Tuesday, April 14, 2015

மன்மத வருட தமிழ் புத்தாண்டு - ஒரு பார்வை

பொதுவா தமிழ் புத்தாண்டுன்னு சொன்னாலே இரண்டுவிதமான கொண்டாட்ங்கள் சமீப காலத்தில இருந்தது ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா சித்திரை ஒன்று தான் புதுவருஷ கொண்டாட்டமா இருக்கிறது இந்த வருஷ தமிழ் புத்தாண்டு மன்மத வருஷம் வருகிற 14.04.2015 சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.47 மணியளவில் (1.47 P.M.) மகர இராசி, கடக லக்கினத்தில் பிறக்கிறது.என ஜோதிட வல்லுனர்கள் சொல்கிறாங்க எது எப்படி இருந்தாலும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்   
சரி எல்லா வருஷ பிறப்பிலும் நாம முதலில் சில புது வருஷ சபதங்கள் எடுத்துக்குவோம் ஆன அது அடுத்த மாத பிறப்பு வரதுக்கு முன்னே காலாவதியாகி இருக்கும் பொதுவா தமிழ் வருஷ பிறப்பு முதல் நாள் குடும்பத்தினர் மற்றும் பங்காளிங்க அப்புறம் அவங்க பிள்ளைகள் நண்டு சிண்டு வாலு இப்படி ஒரு கூட்டமே சேர்ந்து குலதெய்வம் கோவிலுக்கு சென்று படையல் எல்லாம் போட்டு ஒண்ணா உட்கார்ந்து சாமி கும்பிடுவது வழக்கம் அப்ப ஒரு வாண்டு சர்க்கரை பொங்கலை நல்ல சாபிட்டுட்டு இருந்தவன் என்னை பார்த்து ஏன் வருஷ பிறப்புன்னு சொல்கிறோம்ன்னு கேட்டான்.ராஜியை பார்த்தா அவனுக்கு அறிவாளின்னு தெரிஞ்சுடுச்சு போல அப்புறம் தான் நானும் யோசிச்சேன் வருஷம் எனபது வர்ஷா என்ற வடமொழி வார்த்தையில் இருந்து வந்ததுதான்ன்னு மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வாங்க ஆனா உண்மையில் வர்ஷா என்றால் பொழிதல் என்றும் அர்த்தம் வரும் ஆனா கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி அவர்களுக்கு வடமொழியின் கைத்தாங்கல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை 
வருடை என்ற சொல்லே வருஷம் என மாறி இருக்கணும் வருடைன்னா ஒருவித மலையாடு இது மலை பகுதிகளில் மட்டுமே பரவலா காணபடுவது இந்த ஆடுதான் மேஷராசியாக சொல்லபடுகிறது சரி இனியும் நாம இதை தெளிவு படுத்தி பார்த்தா பாவை நோன்பை விளக்கும் பரிபாடல்11 ம் பாடலில்   "வருடையைப் படி மகன் வைப்ப" என்ற அடி வருகிறது இதற்க்கு அர்த்தம் செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேஷ ராசியை அடைந்தது என்று சொல்லபடுவது மூலம் உறுதி செய்யபடுகிறது 

சூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் துவங்கும் என்பதாலும், அது வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கலாம்.என ஒரு முடிவுக்கு வந்திடலாம்  வருஷம் பத்தி பார்த்தாச்சு அப்புறம் தமிழ் வருஷங்கள் ஒரு 60 எண்ணிக்கை கொண்ட சுழற்சியாக இருகிறது அது ஏன்ன்னு பார்த்தா அதுக்கும் ஒரு புராணகதை இருக்கு  
பிரம்ம வைவர்த்த புராணத்தில் தமிழ் ஆண்டுகள் 60 -க்கும் ஒரு கதை இருக்கு பொதுவா நாரதர் கலக்கம் நன்மையில் முடியும்ன்னு சொல்லுவாங்க ஆனா இங்கே நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருஷங்களை கொடுத்து இருக்கு பிரம்ம தேவனுக்கும் நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும் இல்லை ஏன்னா இங்கே எல்லாமே மாயைக்கு கட்டுப்பட்டது இருப்பதுபோல் இருக்கும் ஆனால் எதுவும் நிலை இல்லாதது என வாதம் செய்கிறார் அதற்கு நாரதமுனி இல்லை தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் வாதம் செய்கிறார் வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்து இல்லை இதை உணர்த்த எண்ணிய பிரம்மதேவன் அந்த நாராயணனிடமே முறையிடுகிறார்.  























மகாவிஷ்ணுவும் பிரம்ம தேவனின் கோரிக்கையை ஏற்று நாரதருக்கு மாயையை உணர்த்த உறுதியளிக்கிறார் அதன்படி நாரதர் பூவுலகில் சஞ்சரிக்கையில் சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளிக்கும் படியான சூழ்நிலையை உருவாக்குகிறார் விஷ்ணு பகவான் நாரதரும் அந்த குளத்தில் குளித்தவுடன், மாயையில் ஆட்பட்டு பெண்ணாக உருமாறி விடுகிறார். அபொழுது அந்த வழியாக வந்த அரசகுமாரன் பெண்ணாக மாறிய நாரதமுனிவரை கண்டு மையல் கொள்கிறான் தன்மேல் மையல் கொண்ட அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி இருக்கும் போது ராஜியங்களுகிடையில் போர் வருகிறது அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் கொல்லபடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், மகாவிஷ்ணுவை வேண்டுகிறார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார் இதுவெறும் கதையாக தெரிந்தாலும் இதன் மூலம் சில உண்மைகளும் நாம தெரிஞ்சுக்கலாம். 
இந்த கதை நடந்தாக சொல்லப்படும் இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம்னும் சொல்லபடுகிற இரு குளங்கள் இருக்கு இங்கே அருள்பாலிக்கும்  இறைவன் பெயர் “பாவநாராயணன்’ வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுவதே இதன் தத்துவம் இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம்.இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம்.அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று என கணக்கிடப்பட்டு அதனால தான் 60 வயது முடிந்தவுடன் ஆயுள் விருத்திக்காக 60-ம் கல்யாணம் நடத்தபடுகிறது இந்தக் கதையில் நாம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து இருக்கு இந்த 60 வருடங்களின் பெயர்கள் எல்லாம் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பெயர்கள் இல்ல அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்துவிடும்.இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், எதை செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம்.அதுதான் மாயை.மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.
ஒவ்வொரு புத்தாண்டு தினதன்று காலைலயே வீட்டுல சாமிக்கு பழங்கள் பாயசம் எல்லாம் படைத்தது அந்த வருட பஞ்சாங்கம் வைத்து சாமி கும்பிடுவது வழக்கம் அபொழுது சின்னவங்கள் எல்லாம் பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வதாம் வாங்குவாங்க அப்ப வீட்டு பெரியவங்க அவங்களுக்கு காசு கொடுப்பாங்க இப்பவும் இந்த பழக்கம் எங்க பக்கம் இருக்கு 
அதன் பிறகு எல்லோரும் குடும்ப சகிதம் குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமிக்கு பூஜை செய்து அங்கேயே சமைச்சு சாமிக்கு படைச்சு
அப்புறம் எல்லோருக்கும் அன்னதானம் செய்வோம் அதேபோல ஆண்களுக்கு உப்பும் பெண்களுக்கு மஞ்சளும் கொடுப்பாங்க ஏன்னா உப்பு வந்தாலே அந்த ஆண்டு செல்வம் அதிகரிக்கும் என்ற வழக்கமும் உண்டு
எல்லா புதாண்டுகளுக்கும் அது ஆங்கில புதாண்டாகட்டும் இல்லை தமிழ் ,சீன புதாண்டாகட்டும் கருத்துகளும் ஜோதிட கணிப்புகளும் பக்கம் பக்கமாக வரும் கேள்விகள் பலவாறாக இருந்தாலும் அதற்கான விடைகள் ஒன்றாகதான் இருக்க வேண்டும் ஆனால் இப்ப இருக்கிற காலகட்டத்தில ஜோதிடம் எனபது எடுப்பார் கைபிள்ளைபோல அவர்களுக்கு என்ன தெரிகிறதோ இல்ல அவர்களால் கணிக்கமுடிந்த அளவு எழுதுவதை தங்களுக்கு சாதகமில்லாத ராசிக்காரர்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை வளர்த்து விடாம நம்மைநாமே தெரிந்து கொள்ளுதல் அதாவது அவ்வுளவு பெரிய யானை தன்னுடைய பலம் தெரியாம ஒரு சிறிய அங்குசத்தை வச்சு அடக்கி ஆளுற மனிதனிடம் அடிமையா இருக்கிற மாதிரி இல்லாம நம்முடைய சுய அறிவின் மூலம் ஆராய்ந்து பார்த்து நல்ல மனத்துடனும் கடவுளை வணங்கிவந்தால் எல்லா நன்மைகளும் எல்லாவருடமும் நமக்கு தடை இல்லாது கிடைக்கும் அனைவருக்கும் எனது இனிய மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்