யாணம் செய்யனும், அப்பா அம்மாவை பார்த்துக்கனும்... மகளை கட்டி கொடுக்கனும். மனைவியை பார்த்துக்கனும்.. இப்படி அவனின் கடமைகள் நீளுது.
ஆண்மை எனப்படுவது கல்யாணம் கட்டி, பெண்ணை கட்டிலில் திருப்திப்படுத்தி, பிள்ளையை பெத்துக்குறதுல இல்ல. தன்னை நம்பியவரை கடைசிவரை காப்பாத்துவதில்தான் ஆண்மை இருக்கு. மற்ற உயிரினங்களில் பெண் இனம்தான் குடும்பத்தை தாங்கும். ஆனா, மனித இனத்தில் மட்டும் ஆண்தான் தன்னை சார்ந்தோரை அடை காக்கனும். பொருளீட்டுவது முதற்கொண்டு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் வரை எல்லாமே ஆணை நம்பிதான் இருக்கு. பிள்ளைப்பேறும், பிள்ளை வளர்ப்பும், குடும்ப வேலை மட்டுமே பெண்ணை சாரும். மத்த விசயத்துல பெண் இனத்தின் பங்களிப்பை சமூகம் எதிர்பார்த்து இல்ல. காலமாற்றத்தில் பொருளீட்டுவது முதற்கொண்டு சமூக பிரச்சனைகள் வரை ஆண்களுக்கு உதவும் பொருட்டு பெண்கள் உதவுறாங்க. ஆனாலும், ஆணை சார்ந்தே இந்த சமூகம் இயங்குது.
நேரங்கெட்ட நேரத்துல வர்றான். நண்பர்களுடன் சினிமா, அரட்டைன்னு ஜாலியா இருக்கான். வீட்டு வேலை செய்ய தேவை இல்லைன்னு பெண்கள் ஆண்களை பார்த்து பொறாமைப்பட்டாலும், உண்மையிலேயே அவனுக்கும் சில உரிமைகள் மறுக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. ஆண் பிள்ளை அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கப்பட்டு அவனின் மனக்குமுறல்கள் வெளிவராமயே அவனின் தொண்டைக்குழியோடு நின்னு போகுது. அழுதா பெட்டைன்னு சொல்லிடுவாங்கன்னு அவன் தன் வலியை ஜீரணிக்க பழகி, தன் கடமையை சரிவர செஞ்ச திருப்தியிலோ அல்லது தோல்வியிலோ எல்லத்தையும் அடக்கி அடக்கி வலிக்காத மாதிரியே நடந்து செல்லும் அத்தனை ஆணுக்கும் ஆண்கள் தின வாழ்த்துகள். முறையான அடிப்படை மருத்துவ பரிசோதனை பெண்கள் அளவுக்கு ஆணுக்கு கிடையாது. தொடர் பரிசோதனைகளால் பல நோய்களிலிருந்து பெண்களால் தப்பிக்க முடியும். ஆனா, ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு நோய்கள் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடிக்க முடியாம பல மரணங்கள் நிகழுது.
பெண்களை சார்ந்து பல திட்டங்கள், அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கம். ஆணுக்கென தனியாய் ஒரு ரூபாய்கூட ஒதுக்கப்படாததே உண்மை. ஆணுக்கென தனியாய் எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தலை. பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும்போது போராட மகளிர் சங்கம் இருக்கு. அவங்களோடு சேர்ந்து ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடுவான். ஆனா, பாதிக்கப்பட்ட ஆணுக்காக போராட எந்த அமைப்பும் இல்ல. சக ஆணும்கூட பாதிக்கப்பட்டவனுக்காக வரமாட்டான் என்பதே உண்மை. அதேமாதிரி, குடும்ப வன்முறையில் நிவாரணம் பெற ஆணுக்கு உரிமை இல்லை. விவாகரத்தின்போது, குழந்தையை பிரிய நேர்வது பெரும்பாலும் ஆணே. தந்தைக்கும் பாசமும், பொறுப்பும் உண்டுன்னு அரசாங்கமும், சட்டமும் இன்னும் உணரலை. சமீப காலமாய் பெண்மீது இரக்கம், அவள் உடல்மீதான ஆசை, என பல்வேறு காரணங்களுக்காக ஆணுக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருது. ஆணின் உணர்ச்சியை தூண்டி, அவனின் உடலையும், மனசையும் பாழ்படுத்தும் பெண்களுக்கு தண்டனை வாங்கி தர சட்டம் ஏதுமில்லை. ஆணின்மீதான பாலியல் குற்றங்கள் சமூகத்தின் பார்வைக்கு வருவதே இல்லை. ஆணை கேலி, கிண்டல் செய்யும் பெண்களையும், காதல், கல்யாணமென்ற பேரில் ஏமாறும் ஆண்களுக்கென எந்த நிவாரணமும், சட்டமும் இல்லை. இப்படி ஆணுக்கான மறுக்கப்படும் உரிமைகளை சொல்லிக்கிட்டே போகலாம் மாமா.
யப்ப்ப்பா. நான் சொல்லி இருந்தால்கூட இத்தனை சொல்லி இருப்பேனான்னு தெரில. அம்புட்டு விவரம் ஆண்களை பத்தி நீ சொல்றே! அப்படியே எதுக்கு ஆண்கள் தினம் கொண்டாடப்படுதுன்னும் சொல்லிடு.
ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தவும், உலக அரங்கில் ஆணை முன்னிறுத்தி, அவனின் அவசியத்தினையும், தியாகத்தினையும் போற்றும் விதமாவும், ஆணின் பாதுகாப்பினையும், ஆரோக்கியம், எதிர்பாலினத்துடன் உறவுமுறையை மேம்படுத்துதல் என பல்வேறு காரணங்களை முன்வைத்து ஒவ்வொரு வருசமும் நவம்பர் 19 தேதியை உலக ஆண்கள் தினமாய் கொண்டாட ஐ. நா சபையால் 1999ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, ரினிடட் மற்றும் டோபாகோவில் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், 1960களிலேயே ‘ஆண்கள் தினம்’ தேவை என்ற அறைக்கூவல்கள் கேட்க ஆரம்பிச்சாச்சு. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால்தான் முதன்முதலில் இந்நாளுக்கான விதை விதைக்கப்பட்டது. ஆனாலும், சட்டப்பூர்வமாக, Dr.Teelucksingh என்பவரால் 1999ம் ஆண்டு, Trindad – Tobagoவில் கொண்டாடப்பட்டது. 60 நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுது. 2007லிருந்துதான் இந்தியாவில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுது. ஆண்கள் உரிமைகள் கழகம்ன்ற அமைப்பு இந்த தினத்தை முதன்முதலாய் இந்தியாவில் கொண்டாடியது. 2009ம் வருடம் ஆண்களின் ஆடைத் தயாரிப்பு நிறுவனமான ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடு பிடித்துவருது மாமா. இந்த நாளில் நாடகம், பேரணி, விளையாட்டுகள்ன்னு கொண்டாட்டங்கள் நகர்புறங்களில் மட்டுமே நடக்குது.
எப்படியோ ஆணின் அருமை பெண்களுக்கு தெரிஞ்சா சரி. இன்னிக்கு இன்னொரு முக்கிய நாள் இருக்கு. அது என்னன்னு தெரியுமா?!
ம்ம்ம்ம் தெரியுமே! உலக கழிவறை நாள். இப்படியொரு நாள் தேவையான்னு எல்லாரும் நினைக்ககூடும். ஆனா, சரியான கழிப்பிடம். இருக்கும் கழிப்பிடமும் சுத்தமா இல்லாம பல மரணங்கள் நேருது. நோய் தொற்றும் உண்டாகி மக்கள் பல நோய்களினால் பாதிக்கப்படுறாங்க. உலகிலேயே, இந்தியாவில் 818 மில்லியன் மக்கள் சரியான கழிப்பறை வசதி இல்லாம இருக்காங்க. இதனால் 10 லட்சம் பாக்டீரியாக்களும், ஒரு கோடி வைரசும், 50 கொடிய நோய்களும் உருவாகுது. வயதுக்கு வந்ததும் பெண்பிள்ளைகளை பள்ளிப்படிப்பை நிறுத்த கழிவறையும் ஒரு காரணமாகுது. தமிழ்நாட்டில் மட்டும் 1500 பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் போதிய தண்ணீரின்றி சுகாதாரமற்று இருக்கு. இதேநிலைதான் சமூகத்திலும். போதிய கழிப்பறை வசதி இல்லாம தினத்துக்கு 1000 குழந்தைகள் இறந்து போகுது.
கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம்ன்ற சர்வதேச அமைப்பு. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் உறுப்பினரா இருக்கு. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதியைவே அனைத்து நாடுகளிலும் 'உலக கழிப்பறை தினமா கடைபிடிக்கப்படுது. கழிப்பறையின் அவசியம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். உலக அரங்கில் போதிய கழிப்பறை வசதி இல்லாத இடத்தில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கு. 35.5 கோடி பெண்களும், சிறுமிகளும் சரியான கழிப்பறை இல்லாம அவதிப்படுறாங்க. அவங்களைலாம் வரிசையில் நிக்க வச்சா, பூமியை நாலுமுறை சுத்தி வரலாமாம். அதுக்கடுத்து சீனா. 3வது இடத்தில் நைஜீரியா. உலகில் மூன்றில் ஒருவருக்கு கழிப்பறை வசதி இல்ல. திறந்தவெளியில் ஒதுங்குவதால் பல வியாதிகள் வரும்ன்னு சொல்லும் அதேநேரத்தில், பெண்கள் பாலியல் தில்லைக்கு ஆளாகும் அபாயமும் புதுசா சேர்ந்திருக்கு. இப்ப புரியுதா மாமா கழிப்பறையின் அவசியம்?!
நல்லாவே புரியுது. அதேமாதிரி இப்ப கஜா புயலின்போது சமூக வலைதளத்தில் பார்த்து மனசை பாதித்த படங்கள் சிலதை பார்க்கலாமா?!
அப்பாவிலாம் இப்படிதான் அவஸ்தை படனும்ன்னு விதிச்சிருந்தால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும். ஒட்டுமொத்தமா செத்து போகலாம். சிறுக சிறுக சாகாமல்...
கடவுள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள்ன்னு யாரும் உதவ போறதில்லை. நமக்கு நாமே. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லையேல்.... அவதிதான்.
கொடுத்தே பழக்கப்பட்ட டெல்டா பகுதி மக்கள். தங்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு வந்த திருச்சி கல்லூரி மாணவ மாணவிகளை வெறும் கையோடு அனுப்ப மனமில்லாம தங்கள்கிட்ட இருந்த இளநீரை கொடுத்தனுப்பிய காட்சி..
ஒரே இரவில் அனைத்தையும் இழந்து...
ஒன்பது மாத கர்ப்பிணியான தன் மனைவியை வீட்டில் விட்டுட்டு களப்பணியாற்றும் ஒரு சகோதரன் இதில் இருக்கார். அவருக்கு வாழ்த்துகளும், அவர் மனைவி பத்திரமாய் இருக்க ஆண்டவனையும் பிரார்த்திப்போம்.
இரவு பகல் பாராமல் இக்கட்டான சூழலில் வேலை செய்யும் தேவதூதர்கள். மின்சார துறையிலிருந்து ஓய்வு பெற்றபின்னும் 70 வயசிலயும் கொட்டும் மழையில் ஒருவர் மீட்பு வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆனா தேடும்போது அவர் வீடியோ கிடைக்கல. ஆனா, இப்படி பாடுபடும் நல் உள்ளங்களுக்கு வணக்கங்களையும், நன்றியும் சொல்லலாமே!
சொல்லிக்கலாம் மாமா! நல்லோர் ஒருவர் உளரேல் மழை பெய்யும். அந்த மழையால் பாதிப்பு வந்தால் பல நல்லோர் உருவாகுவாங்கன்னு இதுமாதிரியான சூழல்கள் நமக்கு உணர்த்துது. வணக்கமும், நன்றியும் சொன்னா போதாது. நமக்கு சோறு போடும் பூமியும், விவசாயியும் மீண்டு வர நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.
நன்றியுடன்,
ராஜி
அப்பாடா...! எங்களுக்கென்று ஒரே ஒரு நாள்...!
ReplyDeleteகஜா சிரமங்கள் தீர்வதற்குள் மீண்டும் மழை ஆரம்பம்...
தங்களுக்குன்னு ஒரு நாள் இருப்பதைகூட உணராத அளவுக்கு ஆண்கள் அப்பாவிண்ணே...
Deleteஆமாம். மழை மீண்டும் ஆரம்பிச்சுடுச்சுன்னு டிவியில் பார்த்தேன். இதிலிருந்தும் டெல்டா மாவட்ட மக்கள் மீண்டு வருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நாமும் பக்க பலமா இருப்போம்.
அருமையான ஆண்கள் தினப் பதிவு....கூடவே உலக கழிப்பறை தினம்.புள்ளி விபரங்களுடன் ...சிறப்பு.இனியாவது கழிப்பறையின் அவசியத்தை உணர்ந்து இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்....பள்ளிகளில் கூட இந்த வசதி இல்லையென்றால்,எப்படி?/// நன்றி தங்கச்சி,பதிவுக்கு......
ReplyDeleteஇருக்கும் கோவிலையெல்லாம் இடிச்சு பள்ளிகள் கட்டனும்ன்னு பாரதியார் சொன்னார். இப்ப இருந்தால் பள்ளிகளில் கட்டாயம் கழிப்பறை கட்டனும்ன்னு சொல்லி இருப்பார். ஏன்னா, அந்த நேரத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைண்ணே.
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஅப்பாவுக்கு உடல் நலம் சரியாகி விட்டதா ?
ReplyDelete//தன்னை நம்பியவரை கடைசிவரை காப்பாத்துவதில்தான் ஆண்மை இருக்கு//
அருமை சகோ மிகவும் ரசித்தேன் காரணம் எனது கொள்கையும் இதுவே...
பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எமது பிராத்தனைகள்...
நல்லாகிட்டார்ண்ணா. ஆனா, சின்ன சின்ன உடல் உபாதைகள் இருக்கு. எப்பயும் யாராவது ஒருத்தர் உடன் இருந்து பார்த்துக்கனும். இல்லன்னா, எதாவது நடந்துடுது.
Deleteதன்னை நம்பியவரை காப்பாத்தாத ஆண்களால்தான் குடும்பத்தில், சமூகத்தில் பல பிரச்சனைகள் உண்டாகுது.
பிரார்த்தனை மட்டுமே அவங்களை மீட்டெடுக்காது. சோ, நம்ம உதவி முக்கியம்ண்ணே
ம்...
ReplyDeleteவக்கீல்லாம் பேசனும்.. ஓயாம பேசிக்கிட்டே இருக்கனும். அதைவிட்டு இப்படி ம்ம்ம்ம்ம்ம்ம்ன்னு சொல்லிட்டிருந்தால் பொழப்பு என்னாவதுண்ணே?!
Deleteஅப்பாவின் உடல்நலம் சரியாகிவிட்டது அறிந்து மகிழ்ச்சி சகோ
ReplyDeleteகஜா நிறைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுதான்...அவர்கள் எல்லோரும் மீண்டு வர பிரார்த்தனைகள்...கேரளத்திலும்
துளசிதரன், கீதா
அப்பாவின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்ததோடு போனிலும் நலம் விசாரித்த தனபாலன் அண்ணாக்கும், கீதாக்கும் நன்றி.
Deleteஅதேமாதிரி டெல்டா மாவட்ட மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.
பொதுவாக ச்ல பதிவுக்சள் பெண்களைப்பற்றி எழுது இருக்கிறேன் ப்போது ஆண்காள் பற்றி ஒரு பெண் அதுவும்நல்ல குணங்களை எடுத்துகூறி எழுதி இருப்பது மகிழ்ச்சி தருகிறது
ReplyDeleteஏம்பா! ஆண்கள் இல்லாம பெண் ஏது?! பெண்களின் தியாகம் வெளியில் தெரியும், ஆனா, ஆணின் தியாகம் வெளியில் தெரியாது. எப்ப்பயுமே ஐ சப்போர்ட் ஆண்...
Delete