துணிச்சலான, அறிவான, ஆழ்ந்த சிந்தனையுள்ள பெண்ணா நடிக்கனும்ன்னா என் சாய்ஸ் பானுமதி, லட்சுமி, ராதிகா, சுகாசினி, சுவலட்சுமி இவங்கதான் சரியா இருப்பாங்க. அதுமாதிரி நடிச்சு நல்ல பேரும் வாங்கி இருப்பாங்க. மத்தவங்களைவிட சுகாசினியின் நடிப்பில் மேதாவித்தனம் தெரியுறதா எனக்கு தோணும். ஆழ்ந்த அறிவான பெண்ணா நடிச்ச படம் என் புருசந்தான் எனக்கு மட்டும்தான்.
ஆசைப்பட்டவனுக்கு கல்யாணம் ஆகிடும். உலகம் ரொம்ப சின்னது. என்னதான் ஓடி ஒளிஞ்சாலும் ஒருநாள் எதிர்பட்டே தீரனும்ன்ற மாதிரி அவன் வீட்டு எதிர்க்கவே குடிவருவாங்க சுகன்யா. அங்க, காதலிச்சவன் பொண்டாட்டி பணக்காரி, திமிர் பிடிச்சவ. புருசனை மதிக்க மாட்டா. அவ, ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுவா. அதுக்கு மன்னிப்பு கேட்க சொல்வாங்க சுகாசினி. மாட்டேன்னு ஹீரோவோட பொண்டாட்டி சொல்ல, ஹீரோவோட வீட்டிலேயே போய் தங்குவாங்க. அதுக்கப்புறம் ஹீரோ பொண்டாட்டியை திருத்தி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதா கதை... ஹீரோ விஜயகாந்த். விஜயகாந்துக்கு ஜோடியா ரேகான்னு நடிச்சிருப்பாங்க.
குழந்தையை வச்சிக்கிட்டு சுகாசினி பாடுற பாட்டைதான் இன்னிக்கு நாம கேக்கபோறது... எல்லா நேரத்தையும்விட இரவு பயணங்களில் கேட்க நல்லா இருக்கும். சுசீலாம்மா குரல் மனசின் அடி ஆழம் வரை செல்லும்...
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
படம் : என் புருசந்தான் எனக்கு மட்டும்தான்
இசை: இளையராஜா
எழுதியவர்: மு.மேத்தா
பாடியவர்: சுசிலா
நடிகர்கள்: விஜயகாந்த். சுகாசினி
இயக்கம் மனோபாலா
பாட்டு நல்லா இருக்கா?!
நன்றியுடன்,
ராஜி
பாட்டு நல்லா இருக்கா?!
நன்றியுடன்,
ராஜி
நல்லபாடல் நானும் கேட்டு இருக்கிறேன்.
ReplyDeleteநல்லதுண்ணே
Deleteஎன் பாஸுக்கு பிடித்த பாடல். எனக்கு என்னவோ இதில் பி சுசீலாவை மிகவும் படுத்துவது போல இருக்கும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "பூ முடித்து பொட்டுவைத்த வட்ட நிலா" மற்றும் சாமிகளே சாமிகளே சொந்தக் கதை கேளுங்க" பாடல்கள்.
ReplyDeleteஇதுல எல்லா பாட்டுமே நல்லா இருக்கும் சகோ. நீங்க சொன்ன இரு பாட்டுமே என் ஃபேவரிட். ஆனா, இந்த பாட்டு கூடுதலா பிடிக்கும். இதுல சுகாசினி செம அழகா இருப்பாங்க.
Deleteஇந்த படத்துல எல்லா பாட்டுமே ஹிட். நீங்க சொன்ன இருபாடலும் என் ஃபேவரிட் கலெக்சனில் இருந்தாலும் இந்த பாட்டு கூடுதலா பிடிக்கும். காரணம் இதுல சுகாசினி செம அழகா இருப்பாங்க.
Delete''புல்லைக்கூட பாடவைத்த புல்லாங்குழல்'' பாடலும் நன்றாக இருக்கும். எனக்கு சாதாரணமாகவே ஜெயச்சந்திரன் குரல் ரொம்பப் பிடிக்கும்.
Deleteஇந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஸ்ரீராம்ஜி
Deleteநல்ல பாடல். கேட்டு ரசித்தேன் - மீண்டும் ஒரு முறை....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஅருமையான பாடல்... மனதை தாலாட்டும் பாடல்...
ReplyDeleteஆமாம்ண்ணே. இரவு பயணத்துக்கு ஏத்த பாட்டு
Deleteஇனிமையான பாடல்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் நன்றிண்ணே
Deleteதுளசிதரன்: இந்தப் படமும் பார்த்த நினைவில்லை. பாடல் இப்போதுதான் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது
ReplyDeleteகீதா: படம் பார்த்ததில்லை...பாடல் கேட்டுள்ளேன். இந்தப் படத்துலதான் இந்தப் பாட்டுனு தெரியாது...இப்பத்தான் தெரியும்...அழகான பாடல்தான் ஆனால் சுசிலாம்மாவின் ஹைபிச் சுசீலாவா இது என்று தோன்றியது...
எப்படியோ இன்னிக்காவது பாடலை கேட்டா சரி
Deleteஅன்னியோன்னியத்தைத் தரும் பாடல்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஆமாம்ப்பா. இதுல சுகாசினி நல்லாவே விஜயகாந்தை சாடி இருக்கும்
Deleteசில பாடல்கள் நினவில் இருப்பது போல்பல பாடல்கள் நினைவுக்குவருவதில்லையே
ReplyDeleteநம் நினைவுகளோடு ஒத்து வரும் பாடல் மட்டுமே மனசில் நிக்கும். மத்ததுலாம் ஜஸ்ட் டைம் பாஸ் மட்டுமே
Delete