இன்னிக்கு வேட்டி வாரம் ஆரம்பிக்குதாமே! சோ, வேட்டி காட்டும் ஆண்களுக்குலாம் வாழ்த்துகள் சொல்லிக்கிட்டு, அப்படியே நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணாக்கும் வாழ்த்துக்களை சொல்லிடலாம். அதென்னம்மா தனபாலன் அண்ணா மட்டும் உனக்கு ஸ்பெஷல்! வேட்டி கட்டி படம் எதாவது அனுப்பினாரா?! இல்ல வேட்டி கடை வச்சிருக்காரான்னு கேட்காதீங்க. என் அண்ணாக்கு இன்னிக்கு ஹாப்பி பர்த் டே. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!
பட்டு வேட்டி, சட்டை உடுத்தி இருக்கும் ஆண்கள்லாம் கொள்ளை அழகா தெரிவாங்க. என் கல்யாணத்தப்போ என்ன வேணும்ன்னு என்னை அப்பா கேட்கும்போது உனக்கு பட்டு வேட்டி சட்டை வாங்கனும். நான் உன்னைய இதுவரை பட்டு வேட்டி, சட்டைல பார்க்கலைப்பான்னு கேட்டேன். செலவுலாம் நிறைய இருக்கு. இப்ப வேணுமா?! இது அவசியமான்னு அப்பா கேட்டாங்க. ஆமாம்ன்னு சொல்ல, ஒரிஜினல் பட்டுவேட்டி, சட்டை வாங்கி, அப்பா உடுத்தினப்போ எனக்கு அத்தனை சந்தோசம். ஆடம்பரம் விரும்பாத அப்பா, அதை ஓரிரு முறை கட்டினதோடு சரி. ஆனா, இன்னமும் பீரோவில் இருக்கு.
வேட்டி கட்டி எத்தனையோ அழகான நடிகர்கள் நடிச்சிருந்தாலும் பட்டு வேட்டி, சட்டை பாந்தமா பொருந்தி போறது கார்த்திக்குதான். பட்டு வேட்டி கட்டி நடிச்ச பாட்டுதான் இன்னிக்கு பார்க்கப்போறது பூவரசன் படத்திலிருந்து பொட்டு வச்ச கிளியே பாட்டு...
படம்: பூவரசன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி
எழுதியவர்: வாலி
நன்றியுடன்,
ராஜி
வேட்டிகள் தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதிண்டுக்கல் ஜி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
நீங்கள் கார்த்திக் ரசிகர் என்பதால் அவருக்கு மட்டும் அழகு என்பது ஏற்கத்தக்கதல்ல!
பட்டு வேட்டி சட்டை பெரும்பாலும் எல்லா மனிதர்களுக்கும் அழகே...
குறிப்பாக தேவகோட்டையர்களுக்கு...
எல்லாரும்தான் வேட்டி கட்டுறாங்க. அழகாதான் இருக்கு. ஆனா பார்வை வேறு. பூனை தன் குட்டியை தூக்குறதும் அதே பற்களால்தான், எதிரியை குத்தி கிழிப்பதும் அதே பற்களால்தான் . அதுப்போலதான், மத்தவங்களை ரசிக்குறதுக்கும் கார்த்திக்கை ரசிக்குறதுக்கும்...
Deleteஇப்ப என்ன, கில்லர்ஜி அண்ணாவும் வேட்டி கட்டினா நல்லாதான் இருக்கும்ன்னு சொல்லிடுறேன் போதுமா?!
நன்றி சகோதரி,.. மிகவும் மகிழ்ச்சி...
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteகார்த்திக்கை விட தேவகோட்டையாருக்குத்தான் வேட்டி அழகு என்பதை வழிமொழிகின்றேன் சகோதரியாரே
இருந்துட்டு போகட்டும். எனக்கு கார்த்திக்கைதான் பிடிக்கும்.
Deleteவேட்டியின் அழகே தனிதான்.
ReplyDeleteகம்பீரமா இருக்கும். ஆனா, தொப்பை இருக்கும் ஆட்கள் வேட்டி கட்டினா காமெடி ஆகிடும்
Deleteராஜி உங்களை சும்மா கலாய்க்க நினைச்சேன் ஹை கார்த்திக் பிடிக்கும்ன்றதுனால வேட்டி அவருக்குப் பாந்தமா இருக்க்ன்னு சொல்லிட்டீங்களேன்னு அதுக்குள்ள கொடுவா மீசைக்காரர் சொல்லிட்டார்...
ReplyDeleteகரந்தை சகோ கூட அப்படியே சொல்லிட்டார் பாருங்க !!
வேட்டி தின வாழ்த்துகள்...ஆனா பாருங்க எங்க வீட்டுல எல்லாம் வேட்டி கட்டுற ஆளுங்க இல்லவே இல்ல!!!!!!
கீதா
என் பிள்ளையும்தான் வேட்டி கட்டுறான். அவனும் நல்லாதான் இருக்கான். ஆனாலும் கார்த்திக்தான் சூப்பர். யாராவது எதாவது சொல்லிட்டு போங்க. எனக்கு கார்த்திக்கைதான் பிடிக்கும்
Delete