Monday, December 10, 2018

புடலைங்காய்க்கும், கத்தரிக்காய்க்கும் குழந்தை பிறந்தா எப்படி இருக்கும்?! - ஐஞ்சுவை அவியல்

அடியேய்! உன்னோடு மல்லுக்கட்டி கட்டியே என் ஆயுசு முடிஞ்சிடும்போல! எதாவது சொன்னா காதுல வாங்குறியா?! உன்போக்குல போறியே! உன்னைலாம்  திட்டக்கூடாது.  உன்னை படைச்ச பிரம்மன்மட்டும் கைக்கு கிடைச்சா.. உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்
என்னாது என்னை பிரம்மன் படைச்சானா?! லூசா மாமா நீ?!

இல்லியா பின்ன?! இந்த உலகத்தை படைச்சது பிரம்மன். அவர்தான் ஆக்கல் தொழிலின் முதலாளிடி. உயிர்களை படைக்குறதுதான் அவர் வேலை...

இப்படிதான் சொல்லி பலகாலமா ஏமாத்திக்கிட்டிருக்காங்க. 13.8 பில்லியன் வருசத்துக்கு முந்தி பிரபஞ்சம் உருவாகியது.    13.6 பில்லியன் வருசத்துல பால்வெளி அண்டம் உண்டானது. 4.6 பில்லியன் வருசத்துல பூமி உண்டானது. 4.5பில்லியன் வருசத்துல நிலா உண்டானது. 4.28 பில்லியன் வருசத்துல தண்ணீர் திரவ வடிவத்துக்கு வந்துச்சு.  3.9 பில்லியன் வருசத்துல பச்சையம் உருவானது. 
3.5 பில்லியன் வருசத்துல ஒரு செல் உயிர்களான அமீபா, பாரமீசியம், பாக்டீரியாலாம் தோன்ற ஆரம்பிச்சுது. 2.9 வருசத்துல பகோலா பனிப்பாறைகள் உண்டானது. 2.5ல கடல்லயும், வளிமண்டலத்துலயும் ஆக்சிஜன் கிடைக்க ஆரம்பிச்சது. 1.6ல உயிர்கருக்கள் உண்டாக உண்டானது. 510 மில்லியன் வருசத்துல முதுகெலும்புள்ள உயிரினம் கடல்ல உருவானது.
420 மில்லியன் வருசத்துல செடிகளும், பவளப்பாறைகளும் உண்டானது. 400 மில்லியன் வருசத்துல காடுகள் உருவானது. 360வது மில்லியன் வருசத்துல முதுகெலும்புள்ள கடல்வாழ் உயிரினத்துக்கு கால் முளைக்க ஆரம்பிக்குது. 350மில்லியன் வருசத்துல அந்த உயிரினம் வளர்சிதை மாற்றமடைஞ்சு தரையில் நடக்க ஆரம்பிச்சது. 230 மில்லியன் வருசத்துல டைனோசர் காலம் ஆரம்பிச்சது. 199 மில்லியன் வருசத்துல பறப்பன, ஊர்வன தோன்றியது. 65 மில்லியன் வருசத்துக்கு முந்தி விண்கல் பூமில விழுந்து, எரிமலை வெடிச்சு டைனோசர்லாம் அழிஞ்சுது. 63வது மில்லியன்ல நஞ்சுக்கொடி(தொப்புள்கொடி) பாலூட்டிகள் பிறக்குது.  45மில்லியன் நவீன பாலூட்டிகள்ன்னு சொல்லப்படும் குரங்குகள் மாதிரியான உயிரினம் உருவாகுது.
7மில்லியன் வருசத்துல நம்ம முன்னோர்களான சிம்பான்சி உருவாச்சு. அதுக்குப்பின் படிப்படியா முன்னேறி Homosapiensன்ற ஆதிமனிதன் 2,00,000 வருசம் முன்ன உருவானான். 70,000 வருசத்துக்கு முன்ன பூமி குளிராகவும், அழுக்காகவும் மாறி Ice ageக்கு மாறுச்சு. 60,000 வருசத்துல அதிலிருந்து ஆதிமனிதனில் கொஞ்ச பேரு ஆப்பிரிக்கா கண்டத்துக்கு போனாங்க.

எங்க இருந்துடி அவங்கலாம் ஆப்பிரிக்காவுக்கு போனாங்க?!
ஹோமோசேப்பியன்ஸ்ல எங்கிருந்தும் ஆப்பிரிக்காவுக்கு போகல. அந்த சுற்றுவட்டாரத்திலதான் இருந்தாங்க. பூமி பாகப்பிரிவினை நடந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படி சொன்னால்தான் விளங்கும். அதும் உன்னைமாதிரி தத்திகளுக்கு இப்படிதான் சொல்லனும். ஹோமோசேப்பியன்ஸ்லிருந்து Homininன்ற உயர்நிலை விலங்கினம் உருவானது. இவங்க கோரைப்பற்கள் குரங்கைவிட சின்னதா இருந்துச்சு. Homininn பத்திய முதல் தடயம் ஆப்பிரிக்காவில்தான் கிடைச்சது. சரியா இதேக்காலக்கட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு உயிரினம் தோணுச்சு. அந்த உயிரினத்தின் தொடை எலும்புகள், குனிஞ்சு நாலுகாலால் நடக்க ஆரம்பிச்சுது.
50,000வருசத்துல கொஞ்சபேரு ஆஸ்திரேலியா போனாங்க. அதேக்காலக்கட்டத்துல கொஞ்சபேரு ரெட் சீ பக்கம் போனாங்க. 35,000 வருசத்துல ஆசியாவின் நடுப்பகுதியில் மக்கள்தொகை பெருக்கம் உண்டானது. நாப்பது வருசத்துக்கு முந்தி மனுசன் தென்கிழக்கு வழியா ஆப்பிரிக்காவுக்குள் நுழைஞ்சு Neanderthalsன்ற ஆதிமனிதனை காலி பண்ணாங்க.

ஆசியாவின் ரஷ்யாவுக்கும், வடஅமெரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையிலிருக்கும் நீரிணையான பெரிங் நீரிணையை கடந்து அமெரிக்காவுக்குள் மனுசன் போனான்.  அடுத்து Ardipithecus Ramidus உருவாகியது. இதோட பாத எலும்புகள் ரெண்டு கால்ல நடக்க ஆரம்பிச்சு வச்சுது
நாளாக.. ஆக Homininல் மாற்றம் உண்டானது. இதனால் நல்லா நடக்கவும் , மரமேறவும் முடிஞ்சது. அதுக்கு தகுந்தமாதிரி 4மில்லியன் வருசத்துக்கு முந்திவரை இதனோட கால்விரல்களுக்கிடையே அதிகப்படியான இடைவெளி இருந்துச்சு. அதனால் அது ஈசியா மரமேற முடிஞ்சது. 4மில்லியன் வருசத்துக்கப்புறம் அந்த கால்விரல் இடைவெளி காணாம போனது. Homininsல புது இனம் வர ஆரம்பிச்சிச்சு . அதோட பேரு Kenyanthropus 3 மில்லியன் வருசத்துக்கு முந்திவரை இவங்க ஆப்பிரிக்காவில்தான் அதிகப்படியா இருந்தாங்க. அடுத்தது அதோட பாத எலும்பான Bipedalism மனுசன மாதிரி ரெண்டு கால்ல நடக்க வச்சுது . அடுத்து கற்களாலான உபகரணங்களை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. எத்தியோப்பியாவில்தான் முதல் கல்லாலான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதுன்னு சான்றுகள் சொல்லுது.
நம்ம வம்சாவழியினர்.
மனுசனுக்கு பெருத்த சவாலா இருந்த நெருப்ப Homo Heidelbergensisதான் கையாள கத்துக்கிட்டாங்க. homo neanderthalensis இதுக்கிடையில் ஒருபுறம் ஓரிடத்தில் தங்கி 12,000வருசத்துல விவசாயம் செய்ய ஆரம்பிச்சாங்க.அதுக்கப்புறம் சக்கரத்தை கண்டுப்பிடிக்க வாழ்க்கை எளிமையா மாற ஆரம்பிச்சது. பூமிப்பகுதி முழுக்க இவங்க பரவ ஆரம்பிச்சாங்க. இந்த காலக்கட்டத்துல ஹோமோசேப்பியன்ஸ் இனம் அழிய ஆரம்பிச்சது. இதுக்கு காரணம் இயற்கையோடு போட்டி போட்டதால்ன்னு சொல்றாங்க. 4,500ல எகிப்துல பிரமிட் கட்ட ஆரம்பிச்சாங்க.
1543ல அறிவியல் யுகம் உருவானது. 1760ல தொழிர்புரட்சி உண்டானது. 1903ல முதன்முதலா விமானத்தை கண்டுபிடிச்சாங்க. 1914ல முதல் உலகப்போர் உண்டானது. 1939ல இரண்டாவது உலகப்போர் வந்துச்சு. 1969ல நிலாவுக்கு போனான். டிவி, ஃப்ரிட்ஜ், கார், செல்லுலர்ன்னு எத்தனையோ கண்டுபிடிப்புகளை மனுசன் கண்டுப்பிடிச்சான். இப்படிதான் இன்றைய உலகம் உருவானது. அதைவிட்டு பிரம்மன் உலகை படைச்சான். ஏவாள் கேட்டதால ஆதாம் ஆப்பிளை பறிச்சு கடிச்சதால உயிரினம் உண்டானதுன்னு கதை விடுவாங்க அதுலாம் நம்பாத மாமா.

அப்ப கடவுள்லாம் பொய்யா?!

அதுக்கும் என்னால பதில் சொல்லமுடியும். அதுலாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம். உலகம் உருவான கதையை மட்டும்தான் இங்க சொன்னது. உலகம் எப்படி உருவாச்சுன்னு நான் சொன்னது துளியூண்டுதான். முழுசா தெரிஞ்சுக்கனும்ன்னா Jared diamond எழுதுன Guns, germs and steel ஐ படிக்கலாம். இல்ல என்னைய மாதிரி இங்கிலீஷ் தெரியாதவங்க இந்த புத்தகத்தை படிக்கலாம். அதைவிட்டு பிரம்மா, ஜீசஸ்தான் உலகை படைச்சாங்கன்னு ப்ரூடா விடுறவங்களை நம்பாத மாமா.

இப்படி பல பில்லியன் வருசமா நல்லபடியா இருந்த இந்த உலகத்தை, ஒரு 15,000 வருசத்துக்கு முந்தி வந்த மனுசன் பாழ்படுத்த ஆரம்பிச்சு, இன்னிக்கு மனுசனை தவிர மத்த உயிரினம் வாழவே லாயக்கில்லாம ஆக்கிட்டான். இந்த பிரபஞ்சம் எப்படி நம்மக்கிட்ட மாட்டிக்கிட்டு லோல்படுதுன்னு ஒரு உதாரணம் மேலிருக்கும் இந்த படம்...
தலையெழுத்தென்றே தெருவில் மூன்று பத்து ரூபாய்கென விற்கும் அவள் கைகளில் தொங்குகிறது அவள் தலையெழுத்தினை சரியாக எழுதாத கடவுள்கள்.....!

புடலைங்காயும், கத்திரிக்காயும் கலப்பு மணம் பண்ணி பிறந்த பிள்ளைங்க போல இருக்குது மாமா இந்த கத்திரிக்கா...

எப்பயுமே என்னைதான் திட்டுவே . இன்னிக்கு உன்கிட்ட  மாட்டிக்கிட்டது  கடவுளா ?! ரைட்டு....

நன்றியுடன் 
ராஜி 

10 comments:

  1. பிரம்மன் உலகை படைச்சான். ஏவாள் கேட்டதால ஆதாம் ஆப்பிளை பறிச்சு கடிச்சதால உயிரினம் உண்டானதுன்னு கதை விடுவாங்க அதுலாம் நம்பாத மாமா.......அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இதை சொன்னதுக்குதான் என்னைய தேசத்துரோகி மாதிரி ட்ரீட் பண்றார் மாமா

      Delete
  2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாய் ஆகிறாய். எல்லாம் உன் எண்ணம்தான். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். . அதை தெரிந்துகொண்டால் எல்லாம் தெரிந்துவிடும். வெளியில் கிடைப்பதெல்லாம் அவரர்களுடைய கருத்துக்கள்.அதுவும் அவர் மற்றவர்கள் கூறியுள்ள கருத்துக்களை சேகரித்து வழங்குபவர் மட்டுமே. அதுவும் அவர் கருத்து கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் கண்டது, கேட்டதுலாம் இல்லப்பா./ பலவருச ஆராய்ச்சியின் முடிவு

      Delete
  3. ஆதிமனிதன் தமிழகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், தடயங்கள் கிடைத்திருப்பதாக இரண்டு மூன்று நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தேன்.

    அடேயப்பா... எவ்வளவு நீள கத்தரிக்காய்!

    ReplyDelete
    Replies
    1. நான் படிக்கலியே சகோ! அதனால அதுபத்தி பதில் சொல்ல தெரியல

      கத்திரிக்காய் நிஜமானதா இல்ல போட்டோஷாப்பான்னு தெரில...

      Delete
  4. அருமையான உலகில் உயிரினம் உருவான/வளர்ச்சியடைந்த கதை....ஐஞ்சுவை அவியல் ப்ரமாதம்.... நன்றி,தங்கச்சி பதிவுக்கு........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  5. என்னது கத்தரிக்காயா...!

    ReplyDelete
    Replies
    1. அப்படிதான் சொல்றாங்க

      Delete